முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Saturday, 27 September 2014

சேலம் தான் தோன்றி ஈசுவரர் கோயில் சிற்பங்கள்

அப்பாடி எவ்வளவு நீண்ட அடா்த்தியான முடி......விரித்துவிட்டால்..... காலையேத் தொட்டுவிடும்போல.....
.

அழகு படுத்திக் கொள்வதும் ஒரு கலைதானே?. ஆற அமர... திண்ணையில்..... கால் மேல் கால் போட்டு அமர்ந்து.... பாம்பு போன்ற பின்னலைப் பின்னி....ஆடியில் பார்த்து நெத்திச்சுட்டி வைத்து.....


யோகக்லையின் ஒரு சாகசக்காட்சி...ஒருவிரலால் உடலைத் தாங்கிப் பிடிக்கும் நேர்த்தி....(அந்தக் காலத்தில் ஆண்களுக்கு எவ்வளவு முடி இருந்ததோ அவ்வளவு தான் இன்று பெண்களுக்கே உள்ளது எனப் பேசிக் கொண்டே திரும்பினால்.......)
இந்த காலத்திலும் இப்படி ஒரு கூந்தலா என வியந்து போனோம். விசாரித்தோம். நிறைய இருந்ததாம்...தலைக்கு ஊற்ற முடியவில்லை என பாதி வெட்டி விட்டார்களாம்....தலைக்கு என்ன தேய்த்து குளிக்கிறீர்கள் என்றோம். சீயக்காய், பாசிப்பருப்பு, வெந்தயத்தை இரவில் ஊறவைத்து,காலையில் அரைத்து,(தலையில் நல்லெண்ணைய் தடவி ஊறவைத்த ஒரு மணிநேரம் கழித்த பின்)  தேய்த்து,   வாரம் இருமுறை தலைக்குக் குளிக்கிறார்களாம். இயற்கை.. இயற்கை.. .இயற்கை...இயற்கையைத் தொலைத்த நாம் முடியை மட்டுமா இழந்தோம்?.......  


1 comment:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?