தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?
முன்னுரை
தொல்காப்பியர், பொருளதிகார மரபியலில் நான்கு வருணத்தாருக்குரியப் பொருட்களைப்
பற்றிக் கூறுமிடத்து,நூல் என்ற சொல்லையும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சொல்
தொடர்பாக உரையாசிரியர்கள் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியுள்ளனர். இக்கருத்துக்களிலுள்ள
சாதியச் சார்புத் தனைமையைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில்
இக்கட்டுரை அமைகிறது.
நூற்பா
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (bjhš. 3: 615)
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (bjhš. 3: 615)
இந்நூற்பாவிற்குரிய பொருள் அந்தணர்களுக்குரிவை
நூல்,கரகம்,முக்கோல்,மணை என்ற நான்கு பொருட்கள் என்பதாகும்.
1.நூல் - நூல் என்பதற்குப் பூணூல் என
உரையாசிரியர்கள் பலரும் பொருள் கொண்டுள்ளனர்.(இதைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.)
2.கரகம் – சிறிய பானை
3.முக்கோல் -உயிர் மூலப்பொருளின்
விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இறைவன்,உடல்,உடம்பு
என்ற இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று
பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே இறைவனை வழிபடுபவர்கள், துறவிகள்
மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை "முக்கோல்" என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்.
4.மனை – அமருவதற்குரிய சிறிய பலகை.