நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 28 March 2020

திருவாசக யாப்பமைதி

           திருவாசக யாப்பமைதி


                கவிஞர்கள் தன் உள்ளத்தெழும் உணர்வுகளை, வெளிப்படுத்தக்கூடிய மொழி வடிவங்களே இலக்கியங்களாகும். கவிஞர்கள் ஓர் அனுபவத்தை என்பது போது, அவ்வனுபவத்தில் ஆழ்ந்து தோய்கின்ற நிலையில் அவர்களது உணர்வுகள் ஊற்றெடுத்துப் பாட்டாக வெளிப்படுகிறது. அந்த உணர்வு சொல் வடிவம் பெறும்பொழுது அது யாப்பு  எனப் பெயர் பெறுகிறது. ‘‘காலத்திற்கு ஏற்ற கருத்துகளையும் சிந்தனைகளையும் கவிஞர்கள் ஆற்றல் மிக்க மொழிநடையில் வெளியிடுவதற்குக் கருவியாகப் பயன்படும் செய்யுள் வடிவங்களே யாப்பு எனப் பெயர் பெறும்’’ என்கிறார் அகத்தியயலங்கம் (1983-3) கருத்துக்களுக்கு ஏற்பவும் ணர்ச்சிகளுக்கு ஏற்பவும் கவிஞர்கள், பலவகையான யாப்புகளை இலக்கியத்தில் கையாண்டுள்ளனர்.

திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்



திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்


Why should you learn Foreign Language? | Asap German Language Class
                ஒரு மொழியில் அமைந்துள்ள சொற்கள் எண்ணற்றவை. அவற்றைக் கொண்டு சொல்லமைப்புகளையும், தொடர்களையும், வாக்கியங்களையும் உருவாக்கலாம். வாக்கியங்களையும் தொடர்களையும் உருவாக்கும்பொழுது மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் கையாள்வதில்லை. இடம் நோக்கி அதனதன் பயன் நோக்கி சொற்கள் அமைக்கப்படுகின்றன. கேட்பவரை மனதில் கொண்டும் அவருக்கு எளிதில் புரியவண்ணமும், நேரடிப் பொருள்தரும் வண்ணமும் சொற்களைத் தேர்வு செய்ய் அமைப்பதென்பது ஒரு கலையாகும்.
                ஒருவர்தம் உள்ளத்தில் எழும் கருத்துக்களை அடுத்தவர் மனதில் எளிதில் பதியவைப்பதும், சலனமடையச் செய்வதும் சொற்களின் துணகொண்டுதான். சொற்களைப் பபயன்படுத்தும் முறையில் ஒவ்வொரு கலைஞனும், ஆசிரியனும், பேச்சாளனும் வேறுபடுகிறான்.
                சொற்களைச் சரியான இடத்தில், சரியானப் பொருளைத் தரும் வகையில் பயன்படுத்துவதுடன், அச்சொல்லானது கேட்பவர் மனதில் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும், வகையிலும் சொற்களைப் பயன்படுத்துபவனுடைய படைப்பே அல்லது பேச்சே நிலைபேறடைகிறது எனலாம். இக்காரணம் பற்றியே கலைகளில் இலக்கியக்கலைசிறப்பானதாகப் போற்றப்படுகிறது. எனவே, சொற்பயன்பாடு இலக்கியப் படைப்பைச் செம்மையுறவும் முழுமையடையவும் செய்கிறது என்பது தெளிவாகிறது.

Friday 27 March 2020

திருவாசகம் - மொழியமைப்பு

திருவாசகம் – மொழியமைப்பு


                திருவாசகம் தோன்றிய காலத்தொட்டு அதனைப் போற்றாத சான்றோர் பெருமக்கள் இல்லை. இராமலிங்க அடிகள், சிவப்பிரகாச சுவாமிகள், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள், தாயுமானவர், கல்லாடர் முதலிய எண்ணிறந்த சான்றோர்கள் திருவாசகத்தினைத் தன் உயிரினும் மேலான விழுமிய நூலாக வழிவழியே போற்றி வந்திருக்கின்றனர். அவ்வாறு இவர்கள் வியந்து பாராட்டுவது.
                                ‘‘மாணிக்க வாசகன் புகன்ற மதுரவாசகம்’’     (1984-221)
                                ‘‘திருவாசகமிங் (கு) ஒருகால் ஓதில்
                                  கருங்கல் மனமும் கரைந்துருக’’     (1984-70)
என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாசரும்,
                                ‘‘வான்கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை
                                  நான்கலந்த பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
                                  தேன்கலந்த பால்கலந்த செழுங்களித் தீஞ்சுவை கலந்த
                                  ஊன்கலந்த உவட்டாமல் இனிப்பதுவே’’ (1970-246)
                என்று வள்ளாரும் திருவாசகத்தின் பெருமையைப் போற்றிப் பாரட்டுகின்றார். கற்றாரும், கல்லாரும் வியந்து போற்றும் திருவாசகத்தின் மொழியடையை அறிய வேண்டியது

மணிவாசகரின் பக்திநெறி

மணிவாசகரின் பக்திநெறி

பக்தி சூஃபி இயக்கங்கள்-1 | ExamsDaily Tamil

ஆதி மனிதனின் அறிவு மலர்ந்த நிலையில், அவன் தன்னையும் விஞ்சிய ஓர் ஆற்றல் உலகில் இருப்பதாக உணர்ந்தான். இயற்கையின் எழுச்சி மிக்கப் படைப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதாக அறிந்து தெளிந்தான். தன் அறிவிற்கு அப்பாற்பட்டு விளக்கும் அந்த ஆற்றலை, தன் அனுபவங்களுக்கேற்ப பலரும் பலவிதமாக உரைத்தனர். நிலையற்ற இவ்வுலகில் நிலைபெறுவதற்கு அந்த ஆற்றல் உதவும் என்று கூறி, அதைப் பெற சில வழிமுறைகளையும் கூறினர். அந்த ஆற்றலை இறைஎன்று போற்றி, இறையை நினைத்து வழிபட்டால் பேரின்பம் கிட்டுமென்றும், நிலையான வாழ்வு வாழலாம் என்றம் தங்களுக்குத் தோன்றியதைக் கூறினர்.

திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்


   திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்



திருவாசகம் (Thiruvasagam) | Arulakam (அருளகம்) 

                தமிழ் மொழிக்கண் உள்ள பெருஞ்சிறப்புப் பெற்ற நூல்களுள் திருவாசகமும் ஒன்று. இதனை இயற்றியவர் மணிவாசகராவார். குருவாக வந்த இறைவனை நேரில் கண்டு, அந்த இறைக்காட்சியின் இன்பத்தில் தினைத்து, தித்திக்க அனுபவித்துப் பாடிய நூலே திருவாசகம். நிறைந்த அன்பிலே ஊறி வெளிப்பட்ட வாசங்களை உடையதாலாலே இந்நூல் கருங்கல் மனதையும் கணிவிக்கும் உருக்கமுடையதாகத் திகழ்கிறது. அளப்பரிய பொருளும், எளிமையும், இனிமையும் மிக்கது இந்நூல். சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாம் திருமுறையாக வைத்து எண்ணப்படும் ஏற்றமுடைதாகும். இலக்கியம், மொழி, சமயம், ஞானம் முதலிய பலதுறைகளிலும் பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகவும் சைவ சமயப் பெருமக்கள் அனைவராலும் போற்றப்படும் சிறப்புடையதாகவும் திகழ்கிறது இந்நூல். பக்தி இலக்கியங்களும் சிறந்த விளங்கும் திருவாசகத்தின் தனிச்சிறப்பினையும், மணிவாசகரின் பக்தியினையும் இவ்வியல் விளக்குகிறது.

கொரானா


நமது பள்ளிக்கூடம் - Home | Facebook 


புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா ... 

இலக்கற்ற இலக்கியம்
இதமற்ற அறிவியல்
மனிதமற்ற அரசியல்
இரக்கமற்ற தலைமை
கேள்வியற்ற மக்கள்
அறமற்ற மனம்
நோய் செய்யும் உலகுக்கே.









Thursday 26 March 2020

கொரானா கவிதைகள்


விடாது துரத்தும் கொரானா வைரஸ் ... 

ஆயுதங்கள் எடு.
அணுகுண்டு வீசு.
போர் தந்திரங்களைப் பயன்படுத்து.
பலப்படுத்திய படைகளைக் களமிறக்கு. 
ஏன்
கை கட்டி ...
வாய் பொத்தி....
முடங்கிவிட்டாய்?
அற்ப மனிதனே.....
அவ்வளவுதானா நீ?

Sunday 15 March 2020

நீர்க்குமிழிகள்







நீர்க்குமிழிகள்
காற்றில்தோன்றிக் கொண்டிருக்கும் போதே
ஒவ்வொன்றாய் உடைந்து.... பின்
மீண்டும் மீண்டும்
தோன்றுவதும்
உடைவதுமான இந்த விளையாட்டு...
யாரும்
மீளமுடியாமல்....
மீட்பவருமில்லாமல்...
மீட்சியற்ற
உலகின் இயக்கம்
இதுதான் என்கிறது
சிலருடைய
நினைவுக்குமிழிகள் போல்...
சில தானாக உடைகின்றன. 
சிலவற்றை நாம் விளையாட்டாய் உடைத்து விடுகிறோம்.
அதன் விதியென்னவோ உடைவதுதான்.