நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 19 March 2016

ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?


Image result for தோழி 

ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?


களவொழுக்கத்தின்போது விரைவில் வந்து மணமுடிப்பதாகக் கூறிச் சென்ற தலைவன் நெடுநாட்களாகியும் வரவில்லை.  தலைவியோ தலைவனை மறக்கமுடியாமல் தவித்தாள்.  அவனையே நினைத்து வருந்தி உடல் மெலிந்து போனாள்.
தலைவன் மலைநாட்டைச் சேர்ந்தவன்.  வணிகத்தின் பொருட்டு இப்பகுதிக்கு வந்தபோது, தலைவியைக் கண்டு காதல்கொண்டவன்.  அவன் ஊர் தெரியாது.  பேர் தெரியாது.  சென்றவன் திரும்ப அவனாகவே வந்தால்தான் உண்டு.  தலைவியோ யாரிடமும் எதுவும் சொல்லவும் முடியாமல், அவனை மறக்கவும் முடியாமல் உலகை வெறுத்துக் காணப்பட்டாள்.  தோழியால் இதைப்பொறுக்க இயலுமா?

பூங்காற்றிலே தேடிய உயிர்மூச்சு!

Image result for தலைவி தோழி 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை நான் தேடித் தேடிப் பார்த்தேன்.......
குறிஞ்சிக்கலி நான்காம் பாடலைப்போன்ற பாடலே இதுவும்.  எனினும் இவள் வேறொரு தலைவி.  தோழியும் வேறொரு தோழி.  துயரம் ஒன்றாக இருந்தாலும், அவரவர் பாடு அவரவர்களுக்கு.
தலைவன் தன் நாட்டிற்குச் சென்று தன் பெற்றோர் ஒப்புதல் பெற்று உடன் தெரிவதாகத் தெரிவித்தான்.  போனான்.  போயே விட்டான்.  வந்தபாடில்லை.
போகும்போது, ‘இனி உன்னைப் பிரியேன்’ என்றான். 

சந்திப்போமா? இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?Image result for tiger and elephant fight 

சந்திப்போமா? இன்று சந்திப்போமா?
தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?கலித்தொகை-13

இரவில் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகப் பல கொடிய பாதைகளைக் கடந்து வருகிறான். அவன் வரும் வழியில் அச்சமூட்டும் பல விலங்குகள் இடர்ப்படும். வேடர்கள் விலங்குகளுக்காக வைத்த பொறி மறைந்திருக்கும். காட்டாறு எதிர்ப்படும் இப்படிப்பட்ட கொடுமையான பாதையை அவன் கடந்து வரும்பொழுது அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று தோழியும் தலைவியும் அஞ்சுகின்றனர். தலைவன் தலைவியை மணந்து கொள்ளுதலே இதற்குத் தீர்வு. அதை மறைமுகமாக இரவுக்குறி இனி காவல் மிகுந்திருப்பதால் கிடையாது என்றும் இனி பகலில்தான் தலைவியைச் சந்திக்க வேண்டுமென்றும் தோழி உறுதிபடக் கூறுகிறாள்.

நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா..... இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா.....Image result for தலைவி  நிலா 

நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா.....
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா.....

 
குறிஞ்சிக்கலியின் பனிரெண்டாவது பாடல் இது. இப்பாடல் தலைவன் தலைவியை மணக்கும் எண்ணமின்றி, களவுக் காதலிலேயே காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். இவர்களின் காதலோ ஊராருக்குத் தெரிந்து அவர் பேசுக்கின்றார்கள். இந்நிலையில் தலைவியைச் சந்திக்க வந்திருக்கும் தலைவனை வழி மறித்துத் தோழி அவனிடம் கூறுவதாக இப்பாடல் அடைந்துள்ளது.

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா? அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?Image result for தலைவன் தலைவி அச்சம் 
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
Image result for தலைவன் தலைவி அச்சம் 
குறிஞ்சிக்கலி பதினோராவது பாடல் தோழி கூற்றுப் பாடல், தலைவனின் ஆசையைத் தலைவிக்குப் புரிய வைக்க முயலும் தோழியின் இக்கட்டா சூழலை வெளிப்படுத்தும் பாடல்.  தலைவிக்குத் தலைவனின் பால் அன்பிருக்கிறது. ஆனால் அச்சமும் இருக்கிறதே. குடும்பத்தாரையும், உறவுகளையும், ஊரையும் நினைத்து மிகுந்த அச்சம் கொண்டிருப்பதால் தலைவனைக் கண்டும் காணாதது போல இருக்கிறாள். தலைவனோ தோழியின் உதவியை நாடுகிறான். தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது..........Image result for தலைவன் தலைவி பிரிவு

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது.........
.   குறிஞ்சிக்கலியின் பத்தாவது பாடல். தோழி கூற்றாக வருகிறது. தோழியின் மேன்மையான குணத்தை விளக்கும் பாடல் இது. தலைவன்-தலைவி சேர்கையில் அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை இப்பாடல் எடுத்துரைக்கிறது. தலைவிக்குத் தலைவன் மீதுள்ள சினத்தைப் போக்க தன் மீது பழியைச் சுமத்திக் கொள்ளும் தோழியின் பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. தலைவன்-தலைவிக்கு இடையை ஏற்படும் மன ஊசலாட்டத்தையும், தவறான புரிதல்களையும் போக்குபவளாக இத்தோழி படைக்கப்பட்டிருக்கிறாள். காதலர்களிடையில் ஏற்படும் ஐயத்தை நீக்கி, நெருக்கத்தை ஏற்படுத்த நம்பிக்கையுடைய நெருங்கிய ஒரு நட்பின் தேவையை, தோழியின் இன்றியாமையை வலியுறுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. வார்த்தைகள் பயன்படுத்தும்போது அதை உணர்ந்து உத்தேசித்து சரியான வார்த்தைகளை உப்போகப்படுத்திப் பேசவேண்டும் என்பதற்கு தேழி கூற்றுப்பாடல்கள் நல்ல சான்று.

Friday, 4 March 2016

சுயபுராணம் 16

 ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஒரு பொது வாய்மொழித்தேர்வில் தலைப்பு கவிஞர் பூவண்ணனின் படைப்புலகம் ஆய்வாளர் நாகராஜ்...........
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பேராசிரியர்கள் கமலக்கண்ணன் (துறைத்தலைவர்) மற்றும் அங்கையற்கண்ணி ஆகியோருடன். புறத்தேர்வாளராக நான்...................................

Thursday, 3 March 2016

சுய புராணம்

முத்தாயம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்

Tuesday, 1 March 2016

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . ...கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . ...Image result for தலைவன் ஓவியம் 
தாய் மகளின் காதலை அறிந்து கொண்டாள். இதனால் காவல் மிகுந்தது. ஏச்சும் பேச்சும் எழுந்தது. தலைவி, தலைவனைச் சந்திக்க இயலாமல் தவிக்கிறாள். மனம் புழுங்குகிறாள். காதலினால் வருந்துகிறாள். மேனி வாடிப் போனது. தலைவியின் இத்துயரம் கண்ட தோழி தலைவனைச் சந்திக்கின்றாள். தலைவியின் நிலையை எடுத்துக் கூறினாள். அவனுடைய அருளற்ற கொடுந்தன்மையினால் தலைவி படும் துயரத்தை அறிந்த அவன் ஊர் சென்றான். தற்போது உற்றாருடன் உரிய முறையில் பெண் கேட்க வந்துள்ளான். இதை தலைவியிடம் கூறுகிறாள் தோழி.

மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது. .மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது. . . .                தலைவன் திருமணம் பற்றிய எண்ணமின்றி தலைவியைத் தொடர்ந்து சந்தித்து வருகிறான். இவர்களுடைய பழக்கம் ஊராருக்குத் தெரிந்து விட்டது. ஊரெல்லாம் இவர்களைப் பற்றி அலர் பரவி தலைவி வெளியே தலைகாட்ட முடியாத நிலை. எனினும், தன் வருத்தத்தை அவள் தனக்குள் மறைத்துக் கொண்டாள். தாயினால், தலைவனைச் சந்திக்க இயலா நிலையை அடைந்தாள். இதையறியா தலைவன் தலைவிக்காகக் காத்திருந்து காத்திருந்து அவள் வாராமையினால் சோர்ந்திருந்தான்.

Image result for வேங்கை மரம் அருவி 
இருவர் நிலையுமறிந்த தோழி தலைவனை சந்திக்கின்றாள். அங்கு தலைவியின் நிலையே தலைவனிடம் கூறுகிறாள். நான் வரும் வழியில் இரண்டு பெரிய குன்றுகள். எதிர் எதிராக உள்ளன. இரண்டிற்குமிடையே பெரியதொரு பள்ளத்தாக்கு.

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே… கண்ட போதே சென்றன அங்கே...Image result for மலைநாடன்கண்கள் எங்கே......... நெஞ்சமும் எங்கே…... கண்ட போதே சென்றன அங்கே.....


         குறிஞ்சிப்பாட்டின் ஏழாவது பாட்டு தோழி தனக்குத்தானே தனியாக பேசிக்கொள்வது போன்ற உத்தி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடகங்களில் இது போல ஒரு பாத்திரம் தனிமையில் பேசிக்கொள்ளும் காட்சிகள் இருக்கும். ஆனால் ஆயிரம் பேர் இதைக் கேட்பர். தனக்குள் பேசிக் கொள்பவனும் உரக்கவே தன் போக்கில் பேசிக்செல்வான். இங்கு தோழியும் அது போலவே உரக்க பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியும் கேட்க வேண்டிய தலைவனின் காதில் தன் பேச்சு சென்று விழுமென்று. மறைவில் நிற்கும் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கும் தோழி அவனுக்கும் நன்கு கேட்குமாறு தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். மலர் கொய்வது போலவா, இலை பறிப்பது போலவா, நீருற்றுவது போலவா தோழி ஏதாவது வேலை செய்து கொண்டே பேசுகிறாள்....... இதே தோழியின் தனிப்பேச்சு.