இலக்கற்ற இலக்கியம்
இதமற்ற அறிவியல்
மனிதமற்ற அரசியல்
இரக்கமற்ற தலைமை
கேள்வியற்ற மக்கள்
அறமற்ற மனம்
நோய் செய்யும் உலகுக்கே.
மீனில்லா குளம்
பறவையில்லாக் காடு
மேகமில்லா வானம்
இசையில்லாப்பாடல்
வரவேற்பில்லா விருந்து
கடைகளில்லாத் திருவிழா
முதியோரில்லா வீடு
மாணவரில்லா கல்விக்கூடம்
மனிதர்களில்லா தெருக்கள்.....
அறிவியல் வளர்ச்சியல்ல...
வன்முறை...
கொரானா...
மனிதர்களை
பொருளாதாரத்தை
வளர்ச்சியை
கல்வியை
ஏகாதிபத்தியத்தை
இயற்கை மீறிய ஆய்வை
அறுவடை செய்ய வந்த
கொடுவாள் கொரானா....
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?