நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 13 September 2014

நூற்றாண்டு கண்ட சேலம் அரசு கலைக் கல்லூரி





நூற்றாண்டு கண்ட சேலம் அரசு கலைக் கல்லூரி

    1856ல் சென்னை ராஜதானியில் கல்வித்துறைத் தலைவர் ஏ.ஜே. அர்புத் நாட் சேலத்தில் ஓர் ஆங்கில மொழி வழி ஆரம்பப்பள்ளியைத் திறந்து வைத்தார். அடுத்த ஆண்டிலே அது ஜில்லா பள்ளியாக உயர்வு பெற்றது. 1863 ம் ஆண்டு நிதி திரட்டி அப்பள்ளிக்கென தனிக் கட்டடம் கட்டப்பட்டது. 1865-ஆம் ஆண்டில்அப்பள்ளியின் மாணவர் 8 பேர் மெட்ரிகுலேசன் தேர்வு எழுதினர். 1866-ஆம் ஆண்டு அப்பள்ளியிலே கல்லூரி வகுப்புத் தொடங்கி மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டினையே கல்லூரி பிறந்த ஆண்டாக கொள்ளலாம். இப்போது கல்லூரியின் வயது 135.     ஜில்லாப்பள்ளிக் கூடத்தில் இயங்கிய கல்லூரி வகுப்புகள்  1879-ம் ஆண்டு தனியே பிரிக்கப்பட்டன. கல்லூரி போஸ் மைதானத்தில் கட்டப்பட்ட புதுக்கட்டிடத்தில் தனிக்குடித்தனம் புகுந்தது. பல்கலைக்கழகஅளவில்  சேலம் கல்லூரிக்கு இரண்டாம் நிலைத் தகுதி வழங்கப்பட்டது.



    நெடும் வரலாறு கொண்ட இக்கல்லூரியில் படித்தவர்கள் சிறப்பு அற்புதமானது. அறிஞர்கள், நிர்வாகிகள், கலை இலக்கிய படைப்பாளிகள், அரசியல்வாதிகள் 1000க்கும் மேலானோர் இக்கல்லூரியால் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமுதாய மாற்றத்திற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சிறப்பாக பங்காற்றி உள்ளனர். சிலரது அறிவாற்றல் தேசங்கடந்தப் புகழைப் பெற்றது.



 விஜயராகவாச்சாரியார்

    சேலம் அரசு கல்லூரி அரசியல் பாடசாலையாகவும் விளங்கியது. விடுதலைப் போரின் முதல்நிலை வீரர்களான விஜயராகவாச்சாரியார் சீனிவாச சாஸ்திரி ஆகியோர் சேலம் கல்லூரி தேசியம் வளர்த்த பேராசிரியர்கள் ஆவர். 1942-ல்  ””வௌ;ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெளியேறி ஊர்வலம் நடத்தி தம் நாட்டுப்பற்றை வெளிக் காட்டினர். விஜயராகவாச்சாரியார் 1962-ல் சீன ஆக்கரமிப்பின் போது நகர வீதிகளில் ஊர்வலம் வந்து உண்டியல் ஏந்தி நிதி திரட்டி, அன்புத்தலைவர் காமராசரிடம் தேசிய பாதுகாப்பு நிதி வழங்கினார்.இ. இராசாராம்

    சேலம் அரசு கல்லூரியின் மாணவப் பேரவைத் தலைவர் கல்லூரிக்கு பெரியாரின் வருகைக்குப் பின் (1947) திராவிட மாணவர் கழகம் தோற்றுவித்தவருள் ஒருவரானார். கல்லூரியில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டு இருமுறை போராட்டம் நடத்தினார். ராசாராம் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர், சட்டப்பேரவை தலைவர், மைய அரசுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதி எனப்பல பொறுப்புகளை வகித்தவர். தமிழர் வாழும் உலக நாடுகளோடு ஆழமானத் தொடர்புகளை வைத்திருந்தவர். சேலம் தமிழ் சங்க நிறுவனர்களுள் மூத்தவர். சேலம் அரசு மகளிர் கல்லூரி அமைந்திடக் காரணமானவரும் ஆவார்.

கே. ஜெயராமன்

    கல்லூரி படிப்பை முடித்து 1950-சேலம் நகரவை உறுப்பினர் ஆகி பின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இருமுறை (1967-76) திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியேற்ற முதல் பருவத்தின் முன்னோடி உறுப்பினர் சிறந்த படைப்பாளி, சேலம் தமிழ்ச்சங்க உறுப்பினர்.


அறிஞர் டாக்டர் ஜி. ரங்கசாமி

    டாக்டர். ஜி. ரங்கசாமி சேலம் அரசு கல்லூரியில் கணிதம் பயின்றார். பின்னர் புதுடில்லி தேசிய வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் பட்டம் பெற்றார். உயர் ஆய்வுக்காக அமெரிக்கா  சென்றார் அவர். அங்கே செல்மண் ஏ. வாக்ஸ்மென் என்பவரின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். வாக்ஸ்மேன் நோபல் பரிசு பெற்றவர்.   தமிழ்நாட்டில் நவீன வேளாண்மை ஆரய்ச்சி கடந்த நுhற்றாண்டிலே தொடங்கிவிட்டது என்றாலும் வேளாண்மைக்கென தனியொரு பல்கலைக்கழகம் விடுதலைப் பிறகே தோன்றியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (கோவை) முதல் துணைவேந்தர் ரங்கசாமி ஆவார். மேலும் ஐ.நா. மன்றத்தின் உணவுத்துறை, இந்திய அரசின் வேளாண்மை அறிவியல் போன்ற அமைப்புகளின் ஆலோசகராகவும் விளங்கியுள்ளார். அவர் எழுதிய உள்ள நுhல்கள் 15 ஆய்வுக் கட்டுரைகள் ஆகும்.
 

            வ.செ. குழந்தைசாமி

    சேலம் கல்லூரியில் பயின்ற பின் பொறியியல் டாக்டர் பட்டம் பெற்றார். அவர் நீரியல் பற்றி ஆய்வு செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகத் திகழ்ந்தவர். மாநில மற்றும் மைய அரசுகளில் உயர்நிலைக் கல்விக் குழுக்களின் உறுப்பினராய், அவற்றின் முதல்வராய் விளங்கி நாட்டுக்கே வழிகாட்டுபவர் ஆவார்.தேவநேயப் பாவாணர்

    சேலத்தில் திருக்குறள் கழகம் ஒன்றமைத்து சேலம் மக்களின் தமிழ்ப் பண்பாட்டு உணர்வை -ஊட்டியவர் தேவநேயப் பாவாணர். ஆவர்  1940-ல்சேலம் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றினார். மொழி ஞாயிறு அவரின் தமிழ்  சேலம் கல்லூரி மாணவர்களின் தமிழ் உணர்வுகளுக்கு உயிர் ஊட்டியது.

 

உயர்கல்வித்துறை  அமைச்சர் திருவாளர் பழனியப்பன் அவர்களும் இக்கல்லூரியில் பயின்றவர்.
அமைச்சர் பழனியப்பன்
தி.வை. சொக்கப்பர்

    இவர் வரலாற்றுத்துறைப் பேராசிரியர். இவரின் உதவியோடு பெரியார், அண்ணா, பாரதிதாசன் முதலானோரை கல்லூரிக்கு அழைத்து வந்து பேச வைத்தனர். அவர்களது சொற்பொழிவுகள் சேலம் கல்லூரி மாணவர்களின் மொழி, இனப் பற்றுகளை கூர்மைப்படுத்தின.


ஜி. சூடாமணி

    ஜி. சூடாமணி சேலம் நகராட்சியராக விளங்கியபோது அதன் கடைசி நகரவைத் தலைவர் (சேர்மன்) சேலம் மாநகராட்சியாக உயர்ந்ததும் அதன் முதல் மேயரும் ஆவார்.    சேலம் கல்லூரி மாணவர் பலர் சேலம் நகராட்சி மன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர் அமானுல்லாகான் 5 முறை நகரவை உறுப்பினராய் இருந்த பெருமைக்குரியவர். எம். குணசேகரன்,        டி. சேகர், வெங்கடாசலம், லிங்கன், ஹரிஹரன், ஏ.ஆர். மகுடீஸ்வரன், ஏ.ஜி. பூவராகவன் நடேசன் ஆகியோர் நகரவை உறுப்பினர்கள். பல்வேறு உள்ளூர் கட்சித் தலைவர் பலர் சேலம் கல்லூரி மாணவர்களாவர்.

தொடரும்.....இக்ட்டுரை விரிவாக்கப்படவேண்டியுள்ளது. இக்கல்லூரியில் படித்த சான்றோர் பெருமக்கள் இக்கல்லூரி குறித்த பெருமை மிகுந்த செய்திகளை அனுப்பி உதவவும்.......

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?