நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 9 April 2020

மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை



மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை


மாணிக்கவாசகர் புதுச்சொற்களை உருவாக்கும்பொழுது எளிமையாக்கம், புதுமையாக்கம் நிலைபேறாக்கம் என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது தெரிகிறது.

 

எளிமையாக்கம்

                மொழிவளர்ச்சிக் கொள்கைகளில் எளிமையாக்கமும் ஒன்றாகும். சொற்களுக்குப் புதுப்புதுப் பொருள்கள் காலந்தோறும் அதனைக் கையாளும் கலைஞர்களுக்கு ஏற்ப உருவாகிறது. இதனால், ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமையாகி விடுகிறது. பொதுவாக, நுட்பமான கருத்துக்களை விளக்கப் புதுச்சொற்கள் உருவாகின்றன. நுட்பமும், ஆழமும் பொருந்திய நுண்ணியச் சொற்களை உருவாக்குவதில் மணிவாசககர் பெருவிருப்பு உள்ளவர் என்பதை அவர் உருவாக்கியுள்ள சொற்களிலிருந்து உணர்ந்த கொள்ளலாம்.
எ.கா
உள்ளக்கரு          -      உளக்கரு
ஒப்பற்றவன்         -      ஒப்பன்
நுகர்பொருளானவன்  -      துப்பன்
கூறுடையவன்       -      கூறன்
தேசுடையவன்       -      தேசன்
                                                                                                                                                                                உய்யக்கருவானவன் இறைவன்என்பதை விளக்கும் உள்ள.க்ருஎன்னும் சொல்லை மேலும் எளிமைப்படுத்தி உளக்கருஎன்கிறார். இதைப்போலவே, சிவபெருமாள் உமையைத் தன் உடலில் பாதியாக்கியுள்ளதால், பாதியானவன் என்பதை உணர்த்த கூறன், பாகன், பாதியன் போன்ற சொற்களை உருவாக்கியுள்ளார். சொற்கள் எளிமையாக்கம் செய்யப்பட்டாலும், முழுப்பொருளை இழக்காமல், முந்தைய பொருளைவிட மிக ஆழமான பொருளைப் பெற்றுப் புதுப்பொலிவோடு திகழ்வது தெரிகிறது.

புதுமையாக்கம்

                ‘‘மொழி வளர்ச்சிக் கொள்கைகளில் முதன்மையானது புதுமையாக்கம் ஆகும். இப்புதுமையாக்கம் கலைச்சொற்களையும், புதுத்தொடர்களையும் உருவாக்கவும், பெருக்கவும் உதவுகிறது. புதுமையாக்கத்தின் அடிப்படையில் கலைச்சொற்கள் உருவாக்கப்படும்போது மொழியில் புதுச்சொற்கள் காணப்படுதல் இயற்கையே’’ என்பார் தங்கமணியன். இவ்வகையில் திருவாசகத்தில் ஏரானமான புதுச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
எ.கா
கருத்திருத்தி  உள்ளான்
உள்ளொலி    புவன்
உலவா          உடையவன்
                                                                                               
                கருத்திருத்திஎன்னும் சொல்லானது இருவேறு பொருளைத் தரும் வகையில் அமைந்த புதுமைச் சொல்லாகும். கருவிலேயே திருந்தச் செய்துஎன்னும் பொருளிலும், ‘இறை எண்ணத்தைத் தன்னிடத்திலே பதியச் செய்துஎன்னும் பொருளிலும் இச்சொல் பயின்றுவருகிறது. புவன் என்னும் சொல் புவனம் ஆள்பவன்என்னும் பொருளிலும், ஒலி வடிவானவன்8 என்னும் பொருளிலும் பயின்று வருகிறது.
                உலவாஎன்னும் சொல் அழிவில்லாத என்னும் பொருள் தரும் புதுமையாக்கச் சொல்லாகும். இடம்நோக்கி இப்பொருளைப் பெற்ற புதுச் சொல்லாகும். உலவா இன்பச்சுடர் என்னும் சொல்லானது உலர்ந்துபோனேன் என்னும் சொல்லுக்கு எதிரானப் பொருளைத் தரும்வகையில் பயின்று வருகிறது. உலர்ந்துஎன்னும் சொல்லுக்கு எதிரான சொல்லாக உலவாஎன்னும் புதுச் சொல்லைக் கையாண்டுள்ளார்.

நிலைபேறாக்கம்

                புதுச்சொற்களை உருவாக்கியதோடு நில்லாமல், அவற்றை நிலைபேறுடையதாக்கவும் பல இடங்களில் திரும்பத் திரும்ப்ப் புதுச்சொற்களை வழக்கில் உள்ள சொற்களைப் போலவே கையாண்டுள்ளார். அவ்வகையில்,
                                உடையான்          தேசன்
                                உடையான்          ஒப்பன்
                                உள்ளான்            பாதியன்
                முதலான சொற்களின் பயன்பாட்டையும்ற் ஆற்றலையும் வெளிப்படுத்தி நிலைபேறாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாற்றுச் சொல் பெய்தல்
                இலக்கியங்களில் வழங்கிப் பின்னர்க் காலமாறுபாட்டின் காரணமாக வழக்கொழிந்துபோன சொற்களை, வழக்கிலுள்ள சொற்களுக்குப் பதிலாகக் கையாண்டு அவற்றின் நிலைபேறாக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளார். விசேடச் சொற்கள், திசைச் சொற்கள், இசைச் சொற்கள் இம்மூன்றிலும் சிலையாக்கக் கொள்கையைக் காணலாம்.
எ.கா
                                தொழும்பு - அடிமை (1-43) குமண்டை - கும்மானம் (40-1)
                                பொக்கங்கள் - பொய்கள்
1.விசேடச் சொற்கள்
                மணிவாசகர் தம் படைப்பில் சில விசேடச் சொற்களைக் கையாண்டுள்ளார். இவை வழக்கில் அருகியே காணப்படுகின்றன.
                                எத்துக்கு             பைதவி
                                எற்றுக்கு            நரிப்பாய்
                                சிறவு               மாப்பெரும்   போன்றவை.
                எதற்கு என்பதற்குப் பதிலாக எத்துக்கு’ ‘ஏற்றுக்குஎன்றும் இருசொற்களைக் கையாண்டுள்ளார்.
                மாபெரும் என்பதே வழக்கு. மாப்பெரும் என்று பகர ஒற்றை இணைத்துப் பயன்படுத்தியுள்ளார். இது பொருளின் வியாபகத் தன்மையை மேலும் விரிவாக்கப் பயன்படுகிறது.
2.திசைச் சொற்கள்
                                அதெந்துவே
                                கறங்கோல்   (ஓலைக் காற்றாடி)
                                பொந்து
                                குப்பாயம்
                முதலான திசைச் சொற்களைக் கையாண்டுள்ளதின் மேலும் மூலம் அவர்தம் பரந்த அறிவு புலனகிறது.
3.இசைச் சொற்கள்
                இசைக்குத் தேவையான கருவிகளையும் குறித்துச் செல்கிறார்.
                                ஏழில்  (நாதசுரம்)    முரசு
                                நாதப்பறை           யாழ்
                                வெண்சங்கு          மணி
                                துடி                 வீணை


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?