திருவாசகத்தின் இசையமைதி
திருவாசகத்தின் சிறப்பு இசைப்பாடல் வடிவத்தில்
பாடல்கள் அமைந்திருப்பதே. இதற்குக் காரணமாக அமைந்துள்ள மொழிக் கூறுகளை அறிவது
அவசியமாகிறது.
இசையமைதி
இசையுணர்ச்சியே பாக்களுக்கும்
பாவினங்களுக்கும் அடித்தளமாக விளங்குகின்றது. படைப்பாளர்கள், கற்பனைத்திறத்திற்கும்
படைப்பாற்றலுக்கும் மட்டுமல்லாது ஓசை ஒழுங்கிற்கும் ஏற்றாற்போலவே பாக்களின்
வடிவங்களில் மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்திச் சோதனை முயற்சிகள்
செய்துள்ளனர். இசையுணர்ச்சி.கு காரணமாக விளங்குபவை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை போன்றவையாகும். இவற்றைத் தொடையின்
வகைகளாகக் குறிப்பிடுவர்.
மோனை
அடிதோறும் முதல் எழுத்து ஒத்து வருவது
மோனை எனப்படும். மோனையில் இணைமோனை, பொழிப்புமோனை, ஒரூஉமோனை, கூழைமோனை மேற்கது வாய்மோனை, கீழ்க்கதுவாய் மோனை என்று பல வகைகள் உள்ளன. மோனையைப் போலவே
தொடையின் பிற வகைகளும் இவற்றைப் பெற்று விளங்குகின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒரு
எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நாற்சீரயில் முதலிரு சீர்களில் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை போன்றவை ஒத்துவருமாயின் அவற்றை
முறையே இணைமோனை, இணை எதுகை, இணைமுரண், இணைஇயைபு, இணைஅளபெடை
எனக்குறிப்பர். இதைப் போலவே மேற்குறிப்பிட்டவை முதற்சீரும் சீரம் ஒத்துவருமாயின்
அவற்றை ‘பொழிப்பு’ என்றும் முதல்சீரிலும் நான்காம் சீரிலும்
ஒத்தவருமாயின் ‘ஒரூஉ’ என்றும் முதல், மூன்று, நான்காம் சீர்கள் ஒத்தவருமாயின் ‘மேற்கதுவாய்’ என்றும், முதல், இரண்டு, நான்காம் சீர்கள் ஒத்தவருமாயின் ‘கீழ்க்கதுவாய்’ என்றும் அழைப்பர்.
மோனை வகைகள்
திருச்சதக நாற்பதாம் பாடலின்
முதற்சீரிலும் இரண்டாம் சீரிலும் மோனை ஒத்துவருகின்றனது.
‘‘வேனில் வேள்களை
கிழித்திட’’ ( 5-40 )
எனவே, இது இணைமோனை
பெற்று வந்துள்ளது.
பொழிப்பு மோனை
முதற்சீரும் மூன்றாம் சீரும்
ஒன்றிவருதல்.
‘‘அறிலி லாமையின்
அன்றேகண்ட’’ ( 5-50 )
ஒருஉ மோனை
முதற்சீரும் நான்காம் சீரும்
ஒன்றிவருதல்.
‘‘ஆயநநான்
மறையவனுனும நீயே ஆதல்’’ ( 5-23 )
கூழைமோனை
முதல் மூன்றுசீர்கள் ஒன்றிவருதல்.
‘‘அளவு அறுப்பதற்கு
அரியவன் இமையவர்க்கு’’ ( 5-35 )
மேற்கதுவாய் மோனை
முதல், மூன்று, நான்கு
சீர்கள் ஒன்றிவருதல்.
‘‘போற்றி என்றும்
புரண்டும் புகழ்ந்தும்’’ ( 5-54 )
கீழ்க்கதுவாய் மோனை
முதல், இரண்டு, நான்கு
சீர்கள் ஒன்றிவருதல்.
‘‘கொள்ளும் கில்எனை
அன்பரின் கூய்ப்பணி’’ ( 5-46 )
முற்றுமோனை
அனைத்து சீர்களிலும் அனைத்து மோனைகளும்
ஒன்றிவருதல்.
‘‘அத்தன் அணிதில்லை
அம்பலவன் அருட்கால்கள்’’ ( 11-16 )
மோனை இன்மையிற் சில
‘‘சுண்ணப் பொன்
நீற்றற்கே சென்றுதாய் கோத்தும்பீ’’ ( 10(4 )
‘‘பரமாகி நின்றவா
தோணோக்க மாடாமோ’’ (15-12 )
‘‘எச்சனுக்கு
மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ’’ ( 12-5)
இவ்வாறு மோனைகள் திருவாசகத்தில் பயின்று வருகின்றன.
எதுகை வகைகள்
முதல் ல்ழுத்து ஒன்றாமல், இரண்டாம் எழுத்து ஒன்றிவருமாயின் அது
எதுகைத் தொடை எனப்படும்.
இணை எதுகை ( 1,3 )
‘‘ஆர்மின், ஆர்மின் நாள்மலர்ப் பிணையல்’’ ( 3-142 )
பொழிப்பு எதுகை ( 1,3
)
‘‘சொல்லற்கு
அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்’’ ( 1-92
)
ஒருஉ எதுகை ( 1,4 )
‘‘சொல்லிய பாட்டின்
பொருளணர்ந்து சொல்லுவார்’’ ( 1-93 )
கூழை எதுகை ( 1,2,3 )
‘‘துற்றவை துறந்த
வெற்றுயீ ராக்கை’’ ( 3-137 )
மேற்கதுவாய் எதுகை ( 1,3,4 )
‘‘பற்றுமின் என்ல்hர் பற்று முற்றொளித்து’’ ( 3-145 )
கீழ்க்கதுவாய் எதுகை (
1,2,4 )
‘‘நலந்தான் இலாத
சிறியேற்கு நல்கி’’ ( 1-58 )
அடிதோறும் எதுகை
திருச்சதகத்தில் அமைந்துள்ள பாடல்களில்
அடிதோறும் முதல்சீர்கள் ஒரே விகற்பத்தாலான எதுகை பெற்று வருகின்றன.
போர் - வார் - சீர் - ஊர்
இவை முற்றெதுகைகள் எனப்பெறும். இவ்வாறு
அமைந்து இவையாவும் ஓசைநயம் பயக்கின்றன.
இணைமுரண்
மோனையின்மையிற் சிலவும், எதுகையின்மையிற் சிலவும்
பயின்றுவருமாயின் அவற்றை இணைமுரண் என்பர். திருவாசகத்தில் பெருமளவு மோனையின்மையினவே
பயின்று வந்துள்ளது. இருவேறு பொருள்களை முரண்படத் தொடுப்பதே முரண் தொடையாகும்.
இணைமுரண்
‘‘ஆதியனே அந்தம்
நடுவாகி’’ (
1-73 )
பொழிப்பு முரண்
‘‘ஆக்குவாய்
காப்பாய் ஆழிப்பாய்’’ ( 1-42 )
‘‘யானை முதலா
எறும்பீருய’’ ( 4-11 )
ஒருஉ முரண் ( 1,4)
‘‘விருத்தனே போற்றி
எங்கள் விடலையே’’ ( 5-61 )
கூழைமுரண் (1,2,3 )
‘‘பெண் ஆண் அலி
எனும் பெற்றியன்’’ ( 3-57 )
மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்
முரண்கள் இடம்பெறவில்லை.
இயைபுத் தொடை
அடிதோறும் இறுதி அசையோ, சீரோ,
எழுத்தோ இயைந்துவருமாயின் அதனை இயைபுத்தொடை என்பர்.
இணை இயைபு
‘‘கொடிறும்
பேதையுங் கொண்டது விடாது’’ ( 4-63 )
கடையிரு சீர்க்கண் இறுதி அசைகளான ‘அது’
ஒன்றி வருவதால் இது இணைஇயைபுத் தொடை எனப்படும்.
பொழிப்பு இயைபு
‘‘பூணது வாகக்
கோணுத லின்றி’’ ( 4-70 )
முதற்சீர் இறுதியும் மூன்றாம் சீர்
இறுதியும் இயைந்து வருதலான் இது பொழிப்பு இயைபு எனப்படும்.
ஒருஉ இயைபு
‘‘பூசின்தாம்
திருநீறே நிறையப் பூசி’’ ( 5-24 )
முதற்சீர் இறுதியும் நான்காம் சீர்
இறுதியும் ஒன்றி வருதலான் இது ஒருஉ இயைபு ஆகும்.
கூழை இயைபு
‘‘என்பநைந் துரகி
நெக்கு ஏங்கி’’ ( 4-80 )
இறுதியிலுள்ள மூன்று சீர்களிலும் ஈற்றெழத்து
ஒன்றி வருதலான் இது கூழைஇயைபு எனப்படுகிறது.
‘‘படைப்பாய்
காப்பாய் துடைப்பாய்’’ ( 4-100 )
மேற்கதுவாய் இயைபு
‘‘கொடிறும்
பேதையும் கொண்டது விடாதெனும்’’ ( 4-63 )
4,2,1, சீர்களின் இறுதி அசை ஒன்றி வருவதால்
மேற்கதுவாய் இயைபு என்றாகிறது.
கீழ்க்கதுவாய் இயைபு
‘‘பரகதி பாண்டிற்
கருளினை போற்றி’’ ( 4-214 )
4,3,1, சீர்களின் இறுதி அசை ஒன்றி வருகிறது.
முற்று இயைபு
நான்கு சீர்களிலும் உள்ள இறுதி அசைகள்
ஒன்றி வருமாயிற் அவற்றை முற்றியைபு என்பர்.
‘‘அடியும் அலறியும்
பாடியும் பரவியும்’’ ( 4-62 )
அளபெடைத் தொடை
அளபெடுத்து வருபவற்றை அளபெடைத்தொடை
என்பர். பெரும்பாலும் முதலிரு சீர்க்கண்ணும் அளபெடுத்து வருதல் இல்லை.
முதல் சீரில், ‘‘செல்லாஅ
நின்ற’’
(
1-30 )
இரண்டாம் சீரில், ‘‘நமச்சிவாய
வா அழ்க’’ (
1-1 )
நான்காம் சீரில், ‘‘ஈண்டு
கனகம் இசையப் பெருஅ’’ ( 2-39 )
இரண்டாம், நான்காம்
சீர்களில்,
‘‘நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்’’ (
3-109 )
இசை நிறைவிப்பதற்காக அளபெடைகள் பயின்று வருகின்றன.
திருவாசகத்தில் பயின்று வந்துள்ளவை
உயிரளபெடைகளேயாகும். நான்கடிப்பாடல்களில் நான்கு சீர்களில் (ஒரே அடியில்)
இடம்பெறும் தொடையின் வகைகளைக் கண்டோம். நாற்சீருக்குள்ளே இவை பயின்று வருதல் போலவே
ந்hன்கடிகளாலும் இசை பயின்று
விளங்குதலே லபரும்பான்மையாக திருவாசகத்தில் உள்ளன.
அடிதோறும் பயின்றுவருதல் மோனை, எதுகை, இயைபுகள் விழுமிய ஓசையினிமையையும், ஒருவிருப்பத்தன்மையினையும்
தோற்றுவிக்கின்றன.
மோனைகள்
‘‘ஆக்கம்
அளவிறுதி............’’ (1-41-42 )
ஆக்குவாய் காப்பாய்..........’’
நலந்தானிலாத ..........
நிலந்தன் மேல் ......................’’ (
1-59-60 )
எதுகைகள்
அடிதோறும் எதுகைகள் ஒரு விகற்பத்தால்
பயின்று வருகின்றன. சிவபுராணம், கீர்த்தி, போற்றி பகுதிகள் இரண்டிகளுக்கு
ஒருவிகற்பத்தான் அமைந்த எதுகைகளும், திருச்சதகம்
போன்றவற்றில் பெரும்பாலும் அடிதோறும் ஒருவிகற்பத்தான் அமைந்த எதுகைகளும் பயின்று
வருகின்றன.
ஈசன்/ சிவன்/, சிந்தை
தேசன்/ அவன் /
முந்தை
அப்பனே ஓய்வு சிந்தை யான்
ஒப்பனே நாய் வந்தனை வான்
துப்பனே தாய் வந்தனை தேன்
வைப்பனே தீயில் தந்தனை மான்
ஒரு விகற்பத்தான் அமைந்த எதுகைகள் ஓசை நலத்திற்கு
உதவுகின்றன.
முரண்கள்
‘‘செல்லமென்னும்
..................
நல்குரவென்னுந் ..................’’ ( 4-39-40 )
‘‘நீரிடை நான்காய் .............
தீயிடை .....................................’’ ( 4-138-139 )
‘‘பொய்யர்
............
மெய்யர்
.......................................’’ ( 5-52 )
அடிதோறும் பொருள் மாறுபாட்டுடன் இவை வழங்குகின்றன.
இயைபுகள்
அடிதோறும் இறுவாய் ஒத்துவரும் இயைபு.
தொடைகள் அதிகமாகப் பயின்று வருகின்றன.
வாழ்க வெல்க போற்றி
வாழ்க வெல்க போற்றி
அடிதோறும் இறுதிச்சீரில் இவை பயின்று
வருதல் போலவே மூன்றாவது சீரிலும் சிலவற்றில் முதல் மற்றும் இரண்டாவது சீரிலும் இவை
பயின்று வருகின்றன.
முதற்சீரில் இரண்டாம்சீரில் மூன்றாவதுசீரில்
ஈசன் போற்றி சிவன்
தேசன் போற்றி நிமலன்
சிவன் உள்மகிழும் மன்னன்
அவன் ஓங்குவிக்கும் தேவன்
இரண்டடிகளிலுள்ள அனைத்துச் சீர்களும்
இயைபில் ஒத்துவருவனவற்றைச் சிவபுராணப் பகுதியில் காணலாம்.
பிறப்பறுக்கும்
பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச்
சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க ( 1-78 )
அசை, சீர்.
சொல் ஆகிய அனைத்துமே ஒன்றி வரும் இயைபுத் தொடையினை இதில் காணலாம்.
இவ்வாறு விளங்கும் தொடைப் பகுதிகளே, மணிவாசகரின் கற்பனைத் திறத்திற்கு
படைப்பாற்றலுக்கும் சான்றாக விளங்குகின்றன. எதுகை, மோனை, இயைபு, முரண் முதலான தொடை வகைகளும், அவற்றின் விகற்ப வகைகளும் இயல்பாகவே
செறிவோடு அமைந்து இன்னோசையை அளிக்கின்றன. இவ்வாறு இசைநயமும், ஓசை ஒழுங்கும் பெற்று வருதலாலே, மக்களிடம் விருப்பத்தன்மையையும்
ஆர்வத்தையும் தூண்டி நிற்கிறது திருவாசகம். இக்கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதாலேயே
இசையினிமையால் கேட்போர் மனதில் கிளர்ச்சியையும், மனநிறைவையும், உருக்கத்தையும்
உண்டாக்கித் திருவாசகப் பாடல்கள் பெரு வெற்றி பெற்றுள்ளன எனில் மிகையாகாது.
மொழிப் பயன்பாடு
1. மணிவாசகர் இடத்திற்கேற்ற சொற்களைத் தேர்வு செய்து
எடுத்தாளப்பட்டுள்ளதால் திருவாசகத்தின் மொழியமைப்பும்
பயன்பாடும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
2. இலக்கணக் கூறுகளிலும் புதுமுயற்சிகள் செய்து சொல்ல
வந்த கருத்தை எளிமைப்படுத்துகிறார்.
3. வினைமுற்றை முதலில் கூறியும், வினை எச்சங்களை ஆர்வம் தூண்டும் வகையில்
கையாண்டும், சொற்களை
அழுத்தமாகக் கூறியும் தன் கருத்தைக் கேட்பவர் மனதில் ஆழப் பதிய வைக்கிறார்.
4. இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம். இறையன்பில் சாதி
வேற்றுமைகள், ஏழை பணக்காரர்
என்ற பாகுபாடு இல்லை. ஆகவே, எல்லா
மக்களும் இறைவன் முன் சமம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும் என்பதற்காகப் பக்திப்
பாடல்களைப் பொதுநிலையில் பாடியுள்ளார் நாயன்மார்கள். மணிவாசகரும் தன்னை ஆட்கொண்ட
இறைவன் மக்களையும் ஆட்கொள்வான் எஎனறு பாடலின்வழி நம்பிக்கையூட்டுகிறார். நாயினும்
கீழான தன்னையே ஆட்கொண்ட இறைவன், அவன்
அருளைவேண்டி நிற்கும் அடியவர்களுக்கு, மக்களுக்கு
நிச்சயம் அருள்புரிவான் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் வகையில் பாடல்களைப்
பாடியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?