தன்னை வியத்தல் எப்போதும் இலமே!
பரபரப்பாய் போகிறது பகல்
எப்படிப்போகிறதென்று
தெரியாமலே போகிறது இரவு
இப்படித்தான் கடக்கிறது வாழ்க்கை
என நினைத்துப் பார்க்கும் நிமிடத்தில்
ஒரு கணம் கனத்துப்போகிறது மனது!
தூக்கிப்போடும் தீப்பெட்டியாய்
எனை நினைத்து நானிருந்த பொழுது
வந்து உரசினாய் பொழுதுபோகாமல்...
நீ தான் எரிந்து போனாய்
தீக்குச்சிபோல் உன் தலையிலும் கனம்!
எனக்கு முன்னின்று ஏதோ கத்தினாய்
நான் பிரதிபலித்துக்
கொண்டிருந்தேன்
ஒரு கண்ணாடியைப்போல!
சிங்கம் புலி நரி கரடி
என ஏதேதோ சொன்னாய்
உற்றுப் பார்த்தேன் எனக்கு முன்
ஒரு க.............
நிலத்தில் கிடந்ததை
கால் காட்டும்.....
காட்டும் குலத்தில் பிறந்தார்
வாய்ச்சொல் என்பதை
வள்ளுவரே சற்றுப்
புரியும்படி சொல்லியிருக்கக்கூடாதா?
புத்தகத்தில் என்ன இருக்கிறது?
மனிதர்களைப் படிக்கக் கூட உதவுவதில்லை
என்பதை முன்னுனர்ந்த
மாணவ ஞானிகளைத் தான்
முதலில் வணங்க வேண்டும்.
பரபரப்பாய் போகிறது பகல்
எப்படிப்போகிறதென்று
தெரியாமலே போகிறது இரவு
இப்படித்தான் கடக்கிறது வாழ்க்கை
என நினைத்துப் பார்க்கும் நிமிடத்தில்
ஒரு கணம் கனத்துப்போகிறது மனது!
தூக்கிப்போடும் தீப்பெட்டியாய்
எனை நினைத்து நானிருந்த பொழுது
வந்து உரசினாய் பொழுதுபோகாமல்...
நீ தான் எரிந்து போனாய்
தீக்குச்சிபோல் உன் தலையிலும் கனம்!
எனக்கு முன்னின்று ஏதோ கத்தினாய்
நான் பிரதிபலித்துக்
கொண்டிருந்தேன்
ஒரு கண்ணாடியைப்போல!
சிங்கம் புலி நரி கரடி
என ஏதேதோ சொன்னாய்
உற்றுப் பார்த்தேன் எனக்கு முன்
ஒரு க.............
நிலத்தில் கிடந்ததை
கால் காட்டும்.....
காட்டும் குலத்தில் பிறந்தார்
வாய்ச்சொல் என்பதை
வள்ளுவரே சற்றுப்
புரியும்படி சொல்லியிருக்கக்கூடாதா?
புத்தகத்தில் என்ன இருக்கிறது?
மனிதர்களைப் படிக்கக் கூட உதவுவதில்லை
என்பதை முன்னுனர்ந்த
மாணவ ஞானிகளைத் தான்
முதலில் வணங்க வேண்டும்.