நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.
Showing posts with label பௌத்தம். Show all posts
Showing posts with label பௌத்தம். Show all posts

Saturday, 4 June 2016

புத்தரும் பெரியாரும்



Image result for buddha Image result for e v ramaswamy naicker          

 புத்தரும் பெரியாரும்


முன்னுரை

இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன. புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு. சுய சிந்தனை, நேர்மை, பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்;கருத்து போன்ற பல கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக் கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள். போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள். சுய சிந்தனையாளர்கள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள ஒற்றுமைகளை ஆராய்கிறது.

Saturday, 20 February 2016

மணிமேகலை காப்பியப் பௌத்தச் சான்றோர்கள்



 

 
Image result for திரிபிடகம் 
மணிமேகலை காப்பியப்  பௌத்தச் சான்றோர்கள்


            பெளத்தமதக் கொள்கைகளைப் பரப்பவும், பௌத்தர் பெருமைகளைப் பேசவும் தமில் எழுந்த காப்பியங்கள் இரண்டு. அவை மணிமேகலை, குண்டலகேசி. இக்காப்பியங்கள் பெண்ணை மையப்படுத்தி எழுந்த காப்பியங்கள். பெண்களுக்கான முதல் சமய மரபை நிறுவியர்- அடிமை முறையை முதன் முறையாக அகற்றுவதற்கு முயற்சித்தவர் பகவான் பௌத்தர் . ஒரு பெண் உண்மையை அறிய முயன்று, பல மதக் கொள்கையினையும் அறிந்து இறுதியில் பௌத்த சமயமே உயர்ந்தது எனக் கடைப்பிடிப்பது போல இக்காப்பியங்கள்  இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் காலத்தால் முற்பட்டது மணிமேகலை. இவள் சமயக் கருத்துக்களை அறிகிறாள். வாது செய்வதில்லை. ஆனால் பின்னர் வந்த நீலகேசி, குண்டலகேசி காப்பியங்கள் ஒரு பெண் வாதம் செய்து, தான் கொண்ட உண்மையினை நிலை நாட்டுவதனைக் கூறுகின்றன. இதில் நீலகேசி சமணம். குண்டலகேசி என்பது பெளத்தக் கொள்கையைக் குண்டலகேசி என்ற பெண் நிலைநாட்டிப் பிற மதங்களை மறுப்பதைக் கூறுகிறது. சில பாடல்கள் அன்றி இந்தக் காப்பிய முழுவதும் இன்றுவரை (1960) கிடைக்கவில்லை. இதனைப் பாடியவர் நாதகுத்தர் என நீலகேசி கூறுகின்றது. மணிமேகலை காப்பியம் பாடியவர் சீத்தலைச்சாத்தனார். மணிமேகலை காப்பியம், பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்த பல பௌத்தர்களைப் பற்றிக் கூறுகிறது. பௌத்தத்தில் தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் என்ற இருபிரிவு உள்ளது.

Saturday, 2 January 2016

பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும் – மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......



பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும் –
மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......

முன்னுரை


கிறித்துப் பிறப்பதற்கு முன் தோன்றிய உலகத் தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர் புத்தர். மனிதர்க்கெட்டாத எந்தத் தத்துவத்தையும் புத்தர் சொல்லவில்லை. வாழ்வியலை நெறிப்படுத்தலும் மக்கள் மனதைப் பண்படுத்துதலுமே அவரின் நோக்கங்கள். புத்தருக்கு சமகாலத்திலிருந்து, கிட்டத்தட்ட கி.பி.11ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கொங்குமண்ணில் பௌத்தம் சிறப்புற்றிருந்திருக்கிறது. புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. பௌத்த, சமணச் சமயங்கள் 8ம் நூற்றாண்டுக்குப் பின்னர்ப் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கபட்டுவிட்டன. ஆனால் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் சிதைக்கப்பட்டது போக எஞ்சியுள்ளவை அவை புத்தர்சிலைகள் என்று தெரியாமலே இந்து மதக்கடவுளர்களின் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.