நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 9 April 2020

திருவாசகத்தில் தொடர்கள்



திருவாசகத்தில் தொடர்கள்

                சொற்கள் தனியாக இருக்கும்பொழுது அவற்றிற்கு முழுப்பொருளையும் உணர்த்தும் ஆற்றல் முழுவதும் இல்லை. அவற்றைத் தக்கவகையில் பயன்படுத்தும் நிலையிலேயே அவை பொருளைச் சரியாக உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியாகப் பொருளை உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியான பொருளை உணர்த்தும். சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுப்பதே ஒருவகை ஆற்றலாகும். அவற்றை இடம் நோக்கிச் சிறந்த முறையில் அடுக்கிக் கவிதையில் இடம்பெறச் செய்வதென்பது தேர்ந்தெடுத்தலை விடப் பெரிய ஆற்றலாகும்.
                கவிஞன் சொற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்குவதன்மூலம் அச்சொற்கட்குத் தனிப்பட்ட முறையில் பெருஞ்சிறப்பை வழங்கி விடுகிறான். ஒரு சொல்லின் சிறப்பானது, அது பிற றசாற்களுடன் தொடுக்கும்பொழுதே வெளிப்படுகிறது. எனவே, சொற்தொடர் அமைப்புப் பற்றி அறியவேண்டியது அவசியமாகிறது. சொற்றொடர் பல இணைந்து வாக்கியம் உருவாகிறது.

மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை



மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை


மாணிக்கவாசகர் புதுச்சொற்களை உருவாக்கும்பொழுது எளிமையாக்கம், புதுமையாக்கம் நிலைபேறாக்கம் என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது தெரிகிறது.

 

எளிமையாக்கம்

                மொழிவளர்ச்சிக் கொள்கைகளில் எளிமையாக்கமும் ஒன்றாகும். சொற்களுக்குப் புதுப்புதுப் பொருள்கள் காலந்தோறும் அதனைக் கையாளும் கலைஞர்களுக்கு ஏற்ப உருவாகிறது. இதனால், ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமையாகி விடுகிறது. பொதுவாக, நுட்பமான கருத்துக்களை விளக்கப் புதுச்சொற்கள் உருவாகின்றன. நுட்பமும், ஆழமும் பொருந்திய நுண்ணியச் சொற்களை உருவாக்குவதில் மணிவாசககர் பெருவிருப்பு உள்ளவர் என்பதை அவர் உருவாக்கியுள்ள சொற்களிலிருந்து உணர்ந்த கொள்ளலாம்.
எ.கா
உள்ளக்கரு          -      உளக்கரு
ஒப்பற்றவன்         -      ஒப்பன்
நுகர்பொருளானவன்  -      துப்பன்
கூறுடையவன்       -      கூறன்
தேசுடையவன்       -      தேசன்
                                                                                                                                                                                உய்யக்கருவானவன் இறைவன்என்பதை விளக்கும் உள்ள.க்ருஎன்னும் சொல்லை மேலும் எளிமைப்படுத்தி உளக்கருஎன்கிறார். இதைப்போலவே, சிவபெருமாள் உமையைத் தன் உடலில் பாதியாக்கியுள்ளதால், பாதியானவன் என்பதை உணர்த்த கூறன், பாகன், பாதியன் போன்ற சொற்களை உருவாக்கியுள்ளார். சொற்கள் எளிமையாக்கம் செய்யப்பட்டாலும், முழுப்பொருளை இழக்காமல், முந்தைய பொருளைவிட மிக ஆழமான பொருளைப் பெற்றுப் புதுப்பொலிவோடு திகழ்வது தெரிகிறது.

புதுமையாக்கம்

                ‘‘மொழி வளர்ச்சிக் கொள்கைகளில் முதன்மையானது புதுமையாக்கம் ஆகும். இப்புதுமையாக்கம் கலைச்சொற்களையும், புதுத்தொடர்களையும் உருவாக்கவும், பெருக்கவும் உதவுகிறது. புதுமையாக்கத்தின் அடிப்படையில் கலைச்சொற்கள் உருவாக்கப்படும்போது மொழியில் புதுச்சொற்கள் காணப்படுதல் இயற்கையே’’ என்பார் தங்கமணியன். இவ்வகையில் திருவாசகத்தில் ஏரானமான புதுச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
எ.கா
கருத்திருத்தி  உள்ளான்
உள்ளொலி    புவன்
உலவா          உடையவன்
                                                                                               
                கருத்திருத்திஎன்னும் சொல்லானது இருவேறு பொருளைத் தரும் வகையில் அமைந்த புதுமைச் சொல்லாகும். கருவிலேயே திருந்தச் செய்துஎன்னும் பொருளிலும், ‘இறை எண்ணத்தைத் தன்னிடத்திலே பதியச் செய்துஎன்னும் பொருளிலும் இச்சொல் பயின்றுவருகிறது. புவன் என்னும் சொல் புவனம் ஆள்பவன்என்னும் பொருளிலும், ஒலி வடிவானவன்8 என்னும் பொருளிலும் பயின்று வருகிறது.
                உலவாஎன்னும் சொல் அழிவில்லாத என்னும் பொருள் தரும் புதுமையாக்கச் சொல்லாகும். இடம்நோக்கி இப்பொருளைப் பெற்ற புதுச் சொல்லாகும். உலவா இன்பச்சுடர் என்னும் சொல்லானது உலர்ந்துபோனேன் என்னும் சொல்லுக்கு எதிரானப் பொருளைத் தரும்வகையில் பயின்று வருகிறது. உலர்ந்துஎன்னும் சொல்லுக்கு எதிரான சொல்லாக உலவாஎன்னும் புதுச் சொல்லைக் கையாண்டுள்ளார்.

திருவாசக மொழியமைப்பில் சொற்கள்



         ஆதித்தமிழன், பறையன், முதற்சித்தன் ...    சிவபெருமானின் அடி முதல் முடி வரை உறுப்புகளை பொருத்தமான அடைச்சொற்களின் மூலம் அவர் தம் உருவ எழிலைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

மணிவாசகரின் காலம்



மணிவாசகரின் காலம்

                மணிவாசகரின் காலம் இன்றுவரை விவாதத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. இவர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்றும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
                மறைமலையடிகளும், செங்கல்வராயபிள்ளையும் மணிவாசகரின் காலத்தைக் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு என்றே உறுதிப்படுத்துவர். இவர்களைப் போன்றே மணிவாசகரின் காலத்தைக் கி.பி.மூன்றாம் நூற்றாண்டே என்று குறிப்பிடும் பிறரது கூற்றுக்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
                சைவ சமயக்குரவர் மூவருள் காலத்தால் முற்பட்டவராகக் கருதப்படுபவர் திருநாவுக்கரசர். இவருடைய சமயகாலத்தில் வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசரின் காலம் ஆறாம் நூற்றாண்டின் இறுதியும், ஏழாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகும். மணிவாசகர் பற்றித் தனது தேவாரத்தில் தனித்திருத்தாண்டகத்தில் இரண்டு செய்திகளைக் குறிப்பிடுகிறார் நாவுக்கரசர்.
1.             மணிவாசகர் பொருட்டு இறைவன் நரியை பரியாக்கிய செய்தி
2.             வந்தியின் பொருட்டு இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த செய்தி இதன்மூலம் நாவுக்கரசரின் காலத்திற்கு முற்பட்டவரே மணிவாசகரின் என்று குறிப்பிடப்படுகிறது.

மணிவாசகரின் சிறப்பு



மணிவாசகரின் சிறப்பு

                சமயக்குரவர் மூவரின் பாடல்கள் பெரும்பாலும், கோவில்களையே மையமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. இம்மூவரும் பாடியருளிய தலங்கள், இருநூற்றி எழுபத்தைந்தாகும். இப்பாடல்களில் பல்வேறு கோவில்களைப் பற்றியும், அக்கோவில்களுக்குப் பின்னணியாக விளங்கும் இயற்கைக் காட்சிகளைப் பற்றியும், கோவில் கொண்டுள்ள இறைவனைப் பற்றியும் பாடப்பட்டுள்ளன. மணிவாசகர் ஐம்பத்து நான்கு தலங்களை மட்டுமே பாடியுள்ளார். தம் பாடல்களில், உள்ளத்தில் எழும் உணர்ச்சியை உள்ளது உள்ளபடி சிறந்த சொல்லாட்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், தலங்களைப் பற்றிக் குறிப்பிடும் தலவரலாற்று நூலாக மட்டும் அமையாமல் தன்னுணர்ச்சியை அழகுபட வெளிப்படுத்தும் உயிரோவியமாகத் திருவாசகம் திகழ்கிறது.

அழுதடியடையும் தொண்டர்

                இறையனுபவத்தில் திளைத்து இறையருளை வெளிப்படுத்துமிடத்திலும் மணிவாசகர் வேறுபடுகிறார். தான் பெற்ற இன்பத்தை வெளிப்படுத்துமிடத்து, தேவார மூவரிடத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே நெகிழ்வின் காரணமாக அழுகை வெளிப்படுகிறது. மணிவாசகருக்கோ, இறையருளை வெளிப்படுத்துமிடத்து அவரது உணர்ச்சி பெரும்பாலும் அழுகையாகவே வெடிக்கிறது.
                                ‘‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’’ (5-90)
                                ‘‘அழும் அதுவேஅன்றி மற்றுஎன்
                                                செய்கேன் பொன்அம்பலத்து அரைசே’’ (21-4)
                இவர்தம் பாடல்களில் பரவலாகக் கேட்கும் அழுகைக் குரலானது, அழுகை ஒருபேறு, அதைப் பெறுவதற்கும் இறையருள் வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. இப்பாடல் வரிகள் மணிவாசகரின் உள்ள நெகிழ்வினையும், உள்ளம் உருகி அழுதால் இறையருளைப் பெறலாம் என்ற உண்மையினையும் வெளிப்படுத்துகின்றன.

திருவாசகத்தின் இசையமைதி



திருவாசகத்தின் இசையமைதி

திருவாசகத்தின்  சிறப்பு இசைப்பாடல் வடிவத்தில் பாடல்கள் அமைந்திருப்பதே. இதற்குக் காரணமாக அமைந்துள்ள மொழிக் கூறுகளை அறிவது அவசியமாகிறது.
இசையமைதி
                இசையுணர்ச்சியே பாக்களுக்கும் பாவினங்களுக்கும் அடித்தளமாக விளங்குகின்றது. படைப்பாளர்கள், கற்பனைத்திறத்திற்கும் படைப்பாற்றலுக்கும் மட்டுமல்லாது ஓசை ஒழுங்கிற்கும் ஏற்றாற்போலவே பாக்களின் வடிவங்களில் மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்திச் சோதனை முயற்சிகள் செய்துள்ளனர். இசையுணர்ச்சி.கு காரணமாக விளங்குபவை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை போன்றவையாகும். இவற்றைத் தொடையின் வகைகளாகக் குறிப்பிடுவர்.

திருவாசகத்தில் உள்ள இலக்கிய வகைகள்



இலக்கிய வகைகள்
                தொல்காப்பியர் காலத்திலும், சிலப்பதிகார காலத்திலும் பல புது இலக்கியக் கூறுகள் தோன்றின. அவை பின்னர்த் தனித்த இலக்கிய வகையாகவே வளர்ந்தன. அவ்வாறு தனித்த இலக்கிய வகைகளாகப் போற்றப்படும் சில கூறுகள் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன.

சதகம்

                சதகமானது, நூறு பாடல்களைக் கொண்டு இறைவனையோ, புலவர் தாம் பாட விரும்பி தலைவர்களையோ அரசர்ககளையோ பாட்டுடைத் தலைவர்களாக்கி அப்பாடல்கள் அனைத்தும் ஒரே யாப்பில் அமையும் வண்ணம் பாடப்படுவதாகும். திருவாசகத்தில் அமைந்துள்ள திருச்சதகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனால், திருச்சதகம் சதக இலக்கியத்தின் பெயருடையதன்று. தனி நூலாக இல்லாமல் திருவாசகத்தின் ஒரு பகுதியாகவும், அந்தாதி அமைப்புடனும் அமைந்திருப்பதால் மணிவாசகர், சதகத்தை இயற்றிய பின்னரே தமிழில் சதகங்கள் தோன்றியிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.