தமிழ் இனி மெல்ல......
அரிசோனா மகாதேவன் சார் புலம் பெயர்ந்த ஒரு தமிழர். தமிழின்
அருமையை பெருமையை அந்நிய சூழலில் உணர்ந்து தனக்கான அடையாளம் மொழியே என்பதை உணர்ந்து தான் உணர்ந்ததை
தாய்நாட்டுத் தமிழருக்கும் எடுத்துரைக்க இந்நாவல் புனைந்துள்ளார்.
உணர்வதை உணர்த்த நினைப்பதே ...அதுவும் சுவையாக ... ஒரு கதையாக ....உணர்த்த முயல்வதே .....ஒரு படைப்பின் முதல் வெற்றியாகிறது. வெற்றுரைகளாக இல்லாமல் மாபெரும்
வரலாற்றை ஆழ்ந்து அறிந்து வலுவான
ஆதாரங்களினடிப்படையில் தமிழ் இனி மெல்ல...... என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது