நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 27 December 2013

சிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை

13. புறஞ்சேரி இறுத்த காதை
‘இரவில் வழிச் செல்லுதல் நன்று’ என்று கோவலன் கவுந்தி அடிகளிடம் கூறுதல்

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு,
புண்ணிய முதல்வி திருந்துஅடி பொருந்தி,
‘கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறஅள்;
படிந்தில சீறடி பரல் வெங் கானத்து;
""""கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா;                                         5

வாள் வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரை தேர் முதலையும்,
உருமும், சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா-
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு"""" என,
எங்கணும் போகிய இசையோ பெரிதே;                                                10
பகல் ஒளி - தன்னினும், பல் உயிர் ஓம்பும்
நில ஒளி விளக்கின், நீள் இடை மருங்க¨ன்,
இரவிடைக் கழிதற்கு ஏதம் இல்’ என-

அடிகள் ஒருப்படுதல்

குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து,
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல,                                                15
படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு-



பார்மகள் கண்ணகியின் நிலைக்கு இரங்கித் துயிலுதல்

‘பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி,
தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றி,
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீர் இள வன முலை சேராது ஒழியவும்,                                                20
தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல்
போது சேர் பூங் குழல் பொருந்தாது ஒழியவும்,
பைந் தளிர் ஆரமொடு பல் புங் குறு முறி
செந் தளிர் மேனி சேராது ஒழியவும்,
மலயத்து ஓங்கி, மதுரையின் வளர்ந்து,                                                25
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு
பால் நிலா வெண் கதிர் பாவைமேல் சொரிய,
வேனில் திங்களும் வேண்டுதி’ என்றே
பார்மகள் அயா உயிர்த்து, அடங்கிய பின்னர்-

அடிகளின் அறவுரையைக் கேட்டுக் கோவலன் வழிநடத்தல்

ஆர் இடை உழந்த மாதரை நோக்கி
‘கொடுவரி மறுகும்; குடிஞை கூப்பிடும்;                                                30
இடிதரும் உளியமும்; இனையாது ஏகு’ என,
தொடி வளைச் செங் கை தோளில் காட்டி,
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி
அறவுரை வேட்டு, ஆங்கு, ஆர் இடை கழிந்து-                                        35

வரி நவில் அந்தணர் வாழும் பதியை வைகறையில் சார்தல்

வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து,
கான வாரணம் கதிர் வரவு இயம்ப
வரிநவில் கொள்கை மறைநுhல் வழுக்கத்துப்
புரிநுhல் மார்பர் உறை பதிச் சேர்ந்து-

கோவலன் நீர்நிலை நோக்கிச் செல்லுதல்

மாதவத்து ஆட்டியொடு காதலி - தன்னை ஓர்                                        40
தீது தீர் சிறப்பின் சிறைஅகத்து இருத்தி,
இடு முள் வேலி நீங்கி, ஆங்கு, ஓர்
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன்,

கோவலனது உருவ மாறுபாட்டால் ஐயுற்ற கௌசிகன், உண்மை தெளிய,
மாதவிப் பந்தரை நோக்கிக் கூறுதல்

காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு
ஊது உலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி,                                        45
உள் புலம்புறுதலின், உருவம் திரியா;
கண்-புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்,
‘கோவலன் பிரியக் கொடுந் துயர் எய்திய,
முh மலர் நெடுங் கண் மாதவி போன்று, இவ்
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து, உடனே,                                        50
வருந்தினை போலும் நீ, மாதவி!’ என்று, ஓர்
பாசிலைக் குருகின் பந்தரில் பொருந்தி,
கோசிக மாணி கூறக் கேட்டே-

அதைக் கேட்ட கோவலன் கௌசிகனை அடுத்துக் கூறுதல்

‘யாது நீ கூறிய உரை ஈது, இங்கு?’ என-
‘தீது இலன், கண்டேன்’ எனச் சென்று எய்தி-                                        55

புகாரில் நிகழ்ந்தவற்றைக் கௌசிகன் அறிவித்தல்

கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்;
இரு நிதிக் கிழவனும் பெரு மனைக் கிழத்தியும்
அரு மணி இழந்த நாகம் போன்றதும்;
இன் உயிர் இழந்த யாக்கை என்ன,
துன்னிய சுற்றம் துயர்க் கடல் வீழ்ந்ததும்;                                            60
‘ஏவலாளர்! யாங்கணும் சென்று,
கோவலன்தேடிக் கொணர்க’ எனப் பெயர்ந்ததும்;
‘பெருமகன் ஏவல் அல்லது, யாங்கணும்,
அரசே தஞ்சம்’ என்று, அரும் கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல,                                                65
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும்;
வசந்தமாலைவாய் மாதவி கேட்டு,
பசந்த மேனியள், படர் நோய் உற்று,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு, ஓர்
படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்;                                            70
வீழ் துயர் உற்றேள் விழுமம் கேட்டு,
தாழ் துயர் எய்தி, தான் சென்று இருந்ததும்;
இருந் துயர் உற்றோள், ‘இணை அடி தொழுதேன்;
வரும் துயர் நீக்கு’ என, மலர்க் கையின் எழுதி,
‘கண் மணி அனையாற்குக் காட்டுக’ என்றே,                                        75
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்;
ஈத்த ஓலை கொண்டு, இடைநெறித் திரிந்து;
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்;
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து-

மாதவியின் முடங்கலைப் பார்த்துக் கோவல ன் உண்மை உணர்தல்

ஆங்கு,
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி,                                            80
போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை,
மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட,
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்
குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக்
காட்டியது; ஆதலின் கை விடலீயான்,                                                85
ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன்,
‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,                                        90
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!’
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
‘தன் தீது இலள்’ என, தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு-                                        95

மாதவியின் திருமுகத்தைத் தன் தந்தைக்குக் கோவலன் அனுப்புதல்

என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல்,
பொற்பு உடைத்தாக, பொருள் உரை பொருந்தியது;
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன்;
கோசிக மாணி! குhட்டு’ எனக் கொடுத்து,
நடுக்கம் களைந்து, அவர் நல் அகம் பொருந்திய                                        100
இடுக்கண் களைதற்கு ஈண்டு’ எனப் போக்கி-

கோவலன் மீண்டு வந்து, பாணர்களுடன் இசை பாடிப் பொழுது போக்குதல்

மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த
ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு,
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரில் பாங்குறச் சேர்ந்து,                                                105
செந்திறம் புரிந்த செங்கோட்டு - யாழில்,
தந்திரிகரத்தோடு திவவு உறுத்து யாஅத்து,
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி
உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி,
வரன்முறை வந்த மூ-வகைத் தானத்து,                                                110
பாய் கலைப் பாவை பாடல் - பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு,
பாடல் - பாணி அளைஇ, அவரொடு-

மதுரைப் பதிக்கு இன்னும் எஞ்சியுள்ள வழி பற்றிப் பாணரிடம்
கோவலன் வினவுதலும், அவர் விடை பகர்தலும்

‘கூடல் காவதம் கூறுமின் நீர்’ என-
‘காழ் அகில் சாந்தம், கமழ் புங் குங்குமம்,                                            115
நாவிக் குழம்பு, நலம் கொள் தேய்வை,
மான்மதச் சாந்தம், மணம் கமழ் தெய்வத்
தே மென் கொழுஞ் சேறு ஆடி; ஆங்கு,
தாது சேர் கழுநீர், சண்பகக் கோதையொடு,
மாதவி, மல்லிகை, மனை வளர் முல்லைப்                                            120
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி;
அட்டில் புகையும், அகல் அங்காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்,
ஐமந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த
அம் தீம் புகையும், ஆகுதிப் புகையும்,                                                125
பல் வேறு பூம் புகை அளைஇ; வெல் போர்
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின்
அளந்து உணர்வு-அறியா ஆர் உயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றி;
புலவர் செந் நாப் பொருந்திய நிவப்பின்                                                130
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு,
மதுரைத் தென்றல் வந்தது; காணீர்!
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்;
தனி, நீர் கரியினும்த தகைக்குநர் இல்’ என-

முந்திய நாளில்போல, மூவரும் இரவில் வழிநடத்தல்

முன் நாள் முறைமையின், இருந் தவ முதல்வியொடு                                    135
பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர்-

வைகறைப் போதில் மதுரையின் பேரொலி கேட்டு வருத்தம் நீங்குதல்

பெயர்ந்து, ஆங்கு,
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும்,
பால் கெழு சிறப்பின் பல் இயம் சிறந்த
கால முரசக் கனை குரல் ஓதையும்;                                                    140
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்;
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்;
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும்;                                            145
வாரிக் கொண்ட வயக் கரி முழக்கமும்;
பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்;
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்;
கார்க் கடல் ஒலியின், கலி கெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர்கொள, ஆர் அஞர் நீங்கி-                                            150


வையை ஆற்றின் காட்சி

குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்,
மரவமும், நாகமும், திலகமும், மருதமும்,
சேடலும், செருந்தியும், செண்பக ஓங்கலும்,
பாடலம் - தன்னொடு பல் மலர் விரிந்து;
குருகும், தளவமும், கொழுங் கொடி முசுண்டையும்,                                    155
விரி மலர் அதிரலும், வெண் கூதாளமும்,
குடசமம், வெதிரமும், கொழுங் கொடி பகன்றையும்,
பிடவமும், மயிலையும், பிணங்கு அரில் மணந்த
கொடுங் கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்து, சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல்;                                        160
வாலுகம் குவைஇய மலர்ப் பூந் துருத்தி,
பால்புடைக் கொண்டு, பல் மலர் ஓங்கி,
எதிர்எதிர் விளங்கிய கதிர் இள வன முலை;
கரைநின்று உதிர்ந்த கவிர் இதழ்ச் செவ் வாய்;
அருவி முல்லை அணி நகைஆட்டி-                                                165
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங் கயல் நெடுங் கண்;
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்;
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய புங்கொடி-
வையை என்ற பொய்யக் குலக்கொடி-                                                170
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்,
புண்ணிய நறு மலர் ஆi போர்த்து,
கண் நிறை நெடு நீர் கரந்தனள், அடக்கி-

வையையைக் கடந்து, மூவரும் தென் கரை சேர்தல்

புனல் யாறு அன்று; இது பூம் புனல் யாறு!’என,
அன நடை மாதரும் ஐயனும் தொழுது;                                                175
பரி முக அம்பியும், கரி முக அம்பியும்,
அரி முக அம்பியும், அரும் துறை இயக்கும்
பெரும் துறை மருங்கின் பெயராது; ஆங்கண்,
மாதவத்து ஆட்டியொடு மரப் புணை போகி;
தே மலர் நறும் பொழில்தென் கரை எய்தி-                                            180

மதுரை மாநகரின் புறஞ்சேரியை அடைதல்

‘வானவர் உறையும் மதுரை வலம் கொளத்
தான் நனி பெரிதும் கதவு உடைத்து’ என்று, ஆங்கு,
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி;
கரு நெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும்,
தையலும் கணவனும் தனித்து உறு துயரம்                                            185
ஐயம் இன்றி அறிந்தன போல,
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி,
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க;
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி,
‘வாரல்’ என்பன போல், மறித்துக் கை காட்ட;                                            190
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ளை நீர்ப் பண்ணையும், விரி நீர் ஏரியும்,
காய்க் குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த் திரள் பந்தரும், விளங்கிய இருக்கை;
அறம் புரி மாந்தர் அன்றிச் சேராப்                                                    195
புறஞ்சிறை மூதூர்; புக்கனர் புரிந்து - என்.

14. ஊர் காண் காதை
சூரியன் உதித்தல்

புறஞ்சிறைப் பொழிலும், பிறங்கு நீர்ப் பண்ணையும்,
இறங்கு கதிர்க் கழனியும், புள் எழுந்து ஆர்ப்ப;
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர் பொதி அவிழத்த உலகு தொழு மண்டிலம்
வேந்து தலை பனிப்ப, ஏந்து வாள் செழியன்                                            5
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப-

காலை முரசத்தின் ஒலி

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்,
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்,
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்,
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்,
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்,                                            10
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்,
வால் வெண் சங்கொடு வகை பெற்று ஓங்கிய
காலை முரசம் கனை குரல் இயம்ப-

மதுரை நகரைக் காணவேண்டும் என்னும் தனது விருப்பத்தைக்
கவுந்தி அடிகளிடம் கோவலன் தெரிவித்தல்

கோவலன் சென்று, கொள்கையின் இருந்த
கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி,                                                15
‘நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி,
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த,
அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து,
சிறுமை உற்றேன், செய் தவத்தீர்! யான்;
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு                                        20
என் நிலை உணர்த்தி, யான் வரும்காறும்,
பாதக் காப்பினள் பைந்தொடி; ஆகலின்,
ஏதம் உண்டோ, அடிகள்! ஈங்கு?’ என்றலும் -



கவுந்தி ஆறுதல் மொழி கூறி, ஊர் கண்டு வருமாறு பணித்தல்

கவுந்தி கூறும்; ‘காதலி-தன்னொடு                                                25
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய்!                                           
""""மறந்துறை நீங்குமின்;  வல் வினை ஊட்டும்""""’ என்று,
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,
நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்,
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்;                                            30
தீது உடை வெவ் வினை உருத்தகாலை;
சூபதைமை கந்தாப் பெரும் பேது உறுவர்;
ஒய்யா வினைப் பயன் உண்ணும்காலை,
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்;
பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும்,
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்,                                                 35
புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது,
ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை;
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறுhஉம் கொள்ளாத் துன்பம்                                             40
கண்டனர் ஆகி, கடவுளர் வரைந்த
காமம் சார்பாக் காதலின் உழந்து, ஆங்கு,
ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால், இறந்தோர் பரலால்;
தொன்றுபட உரூஉம் தொன்மைத்து, ஆதலின்;
தாதை ஏவலின் மாதுடன் போகி,                                                    45
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ?
வல் ஆடு ஆயத்து, மண், அரசு, இழந்து;                                             50
மெல்லியல்-தன்னுடன் வெங் கான் அடைந்தோன்
காதலின் பிரிந்தோன் அல்லன்; காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்;
அடவிக் கானகத்து ஆய்-இழை-தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது                                                55
வல் வினை அன்றோ? மடந்தை-தன் பிழை எனச்
சொல்லலும் உண்டேல், சொல்லாயோ? நீ
அனையையும் அல்லை; ஆய்-இழை-தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே?
வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்;
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு’ என்றலும்-                                        60

கருங்கை வீதி வழியாகச் செல்லுதல்

இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில்
பெரும் கை யானை இன நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி-                                                     65


மதில் வாயிலைக் கடந்து, அகநகரின் எல்லையைச் சார்தல்

கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு-ஆங்கு,
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய் திறந்தன்ன மதில் அக வரைப்பில்-

கடை கழி மகளிரின் பொழுது போக்கு

காலைப் பொழுதைக் கழித்தல்

குட காற்று எறிந்து, கொடி நுடங்கு மறுகின்                                             70
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை
விரி பூந் துருத்தி வெண் மணல் அடைகரை
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி,
பூம் புணை தழீஇ, புனல் ஆட்டு அமர்ந்து-                                            75

நண்பகலில் பொழுதுபோக்கு

தண் நறு முல்லையும், தாழ் நீர்க் குவளையும்,
கண் அவிழ் நெய்தலும், கதுப்பு உற அடைச்சி;
வெண் பூ மல்லிகை விரியவொடு தொடர்ந்த
தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல்
கொற்கை அம் பெரும் துறை முத்தொடு பூண்டு;
தெக்கண மலயகச் செழுஞ் சேறு ஆடி,
பொன் கொடி மூதூர்ப் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு-                                80

அந்திப் பொழுதைக் கழித்தல்

எல் படு பொழுதின் இள நிலா முன்றில்,
தாழ்தரு கோலம் தகை பாராட்ட,
வீழ் பூஞ் சேக்கைமேல் இனிது இருந்து-ஆங்கு-                                        85

கடைகழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல்
கார் காலம்

அரத்தப் பூம் பட்டு அரைமிசை உடீஇ,
குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி,
சிறுமலைச் சிலம்பின் செங் கூதாளமொடு
நறு மலர்க் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து,
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து,                                             90
செங் கொடுவேரிச் செழும் பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில்
ஆம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு,
மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்குக்
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட,
கார் அரசாளன் வாடையொடு வரூஉம்                                                95
காலம் அன்றியும்-

கூதிர்க்காலம்

நுhலோர் சிறப்பின்,
முகில் தோய் மாடத்து; அகில் தரு விளகின்
மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து;
நறுஞ் சாந்து அகலத்து நம்பியர் - தம்மொடு                                            100
குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்-
முன்பனிக் காலம்

வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி,
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர,
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு, வெண் மழை
அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும்                                             105

பின்பனிக் காலம்

ஆங்கு அது அன்றியும், ‘ஓங்கு இரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும், துகிலும், ஆரமும், வாசமும்,
தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல்                                            110
வெங் கண் நெடு வேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன்?-

இளவேனிலை வரவேற்றல்

கோதை மாதவி கொழுங் கொடி எடுப்ப,
காவும் கானமும் கடி மலர் ஏந்த,
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து,                                        115
மன்னவன் கூடல் மகிழ் துணை தழுஉம்
இன் இளவேனில் யாண்டு உளன்கொல்?’ ஏன்று,
உருவக் கொடியோர் உடைப் பெரும் கொழுநரொடு
பருவம் எண்ணும் படர் தீர் காலை-

வேனில் காலக் கடை நாளில் பொழுது போக்கு

கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க                                            120
என்றுhழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக்
காடு தீப் பிறப்ப, கனை எரி பொத்தி,
கோடையொடு புகுந்து, கூடல் ஆண்ட
வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர,
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்-                                                125
வையமும், சிவிகையும், மணிக் கால் அமளியும்,
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும்,
சாமரக் கவரியும், தமனிய அடைப்பையும்,
கூர் நுனை வாளும், கோமகன் கொடுப்ப;
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்                                                 130
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து;
செம் பொன் வள்ளத்து, சிலதியர் ஏந்திய
அம் தீம்தேறல் மாந்தினர் மயங்கி;
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும்
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு;                                        135
இலவு இதழ்ச் செவ் வாய் இள முத்து அரும்ப,
புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்;
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்தன்ன,                                            140
செங் கயல், நெடுங் கண் செழுங் கடைப் பூசலும்;
கொலை வில் புருவத்துக் கொழுங் கடை சுருள,
திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும்;
செவ்வி பார்க்கும் செழுங் குடிச் செல்வரொடு
வையம் காவலர் மகிழ்தரு வீதியும்-                                                145

பதியிலாரின் இரு பெரு வீதிகள்

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை,
வேத்தியல், பொதுவியல் என இரு திறத்து,
மாத்திரை அறிந்து, மயங்கா மரபின்
ஆடலும், வரியும், பாணியும், தூக்கும்,                                                150
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து,
நால் வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பு-அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்;
வாரம் பாடும் தோரிய மடந்தையும்;                                                    155
தலைப் பாட்டுக் கூத்தியும்; இடைப் பாட்டுக் கூத்தியும்;
நால் வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு, ஆங்கு                                160
அரும் பெறல் அறிவும் பெரும்பிறிது ஆக,
தவத்தோர் ஆயினும், தகை மலர் வண்டின்
நகைப் பதம பார்ககும் இளையோர் ஆயினும்,
காம விருந்தின் மடவோர் ஆயினும்,
ஏம வைகல் இன் துயில் வதியும்                                                    165
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல்
எண்-எண் கலையோர் இரு பெரு வீதியும்-

அங்காடி வீதி

வையமும், பாண்டிலும், மணித் தேர்க் கொடுஞ்சியும்,
மெய் புகு கவசமும், வீழ் மணித் தோட்டியும்,
அதள் புனை அரணமும், அரியாயோகமும்,                                            170
வளைதரு குழியமும், வால் வெண் கவரியும்,
ஏனப் படமும், கிடுகின் படமும்,
கானப் படமும், காழ் ஊன்று கடிகையும்,
செம்பின் செய்நவும், கஞ்சத் தொழிலவும்,
வம்பின் முடிநவும், மாலையின் புனைநவும்                                            175,
வேதினத் துப்பவும், கோடு கடை தொழிலவும்,
புகையவும், சாந்தவும், பூவின் புனைநவும்,
வகை தெரிவு-அறியா வளம் தலைமயங்கிய,
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்-



இரத்தினக் கடைத்தெரு

காகபாதமும், களங்கமும், விந்துவும்,                                                180   
ஏகையும் நீங்கி, இயல்பின் குன்றா
நுhலவர் நொடிந்த நுழை நுண் கோடி
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்;
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசு ஆர் மேனிப் பசுங் கதிர் ஒளியவும்;                                                185
பதுமமும், நீலமும், விந்தமும், படிதமும்,
விதி முறை பிழையா விளங்கிய சாதியும்;
பூச உருவின் பொலம் தெளித்தனையவும்;
தீது அறு கதிர் ஒளித் தெண் மட்டு உருவவும்;
இருள் தெளித்தனையவும்; இரு வேறு உருவவும்;                                        190
ஒருமைத் தோற்றத்து ஐ-வேறு வனப்பின்
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்;
காற்றினும், மண்ணினும், கல்லினும், நீரினும்,
தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும்;
சந்திர-குருவே, அங்காரகன், என                                                    195
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்;
கருப்பத் துளையவும், கல்லிடை முடங்கலும்,
திருக்கும், நீங்கிய செங் கொடி வல்லியும்;
வகை தெரி மாக்கள் தொகைபெற்று ஓங்கிப்
பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும்-                                            200


பொன் கடைத்தெரு

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்,
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின்
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து, ஆங்கு,
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்-

அறுவை வீதி

நுhலினும், மயிரினும், நுழை நுhல் பட்டினும்                                            205
பால் வகை தெரியாப் பல் நுhறு அடுக்கத்து,
நறு மடி செறிந்த அறுவை வீதியும்-


கூல வீதி

நிறைக் கோல் துலாத்தர், பறைக் கண் பராரையர்,
அம்பண அளவையர், எங்கணும் திரிதர,
காலம் அன்றியும், கருங் கறி மூடையொடு                                            210
கூலம் குவித்த கூல வீதியும்-



பற்பல வீதிகளையும் கண்டு, கோவலன் புறஞ்சேரிக்கு மீளுதல்

பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
அந்தியும், சதுக்கமும், ஆவண வீதியும்,
மன்றமும், கவலையும், மறுகும் - திரிந்து,
விசும்பு அகடு திருகிய வெங் கதிர்நுழையாப்                                            215
பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல்,
காவலன் பேர்ஊர் கண்டு, மகிழ்வு எய்தி,
கோவலன் பெயர்ந்தனன், கொடி மதில் புறத்து-என்.

15. அடைக்கலக் காதை

கவுந்திக்கு மதுரையின் காட்சியையும் அரசனின் கொற்றத்தையும்
கோவலன் உரைத்தல்

நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட                                                    5
மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து;
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி-                                             10
மாடல மறையவன் வர, கோவலன் அவனை வணங்குதல்

தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து,
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து,                                        15
துமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க,
கவுந்தி இடவயின் புகுந்தோன் - தன்னை,
கோவலன் சென்று சேவடி வணங்க-

கோவலன் செய்த அறங்களை மாடலன் பாராட்டி,
அவன் மனைவியுடன் தனியாக மதுரை வந்ததற்கு இரங்குதல்

நா வல் அந்தணன் தான் நவின்று, உரைப்போன்-                                        20
முதுமறையோனை மத யானையிடமிருந்து விடுவித்தமை
‘வேந்து உறு சிறப்பின் விழுச் சீர் எய்திய,
மாந்தளிர் மேனி, மாதவி மடந்தை
பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து,
வாலாமை நாள் நீங்கிய பின்னர்,
மா முது கணிகையர், """"மாதவி மகட்கு                                                25
நாம நல் உரை நாட்டுதும்"""" என்று,
தாம் இன்புறுhஉம் தகை மொழி கேட்டு, ஆங்கு,
""""இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,                                                30
நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்;
வந்தேன்; அஞ்சல்; மணிமேகலை யான்;
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது;
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக’ என,                                            35
விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என;
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
""""மணிமேகலை"""" என வாழ்த்திய ஞான்று;
மங்கல மடந்தை மாதவி - தன்னொடு                                                40
செம் பொன் மாரி செங் கையின் பொழிய;
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன்,
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்,
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி,
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை                                            45
பாகு கழிந்து, யாங்கணும் பறை பட, வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள;
ஒய் எனத் தெழித்து, ஆங்கு, உயர் பிறப்பாளனைக்
கைஅகத்து ஒழித்து, அதன் கைஅகம் புக்கு,
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி,                                    50
மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப,
பிடர்த்தலை இருந்து, பெரும் சினம் பிறழாக்
கடக் களிறு அடக்கிய கருணை மறவ!

கீரியைக் கொன்ற பார்ப்பனியின் துயர் தீர்த்தமை

பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக,
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல,                                            55
வட திசைப் பெயரும் மா மறையாளன்,
""""கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க"""" என,
பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர்                                             60
மாட மறுகின் மனைதொறும் மறுகி,
""""கருமக் கழி பலம் கொள்மினோ"""" எனும்
அரு மறைஆட்டியை அணுகக் கூஉய்,
""""யாது நீ உற்ற இடர்? ஈது என்?"""" என,
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி,                                                65
""""இப் பொருள் எழுதிய இதழ் - இது வாங்கி,
ஐகப் பொருள் தந்து, என் கடுந் துயர்  களைக"""" என,
""""அஞ்சல்! ஊன் - தன் அரும் துயர் களைகேன்;
நெஞ்சு உறு துயரம் நீங்குக"""" என்று, ஆங்கு;
ஒத்து உடை அந்தணர் உரை - நுhல் கிடக்கையின்,                                    70
தீத் திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க,
தானம் செய்து, அவள் - தன் துயர் நீக்கி,
கானம் போன கணவனைக் கூட்டி,
ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து,
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!                                                    75

பூதம் கொன்ற தீயோனின் சுற்றத்தாரைப் பாதுகாத்தமை

பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த,
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரி பொய்த்து, அறைந்து உணும் பூதத்துக்
கறை கெழு பாசத்துக்கை அகப்படலும்,
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு,                                                80
கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி,
""""என் உயிர் கொண்டு, ஈங்கு இவன் உயிர் தா"""" என,
நல் நெடும் பூதம் நல்காதாகி,
""""நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு,
பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை;                                                 85
ஒழிக, நின் கருத்து"""" என, உயிர் முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத்து - அவளொடும் போந்து, அவன்
சுற்றத்தோர்க்கும் தொடர்பு  உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து,
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல்!                                                90
இம்மைச் செய்தன யான் அறி நல்வினை;
உம்மைப் பயன்கொல், ஒரு தனி உழந்து, இத்
திருத்தகு மா மணிக் கொழுந்துடன் போந்தது,
விருத்த கோபால! நீ?’ என வினவ-

கோவலன் தான் கண்ட கனவைக் கூறல்

கோவலன் கூறும்; ‘ஓர் குறுமகன் - தன்னால்,                                        95
காவல் வேந்தன் கடி நகர் - தன்னில்,
நாறு ஐங்  கூந்தல் நடுங்கு துயர் எய்த,
கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும்;
அணித்தகு புரி குழல் ஆய் - இழை - தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர் - தம் பெற்றி எய்தவும்;                                            100
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து,
காமக்கடவுள் கையற்று ஏங்க,
அணி திகழ் போதி அறவோன் - தன் முன்,
மணிமேகலையை மாதவி அளிப்பவும்;
நனவு போல, நள் இருள் யாமத்து,                                                    105
கனவு கண்டேன்; கடிது ஈங்கு ஊறும்’ என-

கவுந்தியும் மாடலனும் கோவலனுக்குக் கூறிய ஆறுதல் உரைகள்

‘அறத்து உறை மாக்கட்கு அல்லது, இந்தப்
புறச்சிறை இருக்கை பொருந்தாது; ஆகலின்,
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கின் நின்
உரையின் கொள்வர்; இங்கு ஒழிக நின் இருப்பு;                                        110
காதலி - தன்னொடு கதிர் செல்வதன்முன்,
மாட மதுரை மா நகர் புகுக’ என,
மாதவத்து ஆட்டியும் மா மறை முதல்வனும்
கோவலன் - தனக்குக் கூறும்காலை-

மாதரி என்னும் ஆயர் குல முதுமகள் கவுந்தியை வணங்குதல்

அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய                                                115
பறஞ்சிறை மூதூர்ப் பூங் கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்து, பண்பின் பெயர்வோள்,
ஆயர் முதுமகள், மாதரி என்போள்,
காவுந்தி ஐயையைக் கண்டு, அடி தொழலும்-

கவுந்தி மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்

""""ஆ காத்து ஓம்பி, ஆப் பயன் அளிக்கும்                                                120
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை;
தீது இலள்;  முதுமகள்;  செவ்வியள்; அளியள்;
மாதரி - தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று’ என எண்ணினளாகி,
‘’மாதரி! கேள்;  இம் மடந்தை - தன் கணவன்                                        125
துhதையைக் கேட்கின், தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு,
கருந் தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்;
உடைப் பெருஞ் செல்வர்மனைப்புகும் அளவும்,
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்-                                         130

கவுந்தி அடிகள் மாதரியிடம் கண்ணகியைப் போற்றும் வகை கூறி,
அவளைப் பாராட்டி உரைத்தல்

மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் தீட்டி,
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து,
தூ மடி உடீஇ; தொல்லோர் சிறப்பின்
ஆயமும், காவலும், ஆய் - இழை - தனக்கு,                                            135
தாயும், நீயே ஆகித் தாங்கு; ஈங்கு,
என்னொடு போந்த இளங் கொடி நங்கை - தன்
கடுங் கதிர் வெம்மையின் காதலன் - தனக்கு
நடுங்கு துயர் எய்த, நாப் புலர வாடி,
தன் துயர் காணத் தகைசால் பூங்கொடி,                                                140
இன் துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது,
பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;                                            145
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல் உரை அறியாயோ நீ?-

தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளினால் வரும் இன்பம் பற்றிக்
கவுந்தி அடிகள் மாதரிக்கு உரைத்தல்

தவத்தோர் அடைக்கலம் - தான் சிறிது ஆயினும்,
மிகப் பேர்இன்பம் தரும்; அது கேளாய்;                                                150
காவிரிப் படப்பைப் பட்டினம் - தன்னுள்
பூ விரி பிண்டிப் பொது நீங்கு திரு நிழில்,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலமேல் இருந்துளி,
தருமம் சாற்றும் சாரணர் - தம் முன்;                                                155
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்,
துhரன் மாலையன், தமனியப் பூணினன்,
ழுhரோர் காணாப் பலர் தொழு படிமையன்,
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்துப்
பெரு விறல் வானவன் வந்து நின்றேனை;                                            160
சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது, """"ஈங்கு
யாது இவன் வரவு?"""" என, இறையோன் கூறும்;

சாரணர் கூறிய குரங்குக்கை வானவனது வரலாறு

""""எட்டி சாயலன் இருந்தோன் - தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில், ஓர்
மாதவ முதல்வனை மனைப் பெரும் கிழத்தி                                            165
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து,
ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி, உள்புக்கு,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி,                                            170
எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்து, ‘நின்
மக்களின் ஓம்பு, மனைக்கிழத்தி!’ என,
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி;
காதல் குரங்கு கடைநாள் எய்தவும்,                                                175
தானம் செய்வுழி, அதற்கு ஒரு கூறு
‘தீது அறுக’ என்றே செய்தனள்;  ஆதலின்,
முத்திம நல் நாட்டு வாரணம் - தன்னுள்;
ஊத்தர- கௌத்தற்கு ஒரு மகன் ஆகி;
உருவினும் திருவினும், உணர்வினும், தோன்றி;                                         180
பெரு விறல் தானம் பலவும் செய்து; ஆங்கு,
எண் - நால் ஆண்டின் இறந்த பிற்பாடு;
விண்ணோர் வடிவம் பெற்றனன்; ஆதலின்,
‘பெற்ற செல்வப் பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தானச் சிறப்பு’ என,                                            185
பண்டைப் பிறப்பில் குரங்கின் சிறு கை
கொண்டு, ஒரு பாகத்து; ‘கொள்கையின் புணர்ந்த
சாயலன் மனைவி தானம் - தன்னால்
ஆயினன் இவ் வடிவு; அறிமினோ, என,
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத்                                            190
தேவ குமரன் தோன்றி என்"""" என்றலும் -

கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’ எனல்

சாரணர் கூறிய தகைசால் நல்மொழி
ஆர் அணங்கு ஆக, அறம் தலைப்பட்டோர்
அன்று அப் பதியுள் அரும் தவ மாக்களும்,
தன் தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்,                                            195
இட்ட தானத்து எட்டியும், மனைவியும்,
முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்;
கேட்டனை ஆயின், தோட்டு - ஆர் குழலியொடு
நீட்டித்திராது, நீ போக’ என்றே
கவுந்தி கூற-

மாதரி கண்ணகியுடன் மாலையில் தன் மனைக்குச் செல்லுதல்

உவந்தனள் ஏத்தி,                                     200
வளர் இள வன முலை, வாங்கு அமைப் பணைத் தோள்.
முளை இள வெண் பல், முதுக்குறை நங்கையொடு;
சென்ற ஞாயிற்றுச் செல் சுடர் அமயத்து;
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப,
மறித் தோள் நவியத்து உறிக் காவாளரொடு                                            205
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ;
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும்,                                            210
தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும்,                                            215
கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து; தன் மனை புக்கனளால்-
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து - என்.


16. கொலைக்களக் காதை

மாதரி கண்ணகியைத் தக்கதோர் இல்லத்தில் சேர்ந்து,
அவளுக்கு வேண்டும் பணி செய்வதற்கு, ஏற்றவர்களை நியமித்தல்

அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும் பேர் உவகையின் இடைக் குல மடந்தை
அளை விலை உணவின் ஆய்ச்சியர் - தம்மொடு
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி,
பூவல் ஊட்டிய புனை மாண் பந்தர்க்                                                5
காவல் சிற்றில் கடி மனைப் படுத்து;
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி,
நறு மலர்க் கோதையை நாள் - நீர் ஆட்டி;
‘கூடல் மகளிர் கோலம் கொள்ளும்
ஆடகப் பைம் பூண் அரு விலை அழிப்ப,                                                10
செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு என் மகள்
ஐயை, காணீர் அடித்தொழில் ஆட்டி;
பொன்னின் பொதிந்தேன், புனை பூங் கோதை!
என்னுடன் நங்கை, ஈங்கு இருக்க’ எனத் தொழுது,
‘மாதவத்துஆட்டி வழித் துயர் நீக்கி,                                                15
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்;
நோதகவு உண்டோ, நும் மகனார்க்கு இனி?-
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள்                                            20
நெடியாது அளிமின், நீர்’ எனக் கூற-

இடைக்குல மடந்தையர் கண்ணகிக்குக் கொடுத்த பொருள்கள்

இடைக்குல மடந்தையர், இயல்பின் குன்றா
மடைக்கலம் - தன்னொடு மாண்பு உடை மரபின்
கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய்,
வரள் வரிக் கொடுங் காய், மாதுளம் பசுங் காய்,                                        25
மாவின் கனியொடு வாழைத் தீம் கனி,
சாலி அரிசி, தம் பால் பயனொடு,
‘கோல் வளை மாதே! கொள்க’ எனக் கொடுப்ப-

ஐயையின் உதவியுடன் கண்ணகி அமுது ஆக்கல்

மெல் விரல் சிவப்ப, பல்வேறு பசுங் காய்
கொடு வாய்க் குயத்து விடுவாய்செய்ய,                                                30
திரு முகம் வியர்த்தது; செங் கண் சேந்தன;
கரி புற அட்டில் கண்டனள் பெயர,
வை எரி மூட்டிய ஐயை - தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி -



கோவலனுக்குக் கண்ணகி உணவு படைத்தல்

தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக்                                                 35
கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,                                        40
தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து - ஈங்கு,
‘அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என,
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின்
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து-                                                    45

ஐயையும் மாதரியும் கோவலனையும் கண்ணகியையும் பாராட்டுதல்

‘ஆங்கு,
ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன்கொல்லோ,
நல் அமுது உண்ணும் நம்பி! ஈங்கு,
பல் வளைத் தோளியும் பண்டு நம் குலத்து,
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை                                        50
விழுமம் தீர்த்த விளக்குக்கொல்!’ என;
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி,
‘கண் கொளா நமக்கு, இவர் காட்சி, ஈங்கு’ என-

கோவலன் கண்ணகியை நோக்கி, கழிந்ததற்கு இரங்கிக் கூறுதல்

உண்டு இனிது இரந்த உயர் பேராளற்கு
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த                                            55
மை ஈர் ஓதியை, ‘வருக’ எனப் பொருந்தி,
""""கல் அதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுநகொல்லோ மடந்தை மெல் அடி!"""" என,
வெம முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி,
எம் முதுகுரவர் என் உற்றனர்கொல்?                                                60
மாயம் கொல்லோ வல் வினைகொல்லோ?
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்;
வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு
குறு மொழிக் கோட்டி, நெ டுநகை புக்கு,
பொச்சப்புண்டு. பொருள் உரையாளர்                                                65
நச்சுக் கொன்றேற்கு நல் நெறி உண்டோ?
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்;
சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;
வழு எனும் பாரேன்; மா நகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய்; என் செய்தனை!’ என-                                        70



கண்ணகியின் பணிவுரை

‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன்                                                75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள்அகம் வருந்த,                                        80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’ என்று அவள் கூற-

கோவலன் கண்ணகியைப் பாராட்டி, ‘ஒரு சிலம்பை எடுத்துச் சென்று
விற்று வருவேன்’  என்று கூறி, விடைபெற்றுச் செல்லுதல்

‘குடி முதல் சுற்றமும், குற்றிளையோரும்;
அடியோர் பாங்கும், ஆயமும், நீங்கி;                                                85
நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும்,
பேணிய கற்பும், பெரும் துணை ஆக;
என்னோடு போந்து, ஈங்கு என் துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனை பூங் கோதாய்,
நாணின் பாவாய், நீள் நில விளக்கே,                                                90
கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு, யான் போய்,
மாறி வருவன்; மயங்கா தொழிக’ என-
கருங் கயல் நெடுங் கண் காதலி - தன்னை
ஒருங்குடன் தழீஇ, உழையோர் இல்லா                                                95
ஒரு தனி கண்டு, தன் உள்அகம் வெதும்பி,
வரு பனி கரந்த கண்ணன் ஆகி,
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி,
வல்லா நடையின் மறுகில் செல்வோன்,

தீய நிமித்தம்

இமில் ஏறு எதிர்ந்தது, இழுக்கு என அறியான்,                                        100
தன் குலம் அறியும் தகுதி அன்றுஆதலின்-

கடைத் தெருவில் பொற்கொல்லனைக் கண்டு, கோவலன் வினவுதல்

தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து,
மாதர் வீதி மறுகிடை நடந்து,
பீடிகைத் தெருவில் பெயர்வோன்-ஆங்கண்,
கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய                                            105
நுண்வினைக் கொல்லர், நுhற்றுவர்பின் வர,
மெய்ப்பை புக்கு, விலங்கு நடைச் செலவின்
கைக் கோல் கொல்லனைக் கண்டனனாகி,
‘தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன் வினைக் கொல்லன் இவன்’ எனப் பொருந்தி,                                    110
‘காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி
நீ விலையிடுதற்கு ஆதியோ?’ என-


பொற்கொல்லன் உரைத்த விடை

‘அடியேன் அறியேன்ஆயினும் வேந்தர்,
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான்’ என,
கூற்றத் தூதன் கைதொழுது ஏத்த-                                                115

கோவலன் சிலம்பைக் காட்ட, பொற்கொல்லன் அதன் தகுதி பற்றிக் கூறுதல்

போற்று - அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன்;
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும் பொன் குடைச் சூல்
சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி,                                        120
‘கோப்பெருந்தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை’ என-

வேந்தனுக்குச் சிலம்பு பற்றித் தெரிவித்து வருமளவும் தன் குடிலில் தங்கியிருக்க
என்று பொற்கொல்லன் சொல்ல, கோவலன் அதன் அயலில் உள்ள தேவ
கோட்டத்தின் மதில் புறத்துச் செல்லுதல்

‘முன்போந்து
 விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான்வர, என,
கோவலன் சென்று, அக் குறுமகன் இருக்கை ஓர்                                        125
தேவ கோட்டச் சிறைஅகம் புக்கபின்-

பொற்கொல்லன் தீய எண்ணத்துடன் செல்லுதல்

‘கரந்து யான் கொண்ட கால் - அணி ஈங்கு,
பரந்து வெளிப்படாமுன்னம் மன்னற்கு,
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான்’ என,
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்-                                            130

கோப்பெருந்தேவியின் கோயிலை நோக்கி மன்னவன் செல்லுதல்

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்,
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும்,
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன்
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து,
தலைநோய் வரத்தம் தன்மேல் இட்டு,                                                135
குலமுதல் தேவி கூடாது ஏக,
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன்
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி,
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்-                                        140



மன்னனைக் கண்டு பொற்கொல்லன் செய்தி தெரிவித்தல்

வீழ்ந்தனன் கிடந்து, தாழ்ந்து, பல ஏத்தி,
‘கன்னகம் இன்றியும், கவைக்கோல் இன்றியும்,
துன்னிய மந்திரம் துணை எனக் கொண்டு,
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து,
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்                                                    145
கல்லென் பேர்ஊர்க் காவலர்க் கரந்து, என்
சில்லைச் சிறு குடில்அகத்து இருந்தோன்’ என-

மன்னவன் வினைவசத்தால் மயங்கி, காவலர்க்கு இட்ட கட்டளை

வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர் காப்பாளரைக் கூவி, ‘ஈங்கு என்                                                150
தாழ் பூங் கோதை - தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையதுஆகின்,
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’ என,
காவலன் ஏவ-

கோவலனிடம் காவலாளருடன் மீண்ட பொற்கொல்லன்
‘இவர் சிலம்பு காண வந்தோர்’ என்று, சிலம்பைப் பற்றிக் கூறுதல்

கருந் தொழில் கொல்லனும்,
‘ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து’ என,                                             155
தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
கோவலன்-தன்னைக் குறுகினாகி-
‘வலம் படு தானை மன்னவன் ஏவ,
சிலம்பு காணிய வந்தோர் இவர்’ என,
செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம்                                            160
பொய் வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட-

‘கோவலன் கொலைப்படு மகன் அல்லன்’ என்ற காவலாளர்க்குப் பொற்கொல்லன் கள்வரின்
இயல்புகளை எடுத்துரைத்தல்

‘இலக்கண முறைமையின் இருந்தோன், ஈங்கு, இவன்
கொலைப்படு மகன் அலன்’ என்று கூறும்
அரும் திறல் மாக்களை அகநகைத்து உரைத்து,
கருந் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன்,                                    165
‘மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே-இழுக்கு உடை மரபின்
கட்டு உண் மாக்கள் துணை எனத் திரிவது?
மருந்தில் பட்டீர்ஆயின், யாவரும்                                                    170
பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப் பட்டீர்;



கள்வரின் எட்டுத் துணைகள்

மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின்,
இந்திர-குமரரின் யாம் காண்குவமோ?
தெய்வத் தோற்றம் தெளிகுவர்ஆயின்,
கைஅகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர்;                                        175
மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின்,
இருந்தோம் பெயரும் இடனும் - மார் உண்டோ?
நிமித்தம் வாய்த்திடின் அல்லது, யாவதும்
புகற்கிலர், அரும் பொருள் வந்து கைப் புகுதினும்;
தந்திர-கரணம் எண்ணுவர்ஆயின்,                                                180
இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்;
இவ் இடம் இப் பொருள் கோடற்கு இடம் எனின்,
அவ் இடத்து அவரை யார் காண்கிற்பார்?
காலம் கருதி அவர் பொருள் கையுறின்,
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ?                                            185
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின்,
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார்?
இரவே பகலே என்று இரண்டு இல்லை;
கரவு இடம் கேட்பின், ஓர் புகல் இடம் இல்லை.

கள்வன் ஒருவனின் செய்தி

தூதர் கோலத்து வாயிலின் இருந்து,                                                190
மாதர் கோலத்து வல் இருள் புக்கு,
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று, ஆங்கு,
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம்
வெயில் இடு வயிரத்து, மின்னின் வாங்க
துயில்கண் விழித்தோன் தோளில் காணான்                                            195
உடைவாள் உருவ, உறை கை வாங்கி,
எறிதொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான்,
மல்லின் காண, மணித் தூண் காட்டி,
கல்வியின் பெயர்ந்த கள்வன் - தன்னைக்
கண்டோர் உளர்எனின் காட்டும்; ஈங்கு இவர்க்கு                                        200
உண்டோ உலகத்து ஒப்போர்?’ என்று, அக்
கருந் தொழில் கொல்லன் சொல்ல-

காவல் இளைஞன் ஒருவன் கள்வனைப் பற்றிக் கூறிய நிகழ்ச்சி

ஆங்கு, ஓர்
திருந்து வேல் தடக் கை இளையோன் கூறும்;
‘நிலன் அகழ் உளியன், நீலத் தானையன்,
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று,                                        205
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து,
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற,
கை வாள் உருவ, என் கை வாள் வாங்க,
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன்;
அரிது இவர் செய்தி; அலைக்கும் வேந்தனும்;                                            210
உரியது ஒன்று உரைமின், உறு படையீர்!’ என-

கலலாக் களிமகன் ஒருவன் வாளால் எறிய, கோவலன் குருதி சோர,
மண்ணின்மேல் மாண்டு விழுதல்

கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது;
புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப,
மண்ணக மடந்தை வான் துயர் கூர,                                                215
காவலன் செங்கோல் வளைஇய, வீழ்ந்தனன்,
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து - என்.

வெண்பா

நண்ணும், இரு வினையும்; நண்ணுமின்கன், நல் அறமே-
கண்ணகி - தன் கேள்வன் காரணத்தான், மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை
விளைவாகி வந்த வினை.

17. ஆய்ச்சியர் குரவை
கயிறும் மத்தும் கொண்டு, மாதரி தயிர் கடைய முற்படுதல்

‘கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவல் அம் தண் பொழில் மன்னர்
ஏவல் கேட்ப, பார் அரசு ஆண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்
காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின்,
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று,
ஐயை தன் மகளைக் கூஉய்,
கடை கயிறும் மத்தும் கொண்டு,
இடை முதுமகள் வந்து தோன்றும்-மன்.                                                1

உரைப்பாட்டு மடை
மாதரி கண்ட உற்பாதங்கள்

குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின்
மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு!                                         2

உறி நறு வெண்ணெய் உருகா; உருகும்
மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு!                                        3

நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்;
மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு!                                             4
கருப்பம்
‘குடத்துப் பால் உறையாமையும்,
குவி இமில் ஏற்றின்
மடக் கண் நீர் சோர்தலும்,
உறியில் வெண்ணெய் உருகாமையும்,
மறி முடங்கி ஆடாமையும்,
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும்,
வருவது ஓர் துன்பம் உண்டு’ என,
மகளை நோக்கி, ‘மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் - தான் காண,
ஆயர் பாடியில், எரு மன்றத்து,
மாயவனுடன் தம்முன் ஆடிய
வால சரிதை நாடகங்களில்,
வேல் நெடுங் கண் பிஞ்சையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்’ என்றாள்-
‘கறவை, கன்று, துயர் நீங்குக எனவே.’                                                5

கொளு

‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்
வேரி மலர்க் கோதையாள்; சுட்டு.                                                     6

நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொன் தொடி மாதராள் தோள்.                                                     7

மல்லள் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம்
முல்லை அம் பூங் குழல் - தான்.                                                    8

நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண் கொடி மாதர் - தன் தோள்.                                                     9

பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்; இந்
நன் கொடி மென்முல்லை - தான்.                                                     10

வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக்
கொன்றை அம் பூங் குழலாள்.                                                     11

தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்
பூவைப் புது மலராள்.                                                             12

எடுத்துக்காட்டு

ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங் கோதையார்-
என்று, தன் மகளை நோக்கி,
தொன்று படு முறையான் நிறுத்தி,
இடை முதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள்;
குடமுதல் இடமுறையா, குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், என,
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே.                                                13


படைத்துக் கோள் பெயர்

மாயவன் என்றாள், குரலை; விறல் வெள்ளை-
ஆயவன் என்றாள், இளி - தன்னை; ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள், ஓர் துத்தத்தை; மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை.                                                    14

மாயவன் சீர் உளார், பிஞ்சையும் தாரமும்;
வால் வெள்ளை சீரார், உழையும் விளரியும்;
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்; வலத்து உளாள்,
முத்தைக்கு நல் விளரி - தான்.                                                    15

அவருள்,
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு,
தண்டாக் குரவை - தான் உள்படுவாள், கொண்ட சீர்
வையம் அளந்தான் - தன் மார்பில் திரு நோக்காப்
பெய் வளைக் கையாள் நம்  பின்னை - தான் ஆம் என்றே,
‘ஐ!’ என்றாள், ஆயர் மகள்,                                                        16

கூத்து உள்படுதல்

அவர் - தாம்,
செந்நிலை மண்டிலத்தான், கற்கடகக் கை கோஒத்து,
அந் நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார், முன்னைக்
குரல் - கொடி தன் கிளையை நோக்கி, ‘பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருந்து ஒசித்தான் பாடுதும்,
முல்லைத் தீம் பாணி’என்றாள்.                                                    17

எனா,
குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக,
வரன்முறையே, துத்தம் வலியா, உரன் இலா
மந்தம் விளரி பிடிப்பாள், அவன் நட்பின்
பின்றையைப் பாட்டு எடுப்பாள்.                                                    18

பாட்டு
மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல்

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!                                        19

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!                                        20

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் நீம் குழல் கேளாமோ, தோழீ!                                         21

பின்னையின் அணி நிறத்தையும் மாயவன் வடிவழகையும் பாடுதல்

தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை-
அணி நிறம் பாடுகேம் யாம்.                                                    22

இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்?
அறுவை ஒளித்தான் அயர, அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்?                                            23

வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்?
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்?                                         24

தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்?
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி,
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்?                                         25

ஒன்றன் பகுதி

கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளாள்,
மதி புரையும் நறு மேனித தம்முனேன் வலத்து உளாள்,
பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை;  சீர் புறங்காப்பார்
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார்.                             26

மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள்,
பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள்,
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை; சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார்.                         27

ஆடுநர்ப் புகழ்தல்

மாயவன் தம்முன்னினெடும், வரி வளைக் கைப் பின்னையொடும்,
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர,
ஆய் வளைச் சீர்க்கு அடி பெயர்த்திட்டு, அசோதையார் தொழுது ஏத்த,
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே.
எல்லாம் நாம்,
புள் ஊர் கடவுளைப் போற்றுதும், போற்றுதும்-
உள்வரிப் பாணி ஒன்று உற்று.                                                    28

உள்வரி வாழ்த்து
பூவை நிலை

கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம்,
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே;
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால்.                                 29

பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்,
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்;
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால்.                                    30

முந்நீரினுள் புக்கு, மூவாக் கடம்பு எறிந்தான்,
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்;
மன்னர் கோச் சேரன், வள வஞ்சி வாழ் வேந்தன்
கல் நவில் தோள் ஓச்சி, கடல் கடைந்தான் என்பரால்.                                 31

முன்னிலைப் பரவல்

வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றல் கட்டுண்கை;
மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே!                                32

‘அறு பொருள் இவன்’ என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே;
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்;
வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!                                 33

திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! பின் செங் கமல
இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே;
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி;
மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே!                                34

படர்க்கைப் பரவல்

மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
துhவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர் மடிய, தொல் இலங்கை சுட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?                                    35

பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?                                    36

மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நுhற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?                                         37

வாழ்த்து

என்று, யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க! வேத்தர்
மருள, வைகல் வைகல் மாறு அட்டு,
வெற்றி விளைப்பது மன்னோ-கொற்றத்து
இடிப் படை வானவன் முடித்தலை உடைத்த
தொடித் தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே!                                     38

18. துன்ப மாலை

குரவையின் முடிவில், ஆயர் மகளிருடன் மாதரி வையைக்கு நீராடப் போதலும்,
கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்து, விரைந்து வருதலும்,

ஆங்கு,
ஆயர் முதுமகள், ஆடிய சாயலாள்,
பூவும், புகையும், புனை சாந்தும், கண்ணியும்,
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த,
தூவி, துறைபடியப் போயினாள், மேவிக்                                             5
குரவை முடிவில்- ஓர் ஊர் அரவம் கேட்டு,
விரைவொடு வந்தாள் உளள்;

கொலைச் செய்தி அறிந்து வந்த ஆய்மகள் பேசாது நிற்க,
கண்ணகி அவளை நோக்கி ஐயுற்றுப் பேசுதல்

அவள் - தான்,
சொல்லாடாள், சொல்லாடா நின்றாள்: அந் நங்கைக்குச்
சொல்லாடும், சொல்லாடும். தான்.                                                 10

‘எல்லா ! ஓ! -
காதலன் காண்கிலேன்; கலங்கி நோய் கைம்மிகும்;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு- அன்றே;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின்,
ஏதிலார் சொன்னது எவன்? கூhழியோ, தோழீ!                                     15

நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும்;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு - அன்றே;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு ஆயின்,
மன்பதை சொன்னது எவன்? வாழியோ, தோழீ!                                     20

தஞ்சமோ, தோழீ! தலைவன் வரக் காணேன்;
வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு - அன்றே;
வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு ஆயின்,
எஞ்சலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ!’

ஆய்மகள் உண்மை உரைத்தல்

சொன்னது;
‘அரசு உறை கோயில் ஆணி ஆர் ஞெகிழம்’                                         25
கரையாமல் வாங்கிய கள்வனும் என்றே,
கரையாமல் வாங்கிய கள்வனும் என்றே,
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே!’

கண்ணகியின் துயர நிலை

எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள்; விழுந்தாள். பொழி கதிர்த்                                     30
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டென;
செங் கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை,
‘எங்கணாதுஅ!’ என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்;

‘இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க,
துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல்,                                35
மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ?

நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி,
துறை பல திறம் மூழ்கித் துயர் உறு மகளிரைப் போல்,
மறனோடு திரியும் கோல் மன்னவன் தவறு  இழைப்ப,                                 40
அறன் எனும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?

நம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க,
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல்,
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப,
இம்மையும் இசை ஒரீஇ, இனைந்து, ஏங்கி, அழிவலோ?                             45

ஆய்ச்சியர் முன்னிலையில் கண்ணகி கதிரவனை விளித்து,
‘என் கணவன் கள்வனே?’ என வினவுதல்

‘காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;
பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி,                                        50
காய் கதிர்ச் செல்வனே! கள்வனே, என் கணவன்?’-

அசரீரி வாக்கு

‘கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்!
ஒன் எரி உண்ணும், இவ் ஊர்’ என்றது ஒரு குரல்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?