நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 15 March 2020

நீர்க்குமிழிகள்







நீர்க்குமிழிகள்
காற்றில்தோன்றிக் கொண்டிருக்கும் போதே
ஒவ்வொன்றாய் உடைந்து.... பின்
மீண்டும் மீண்டும்
தோன்றுவதும்
உடைவதுமான இந்த விளையாட்டு...
யாரும்
மீளமுடியாமல்....
மீட்பவருமில்லாமல்...
மீட்சியற்ற
உலகின் இயக்கம்
இதுதான் என்கிறது
சிலருடைய
நினைவுக்குமிழிகள் போல்...
சில தானாக உடைகின்றன. 
சிலவற்றை நாம் விளையாட்டாய் உடைத்து விடுகிறோம்.
அதன் விதியென்னவோ உடைவதுதான்.


சில...
 சில கணங்கள் நீடிக்கின்றன.
சில தொடங்கும்போதே உடைந்துவிடுகின்றன.
சிறியதோ
பெரியதோ
சிலகணமேனும் வண்ணங்களால் நிறைந்து
நீரின் போக்கிலோ...
காற்றின் போக்கிலோ....
வாழ்ந்துவிடுகின்றன 

எதையும் அதனதன் போக்கில் 
விட்டுவிட்டால்
சில கனநேரமாவது
மிளிர்ந்திருக்கும். 
உடைந்து போனவை
விண்ணோடு ஏறி 
மேகத்தோடு உறவாடி
மீண்டும் குமிழிகளாம்.
அவற்றில்
நீ ஊதிய காற்றில்லாமலும் இருக்கலாம்.
நீர்க்குமிழிகள் நீர்க்குமிழிகள்தாம்.














No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?