பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம்பதில்கள்
prof.Dr.Chandrasekaran subramaniam M.E.,Ph.D., MIEEE, MACM, MSEI, MASQ, MIET, MCSI, MWSEAS,
Dean & professor of Academic & Research,
Departments of CSE & I.T & ECE
Sri Ranganathar Institute of Engineering and Technology,coimbatore -641010
பேராசிரியர் சந்திரசேகரன்சுப்ரமணியம் கணினி மற்றும் தமிழை இரு கண்களாகக் கொண்டவர். சங்கப் பா சொல்லடுக்கில் மரபுப் பா புனைபவர். தமிழறிஞர்கள் பொறாமைப்படும் அளிவிற்கு சங்கப்பாக்களில் தோய்ந்தவர். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்ற பாரதியின் கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் துடிப்பவர். செயலாக்கம் உடைய இளைஞர். தமிழ் மொழியே உலக பொது மொழி எனவும், கணினி பகுப்பாய்வு தொடங்கி, வடிவாக்கம் முதல் நிரலாக்கம் முதல் ஒப்பாய்வு முடிய தமிழே என நாம் தான் ஒன்று சேர்ந்து ஒலிக்க வேண்டும் எனத் தமிழ் வாழ முழக்கம் செய்பவர்.
ஸ்டான்ஃபொர்ட் பல்கலையில் இசைத்துறையில் கணினியும் தமிழிசையும் அழகாக நடத்துகிறார்கள். நாலாம் தமிழ் சங்கம் மேக கணிப்பியலில் 100000 மேற்பட்ட கணினிகள் ஒன்று சேர்ந்து மென் மெய்னிகர் கவிஞர்கள் பாடல் இயற்றகணினி இயல் தமிழ் , கணினி இசைதமிழ், கணினி கூத்துத் தமிழ்என இக்கால தமிழை தொழில்நுட்பத்துடன் ஏற்றி வைத்து மகிழ்கிறார்கள் என்று கூறும் இவர், தமிழில் இது போல் ஆய்வுகள் இல்லையே என்று ஏங்குபவர். இவருடைய 200 க்கும் மேற்பட்டகணினித் துறை மாணவர்கள் உலக நாடுகளில் பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்குபன்னாட்டு கருத்தரங்கங்கம், மா நாடுகள் ஆகியவற்றில் ஆய்வுக்கடுரை சமர்ப்பிக்க வழிகாட்டுபவர்.
என்னுடைய புத்தக வாசிப்பு தொடர்பான நேர்க்காணலுக்கு பல வேளைகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி மின்னல் வேகத்தில் விடைகள் அனுப்பி உதவியவர். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.