முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 தொலைபேசி 9488417411 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.PH:9488417411

Friday, 15 August 2014

சங்கத் தமிழரின் சூழல்தூய்மை

ஆடை துவைத்தல்
  சுற்றுப்புறத் தூய்மையை வலியுத்தும் வகையில்நீர்அருந்தும் துறையில் ஆடை துவைத்தல்கூடாது என்பதை,‘துறைஇருந்து ஆடைகழுவுதல் இன்னாஎன்கிறது இன்னா நாற்பது.(23) மக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களில் தூய்மையைப் பேண வேண்டும். ஆற்றங்கரை ஓரங்களில் துணி துவைப்பதால் நீரின் தூய்மை பாதிக்கப்படுகிறது.அழுக்கு மற்றும் சோப்பிலுள்ள வேதிப்பொருட்கள் சேர்வதால் நாளடைவில் நீரின் தன்மை பாதிக்கப்பட்டு பருகுவதற்கு தகாததாகி விடும் அபாயம் உள்ளது என்பதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் நீர்த்துறைகளுக்கருகில் ஆடை துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துள்ளனர்.
சூழல்தூய்மை  - நோய் வராமலிருக்க

  
வேனிற்காலங்களில் நீர்வளம்

சூழல் காப்போடு அதனைத் தூய்மையாகப் பேண வேண்டியதும் அவசியம்.இல்லையேல் நோய் தோன்றும். இந்நிய மக்களில் எழுபது சதவீத மக்கள் பெரிதும் நோயினால் பாதிக்கப்படுவதற்கு நீர் மாசுபாடே காரணமாகும். வேனிற்காலங்களில் நீர்வளம் குறைந்து கிருமிகள் பெருகும். அக்காலத்தில் நீரைக் காய்ச்சிப் பருக வேண்டும் என நாலடியார்,‘குடநீர் அட்டு உண்ணும்‘(382) பழக்கத்தை வலியுறுத்துகிறது.
வேனிற்காலத்தில் நோய் வராமலிருக்க புது மண்பானையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் புது மண்பானையின் மண் மணம் நீங்க பாதிரிப் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது.ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு”(நாலடியார்39) என்கிறது இப்பாடல். தற்காலத்தில் R.O. Water பயன்படுத்துகிறோம் பழந்தமிழர் இதை இயற்கை முறையைக் கையாண்டு யாதொரு செலவுமின்றி பயன்படுத்தி இருக்கிறார்கள்.உமிழ்நீர் உமிழ்வது
 பொதுஇடத்தில் உமிழ்நீர் உமிழ்வது கூடாது என்பதை ஆசாரக்கோவை இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்‘(27)என்கிறது.  

வாய் கழுவுதல்
 உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் வாய் கழுவுதல் அவசியம் என்கிறதுஆசாரக்கோவை(27).

கண்நோய் - மெட்ராஸ் ஐ


 வைரஸ், மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுக்கள் கண்களைப் பாதிக்காமலிருக்கப் பிறர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்னபடுத்தக்கூடாது என்பதை, ”கண்ணெச்சில் கண்ணூட்டார்என்று ஆசாரக்கோவை (41)கூறுகின்றது..


 பழங்களைப் பழுக்க வைக்க
 தற்காலத்தில் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைக்கக் கார்பைடு கற்களைப் பயன்படுத்துகின்றனர்.இதனால் வயிற்றுப் போக்கு,ஒவ்வாமை ஏற்படுகிறது.இயற்கை முறையில் பழுக்க வைப்பதின் சிறப்புப் பற்றி நாலடியார்,

வேம்பின் இலையுள் கனியினும் வாழை

தீஞ்சுவை யாதும் திரியாதாம்”(244)
என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களைப் பழுக்க வைப்பது சிறந்த முறை என்கிறது.இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிய வாழ்வு என வாழந்ததினால் நீர் ஆதாரம்,தூய்மை முதலான மேம்பாட்டுத்திட்டங்களைச் சங்கத் தமிழர் அறச்செயல்களோடு இணைத்துச் செய்துள்ளனர். .


  


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?