நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 8 May 2015

சுயபுராணம்

சேலம் ரோட்டரி அறையில் “இலக்கியத்தில் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் உரை
சேலம் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேரவை விழா - சிறப்பு விருந்தினர் பேரா.ஆறுமுகம் ஐயா அவர்களின் சிறப்புரை


தருமபுரியில் புத்தகத்திருவிழா பட்டிமன்றம் மனித முயற்சிக்கு உதவுவது அனுபவமே, புத்தக அறிவே.....என்ற தலைப்பு. நான் புத்தக அறிவே என்ற தலைப்பில் உரையாற்றினேன்.


இடைப்பாடி உழைக்கும் மகளிர் தின விழாவில் பங்கேற்பு.  இளவயது திருமணத்தைத் தடுத்து துணிச்சலுடன் செயல்பட்ட வீராங்கனைகளுக்குப் பாராட்டும் பரிசளிப்பும்.....

இடையில் நின்ற பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில்  சேர்த்த உறுப்பினர்களுக்குப் பாராட்டும் பரிசளிப்பும்.....

Wednesday 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 18





தாய்வழிச் சமூக நிலை






Image result for போரில் அடிமை மகளிர் நிலை 
போரில் தோற்கடிக்கப்பட்ட நாட்டுப் பெண்களை கொண்டி மகளிர் எனப் பிடித்து வந்ததும் அவர்களை அடக்கி ஒடுக்கியதும் காரணமாகவே பின்னர் தமிழகத்தில் அடிமைமுறை உருவாக மூல விசையாக இருந்தது என்பது ஆ.சிவசுப்பிரமணியம் கூற்றாக உள்ளது. பெண் முதன்மை பெற்ற தாய் வழிச் சமூகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு குடும்பம், அரசு அதிகாரம் முதலியன மையப்படுத்தப்பட்ட சூழலில் பெண்ணின் இருப்பு என்பது விளிம்புதான் என்பது சொல்லாமலே விளங்கும். அதை ஏற்றுக் கொள்ள முடியாத பெண்ணினம் தன் இயல்பிலிருந்து மாறாமல் இயல்பாய் இருக்க முயல்கிறது. இல்லையெனில் ஆதிக்கச சமூகத்தின் அதிகார மையத்திலிருந்து தன்னை வெளியேற்றிக் கொள்ளல் என்ற நிலையில் செயல்படுகிறது.

சங்க காலத்தில் போரும் அமைதியும் 17



Image result for இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. 




கொடை என்றால் என்ன?


சீறூர் மன்னர்கள் தமக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல், உறவினர்களுக்கும், பாணர்களுக்கும் வாரி வழங்கியுள்ளனர். பிறருக்காக வழங்குவதற்கானப் பொருள் தேடவே போரிலும் ஈடுபட்டுள்ளனர். தன்னுயிரையும் பொருட்படுத்தாது பெற்ற பெருஞ் செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்துள்ளனர். விதைக்காக வைத்திருந்த தானியங்களையும் உணவாக்கி விருந்தோம்பியுள்ளனர்


Image result for கொடை 

ஆனால் வேந்தர்கள் பெருஞ்செல்வம் சேர்ந்த நிலையில், பிறருக்குக் கொடுப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர். காலம் தாழ்த்தியுள்ளனர். சீறூர் தலைவர்களிலிருந்து வேந்தர்கள் மாறுபட்டு மக்களிடமிருந்து விலகிச் சென்றுள்ளனர். தம் வாரிசுகளுக்காகப் பொருள் சேர்க்கும் ஆசையில் பாணர்களை விலக்கி வைத்துள்ளனர். இதை ஒரு பாடலில் வடம வண்ணக்கண் பேரிச்சாத்தனார் கூறுகிறார்.

சங்க காலத்தில் போரும் அமைதியும் 16



புலவர்களின் பார்வையில் குறுநில மன்னர்களும் வேந்தர்களும்



பாடறிந்து ஒழுகுதலை யாரிடம் கற்கலாம்?


முல்லைநில மக்களில் ஒரு வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பல் பண்பும், விலங்குகளின் மீதான ஈவிரக்கமும் மிக அழகுற காட்டப்பட்டுள்ளன.


Image result for பாடறிந்து ஒழுகல் 

யானையை மிக எளிதாக வேட்டையாடக் கூடிய ஒரு வேட்டுவன் களைப்பினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான். அவன் தன் குழந்தைகளுக்குக் காட்டுவதற்கான ஒரு இளைய பெண்மானை பிடித்துவந்து மரத்தில் கட்டி வைத்திருக்கிறான். அப்பெண்மானை விரும்பும் ஆண் மான் அதனைத் தேடி வந்து அப்பெண்மானை கண்டளவில் அதனைத் தழுவி திளைத்து விளையாடியது. இதைக் காண்கிறாள் வேட்டுவனின் மனைவி. இரு இளமான்களின் அன்புக் காட்சியைக் கண்டு அவள் மனதில் அன்பு ஊற்றெடுக்கிறது. வேட்டுவன் எழுந்தால் ஆண்மானை கொன்றுவிடுவான். யானையை எளிதாக வேட்டையாடக்கூடிய அவனுக்கு இந்த மானை வேட்டையாடுவது மிக எளிய செயலே. அவனோ , ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான். அவன் உறக்கம் கலைந்து எழுந்துவிடுவானோ என்று அவளுக்கு அச்சம் தோன்றுகிறது. எனவே, அவன் உறங்கும் இடத்திற்கும் மான்கள் இருக்கும் இடத்திற்கும் இடையில் ஏதோ வேலை செய்பவளைப் போல மறைத்துக் கொண்டு நிற்கிறாள்.

சங்க காலத்தில் போரும் அமைதியும் 15



சங்க காலத்தில் போர்கள் உருவாவதற்குக் காரணங்கள்

 

Image result for யானை  வேல் 
சிறுகுடிகளாக இருந்து இனக்குழு வாழ்க்கை வாழ்ந்து வீரத்தினாலும் கொடையினாலும் தலைவர்களாகவும், பின்னர்ச் சிறுகுடி மன்னர்களாகவும் உயர்ந்த சிலருடைய மண்ணாசை போர்கள் ஏற்படக் காரணமாகியுள்ளது.


பெருநிலப்பகுதியை ஆளவேண்டும் என்ற பேராசை போர்களுக்குக்காரணமாகியுள்ளன.

 மற்ற சீறூர் தலைவர்களின் புகழையும், அவர் நாட்டு குடியின் வளமையும் கேட்டளவில் பொறாமை கொண்டு, அவர் நாட்டைத் தன் நாடாக்கிக் கொள்ளும் வேட்கை காரணமாகப் போர் ஏற்பட்டுள்ளது.
 
தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தோள்கள் தினவெடுக்கமிகை மறத்தின்காரணமாகப் போர்கள் ஏற்பட்டுள்ளன.

  வளமான நாட்டைப்பெற்றுப் பெருநிலப்பரப்பை ஆளும் நிலையில், சீறூர் மன்னர்களிடம் குவிந்துள்ள பெருஞ்செல்வத்திற்கு ஆசைப்பட்டு அவர் மகளை மணந்தால், பெருஞ்செல்வம்மகட்கொடையாகக் கிடைக்கும் என நினைத்து மகள் கேட்டல். மகட்கொடை மறுத்த நிலையில் போர் ஏற்பட்டுள்ளது.

சங்க காலத்தில் போரும் அமைதியும் 14



Image result for குறுநிலமன்னர்கள் 




கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?


குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் நிலப்பகுதிகள். இப்பகுதி மக்கள் வளமான காலத்தில் வசதியாக வாழ்ந்தார்கள். வசதியற்ற காலத்தில் வறுமையால் வாடினார்கள். என்றாலும் இவர்களின் வீரம் எப்போதும் மாறாமல் இருந்தது.

போரினால் வறுமையுற்ற முல்லை நிலப் பகுதியைச் சேர்ந்தவன் ஒரு சீறூர் மன்னன். புல்லரிசி மட்டுமே கிடைக்கும் சூழலில் வாழ்பவன். இந்தப்புல்லரிசியை மட்டுமே உண்டு வந்தாலுமே வீரத்தில் சிறிதும் சளைக்காதவன். பகைவர் அஞ்சத்தக்கப் பெரிய தோள்களையுடையவன். இப்படிப்பட்ட இவன் போர்க்களத்தில் நுழைந்து ஆயுதம் ஏந்திநின்றால், எதிரிபடைவீரர்களுக்கெல்லாம் அச்சத்தைத் தருவான் (புறம்.84) என்கிறது ஒரு பாடல். வறுமையிலும் வீரத்தில் செம்மையைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு என் நாடு என்று பெருமை பேசும் நிலையை இதில் காண முடிகிறது.

என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு (புறம்.84)
Image result for சங்க கால போர்