மணிமேகலை காப்பியப் பௌத்தச் சான்றோர்கள்
பெளத்தமதக் கொள்கைகளைப் பரப்பவும், பௌத்தர் பெருமைகளைப் பேசவும் தமில் எழுந்த காப்பியங்கள் இரண்டு. அவை மணிமேகலை, குண்டலகேசி. இக்காப்பியங்கள்
பெண்ணை மையப்படுத்தி எழுந்த காப்பியங்கள். பெண்களுக்கான முதல் சமய மரபை நிறுவியர்- அடிமை முறையை முதன் முறையாக அகற்றுவதற்கு முயற்சித்தவர் பகவான்
பௌத்தர் . ஒரு பெண் உண்மையை அறிய முயன்று, பல மதக் கொள்கையினையும் அறிந்து இறுதியில் பௌத்த சமயமே உயர்ந்தது எனக் கடைப்பிடிப்பது போல இக்காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இவற்றில் காலத்தால் முற்பட்டது மணிமேகலை. இவள் சமயக் கருத்துக்களை அறிகிறாள். வாது செய்வதில்லை. ஆனால் பின்னர் வந்த நீலகேசி, குண்டலகேசி காப்பியங்கள் ஒரு பெண் வாதம் செய்து, தான் கொண்ட உண்மையினை நிலை நாட்டுவதனைக் கூறுகின்றன. இதில் நீலகேசி சமணம். குண்டலகேசி என்பது பெளத்தக் கொள்கையைக் குண்டலகேசி என்ற பெண் நிலைநாட்டிப் பிற மதங்களை மறுப்பதைக் கூறுகிறது. சில பாடல்கள் அன்றி இந்தக் காப்பிய முழுவதும் இன்றுவரை (1960) கிடைக்கவில்லை. இதனைப் பாடியவர் நாதகுத்தர் என நீலகேசி கூறுகின்றது. மணிமேகலை காப்பியம் பாடியவர் சீத்தலைச்சாத்தனார். மணிமேகலை காப்பியம், பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்த பல பௌத்தர்களைப் பற்றிக் கூறுகிறது. பௌத்தத்தில் தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் என்ற இருபிரிவு உள்ளது.