நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 28 March 2014

இந்திய இலக்கியச் சிற்பிகள் - கவிஞர் முருகுசுந்தரம் குறித்த நூல் வெளியீடு-

சேலத்தில் இந்திய இலக்கியச் சிற்பிகள் - கவிஞர் முருகுசுந்தரம் குறித்த நூல் சாகித்ய அகாதமி வெளியீடு- எழுதியவர் கு.கணேசன்

Wednesday, 12 March 2014

படைப்பாளர்கள்


1.பாவலர் மணிவேலனார் 


படிமம்:Paavalar Manivelanar.jpg


          பாவலர் மணிவேலனார் என்றழைக்கப்படும்  பெ. இரத்தினவேலு(1932) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் கவிஞர். தமிழகத்தின் அரூரில் தமிழியக்கம் தொடங்கியவர்.பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றவர். இவரது சில நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதினைப் பெற்றவை


              மணிவேலனார் தருமபுரி மாவட்டத்தில் கடத்தூருக்கு அருகிலுள்ள அஸ்தகிரி (குதிரை மலை) என்னும் சிற்றூரில் 1932 ல் பிறந்தார். தந்தை பெயர் பெரியண்ணன். தாய் முத்துவேடியம்மாள். விடுகாதழகிய நல்லூர் என்றொருகாலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய அரூரில் வசிக்கிறார். இயற்பெயர் பெ. இரத்தினவேலு. மூன்றாம் வகுப்பு வரை அஸ்தகிரியிலும், ஐந்தாம் வகுப்பு வரை கடத்தூரிலும், பின் அரூரில் பள்ளிக்கல்வியும் முடித்துள்ளார்.

எம்.ஏ.,பட்ட ஆய்வுகள்

எம்.ஏ.,பட்ட ஆய்வுகள்
சேலம் கல்லூரி தமிழ்த்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 
  1. சுஜாதாவின் நைலான் நாவலின் கட்டமைப்பு மா.இராமலிங்கம்
  2. வளர்ப்புமகள் ஓர் ஆய்வு க.முருகேசன்
  3. சுகந்தி சுப்பிரமணியத்தின் மீண்டெழுதலின் இரகசியம் ச.ஆஜிராபானு
  4. அகிலனின் பொன்மலர் மா.மணிவண்ணன்
  5. வைரமுத்துவின் இன்னொருதேசிய கீதம் பெ.சுரேஷ்
  6. க.ரத்தழினத்தின் கல்லும மண்ணும் ஓர் ஆய்வு சி.ஜெயபால்
  7. சேலம் மாவட்டக்கல்வெட்டுகள் க.விஜயராகவன்
  8. சிலம்பில் கனவுகள் ஓர் உளவியல் பார்வை த.மணிகண்டன்
  9. வைரமுத்துவின் தமிழுக்குநிறம் உண்டு அ.டேவிட் சந்திரசேகர்
  10. பரிபாடல்காட்டும் ஒரு சமுதாயம் த.செல்லம்மாள்
  11. மு.வவின் அல்லிபுதினத்தில் அல்லிபாத்திரப்படைப்பு அ.விஜயகாந்த்
  12. புிமபாலகனின் கரைவெறிக் கதைகள் ஜா.ஜார்ஜ்வின்சென்ட்
  13. வைரமுத்துவின் டீபார்க்களமும் இரண்டுபூக்களும் சு.அசோக்குமார்
  14. கு.வெ.பாலசுப்ரமணியனின் தாயத்து சிறுகதைகள் கா.கோ.கவிதா
  15. பொன்மணிவைரமுத்துவின் மலைவாசம வ.கார்த்திக்
  16. லோகநாதனின் புல்தரை ஆ.கோ.மகாலட்சுமி
  17. கவிஙர் வைரமுத்துவின் மரபுக்கவிதைகள் ச.உஷா
  18. இராசராசசோழன் நாடகம் வே.ஆ.தீபா
  19. மு.மேத்தாவின் ஊர்வலம் கவிதைகள் அ.பால்ராஷ்
  20. வைரமுத்துவின் இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல மா.செல்விநித்யா
  21. கலித்தொகையில்பாடல்களில் பாலைக்கலியில் உவமைகள் இராம்பிரகாஷ்
  22. என.சொக்கனின் என்நிலைக்கண்ணாடியில் உன்முகம் சிறுகதைகள் ஓர் ஆய்வு ந.முருகன்
  23. ஐங்குறுநூற்றில் குறிப்புப்பொருள் மு.துர்கா
  24. தங்கர்பச்சானின் ஒன்பதுரூபாய்நோட்டு தா.சித்துராஜ்
  25. வாலிவதைப்படலம் காட்டும் வாழ்வியல் வை.கதிரேசன்
  26. வைரமுத்துவின் வானம் தொட்டுவிடும் தூரம்தான் அ.அழகுதுரை
  27. தினத்தந்தியில் விளம்பரங்கள் ச.நாகராஜ்
  28. அப்துல்ரகுமானின்பால்வீதியில் வெளிப்பாட்டு உத்திகள் அ.அன்புவேல்
  29. மு.வ.வின் கரித்துண்டு பொ.கலைவாணி
  30. நாஞ்சில்நபட்டு மருமக்கள்வழி மான்மியம் தே.வெங்கடேசன்
  31. கல்கியின் பொய்மான் கரடு கோ.ர.தங்கலட்சுமி
  32. நெடுநல்வாடை ஓர் ஆய்வு ப.செல்வகுமார்
  33. சிலப்பதிகாரத்தில் பெண்கள் நிலைமு.கலைவாணி
  34. திருப்பாவையில் ஆண்டாளின் பக்திநெறி ச்தேவிபாலா
  35. மு.வராதராசனாரின் மண்குடிசை மு.சசிகாலா
  36. சிறுபாணாற்றப்படை சி.மாது
  37. ஐந்திணைஐம்பது கு.ரூபா
  38. கலிங்கத்துப்பரணியில் போர்ச்சிறப்பு சி.சந்திரன்
  39. திருக்குற்றாலக்குறவஞ்சியில் இயற்கை வர்ணனை இரா.இரஜினி
  40. தமிழ்இலக்கியத்தில் மள்ளர்கள் உ.உஷாராணி
  41. காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதி பெ.புவனேஷ்வரி
  42. ஔவையார் அருளிய நல்வழி சி.விஜயலட்சுமி
  43. ரஜினிகாந்த்-ஸ்ரீதேவி நடித்த திரைப்படப்பாடல்கள் ம.ரேகா
  44. ச.கல்யாணராமனின் எச்சில்தோடு சிறுகதைகள் சி.சிவகாமி
  45. குழந்தை கவிராயர் இயற்றிய மான்விடுதூது செ.கண்ணன

முனைவர் பட்ட -ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள்

முனைவர் பட்ட ஆய்வுகள்
 அரசு கலைக் கல்லூரி, சேலம்-7 கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

Wednesday, 5 March 2014

தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?



தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

 

முன்னுரை

தொல்காப்பியர், பொருளதிகார மரபியலில்  நான்கு வருணத்தாருக்குரியப் பொருட்களைப் பற்றிக் கூறுமிடத்து,நூல் என்ற சொல்லையும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சொல் தொடர்பாக உரையாசிரியர்கள் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியுள்ளனர். இக்கருத்துக்களிலுள்ள சாதியச் சார்புத் தனைமையைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

நூற்பா

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (bjhš. 3: 615)
இந்நூற்பாவிற்குரிய பொருள் அந்தணர்களுக்குரிவை நூல்,கரகம்,முக்கோல்,மணை என்ற நான்கு பொருட்கள் என்பதாகும்.

1.நூல் - நூல் என்பதற்குப் பூணூல் என உரையாசிரியர்கள் பலரும் பொருள் கொண்டுள்ளனர்.(இதைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.)

2.கரகம் – சிறிய பானை

3.முக்கோல் -உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இறைவன்,உடல்,உடம்பு என்ற  இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே இறைவனை வழிபடுபவர்கள், துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை "முக்கோல்" என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்.

4.மனை – அமருவதற்குரிய சிறிய பலகை.