நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 2 January 2016

பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும் – மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும்
மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......

முன்னுரை


கிறித்துப் பிறப்பதற்கு முன் தோன்றிய உலகத் தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர் புத்தர். மனிதர்க்கெட்டாத எந்தத் தத்துவத்தையும் புத்தர் சொல்லவில்லை. வாழ்வியலை நெறிப்படுத்தலும் மக்கள் மனதைப் பண்படுத்துதலுமே அவரின் நோக்கங்கள். புத்தருக்கு சமகாலத்திலிருந்து, கிட்டத்தட்ட கி.பி.11ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கொங்குமண்ணில் பௌத்தம் சிறப்புற்றிருந்திருக்கிறது. புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. பௌத்த, சமணச் சமயங்கள் 8ம் நூற்றாண்டுக்குப் பின்னர்ப் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கபட்டுவிட்டன. ஆனால் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் சிதைக்கப்பட்டது போக எஞ்சியுள்ளவை அவை புத்தர்சிலைகள் என்று தெரியாமலே இந்து மதக்கடவுளர்களின் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.

தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.தமிழ்ப் பண்பாட்டு நோக்கில்
காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.

 Image result for கம்பன் இளங்கோ 

உலகப் பொதுமறையான திருக்குறள், மனிதப் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்கிறது. அந்த இலக்கணத்துக்கு ஏற்ப அமைந்திருப்பதே இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் கம்பரின் இராமாயணமும். வள்ளுவர் வகுத்த லட்சியக் கனவின் இலக்கிய வடிவமே இவ்விருநூல்களும்.  இந்த காப்பியங்கள் தமிழர்கள் தங்களின் வாழ்வியல், பண்பாடு குறித்து அறிந்து கொள்ள ஆதாரமாக விளங்குகின்றன.

மன்னர்களின் இடையறாத பூசல்கள், சமயங்களுக்கு இடையிலான மோதல்கள் நிகழ்ந்த காலத்தில், தமிழ்ச் சமுதாயத்திலும், இந்தியச் சமுதாயத்திலும் ஒற்றுமை, ஒருமைப்பாடு தேவை என்பதை வலியுறுத்தவே இவை எழுதப்பட்டன.

பிற்காலத்தில் சமயப் பூசல்கள் அதிகரிக்கக் கூடும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், அவற்றுக்குத் தீர்வு காணும் விதமாக ஒரு தமிழ்த் தேசிய தெய்வத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளும், இந்தியத் தேசியத் தெய்வத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன் இராமவதாரத்தை கம்பரும் இயற்றியுள்ளனர்.