நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 6 October 2015

புத்தக வாசிப்பு sai fotography சேலம்



sai fotography   சேலம்  <saifotography@gmail.com>
1. நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தங்களின் வழிகாட்டுதல் என்ன?
வாசிப்பு பழக்கம் ஒரே நாளில் வருவதில்லை. பெற்றோர்கள் வழிகாட்டுதலுடன் குழந்தையிலிருந்தே தொடங்க வேண்டும். இன்று பள்ளிக்கல்வியை ஊக்கப் படுத்தும் அளவிற்கு வாசிப்பை ஊக்கப்படுத்துவதில்லை.
2. மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனர். அவர்களை எவ்வாறுவாசிக்க வைப்பது?
பொதுவான வாசிப்பை கல்லூரியில் ஏற்படுத்துதல் ஊக்கத்தைக் கொடுக்கலாம்
3. துறை சார்ந்த நூலகள் மாணவர்களுக்கு அந்நியமாகிப் போவதன் காரணம் பரந்த புத்தக வாசிப்பின்மையே எனக் கூறலாமா?
போட்டியால் அவர்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அசாத்திய சுமையே படிப்பை வெறுப்பதற்கான நிகழ்வாய் கருதுகிறேன்
4. துறை சார்ந்த நூலகள் தவிர பிற இதழ்களை தாங்கள் வாசிப்பதுண்டாஎனில் அவை குறித்த தங்களின் கருத்து என்ன?
துறை சார்ந்த நூல்கள் வாசிப்பு என்னிடம் இல்லை ஆனால் தொழில் சார்ந்த நூல்களை இணையம் வழி படிக்கிறேன். இலக்கிய இதழ்கள் படிக்கலாம்
5. இணைய வழி படிப்பென்பது தகவல் திரட்ட உதவும். வாழ்க்கையில் மனிதமனங்கள் பண்பட உதவுமா?
இலக்கிய இதழ்கள் கூட இன்று இணையத்தில் வரத்தொடங்கி விட்டது. இணையம் என்பது கட்டுபாடில்லா ஊடகம் அதை தேர்ந்தெடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் தேவைகளுக்கமான விழிப்புணர்வு இளைஞர்களுக்கு அவசியம். நல்ல புத்தகங்களின் பிரதிகள் இணையத்தில் வரத் தொடங்கியுள்ளன.
6.நூல் படிப்பதற்கும்  இணைய வாசிப்பிற்கும் உள்ள வித்தியாசம்?
கணிணி பயன்படுத்தாதவர்களுக்கு அது வித்யாசமானதாய் தோன்றலாம் இருப்பினும் இன்றைய தலைமுறை கணிணி பயன்பாட்டை பழகிவிட்டனர்.
நூல்களில்லா உலகம் தோன்றும் வாய்ப்பிருப்பதால் இணைய வழி வாசிப்பை பழகி கொள்ளலாம்
7.பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பி க்கை ஏற்படு ம். ஆக்கஅறிவு(Creativity) மிகும். இணையத் தரவுகள் இதைச் செய்யுமா?
எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே, ஆக்க அறிவென்பது தனிபட்டவர்களின் எண்ணமாக இருப்பதால் அவர்களுக்கு பிரியமானதை எதில் சுலபமாய் கிடைக்கிறதோ அதை தெரிவு செய்யலாம்
8. நூல் படிப்பு. கண்களுக்கு பயிற்சி. இணையவாசிப்பு கண்களுக்கு கேடு.இணையத்தை நீண்ட நேரம் படிக்க பயன்படுத்தமுடியுமா?
டிஜிட்டல் யுகம் நோக்கி போய் கொண்டிருப்பதால் கேடில்லா வழி வாசிப்பு வர வாய்ப்பிருக்கலாம்.
9. பல விஷயங்களை இணையத்தில்படித்தாலும் புத்தக வாசிப்பு போல் சிந்தனையைத் தூண்டுமா?
இன்றைய கிண்டில் போன்ற டிஜிட்டல் புத்தகத் தொகுப்பு அந்த பணியைச் செய்யுமெனக் கருதுகிறேன்
10.மக்கள் படிப்பதற்கேற்ற தரமான  நூல்கள் அதிக அளவில் வெளிவர என்ன செய்யவேண்டும்?
அதிகளவில் நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை வாங்கி படிக்கும் ஆர்வமில்லை.
11.நல்ல விமரிசகர்கள் உருவாகவேண்டுமானால் நல்ல பல படைப்புகள் வேண்டும். அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்புஅவசியம். வட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும்.தங்களின் கருத்து என்ன?
தொலைநோக்குப் பார்வை அவசியம் எல்லோருக்கும் தேவை
12.நீங்கள் காணும் தற்கால நூல்கள்இதழ்களில் உள்ள குறைகள்குற்றங்கள் என்னஅவற்றை எப்படிக் களையலாம்?
மதம் சாதி உணர்வுகளைத் தூண்டும் படியான நூல்கள் விழிப்புணர்வைக் காட்டி வெளிவந்தாலும் அது இளைஞர்களிடையே தவறான வேற்றுமையையும் , ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்
13.நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த நூல்கள் என்னஉங்களுக்குப் பிடித்த படைப்பாளர் யார்?
லா.ச.ரா , நகுலன், சுஜாதா, யுவன் சந்திரசேகர், பவுல் கோலோ, கார்சியா மார்கஸ், தமிழ்ச்செல்வன், பாரதி தம்பி , ஒரான் பாமுக், வைக்கம் முகம்மது பஷீர், ஜெயமோகன் , வேணுகோபால் , அசோகமித்திரன், வண்ணநிலவன், ஆதவன், இமையம், பாமா, இன்னும்....
14. தற்போது வரும் இதழ்கள் தரமுடையனவாக உள்ளனவா?
வெகுஜன இதழ்கள் அதன் தரத்தை இழந்துவிட்டதாக உணர்கிறேன்.
15.புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் லெனின்.தற்போது இணையம் தகவல்களை விரைவாகத் தரலாம். ஆனால் உள்ஆற்றலை வளர்க்குமா?
எதைத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தே .. காகிதமில்லா உலகம் சாத்தியமெனில் இணைய வழியோ அல்லது டிஜிட்டல் புத்தகத் தொகுப்புகளோ அதன் தன்மையை பிரதிபலிக்கலாம்...



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?