நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday, 5 January 2014

புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு

 புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு 

முனைவர் ப.முத்துசாமி      தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் -7

                பன்னெடுங்காலத்திற்கு முன்னரே மக்கள் நாகரிகமாக வாழ்ந்த நிலப்பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் பகுதிகளில் இந்தியாவில் உள்ள சிந்து சமவெளிப்பகுதியும் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியநாகரிகத்திற்கு முற்பட்டது; அது திராவிட நாகரகம்;  அது தமிழ்நாகரிகம் என்பது ஆய்யவாளர்தம் முடிவாகும். தமிழினம் மிகத்தொன்மையான இனம்; அவர்களின் தமிழ்மொழி மிகத்தொன்மையான மொழி; உலகிற்கே முதல்மொழி; அதுவே உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றெல்லாம் ஆய்வறிஞர்கள் உறுதியாக மொழிந்துள்ளனர்.

புறநானூற்று வழி மானுடநேயம்

                                                              புறநானூற்று வழி மானுடநேயம்   

முனைவர் மா.நடராசன்,         தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு),          சி.பி.எம். கல்லூரி,          கோவை.
                இலக்கியம் ஏன் படைக்கப்படுகிறது? இலக்கியத்தில் என்ன இருக்க வேண்டும்? என்பதைப் புரிந்து கொண்டால் இலக்கியத்தின் இலக்கு என்ன என்பதையும் இலக்கியத்தின் பயன்பாடுகளையும் புரிந்து கொள்ள இயலும். படைப்பாளியின்
                                """"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்    
                                    வாக்கினிலே ஒளி உண்டாகும்.   
                                வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்    
                                கவிப் பெருக்கும் மேவு மாயின்       
                            பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்     
                                   விழிபெற்றுப் பதவி கொள்வர்""
அப்படி என்றால் ஏழைகளாகிய மானுடர்கள் குருடர்களாக இருக்கக்கூடாது.

புறநானூற்றில் நிதி மேலாண்மை


புறநானூற்றில் நிதி மேலாண்மை

 அ.அறிவுநம்பி,   புலமுதன்மையர், புதுவைப்பல்கலக்கழகம்,         பாண்டிச்சேரி.
                தமிழ் இலக்கியப் பரப்பு அகன்றது. அப்பனுவல்களின் உள்ளடக்கங்களும் அளப்பரியன. நயமான இலக்கியப் பகுதிகட்டு அப்பால் மொழி வரலாறு, கலை, பண்பாடு, இடவரலாறு, அரசு, பொருளியல், பழக்கவழக்கம், நம்பிக்கைகள் போன்ற பல்வேறு கூறுகளையும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணலாம். சங்க இலக்கியங்களில் ஒன்றான படைப்பாகும். அரசியல் வாழ்க்கை, சமூக வாழ்க்கை, மக்களின் வாழ்வியல் போன்ற செய்திகளைப் புறநானூறு எடுத்துரைக்கும். புறநானூறு பேசும் நிதி பற்றிய புறநானூறு எடுத்துரைக்கும். புறநானூறு பேசும் நிதிபற்றிய செய்திகளை இந்த எழுத்துரை முன் வைக்கின்றது. அவ்வளவே.

புறநானூற்றில் போர்நீக்கிய புலவர்கள்


புறநானூற்றில் போர்நீக்கிய புலவர்கள்
முனைவர் வை.சோமசுந்தரம்,                                தமிழ்த்துறைத்தலைவர்,          ம.இரா.அரசினர்கலைக்கல்லூரி, மன்னார்குடி – 614 001.
                பழங்காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்த தமிழ்ப் புலவர்கள் மூவேந்தர்களையும், குறுநில மன்னர்களையும், வள்ளல்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனர்.
                அப்புலவர்கள் பரிசுகள் பெறுவதோடமையாமல் அரசர்களிடமும் பிறரிடமும் காணப்படுகின்ற குறைகளை எடுத்துக்கூறி, அவர்களைத் திருத்தினர் ; உற்ற இடத்தில் உதவிபுரிந்தனர் ; பகை அரசர்களை அறவுரை கூறி நண்பர்களாக்கினர். முற்றுகைகளிலும் படையெடுப்பிலும் ஆண்மையோடு சென்று அறிவுரை கூறினர். அரசியல் நெறி கடந்து செல்பவர்களுக்கு இடித்துரை வழங்கினர்.

புறநானூற்றுக் கையறுநிலைப்பாடல்கள்


முனைவர் ந. செண்பகலட்சுமி,                     தமிழ் இணைப்பேராசிரியர் மற்றும்
      துறைத்தலைவர்,   அரசினர் மகளிர் கலைக்கல்லூரி,     சேலம் - 636 008. 
புறநானூற்றுக் கையறுநிலைப்பாடல்கள்
                மனிதனைப் பிறவுயிர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனது ஆறாம் அறிவு எனக் கூறினாலும், மனிதன் அடிப்படையில் உணர்வு சார்ந்தவன். மனிதன் நிலத்தாலும், நிறத்தாலும், உணர்வாலும், மொழியாலும் வேறுபட்டவனாயினும் உணர்வுகளால் ஒன்றுபட்டே விளங்குகிறான். தொன்மைமிக்க நாகரிகம் பெற்ற நாடுகளனைத்திலும் காதலும் வீரமுமே வாழ்வெனக் கொண்டிருந்தாக அறியமுடிகிறது. காதல் கூட வீரத்தை அடிப்படையாகக் கொண்டு வீரனைச் சுற்றியே நிகழ்வதை சங்கப் பாடல்களில் காணமுடிகிறது.