நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 12 March 2013

புறநானூற்றில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்புறநானூற்றில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்

முனைவர் ப.சுதந்திரம்,தமிழ்த்துறைத்தலைவர்,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 7.
                சமூகத்தின் நிலைக்களன்களாக விளங்குவன இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்கள் யாவும் மனிதப் பண்பாட்டைக் காட்சிப்படுத்துவனவாக அமைகின்றன. மனிதர்களைப் பண்பாட்டின் உச்சநிலைக்குக் கொண்டு செல்வன, அவர்களால் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் ஆகும். காலத்தின் தேவைக்கு ஏற்ப மக்களால் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் மாற்றியமைக்கப்பட்டாலும் அதனுள் மரபு சார்ந்த பயன்பாடுகள் இன்றளவும் உள்ளன. இக்கருத்தை அடியொற்றி நம் முன்னோர்களின் வீரப்பண்பைகளை எடுத்தியம்பும் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறநானூற்றில் """"பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்"" என்னும் நோக்கில் சடங்குநிலையைக் கடந்து நிலவியவை மட்டுமே இங்குச் சுட்டப்படுகின்றன.

புறநானூற்றில் தாய்த்தொன்மம்அரங்க.மல்லிகா, இணைப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.

புறநானூற்றில் தாய்த்தொன்மம்

                மதிப்பீடுகள் காலத்தில் அளவுகோல்களாகும். நேற்றும், இன்றும் அதிகாரதத்தில் இருந்தவற்றை மாற்றுவதற்குரிய சூழலை மனச்செழுமையை, அறிவியற்பூர்வமாகப் பார்க்க விழையும் ஆய்வுக் கண்ணோட்டத்தை மதிப்பீடு வளர்க்கிறது. இதன்மூலம் பழமை போற்றுதலுக்கும், இழிவுபடுத்துவதற்கும் உரியதாக இருக்கிறது என்பதை மீறிய அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளை உள்ளிழுத்திக்கொள்ளும் சூழலை முன்னிருத்துகிறது.

புறநானூற்றுக் கபிலர் பாடல்களில் பண்பாட்டுப் பதிவுகள்முனைவர் க.முருகேசன்,     தமிழ்த்துறைத்தலைவர்,      கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,கோயம்புத்தூர் - 641 029.

புறநானூற்றுக் கபிலர் பாடல்களில் பண்பாட்டுப் பதிவுகள்

                சங்க காலத்தில் கல்வியும் செல்வமும் பூத்திருந்த காரணத்தால் வருந்தி வந்தவர்க்கீதலும் வருவிருந்து போற்றுதலும், நாள்தோறும் குறைவின்றி நடைபெற்று வந்ததுடன், செழுமையான இலக்கியங்களும் தோன்றின. வினையை உயிரென மதிக்கும் ஆடவர், ஆடவரை உயிரென மதிக்கும்  ஆடவர், ஆடவரை உயிரெனப் போற்றும் மனையுறை மகளிர், காதல் நெஞ்சத்தால் கையற்றுத் தவிக்கும் தலைவியின் துன்பத்தைத் துடைக்க வழிவகுக்கும் தோழி. அன்பு மகளின் இல்வாழ்க்கை இன்பமாக ஏற்றம் பெறவேண்டுமே என எண்ணித் தவிக்கும் தாய் ஆகியோரின் எண்ணக் குவியல்களை மலர்களாக வைத்து நாகரிகம் என்ற நாரால் தொடுத்து அமைக்கப்பட்ட நறுமண மாலைகளாகிய அகப்பொருள் நூல்களும், தலைசிறந்த பண்பாடுகளான அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் சால்புகளையும் வாணிகம், நீதி, போர்முறை, கல்வி போன்ற சமூக இயல்புகளையும் விளக்கமாக உரைக்கும் புறப்பொருள் நூல்களும் தமிழரின் பண்பாட்டுப் பெட்டங்களாகத் திகழ்கின்றன.

புறநானூற்றில் பெண்ணியம்முனைவர் இரா.சீதா,  தமிழ்த்துறைத்தலைவர்,    தூய பிலோமினாள் கல்லூரி,             மைசூரு.

புறநானூற்றில் பெண்ணியம்

                சங்க கால புறத்துறை வாழ்வியல் நிலைகளை புறநானூறும் பதிற்றுப்பத்தும் உரைக்கின்றன. வரலாற்று நிகழ்ச்சிகள் நேர் வரிசையாக கூறப்பெறவில்லை என்றாலும் அப்பாடல்கள் அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், தொழில்முறைகள், பண்பாட்டுக் கூறுகள், கல்வி முதலியனவற்றை விளக்குகின்றன. இதில் பெரும்பான்மையான பாடல்கள் பல மன்னர்களையும் குறுநிலமன்னர்களையும் அவர்களின் வீரம், கொடை போன்றவற்றை விரிவாகப் பேசுகின்றன. சில பாடல்கள் அகத்திணை சார்ந்த தன்மையைக் காட்டினாலும் மன்னனின் பெயர் வெளிப்படையாக கூறப் பெற்றதால் அப்பாடல்கள் புறப்பொருளைச் சார்ந்து அமைக்கப் பெற்றுள்ளன.

புறநானூற்றில் மறப் பண்பாடுமுனைவர் இரா.ஜெகதீசன்,            இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,                  திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,  சேர்க்காடு, வேலூர் - 623 115

புறநானூற்றில் மறப் பண்பாடு

                சமூக வாழ்வில் மக்கள் அனைவரும் கண்டு அறிந்து அனுபவித்து மகிழ்வதைப் புறம்எனவும்;தலைவன் - தலைவி இருவரிடையே முகிழ்க்கும் உறவையும் இல்வாழ்க்கையையும் பிறர்க்கு அறிவிக்க இயலாக நிலையை அகம்எனவும் பகுத்தனர். போரில் புறம் காட்டா வீரர்களையும் தம் மக்களைப் போருக்குத் தெருட்டித் துணிவு தந்தனுப்பிய தாய்மார்களையும்;வீழ்ந்த வீரர்களுக்கு நடுகல் நாட்டிப் போற்றியதையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அரசன் மாற்றார் மீது படையெடுத்துச் சென்றதனையும்; ஆநிரை கவர்ந்து வந்ததனையும் போர் மரபாக மறப் பண்பாடாகப் புறநானூறு வழி நாம் அறிய முடிகிறது. அவ்வழி, மறப்பண்பாடுகளில் ஒருசிலவற்றை ஈண்டு காண்போம்.
                                வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
என்பது பாரதியின் வாக்கு.

புறநானூற்றில் கலைக்கூறுகள்
புறநானூற்றில் கலைக்கூறுகள்

முனைவர் சீ.குணசேகரன்,  தமிழ் இணைப்பேராசிரியர்,    அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
                                                                                                சேலம் - 636 007.
முன்னுரை
                விலங்குகளைப் போல நாடோடிகளாய் திரிந்த மனிதனை நாகரிக மனிதனாக மாற்றிய பெருமை கலையினையேச் சாரும். நாடோடிகளாய்த் திரிந்த மனிதன் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கற்களால் ஆன ஈட்டி, கத்தி முதலான கருவிகளைக் கண்டுபிடித்தான். பிறகு இயற்கையின் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்து கொள்வதற்காக தனக்கென ஒரு உறைவிடத்தை அமைத்துக் கொண்டான் இவையாவும் அவனது கலைத்தன்மையே ஆகும்.