பண்டைத் தமிழகம் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலை-பண்பாடு, தொழில்துறை, உற்பத்தித்துறைகளில் சிறந்து விளங்கியுள்ளது. உற்பத்தித்துறையில் இரும்பைக் கொண்டு தமிழர் பலவித கருவிகளை உருவாக்கியுள்ளனர். இரும்பின் கண்டுபிடிப்பானது மனிதனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. தமிழர் வாழ்பில் சமுதாய மாற்றத்திற்கு பெரிதும் துணை நின்றுள்ளது. இரும்பின் பயனாகப் பல கண்டுபிடிப்புகள் இருப்பினும் ஊசி சங்கத்தமிழரின் வாழ்வில் பெரும் பங்காற்றியுள்ளது. அது குறித்து ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Saturday, 13 September 2014
சங்க இலக்கியத்தில் ஊசி

நூற்றாண்டு கண்ட சேலம் அரசு கலைக் கல்லூரி
1856ல் சென்னை ராஜதானியில் கல்வித்துறைத் தலைவர் ஏ.ஜே. அர்புத் நாட் சேலத்தில் ஓர் ஆங்கில மொழி வழி ஆரம்பப்பள்ளியைத் திறந்து வைத்தார். அடுத்த ஆண்டிலே அது ஜில்லா பள்ளியாக உயர்வு பெற்றது. 1863 ம் ஆண்டு நிதி திரட்டி அப்பள்ளிக்கென தனிக் கட்டடம் கட்டப்பட்டது. 1865-ஆம் ஆண்டில்அப்பள்ளியின் மாணவர் 8 பேர் மெட்ரிகுலேசன் தேர்வு எழுதினர். 1866-ஆம் ஆண்டு அப்பள்ளியிலே கல்லூரி வகுப்புத் தொடங்கி மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டினையே கல்லூரி பிறந்த ஆண்டாக கொள்ளலாம். இப்போது கல்லூரியின் வயது 135. ஜில்லாப்பள்ளிக் கூடத்தில் இயங்கிய கல்லூரி வகுப்புகள் 1879-ம் ஆண்டு தனியே பிரிக்கப்பட்டன. கல்லூரி போஸ் மைதானத்தில் கட்டப்பட்ட புதுக்கட்டிடத்தில் தனிக்குடித்தனம் புகுந்தது. பல்கலைக்கழகஅளவில் சேலம் கல்லூரிக்கு இரண்டாம் நிலைத் தகுதி வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டபோக்குவரத்தும் ,சுற்றுலாத்தலங்களும்
சேலம் மாவட்ட போக்குவரத்து சாலை
வாணிகம், வேளாண்மை, பொருளாதாரம், கல்வி, வாழ்க்கை முறை
ஆகிய துறைகளில் சீரான வளர்ச்சிக்குப் போக்குவரத்து வசதிகளும், சாலை
வசதிகளும் மிகவும் இன்றியமையாதவையாகும். சேலம் மாவட்டத் தலைநகரிலிருந்து
இம்மாவட்டத்திலுள்ள மிகச் சிறிய கிராமத்திற்கும் பேருந்தில் சென்று
வரமுடியும்.
சேலம் - இயற்கையமைப்பு
கொங்கு நாட்டில் சேலம்
கொங்குநாடு என்பது மிகப் பழங்காலந் தொட்டு இருந்து வந்துள்ள ஒரு நாடாகும். இதிலுள்ள ஒரு பகுதி சேலம் மாவட்டம் ஆகும். காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தெய்வத் திருவருள் மணக்கும் திருக்கோயில்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்று சேலம் மாவட்டம் ஆகும். தமிழ்நாட்டின் பெருமைக்கும், வளத்திற்கும் காரணமாக அமைந்து விளங்குவது, பொன்னி நதி என்று புகழ் பெற்று விளங்கும் காவிரி நதி. அந்தக் காவிரி வௌ்ளம் சேலம் மாவட்டம் வழியாக தஞ்சை செல்கிறது. இதனுடைய சிறப்பினை விளக்கக் ””கொங்குமண்டல சதகம்”” என்னும் நுhல் தோன்றியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)