நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 16 August 2018

தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்



தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்
வாழ்க்கையில் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம் முதலான  உறுதிப்பொருள் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் நீதி நூல்கள் (அ)அற நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், பன்னிரு பாட்டியல் போன்றன அற நூல்களுக்கான இலக்கணத்தைத் தருகின்றன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், அற நூல் என்று இவற்றை கூறிவிட முடியாது. எனினும். பிற்கால அறநூல்களில், சங்ககால இலக்கியங்களிலுள்ள அறநெறிக் கருத்துக்கள் பெரிதும்  எடுத்தாளப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான  உள்ள 18 நூல்களுள் 11 நூல்களும் அற நூல்களாகக் காணப்படுகின்றன. ஒருவகையில், தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். ஜி. யூ. போப் பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும்விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன என்கிறார். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள்,சதகங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை அனைத்தின் அடிச்சரடு அறமே.