நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 22 October 2013

கவிஞர் கு.கணேசன் கவிதைகளில் கல்விச் சிந்தனைகள்


                                                                                                            


கவிஞர் கு.கணேசன் கவிதைகளில் கல்விச்

சிந்தனைகள்




            கவிஞன் என்பவன் சமகால வாழ்வினை நாடிப் பிடித்துச் சொல்லும் மருத்துவன். கவிஞன் கற்பனையில் மிதந்தாலும், பொய் கலந்து கவிதைகளை உருவாக்கினாலும், நிகழ்கால வாழ்வின் உண்மைகள் ஏதோ ஒரு வகையில் அவன் படைப்புகளில் அடிநாதமாய் ஓடிக் கொண்டிருக்கும். சமூக வாழ்வில் நிகழும் நிகழ்கால அவலங்களே ஒருவனை எழுதத்தூண்டுகின்றன. சமூக அக்கறை கொண்ட மனிதன், வாழ்வின் முரண்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது அவனுள் ஏற்படுகின்ற உந்துதல்களே படைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. படிப்பவர்களுக்கு படைப்புகளினாலும், படைப்புகளின் வழி வெளிப்படுத்தப்படுகின்ற வாழ்க்கைப் போக்குகளினாலும் ஏதோ ஒரு வகையில் தான் உணர்த்த வந்ததை கவிஞன் உணர்த்தி விடுகிறான்.

காரைக்கால் பேய்



                          காரைக்கால் பேய்

  பரமதத்தன்-புனிதவதி 

            புனிதவதி, குழம்பு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொதிக்கும் குழம்பில் மேலும் கீழும் போய்க்கொண்டிருக்கும் காய்களைப்போல, சில நினைவுகள் உள்ளக் கொதிப்பில் முன்பின்னாய் உழன்று கொண்டிருந்தன. பரமதத்தன் குளித்துவிட்டு வந்தான். கறி அமுதும் தயாராகிவிட்டது. இப்போதெல்லாம் அவன் முன்போல் இல்லை என்ற எண்ணம் அவளைச் செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது. இப்போது கூட குளித்து முடித்து வந்தபின் திருநீற்றுப் பொடியைக் கையில் எடுத்தபடி, நெற்றியில் பூசத் தடுமாறியபடி நின்று கொண்டிருந்தான். பின் ஏதோ நினைத்தவனாய், நெற்றியிலும், கைகளிலும், மார்பிலும் பூசிக் கொண்டு கிளம்பிவிட்டான்.