திருவாசகம் – மொழியமைப்பு
திருவாசகம் தோன்றிய காலத்தொட்டு அதனைப்
போற்றாத சான்றோர் பெருமக்கள் இல்லை. இராமலிங்க அடிகள், சிவப்பிரகாச சுவாமிகள், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள், தாயுமானவர், கல்லாடர் முதலிய எண்ணிறந்த சான்றோர்கள்
திருவாசகத்தினைத் தன் உயிரினும் மேலான விழுமிய நூலாக வழிவழியே போற்றி
வந்திருக்கின்றனர். அவ்வாறு இவர்கள் வியந்து பாராட்டுவது.
‘‘மாணிக்க வாசகன்
புகன்ற மதுரவாசகம்’’ (1984-221)
‘‘திருவாசகமிங்
(கு) ஒருகால் ஓதில்
கருங்கல் மனமும் கரைந்துருக’’ (1984-70)
என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாசரும்,
‘‘வான்கலந்த
மாணிக்க வாசகரின் வாசகத்தை
நான்கலந்த பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்த பால்கலந்த செழுங்களித் தீஞ்சுவை
கலந்த
ஊன்கலந்த உவட்டாமல் இனிப்பதுவே’’ (1970-246)
என்று வள்ளாரும் திருவாசகத்தின்
பெருமையைப் போற்றிப் பாரட்டுகின்றார். கற்றாரும், கல்லாரும் வியந்து போற்றும் திருவாசகத்தின் மொழியடையை அறிய
வேண்டியது