நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 March 2020

திருவாசகம் - மொழியமைப்பு

திருவாசகம் – மொழியமைப்பு


                திருவாசகம் தோன்றிய காலத்தொட்டு அதனைப் போற்றாத சான்றோர் பெருமக்கள் இல்லை. இராமலிங்க அடிகள், சிவப்பிரகாச சுவாமிகள், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள், தாயுமானவர், கல்லாடர் முதலிய எண்ணிறந்த சான்றோர்கள் திருவாசகத்தினைத் தன் உயிரினும் மேலான விழுமிய நூலாக வழிவழியே போற்றி வந்திருக்கின்றனர். அவ்வாறு இவர்கள் வியந்து பாராட்டுவது.
                                ‘‘மாணிக்க வாசகன் புகன்ற மதுரவாசகம்’’     (1984-221)
                                ‘‘திருவாசகமிங் (கு) ஒருகால் ஓதில்
                                  கருங்கல் மனமும் கரைந்துருக’’     (1984-70)
என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாசரும்,
                                ‘‘வான்கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை
                                  நான்கலந்த பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
                                  தேன்கலந்த பால்கலந்த செழுங்களித் தீஞ்சுவை கலந்த
                                  ஊன்கலந்த உவட்டாமல் இனிப்பதுவே’’ (1970-246)
                என்று வள்ளாரும் திருவாசகத்தின் பெருமையைப் போற்றிப் பாரட்டுகின்றார். கற்றாரும், கல்லாரும் வியந்து போற்றும் திருவாசகத்தின் மொழியடையை அறிய வேண்டியது
அவசியமாகிறது.
பொதுவாக நடையைப் பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துக்களை அறிவதன்மூலம் இதற்கான விடையைக் காணலாம்.
                ‘‘படைப்பு பொருளைக் கொண்டு சுவையினை உண்டாக்குவத.றகுக் கவிஞன் கைக்கொள்ளும் நெறியே நடை ஆகும்’’ என விளக்கம் தருகிறார் வீரப்பன் (1989-24)
இலக்கிய வெளியீட்டிற்குத் துணைபோகின்றது. தனிச் சுவையும் தகுதியும் அளிக்கின்றது’’ என்கிறார் சுப்பிரமணியம் (1983-169).
நடை என்பது மமனதன் தன் எண்ணங்களை வெளியிடும் தனிமுறைமை என்றும் மொழியில் உரக்கர் சிந்திப்பது நடை என்றும் விளக்குகிறார் தட்சிணாமூர்த்தி (1984-6).
 நடை என்பது கவிஞனின் தனித்தன்மை கவிஞன் உணர்த்தும் உத்தி, இலக்கிய உச்சநயம்’’ என ஜெயா (1989-4) தமது நூலின் மேற்கோள் காட்டியுள்ளார்.
                நடை என்பது பற்றிய பல்வேறு அறிஞர்களும் பல கருத்துக்களைக் கூறிச் சென்றிருந்தாலும், நடை என்பது ஒவ்வொரு கலைஞனுக்கும் உரிய தனிச்சிறப்பு என்றும், கலைஞர்களின் மொழிநடை வேறுபடுவதற்குக் காரணம் மொழியைப் பயன்படுத்துவோரின் உணர்திறனும் என்றும் கூறலாம்.
                நடையைப் பயன்படுத்தியே கவிஞன் கற்பவர்களிடம் ஒருவித உணர்ச்சியை ஏற்படுத்துகிறான். தன்னையும் வெளிப்படுத்திக்கொள்கிறான். ஒரு கவிஞனுடைய தனிப்பட்ட பண்புகளை நடையிலும் கோட்பாடுகளைப் பயன்படுத்தி விளக்கலாம்.
                அமைப்பு மொழியியலானது ஒலியன், உருபன், தொடர் வாக்கியம் போன்றவற்றை விளக்குகிறது. மொழிப் பயன்பாட்டில் இடம்பெறும் கருத்துக்கள் அவற்றை வெளிப்படுத்தும் மொழியமைப்புகள், அவை வெளிப்படும் முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்த்தே மொழிநடை ஆய்வு அமைய வேண்டும்’’ என்கிறார் ஜெயா (1989-4). இதன்மூலம் ஒருமொழியின் அமைப்பினையும் அதன் பயன்பாட்டினையும் ஆய்வதன்மூலம் ஒரு ஆசிரியரின் மொழிநடையை விளக்க இயலும் என்பது தெளிவாகிறது.

மொழியமைப்பு

                கற்றார், கல்லார். என்னும் இருதிறத்தாரும் சுவைக்கத்தக்க வகையில் அமையும் நூலே சிறப்பானதும் நிலைபேறுடையதும் ஆகும். ஒரு நூலானது நிலைபேறுடையதாகத் திகழ்வதற்குக் காரணமான பல கூறுகளுள் அதன் மொழிநடையானது சிறப்பான பங்குவகிக்கிறது.
நடை சிறப்பினாலேயே உலகின் பல இலக்கியங்கள் நிலைபேறு பெற்றுள்ளன. இதுபோன்ற இலக்கியங்களை ஆய்வு செய்யும்போதுதான் நடை என்னும் சொல்லின் முழுப்பொருளை அறிய இயலும், நடை பற்றி அறிய வேண்டுமானலும் முதலில் அதன் மொழியமைப்பு பற்றி அறிந்திருக்க வேண்டும்.
                ‘‘கார் வைத்திருப்பவர்கள் அதை ஓட்டத் தெரிந்திருந்தால் போதுமானது, காரின் அமைப்புப் பற்றிய அறிவு தேவையில்லை என்று நினைக்கின்றார்கள். எங்காவது காரில் போய்க்கொண்டிருக்கும் பொழுது அது பழுதடைந்தால்தான் அதன் அமைப்புப் பற்றிய அறிவு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்கிறோம்’’ என்று மொழியின் அமைப்புப் பற்றி அறிவது மிகவும் இன்றியமையாதது என்று ஒரு காரோடு இலக்கியத்தை ஒப்பிட்டுக் காட்டுகிறார் அரங்கன் (1985-2)
மொழி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மொழியின் முக்கியக்கூறாக விளங்கும் சொற்கள்தான். இவற்றுக்கிடையில் உள்ள உறவுகளையும், தொடர்புகளையும் ஆய்வதே அதன் மொழியமைப்பை அறிந்துகொள்ளத் துணைநிற்கும். எனவே, திருவாசகத்தின் மொழியமைப்பு பற்றிய கருத்துக்கள் இங்கு எடுத்துக் கூறப்படுகின்றன.

ஒலியனியல்

                ஓலியன் என்பது ஒலியமைப்பு ஆகும். தற்கால மொழியமைப்பில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இடம்பெறும் பிறமொழி எழுத்துக்களை ஒலியன்களாகக் குறிப்பிடுவர். மணிவாசகர் வடமொழிச் சொற்களைக் கையாளும் பொழுது அவற்றைத் தன்னினமாக்கி/ தமிழ்ப்படுத்தியே பயன்படுத்தியுள்ளார். எனவே, மணிவாசகரது மொழியில் குறிப்பிடத்தக்க அளவில் ஒலியனியல் வேறுபாடு எதுவும் காணப்படவில்லை.
எதுகை மோனை ஒலியன்கள்
                இசைநயம் மிகுவிக்க மணிவாசகர் எதுகை மோனை ஒலியன்களை யாப்பியல் விதிகளுக்கு ஏற்ப அமைத்துள்ளார்.
எதுகை - சாவ- ஆவ - மூவ - தேவ      (5-4)
மோனை - அத்தன் அணிதில்லை அம்பலவன் (11-16)
ஒரே அடியில் முதல் எழுத்துக்கள் ஒன்றிவரும் முற்றுமோனைகளை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார்.
ஒலிக்குறிப்புச் சொற்கள்
                ஓலிக்குறிப்புச் சொற்கள் பொருளற்றவை. ஆயினும், இடம் நோக்கி, வியப்பு, இரக்கம், மகிழ்ச்சி போன்ற குணங்கள் வெளிப்படுமாறு அமைத்துள்ளார்.
                                ‘‘அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று’’          (ஓல.மில்) (1-91)
                                ‘‘ஆ ஆ எந்தாய்’’ (வியப்பு) (5-4)
                                ‘‘ஆ ஆ ஆரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன்’’       (மகிழ்ச்சி) (11-7)
                                ‘‘தென்னா தென்னா’’ (இசை ஒலிக்குறிப்பு) (11-9)
ஒலியனியல் மாற்றம்
                மணிவாசகர் வடமொழி, தமிழ் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். எனவே, அவர்தம் படைப்பில் வடமொழிச் சொற்கள் ஆங்காங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. தமிழ் இலக்கண மரபிற்கு ஏற்பவே வடமொழிச்சொற்கள் கையாளப்பட்டுள்ளன.                    
1.             தமிழ் இலக்கண மரபில் ககரத்தின் பின்னர்ப் பிற மெய்யொலிகள் தொடர்தல் இல்லை. எனவே அவ்வாறு அமைந்துள்ள சொற்களுக்கு, ஒலியன் மாற்றங்களைச் செய்துள்ளார்     
முக்தி -      முத்தி
2.             மொழிக்கு முதலாகா என்ற ஒலிகளைத் தவிர்க்க அ.இ.உ என்ற உயிர்களை அவற்றிற்கு முதலில் இடம்பெறச் செய்துள்ளார்.
ரோமம்              -      உரோமம்    
3.             வடமொழிக்கே உரிய தனி ஒலிகள் தமிழ் ஒலிகளாக மாற்றப்பட்டுள்ளன.
உறரி         -      அரி
சாஸ்திர      -      சாத்திர
ஜாதி         -      சாதி
வடமொழிச் சொற்களைக் கையாளும் நிலையில் மணிவாசகர் தமிழ் ஒலியமைப்பிற்கு ஏற்றவாறு அமைத்துள்ளமை புலனாகிறது. உருபனியல் மற்றாங்களின் விகுதிகளை இணைப்பதன் மூலம் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
                                                ஆகம -      ஆகமம்

உருபனியல் நிலை

                உருபன் என்பது மொழியில் பொருள்தரும் மிகச்சிறந்த கூறாகும். உருபன் என்பதனைச் சொல்என்றும் குறிப்பிடலாம். பெயருருபன்கள், விளையுருபன்கள் திருவாசகத்தில் அமைந்திருக்கும் முறையினை இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.
4.4.1 உருபனியல் - பெயரில்
ஆண்பால் ஒருமை
                அன், ஆன், வன் போன்ற விகுதிகள் ஆண்பால் ஒருமையில் பயின்று வரும். திருவாசகத்தில்,
எ.கா
               

உடையான்   
ஆதி         
துணைவன்
நாதன்       
வேதி        
இறைவன்
சிவன்       
குருமணி    
ஆளுடையான்

ஆண்பால் உயர்வு ஒருமை பெயர்கள்
                அர், ஆர், வர் போன்ற விகு.கிள் உயர்வு ஒருமையில் வருகின்றன.
எ.கா
               

அடியார்               அடியவர்
                அன்பர்


பெண்பால் ஒருமை பெயர்கள்
                அன், , ஆன் போன்ற விகுதிகள் பெண்பால் ஒருமையா வருகின்றன.
எ.கா
                உமையாள்    தேவி
                மங்கை              பிராட்டி
ஒன்றன்பால் பெயர்கள்
                -து விகுதி பெற்ற வருவன.
எ.கா
                அது   இது
பலர்பால் பெயர்கள்
                ஆர், வர், ஓர் முதலான விகுதிகள் பயின்று வந்துள்ளன.
எ.கா
                அடியார்
                தேவர்
                சிறியோர்
பலவின்பால் பெயர்கள்
                கள்விகுதி பெற்று வருகின்றன.
                                குருகுகள்     நாய்கள்
மூவிடப் பெயர்கள்
                பெயர்களுக்குப் பதிலாகப் பயின்று வருவனவற்றைப் பதிலிடு பெயர்கள் என்பர். இப்பதிலிடு பெயர்கள் தன்மை முன்னிலை, படர்க்கை எனப் பாகுபாடு செய்யப்படுகின்றன. எனவே, மூவிடப் பெயர்களாகின்றன.
தன்மை ஒருமை
                தன்மை பதிலிலிபெயர்கள் பால் காட்டுவதில்லை. என் மட்டுமே உணர்த்தி நிற்கும். திருவாசகத்தில் நான், யான், என் முதலான தன்மை ஒருரும பதிலிடு பெயர் வடிவங்கள் காணப்படுகின்றன.
தன்மைப் பன்மை
                இதுவும் பால் காட்டுவதில்லை. என் மட்டுமே உணர்த்தி நிற்கும். திருவாசகத்தில் நாங்கள், தங்கள், எங்கள், நாம், நம், யாம், எம் போன்ற பதிலிடு பெயர் வடிவங்கள் காணப்படுகின்றன.
                நாங்கள், தங்கள், எங்கள் முதலானவை வேறுபாட்டுத் தன்மைப் பன்மைகள், நம்மை, நமக்கு முதலானவை உளப்பாட்டுத் தன்மைப் பன்மைகள்
முன்னிலை ஒருமை
                முன்னிலை ஒருமைப் பெயர்களும் பால் காட்டாமல் எண் மட்டுமே உணர்த்தி நிற்கும். நீ, உன் முதலானவையும், முன்னிலை பன்மைப் பதிலிடு பெயர்களான உங்கள், உம் முதலானவையும் பயின்று வந்துள்ளன.
படர்க்கை ஒருமை
                இவை பால், எண் உணர்த்தி நிற்கின்றன.
                ஆண்பால் ஒருமை   -      அவன்
                பெண்பால் ஒருமை   -      அவள்
பலர்பால்
                பலர்பால் பெயர்கள் ஆண் பெண் இரண்டிற்கும் பொதுவானவை.
                அவர்கள்
ஒன்றன்பால்
                                அது
பலவின்பால்
                                அவை
                இவ்வாறு திருவாசகத்தில் பதிலிடுபெயர்கள் மூன்று நிலைகளிலும் பயின்று வந்துள்ளன.
வேற்றுமை உருபன்கள்
                பெயர்ச் சொல்லானது வேற்றுமை ஏற்கும் தன்மையுடையது. இதனைப் பெயரடி-வேற்றுமை உருபன் என்ற அமைப்பில் காணலாம். தமிழில் உள்ள எட்டு வேற்றுமைகள் திருவாசகத்தில் பயின்று வந்துள்ளன. தமிழில் குறிப்பிடப்படும் முதல் வேற்றுமை பெயர் வேற்றுமையாகும். இதற்கென வேற்றுமை விகுதியைத் தமிழிலக் கணத்தார் குறிப்பிடவில்லை. மாறாகப் பெயரே வேற்றுமையாகப் பயின்றுவரும் என்பர்.
பொருள் வேற்றுமை
                இரண்டாம் வேற்றுமை என்று இதனைக் குறிப்பர். இதன் உருபு ஆகும்.
                                திரிபுரத்தை
                                முப்புரத்தை
மூன்றாம் வேற்றுமை
                இதன் உருபு ஓடுஆகும்
                அயனொடு மால்
                பாங்கினொடு
நான்காம் வேற்றுமை
                இதன் உருபு குஆகும்
                ஆண்டாய்க்கு
                எம்பிரானானாய்க்கு
ஜந்தாம் வேற்றுமை
                இதன் உருபு இன்ஆகும்.
                நாயிற் கடைப்பட்ட (நாயின் கடைப்பட்ட)
ஆறாம் வேற்றுமை
                இதன் உருபுகள் அதுமற்றும் ஆகும்.
                தழலது (அது)
                என   (அ)
ஏழாம் வேற்றுமை
                இதன் உருபு கண்ஆகும்.
                நின்கணே
                பொருட்கள்
எட்டாம் வேற்றுமை
                இதனை விளிவேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.
                                மடவீர் நேரிழையீர்                        நல்லீர்
                இவ்வாறு, எட்டு வேற்றுமைகளும் மரபு பிறழாமல் பயின்று வந்து.ள்ன. சில வேற்றுமை மயக்கங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது.
                                உன்னைப் போற்றி
இதில் நான்காம் வேற்றுமை உருபான குஇரண்டாம் வேற்றுமை உருபான ஆக மயங்கி வருகிறது.
பெயரெச்சம்
                செய்த, செய்யும், செய்வினை, செய்யா, செய்யாத முதலான பெயரெச்சங்கள் திருவாசகத்தில் காணப்படுகின்றன.
                                நின்றஎழில்
                                சூழ்தரும்
                                உருள்கின்ற
                                செல்லாஅ
                                வாழாத
செல்லாஅ, வாழாத முதலானவை எதிர்மறைப் பெரெச்சங்களாகும்.
உருபனியல் - வினையியல்
                வினை என்பது ஒரு செயலினைக் காட்டுவது, வினையைப் பற்றிக் கூற வந்த தொல்காப்பியர், ‘வினையானது வேற்றுமை ஏற்காது. காலத்தைக் காட்டு.என்று (நூநூ683) குறிப்பிடுகிறார். வினையானது காலம் காட்டும் விகுதிகளைப் பெற்றிருப்பது போலவே பால்காட்டும் விகுதிகளையும் பெற்றுள்ளது. பால்காட்டும் விகுதிகளாவன தன்மை, முன்னிலை, படர்க்கை முதலானவைகளாகும். வினைமுற்றுக்கள் இப்பிரிவினைக் காட்டும் விகுதிகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. திருவாசகத்தில பயின்று வந்துள்ள வினைமுற்றுக்களில் இவ்விகுதிகள் பயின்று வந்துள்ள பாங்கினைக் கீழேகாணலாம்.
தன்மை ஒருமை வினைமுற்று
                பேசுபவன் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவதே தன்மைஎனப்படும் ‘‘பழந்தமிழில் - ஏன், -என், -அன், -0 (-இசின்) ஆகிய விகுதிகள் தன்மை ஒருமை விகுதிகளாகப் பயன்ன்டுகின்றன’’ என அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார் (1983-36)
                தொல்காப்பியரும், கு, டு, து, று, என், ஏன், அல் (நூ-688) முதலான தன்மை ஒருமை விகுதிகளைக் குறிப்பிடுகிறார்.
                திருவாசகத்தில் - ஏன் விகுதியே அதிகமாகப் பயின்று வருகிறது. இவ் உருபு மூன்று காலத்திலும் பயின்று வருகிறது. இதற்கு அடுத்த நிலையில் என், அன், ஆகிய இரண்டும் பிற உருபுகளைக் காட்டிலும் அதிகமாக வருகின்றன.
                                விரைகின்றேன்       (5-11)
                                பெறில் வேண்டேன்   (5-12)
                                அழைக்கின்றிலேன்   (5-45)
                                அகங்குழையேன்     (5-14)
                                புனைந்தேத்தேன்     (5-14)
                                என்னை ஆண்டாய்க்கு(5-21)
                                வினையினேற்கே     (5-21)
                                பேசின்              (5-24)
                                பூசின்               (5-24)
                                புரிந்திலன்           (5-5)
                                பரவுவனே           (5-16)
                                உரைப்பன்           (1-20)
                                வருந்துவன்          (5-13)
                                கண்டது             (6-32)
                                செய்து              (6-32)
                                அஞ்சல்             (6-16)
                இத்தொகுப்பிலிருந்து மணிவாசகர் ஏன்விகுதியை பெரும்பாலும் எதிர்மறையிலேயே பயன்படுத்தியுள்ளமை புலனாகிறது பிற விகுதிக. சிறுபான்மையே பயின்று வருதலையும் காணமுடிகிறது. -சின் விகுதி பற்றித் தொல்காப்பியர் தன்மை ஒருமை விகுதிகளைக் கூறுமிடத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக, அசைகளைக் குறிக்குமிடத்து -சின் விகுதியை அசையாக் குறிக்கிறார்.
                                ‘‘இகுமும் சின்னும் ஏii இடத்தொடுந்
                                  தகுநிலையுடைய என்மனார் புலவர்’’            (தொ.நூ. 760)
தொல்காப்பியர் கருத்தப்படி இது முன்னிலையில் பயின்று வரும் என்பது புலனாகிறது. மணிவாசகர் இவ்விகுதியைப் படர்க்கை நிலையில் கையாள்கிறார்.
தன்மைப் பன்மை வினைமுற்று
                பேசுபவன் பிறரை உள்ளடக்கிப் பேசுவதையே தன்மைப் பன்மை என்று குறிப்பிடுகிறோம்.
                                ‘‘அம் ஆம் என்பப முன்னிலையாரையும்
                                  எம் ஏம் ஓம் இவை படர்க்கையாரையும்
                                  உம்மூர் கடதற விருபா லாரையும்
                                  தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை’’      (நன்.நூ. 332)
என்று பவனந்தி முனிவர் தன்மைப் பன்மை விகுதிகளை வரையறை செய்துள்ளார்.
                தொல்காப்பியர் அம், ஆம், எம், கும், டும், தும், றும், (நூ-687) போன்ற விகுதிகளைக் குறிப்பிடுவார். பவணந்தி குறிப்பிடும் ஓம்விகுதி பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.      
                மணிவாசகர் ஓம், தும் முதலிய விகுதிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
                புத்தடியோம்  (7-3)
                சொல்லுகோம் (7-4)
                பாடிணோம்   (7-8)
                பாடும்        (7-10)
                பாடுதும்      (8-1)
ஓம்விகுதி மூன்று காலத்திலும் பயின்று வருகிறது. தும் - முன்னிலையில் உள்ளாரையும் படர்க்கையில் உள்ளாரையும் குறிப்பிடுவதுபோல் அமைந்துள்ளன.
முன்னிலை ஒருமை வினைமுற்று
                                ‘‘முன்னிலைக் கிளவி
                                  இஐ ஆயென வரூஉம்’’ (தொல். சொல். 708)
                என்று தொல்காப்பியர் முன்னிலை ஒருமை விகுதிகளாக இ, ,ஆய் இம்மூன்றையும் குறிப்பிடுகிறார். திருவாசகத்தில் ஆய்உருபே அதிகமாகக் காணப்படுகிறது.
                                வாய் திறப்பாய்             (7-7)
                                உணராய்            (7-5)
                                உருகாய்             (7-6)
                                ஆட்கொண்டாய்      (5-25)
                                அருளினை          (4-209)
                                இசைந்தனை         (4-210)
                திருவாசகத்தில் உருபு அருகியே காணப்படுகிறது. ஆனால், ‘‘சங்க இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் - ஐ விகுதியே அதிகமாகக் காணப்படுகிறது’’ என்பார் அகத்தியலிங்கம் (1983-198). இவற்றினால் சங்க இலக்கியத்தில் அதிகமாகப் பயின்று வந்த விகுதி இடைக்காலத்தில் அருகித் தற்காலத்தில் வழக்கொழிந்த நிலையைக் காணமுடிகிறது.
முன்னிலைப் பன்மை வினைமுற்று
                                திருவாசகத்தில்,
                                பாடுமின்      (9-11)
                                ஆடுமின்      (9-11)
                                கூவுமின்     (9-2)
                                நேரிழையீர்   (7-2)
                என்ற வழக்குகளில் -மின், -ஈர் போன்ற விகுதிகள் முன்னிலைப் பன்மை குறிக்கப் பயின்று வருகின்றன. இம்மூன்று விகுதிகளிலும் மின்விகுதியே திருவாசகத்தில் பெரும்பான்மை பயின்று வருகிறது. ஆனால், பழந்தமிழில் இர் விகுதியும் ஈர் விகுதியுமே பெரும்பான்மை பயின்று வந்துள்ளன’’ என்பார் அகத்தியலிங்கம் (1983-220). இதன்மூலம் விகுதிகளின் பயன்பாடு காலந்தோறும் மாறுபடுவதைக் காணமுடிகிறது.
படர்க்கை ஆண்பால் வினைமுற்று
                தமிழில் பெரும்பாலும் ஆண்பால் ல்வளைமுற்றுக்கள் (ஆன்) விகுதியே பெற்று வருதல் வழக்கு, தொல்காப்பியர் அன், ஆன் (நூ-690) என்னும் இரு விகுதிகளையும் ஆண்பால் காட்டுவனவாகக் குறிப்பிடுகிறார்.
                                ஏற்றினன்     (3-175)
                                நாட்டான்     (1-90)
                                செய்தோன்    (3-120)
                திருவாசகத்தில் அன்விகுதியை விடவும் அன்விகுதியும், ‘ஓன்விகுதியும் பெரும்பான்மையாகப் பயின்று வருதலைக் காணமுடிகிறது.
பெண்பால் வினைமுற்று
                பொதுவாக, பெண்பால் வினைமுற்றாக அள்விகுதியே பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் அள், ஆள் (நூ. 690. என்றும் விகுதிகளைக் கூறிச் சென்றுள்ளார். திருவாசகத்தில்,
                                கிடந்தாள்     (7-1)
                                குழல்மடவாள் (5-17)
                                கூந்தனையாள்       (7-15)
ஆள்விகுதியே பெருமளவு பயின்று வருகிறது.
ஓன்றன்பால் வினைமுற்று
                ஓன்றன்பால் விகுதிகளாகத் தொல்காப்பியர் து, டு, று ஆகிய (நூ. 491) விகுதிகளைக் குறிக்கிறார்.
                                திருவாசகத்தில் துவிகுதி பயின்று வருகிறது.
                                ஆத்தி உரித்தது
பலர்பால் வினைமுற்று
                பலர்பால் வினைமுற்றுகளாகத் தொல்காப்பியர் அர், ஆர், , மார் (நூ. 691, 692) முதலான விகுதிகளைப் பலர்பால் விகுதிகளாகக் குறிப்பிடுகிறார். திருவாசகத்தில் அர், ஆர், மார் முதலான விகுதிகளோடு ஓர்விகுதியும் பயின்று வருகிறது.
                               

கொம்பர்      (5-67)
                                அடியவர்      (8-4)
                                சூரியனார்     (14-15)
                                குழலிமார்     (29-3)
                                வானோர்      (8-3)

                ‘‘முன் பழந்தமிழ் நூல்களில் ஆர் விகுதியைவிட ஓர் அதிகமாகக் காணப்படுகிறது. பின் பழந்தமிழ் நூல்களாகிய பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றில் ஆர்விகுதியே அதிகமாக வந்துள்ளது’’ என்பார் அகத்தியலிங்கம் (1984-85) திருவாசகத்திலும் ஆர்விகுதியே அதிகமாகப் பயின்று வருகிறது.
பலவின்பால் பெயர்கள்
                தொல்காப்பியர் அ, , வ என்ற (நூ.492) மூன்றையும் பலவின்பால் விகுதிகளாகக் குறிப்பிடுகிறார். திருவாசகத்தில்,
                                ஆர்ப்ப        (7-12)
                                அசைந்தன    (3-82)
                                இயம்பின     (20-3)
                என்று அகர ஈற்று பலவின்பால் வினைமுற்றுக்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. இவை தவிர கள் விகுதி பெற்றும் ‘‘கழலிணைகள்’’ (5-17- சொற்கள் காணப்படுகின்றன. அகரமே பெரும்பான்மை பயின்று வருகிறது. பிற விகுதிகள் சில சூழல்களில் மட்டுமே வருகின்றன.
காலம் காட்டும்  உருபன்கள்
                வினைச்சொற்கள் காலம் காட்டும் தன்மையுடையன. காலங்களை மூன்றாக வகைப்படுத்தி அதற்குரிய விகுதிகளையும் வரையறுத்துள்ளனர். இலக்கணிகள், திருவாசகத்தில் பயின்று வந்துள்ள கால விகுதிகளைக் கீழே காணலாம்.
                                கிடந்தாள்     (7-1)
                                உரித்தது      (13-19)
                போன்றவற்றில்      -ந்த- த்த்’ -ன்ற்- என்பவை இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாகத் திதிவவசகத்தில் பயின்று வந்துள்ளன. நிகழ்காலத்தில் பெரும் பாலும் கின்றுஎன்ற உருபை கையாளுகிறார்.
                                விரைகின்றேன்       (5-14)
                                அழைக்கின்றேன்     (5-45)
                                வாழ்கின்றாய் (5-20)
                                கிற்றிலேன்          (5-41)
                                கொள்ளுகில்லேன் (5-46) போன்றவற்றில் கிற்உருபையும்,
                                தூகேன்              (5-14)
                                மெழுகேன்       (5-14) போன்றவற்றில் க்உருபையும் கையாளுகிறார்.
எதிர்கால வினையுருபன்களில் வ்உருபையே பெரும்பாலும் காணமுடிகிறது.
                                சாவேன்      (5-18)
                                பாடும்        (7-10)
                                திறப்பாய்     (7-7)
                                புகுளிப்பாய்   (1-43)
                                பெறுவான்    (25-1)
                                பரவுவார்      (26-4)
                                காண்பான்    (27-4)
                                கரப்பாய்      (27-10)
முறையே வ், 0, ப், போன்ற உருபுகளைக் கையாண்டுள்ளதைக் காணமுடிகிறது.
ஏவல் வினை உருபன்கள்
                                பாடுமின்      -      மின்   (9-11)
                                பாடும்        -      உம்   (7-10)
                                வளருதியோ  -           (7-1)
                                போக்காதே    -           (7-4)
                                நல்குதியே    -      இயே  (7-9)
                                கேளீர்        -      ஈர்    (7-20)
வியங்கோள் வினைமுற்று
                                சேரற்க       (7-19)
                                காணற்க             (7-19)
                                அருளுக             (7-20-
                                வாழ்க        (1-1)
                                வெல்க       (1-6)
                                காண்க       (3-30)
                உடன்பாடு, எதிர்மறை, ஏவல், வேண்டல், வாழ்த்தல் முதலிய பல பொருள்களில் வியங்கோள் வினைமுற்றுக்களைப் பயன்படுத்தியுள்ளார்.
குறிப்பு வினைமுற்று
                                கரியன் பிச்சன் கடியன் - பண்புப் பகுதியோடு விகுதி சேர்த்தும் குறிப்புவினை
 முற்றுக்களை  உருவாக்கியுள்ளார். இவை தவிர,
                                கூறன்        - இடப்பொருளில் அமைந்தன
                                கழலினன்     - உடமைப் பொருளில் அமைந்தன
                                உளன்        - உண்மை என்னும் சொல்லோடு பால் ஈறு சேர்ந்து அமைந்தன
என்று உயர்திணையில் குறிப்பு வினைகளைக் கையாண்டுள்ளார். அஃறிணையில், பொன்மேனி - பொன் அன்ன மேனி என்று ஒப்பொடு வரும் குறிப்பு வினையையும் பயன்படுத்தியுள்ளார்.
வினையெச்ச உருபன்கள்
வினையெச்சங்களாகத் திருவாசகத்தில் என்புருக, இறைஞ்சு, பருக, வந்து, நின்று, கருத, செய்ய, உய்ய, மாய, கிடந்த, சலியா முதலான வினையெச்சங்கள் பயின்று வருகின்றன.      
பொருள்தரும் ஒலியக்கூறுகளான ஒற்றை உருபன்களைக் கண்டோம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?