நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 13 December 2019

பாராட்டு Image result for பாராட்டு
பாராட்டு

Image result for பாராட்டு 
பணமிருந்தும் பாராட்டும் குணமிலையேல் உயர்விலை.
பண்பிருந்தும் பாராட்டும் மனமிலையேல் பயனில்லை.
பணம் செய்யாததை செய்துகாட்டும் மாயவித்தை
பார் போற்றும் மானிடராகிட பாராட்டுங்கள்   
பாராட்டிட வழிகளா இல்லை இப்பூவுலகில்
பாராட்டே குணங்களில் மிக உன்னதமானது
முகத்துக்கு நேராகப்  புகழுவதும் பாராட்டே.
இகமறிய  சொல்லால் மெச்சுவதும் பாராட்டே.

ஓசையெழ இருகை கைதட்டுவதும் பாராட்டே.
கைகளைப் பிடித்துக் குலுக்குவதும் பாராட்டே.
பின்முதுகில் தட்டிக் கொடுப்பதும் பாராட்டே.
சின்னஞ் சிறிய புன்னகைகூட பாராட்டே.
Image result for பாராட்டு

வெற்றியாளர்களை உயர்த்தி இருப்பதும் பாராட்டே.
சாதனையாளர்களின் சாதனைக்குப் பின்னிருப்பது பாராட்டே.
சாதனைகள் செய்வதற்கு தூண்டுகோல் இப்பாராட்டே.
தாய்தந்தையர் தந்திடவேண்டிய சொத்து பாராட்டே.

மண்ணை பொன்னாக்கிடும், பாதுகாப்பு உணர்வுதரும்
எண்ணத்தை மனதில் பதியமிடும், மனிதநேயமூட்டும்
நம்பிக்கையை வளர்க்கும்; மனப்பாங்கை மேம்படுத்தும்
நம்பிய நல்லுறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்!

மனிதஉறவு வளர்க்கும், மானுடம் தழைத்தோங்கும்
கனிவுஅக்கறை பாராட்டும், உறவுகளில் உறவாடும்
நண்பர்களைச் சேர்க்கும், மாறாத நேசம்தரும்
பண்பானவர் என்றொரு அழகானபேர் கொடுக்கும்

சின்னசின்ன பாராட்டுக்கள் பெரிய சாதனைகளாகும்
பின்னிப் பிணைந்த உறவுகளில் பாராட்டே வேராகும்
சங்கப் புலவர் பாராட்டில் சேரன் வில்பொறித்தான்
மங்கையின் பாராட்டில் மாமலையும் சிறுகடுகானதே
Image result for பாராட்டு

பற்றற்ற மனிதரும் மயங்கிடுவர் பாராட்டில்
சுற்றத்தையும் வீட்டையும் பாராட்டிப் போற்றிடு
அன்புணர்ந்த நெஞ்சுக்கு பாராட்டு கரும்பல்லவா
அன்பான பாராட்டில் அகிலமே கைகளுக்குள்


உன்னை நீ உண்மையாய் காண
உலகில் உனக்கொரு இடம் தேட
பாராட்டு பாராட்டு, பாராட்டு எதிரொலிக்கும்
பார் புகழ உன்னைப் பார்புகழ பாராட்டு.