நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 9 April 2020

திருவாசக மொழியமைப்பில் சொற்கள்



         ஆதித்தமிழன், பறையன், முதற்சித்தன் ...    சிவபெருமானின் அடி முதல் முடி வரை உறுப்புகளை பொருத்தமான அடைச்சொற்களின் மூலம் அவர் தம் உருவ எழிலைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

சொற்கள்
                திருவாசக மொழியமைப்பில் சொற்கள், பயின்று வரும் சூழலை ஒட்டிப் பொருள் தருகின்றன. ஒருவர் பயன்படுத்தியுள்ள சொற்களைக்கொண்டே அவரது புலமை, ஆளுமை, பரந்த அறிவு, புதுமையார்வம், உலகத்தாரோடு கொண்டுள்ள தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்ளவியலும். திருவாசகத்தில் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொருவரையும் குறிக்கும் நிலையிலும் பயன்படுத்தும் பல உருபன்களாலான சொற்களைக் காண்போம்.


சிவனைக் குறிக்கும் பெயர்கள்

                இறைவனுடைய தன்மை, உருவ அழகு, பேராற்றல் திறம் போன்றவற்றைக் குறிக்குமிடத்து அதற்குத் தகுந்தவகையில் பெயர்களை அமைக்கிறார். ஒளிவடிவானவன் என்பதைக் கூறும் நிலையில்,
                                பேரொளி     -      மாசற்ற சோதி
                                ஒளியான்     -      உள்ளொளி
                                சோதியன்     -      சோதி
                முதலான பெயர்களையும், உருவ அழகை வர்ணிக்கும் நிலையில்,
                                நாற்றத்தின் நேரியன் , அந்தணன், அழகன் , பித்தன்,நீற்றன், சொல்லற்கரியான்,
 ஏனத்தொல்லெயிறு அணிந்தோன், மறையோன், அங்கணன்  முதலான பெயர்களையும்
கருணைத் திறத்தைக் கூறும்நிலையில்,
                                அன்பருக்கன்பன், குருபரன், துணைவன்,குருமனிதன்,தோழன், இறைவன்,
                                நாதன், அப்பன், பராபரன்
முதலான பெயர்களையும் கையாள்கிறார்.

உருவ அழகைக் குறிக்கும் சொற்கள்




கண்டம் பற்றியன
நஞ்சு
பற்றியன
முடி பற்றியன      
சடை
பற்றியன
கண்
பற்றியன   
மேனி
பற்றியன
கண்டம்கரியான்
ஆலம்


சுடர்முடி
செஞ்சடை
கருணைக்கண்
தழல் மேனி
கறைமிடற்றன்
ஆலாலம்
பூமுடி
திருச்சடை
அங்கண்
தூயமேனி
மழைதருகண்டன்
விடம்
நீள்முடி
தாழ்ச்சடை
கண்சுமந்தநெற்றி
தூவணமேனி

                               
உருவம் பற்றியன
நிறம் பற்றியன
வாய் பற்றியன
அழலுரு
செம்பிரான்
செவ்வாய்
கனகக்குன்று 
நிறங்கள் ஓர் ஐந்துடையான்
திருவாய்
                               
தலை பற்றியன
புருவம் பற்றியன
நகை பற்றியன
                                      
தோள் பற்றியன
திருவடி பற்றியன
மதியின் ஒற்றைக் கலைத்தலை
திருப்புருவம்
சிறுநகை
திரள்தோள்
பொன்னடி
                                                    

                இவ்வாறு சிவபெருமானின் ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் பொருத்தமான அடைச் சொற்களின் மூலம் சொல்லோவியமாகத் தீட்டுகிறார் மணிவாசகர்.

உமை பற்றிய சொற்கள்

பார்வதி தேவி வழிபாட்டு விரதங்கள் ...                உமையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, ‘பெண்களுக்கே உரிய அழகிய தன்மை அனைத்தையும் பெற்று ஈசனின் இடபாகத்தே அமர்ந்திருப்பவள்என்றும் பொருள்தோன்றும்படி சொற்களை அமைத்துள்ளார்.
                               

குவளைக்கண்ணி, கிளிவந்த மென்மொழியாள், கிஞ்சுகவாயன், வரையாடுமங்கை, மருவார்குழலி, மைகலந்தகண்ணி, மெல்லடிஆர்க்கும் மங்கை, பஞ்சேரடியாள், பேரமைத்தோளி, மருங்குல் மங்கை

திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் ...  
என்ற சொற்களின் மூலம் உமையின் அழகை வெளிப்படுத்துவதைப் போல,
                                கோதாட்டி, ஆளுடையாள், நல்லாள், பிராட்டி
போன்ற சொற்களின் மூலம் உமையின் குணஇயல்பைக் காட்டுகிறார்.
                ‘‘மலைமகளையொரு பாகம் வைத்தலுமே’’ (12-7) என்ற சொற்களின் மூலம் அர்த்தநாரீசுவரர் வடிவத்தைக் காட்டுகிறார்.
                உமையின் அங்கங்களை வர்ணிக்கும் நிலையில் மென்மைத் தன்மையை வெளிப்படுத்தும் சொற்களையும், அடைகளையும் பயன்படுத்தியுள்ள விதம் நோக்குதற்குரியது.    

அடியவர் பற்றிய சொற்கள்

                                ஓயாதே உள்குவார், காதலர்,  சீரடியார், பணிவார், தொகுதகையர்
                அடியவர்களைப் பற்றிய குறிப்பிடுமிடத்து அவர்தம் அளப்பிலா இறைப்பற்று வெளிப்படுமாறு சொற்களைப் பெய்துள்ளார்.

தன்னைப் பற்றிய சொற்கள்

 
நாயினேன்
                                வம்பனேன்
                                கொடியன்
                                சீறியேன்
                                கள்ளேன்
                                கடையேன்
                                பாலியேன்
                                பிச்சன்
                                புண்மையேன்
                                விரிதலையேன்
                                வன்னெஞ்சக் கள்வன்
                                வெம்புகின்றேன்
                                வெறுநீதமியேன்
                                உன்பித்தன்
                                எஞ்ஞானம் இல்லாததேன்

                திருவாசகத்தின் சிறப்பியல்புகள் பலவற்றுள் அதன்கண் காணப்படும் தாழ்வெனும் தன்மையும் ஒன்றாகும். இத்தன்மை, அறிவால் உயர்ந்து தம் குற்றங்குறைகளைத் தாமே உணர்ந்தவர்க்கே அமையும். மணிவாசகர் இறைவனின் பெருமை உணர்ந்த காரணத்தால் தமது சிறுமை தெரிந்தவர். எனவே, தனது தாழ்ந்த தன்மையை இழித்தும், பழித்தும் தன்னை மிகக் கீழானவராக இவ்வாறெல்லாம் குறிப்பிடுகிறார்.
                இவ்வாறு, ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பிடும்பொழுது அவர்தம் பேராண்மைம மென்மைத் தன்மை, உயர்ந்தகுணம், சிறுமை போன்றவை வெளிப்படுமாறு சொற்ககளை அமைத்துள்ளார்.

அடைச்சொற்கள் பயன்பாடு

                பெயர்ச் சொற்களுக்குத் தக்க அடைகளைக் கையாண்டு அதன் சிறப்பினை, இயல்பினை உணர்த்துவது ஓர் உத்தியாகும். இறைவனை அல்லது இறைவனின் செயலை விளக்கும் வகையில் பெயரடையாகவோ, தொடராகவோ அடைகள் திருவாசகத்தில் பயின்று வருகின்றன.
                                வானோர் பிரான்
                                செம்பிரான்
                                ஆனந்தக்கூத்தன்
                                தேவர் பிரான்
                                மாணிக்கக்கூத்தன்
                பிரான் என்பதற்கும் கூத்தன் என்பதற்கும் செம்மை, ஆனந்தம், தேவர் முதலான பண்பு மற்றும் பெயர்ச்சொற்களை அடையாகப் பயன்படுத்தியுள்ளார். இதனைப் போலவே கண்ணிற்கு அடையாக வேல், மை, கருமை, செம், கருணை முதலான அடைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

ஒருபொருட் பன்மொழி

                 ஒரு பொருளைக் குறிக்க அதனுடைய பலபெயர்களையும், அதன் சிறப்பியல்புகளையும் குறிக்கும் சொற்களைப் பெய்கிறார். ஒரேவகையான சொற்கள் திரும்பத் திரும்ப வருமாயின் கேட்பவர்க்கு சலிப்பு ஏற்படும். ஏனவே கேட்குந்தோறும் புதுமை, ஆர்வமும், இன்பமும், தோன்ற ஒரு பொருட் பன்மொழிககளைக்க கையாளுகின்றார்.
                அடியைக் குறிக்க கால், புண்டரிகம், பாதம், அடி, தாள், பதம், போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். இதைப்போலவே,
                               

கூந்தல்      
குதிரை
அன்பு
விடம்
யானை
சுரிகுழல்
குதிரைப்பரி
நெகும்அன்பு
அலைநீர் விடம்      
அடற்கரி
சுருள்புரிகூழையர்
வான்புரவி
பின்றாபாசம்
வார்ந்த நஞ்சு
மத்தக்களிறு
செஞ்சடை
ஆனந்தமாக்கடவி
நேசம்
காய்சின ஆலம்
மா உரியானே


பரிமாமிசை

      
நல்வேழம்




அத்திக்கு அருளி




ஆணை வெம்போர்





இருகையானை
                                                                      

                இவ்வாறு ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்களை இலக்கிய வழக்கிலிருந்தும் பேச்சு வழக்கிலிருந்தும், சிறப்பு வழக்குப் பெயரிலிருந்தும் எடுத்தாளுகின்றார்.

பலபொருள் ஒருசொல்

                ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களைச் கையாண்டுள்ளதைப் போலவே ஒரு சொல்லின் மூலம் பல பொருள்களைப் பெற வைக்கிறார்.
1.             அரவம்  - பாம்பு
அரவம்  - ஒலி
‘‘அரவத்தால்’’   (7-13)
‘‘அரவுவார்கழல்’’            (5-17)
2.             குப்பாயம்     - ஆடைவகை
குப்பாயம்     - உடல்
‘‘தோல் போர்த்தே குப்பாயம்’’ (25-2)
‘‘பள்ளிக் குப்பாயம்’’     (17-7)
                இவ்வாறு வெவ்வேறிடங்களில் ஒரே சொல்லைப் பயன்படுத்தி அதன் இருவேறு பொருண்மையைப் புலப்டுத்துகின்றார். சில சமயங்களில் ஒரே சொல்லை இருபொருள் தருமாறும் அமைத்துள்ளார்.
                                கல்லாமனம்  (5-56)
                                கல்லா -மனம்       -      சுற்றறியாமனம்
                                கல் - ஆம்- மனம் - கல்போன்ற மனம்

இலக்கிய வழக்குச் சொற்கள்

                கற்றார் வியந்து போற்றும் வண்ணம், இலக்கிய வழக்குச் சொற்களை மிகுதியாக இடத்திற்கேற்ப பயன்படுத்தியுள்ளார்.
எ.கா
                                பொய்கை
மறை
அழி
கங்குல்
விள்ளல்
மடந்தை
கிழவோன்
நன்னீர்
ஓதல்
நாற்றம்
விசும்பு
தாள்
போது
பரி
வதனம்
எயிறு
குழாம்
கன்னல்
கிஞ்சுகம்
குழகள்
பூவனம்
இன்றும் இவை வழக்கிலுள்ளன.

பேச்சு வழக்குச் சொற்கள்

                கல்லாதவரும் விரும்பிப் பயிலும் வண்ணம் பேச்சு வழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
                               
சீச்சி
ஓலமிடினும்
என்னோடீ
தாதை
ஏசு
படிறீ
பொல்லாதோ
அன்னே

பெம்மான்
அச்சன்
அமளி
காணேடீ
தாதாய்
ஆக்கு
பேயன்
பேதாய்
மொத்துண்டு
பிச்சன்
கேடு
அப்பன்
.
பேச்சுவழக்குச் சொற்கள் பெரும்பாலும் பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களில் இயல்பாகவும், ஓசைநயம் மிகுவிக்கவும் பயின்று வருகின்றன.


வடமொழிச் சொற்கள்

                                வடமொழிச் சொற்களைக் கையாள நேரும்போது அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் இலக்கண மரபிற்கேற்ப மாற்றங்கள் செய்து பின்னரே அவற்றைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு மாற்றங்கள் செய்து பின்னரே அவற்றைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு மாற்றங்கள் செய்யும்பொழுது சில வரையறைகளைக் கையாண்டுள்ளார்.
வடசொற்களைத் தமிழாக்கம் செய்யும்பொழுது,
                                ஆகம        -      ஆகமம்
                                ஞான         -      ஞானம்
                                ஜீராட        -      விராடகம்
                                தீப           -      தீபம்
                                சாஸ்திர      -      சாத்திரம்
இவ்வாறு அகரத்தில் முடியும் வடசொற்களுக்கு னகர ஒற்று சேர்த்துக் தமிழாக்க்ம் செய்துள்ளார்.
எ.கா
                                விமல -      விமலன்
                                பிரம  -      பிரமன்
                                நிமல  -      நிமலன்
இகர ஈறு வருமாயின் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்.
எ.கா
                                ஹரி         -      அரி
                                முக்தி        -      முத்தி
                                ஜாதி         -      சாதி
                                மண்டோதரி   -      வண்டோதரி 
                மேற்கண்டவற்றிலிருந்து உற, , ஜ போன்றவற்றிற்கு முறையே க, , ச எழுத்துக்களை மாற்றாகப் பயன்படுத்தியுள்ளார்.
எ.கா
                                ஹேந்திர    -      மகேந்திர
                                சாஸ்திர      -      சாத்திர
                                ஜாதி         -      சாதி  
மாற்றங்கள் செய்யாமல் சில சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்.
எ.கா
                                நிரந்தர       -      சிவானுபவ
                                துரியம்              -      காருணிய
                                தர்ப்பணம்    -      இந்திரஞாலம்
சில வடமொழிச் சொற்களில், பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
                                கூடவா முகாக்கிலி   -      சுடுநீ
                இவ்வாறு சில வரையறைகள் கொண்டு வடமொழிக்குரிய சிறப்பு ஒலிகளை நீக்கித் தமிழ் மொழிக்கேற்ப தன்னினமாக்கிப் பயன்படுத்தியுள்ளார்.

உறவுமுறை பெயர்கள்

                மணிவாசகர் இறைவனையும், உமையையும் பலவிதமான உறவுமுறைகளில் அழைத்து உள்ளம் உருகப் பாடியுள்ளார். இம்முறையானது, இறைவனிடம் மணிவாசகரின் நெருங்கிய தன்மையைப் புலப்படுத்துகிறது. சொல்லியல் மற்றும் பொருளியல் அடிப்படையில் உறவுமுறை பெயர்களை அணுகலாம்.
                சொல்லியல் நிலையில், மணிவாசகர் இறைவனைப் பேச்சு வழக்கு மொழியிலும், இலக்கிய மொழியிலும் அழைக்கிறார்.
                                இலக்கிய வழக்கு                         பேச்சு வழக்கு
                                      அன்னை                                 அச்சன்
                                        எந்தை                                 அத்தன்
                                       தகப்பன்                                  அப்பா
                                        அரசன்                                 தலைவா
                                     அண்ணல்                                அண்ணா
                                      இறைவன்                                 செல்லம்            போன்றவை.
                இலக்கிய வழக்கில் இறைவனைத் தந்தை, தாய், அரசன், இறைவன், குரு என்ற நிலையிலும், பேச்சு வழக்கில் அண்ணன், தலைவன், குழந்தை, அப்பன், போன்ற நிலைகளிலும் வைத்துப் பாடியுள்ளார்.
                பொருளடிப்படையில் அன்னை, தந்தை, குரு, தெய்வம், என்ற நான்கு நிலையிலும் அதிகாமாகவும், அரசன், காதலன், எஜமான் போன்ற நிலைகளில் அதைவிடக் குறைவாகவும் இறைவனைக் காண்கிறார்.
எ.கா
                புகு, பற, ஊண் முதலானவை

வினாச் சொற்கள்

                எது, ஏன், என்னே, என்ன, ஆர், ஏடி, ஏன்னேடீ முதலான வினாச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். வினைச் சொற்களோடு விகுதிகளை இணைத்து வினாச்சொற்கள் ஆக்கியுள்ள முறையையும் காணமுடிகிறது.
எ.கா
                                அறிவார்?                            கொட்டாமோ?
                                ஆடாமோ?                         கொய்யாமோ?
                                காண்பரோ?                        ஏன்செய்கேன்?
அடுக்குச் சொற்கள் - இரட்டைக்கிளவி
                ‘‘ஓசைநயம், அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி போன்றவைகள் பூங்காவிலுள்ள கவின்மலர்கள் போன்றவை. தாமாக மலரவேண்டும்ம் மணமுள்ளவைகளைப் பதமாகப் பறித்துப் பக்குவமாக மாலை கொடுக்கவேண்டும்’’ என்பார் தருமன்நாகை       (1971-91)
                மணிவாசகர் இசைநயம் மிகுவித்து, கேட்போரிடம் விருப்பத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவும், கருத்தினை அழுத்தமாகக் கூறவும் தேவையான இடங்களில் இவற்றைப் பயன்படுத்துகிறார்.  
ஆடஆட             ஆர்மின்ஆர்மின்
ஊடிஊடி             மாண்டுமாண்டு
நாடிநாடி             பாய்ந்துபாய்ந்து
நாதநாத             ஆர்த்துஆர்த்து
                                                                                                                                முதலான அடுக்குச் சொற்களையும்,
விதுவிதுப்பு
குதுகுதுப்பு
விதிர்விதிர்த்து
                                                                                               
முதலான இரட்டைக்கிளவிகளையும் பயன்படுத்தியுள்ளார்.

துணைவினை அமைப்புகள்

பாட வேண்டும்             -
எதிர்பார்ப்புத் துணைவினை
ஆட்பட்டேன்                -
முற்று காட்டும் துணைவினை
மாறுபட்டு                  -
ஆற்றவின்மை காட்டும் துணைவினை
விற்றுக்கொள்              -
தன்னிலை காட்டும் துணைவினை
உய்ந்தொழிந்தோம்          -
செயல் நிகழாமை காட்டும் துணைவினை
வேண்டும் உன்கழற்கு அன்பு -
எதிர்பார்ப்புத் துணைவினை

துணைச்சொற்கள்

                துணைவினைகளைப் பயன்படுத்தியுள்ளதைப் போலவே, அழுத்த உணர்வினைக் குறிக்க துணைச்சொற்களைக் கையாண்டுள்ளளர்.
உரலதாக            -      அதுஆக
மெழுழுது            -      அது
அறிவதை           -      அதை
கோனவன்           -      அவன்
இணைப்போதவை    -      அவை
                                                                                                                                                                                அது, ஆக, அதை, அவை, அவன் முதலானச் சொற்களைத் துணைச் சொற்களாகவும் கையாண்டு கருத்துக்கு ஆற்றலும் வலிவும் அளித்துள்ளார்.

வகைச் சொற்கள்

குணமிலி     உரிப்பிச்சன்
பேதாய்              நஞ்சூண்பிச்சன்
பிச்சன்       பித்தன்
                                                                                                                இவ்வாறெல்லாம் இறைவனை வகைச்சொற்களால் அழைக்கிறார். நாயினும் கீழான தன்னையும் வந்து ஆட்கொண்ட வள்ளல்’ ‘ன்று புகழாரம் சூட்டிய மணிவாசகர் இவ்வாறு கீழான சொற்களைப் பயன்படுத்தி இறைவனை வசைபாடுவது வியப்பாகத் தோன்றுகிறது. ஆனால் இச்சொற்களின் மூலம் தன்னுடைய கீழ்நிலையை, இழிநிலையை உணர்த்தி இறைவனின் பெருங்கருணையைப் புலப்படுத்துகிறார்.
                கீழான தன்னையும் ஒருபொருட்டாக எண்ணி, ஆட்கொண்ட இறைவன் தகுதியற்ற தன்னை ஆட்கொண்டதால்,  குணமிலி8 தேய்மதியன்பித்தன்போன்றவன் என்கிறார். இச்சொற்ககளின் மூலம் இறைவனைத் தாழ்த்துவது போலத் தாழ்த்தி, குறிப்பாக இறைவனின் கருணையையும், தாயான தன்மையையும் புலப்படுத்துகிறார். மேலும், கீழான தன்னையும் ஆட்கொண்ட இறைவன் பிறரையும் விரும்பி ஆட்கொள்வான் என்று கேட்பவர்க்கு இறைவன்பால் பற்றினை உண்டாக்குகிறார்.

எதிர்ச்சொற்கள்

                ஓவ்வொரு சொல்லுக்கு ஓர் எதிர்ச்சொல் உண்டு. அத்தகையச் சொற்களைப் பயன்படுத்தும்பொழுது, பொருளின் இருவேறு நிலைகள் புலப்படும். இவ்வாறு சொல், எதிர்சொல் இரண்டையும் தொடர்ச்சியாக அடுத்தடுத்துப் பயன்படுத்தும்பொழுது பொருளின் முழு வியாபகத் தன்மையும் புலப்படுவதால் ஒப்பற்ற உயர்ந்த கருத்துக்களை விளக்க இலக்கியங்களில் இவை பயன்படுத்ததப படுகின்றன.
                               
எதிர்மறைகள்
உண்டு - இல்லை
உள்ளன – இல்லன
உள் - புறம் 
ஆக்கு - அழி
எதிர்இணைகள்
ஆதி - அந்தம்
இரா – பகல்
ஏகன் – அநேகன்
மண் – விண்
மரணம் -பிறப்பு
                மணிவாசகர் இறைவன் ஒப்பற்றவன்என்ற உயரிய கருத்தை விளக்க இவ்வாறு எதிர்ச்சொற்களைக் கையாளுகின்றார்.

புதுச்சொற்கள்

                இலக்கிய வழக்கு மற்றும் பேச்சு வழக்கிலுள்ள சொற்களைக் கையாண்டதோடு, பலபுதிய சொற்களை உருவாக்கி, அவற்றைத் திருவாசகத்தில் பல இடங்களில் கையாண்டு தன் கருத்திற்கு வலிவு சேர்த்துள்ளார்.

இவ்வாறு புதுச்சொற்களை உருவாக்கும்பொழுது எளிமையாக்கம், புதுமையாக்கம் நிலைபேறாக்கம் என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது தெரிகிறது.


                எ.கா
உளக்கரு            ஒப்பில ஒருத்தன்
கூறன்               பாதியன்
தேசன்               பாகன்        போன்றவை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?