மனப்பக்குவம்
கடல் முத்து வேண்டுமானால் கடல் அலையை
எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதைப்போல வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டுமென்றால் சோதனைகளைத்
தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை.
ஒரு ஜென் மதப் பெண் துறவி ஒரு கிராமத்திற்கு இரவு நேரம் வந்தார். அவர் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால் அவ்வூர் மக்களிடம் அன்று இரவு மட்டும் தங்குவதற்கு இடம் கேட்டார். ஆனால் அந்த ஊர் மக்களுக்கு ஜென் துறவிகளைப் பிடிக்காது. எனவே அவர் பெண் என்றும் பாராமல், அவருக்கு இடம் கொடுக்க மறுத்து விட்டனர். அந்தப் பெண் துறவி மனம் கலங்காமல், அந்த ஊரிலிருந்து ஒரு மரத்தடியில் படுத்து உறங்கத் தொடங்கி விட்டார். கடுமையான பனி. குளிர்காற்று. காட்டு விலங்குகளின் சத்தம். பசி இவற்றோடு நடந்த களைப்பு வேறு. எனினும் மனந் தளராமல் எப்போதும் போல் இருந்தார்.
சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட்டார்.
நடு இரவில் திடீரென அவர் உறக்கம் கலைந்தது. எங்கும் அமைதி. அந்த இரவில்
வானில் நிலவு ஒளிவீசிக் கொண்டிருந்தது. கூடவே நட்சத்திரங்கள் கண்
சிமிட்டிக் கொண்டிருந்தன. நிலவின் ஒளியானது மரத்தின் இலைகளின் இடையிடையே
தோன்றி மாயா சாலம் செய்து கொண்டிருந்தது. வானம் நிலவின் ஒளியாலும், நட்சத்திரங்களின்
ஒளியாலும் கருநீலப் புடவையில் ஒளிப்புள்ளிகளைப் பெற்றது போல் ரம்மியமாக
இருந்தது. அந்த ஜென் துறவி இலைகளின் அசைவையும், காற்றின் ஓசையையும், சிறுசிறு பூச்சிகளின்
ரீங்கார ஒலியையும் மெய் மறந்து கேட்டு இரசிக்கத்
தொடங்கினார். இயற்கையின் அழகு எங்கும் நிறைந்து இருப்பதையும், அந்த ஊரின் வீடுகளின்
மேற்கூரைகளெங்கும் நிலவின் ஒளி பட்டு தனி அழகை கொடுத்துக்
கொண்டிருந்ததையும் பார்த்தார்.
அந்த இரவு கழிந்ததே தெரியவில்லை. காலையில்
அக் கிராம மக்களைச் சந்தித்து, ‘தனக்கு அவர்கள் வீடு கொடுக்காததற்காக நன்றி
கூறினார். வீடு கொடுத்திருந்தால் இரவு நேர இயற்கை வானக்
காட்சியையும், காற்றின் இனிய ஓசையையும் தன்னால்
இரசித்திருக்க முடியாது. எனவே வீடு கொடுக்க மறுத்து இயற்கையை இரசிக்க
வைத்தமைக்காக நன்றி கூறி விடை பெற்றார்.
எந்தச் சூழலிலும் மனந் தளராமல் அதை எதிர்கொள்ளும் மனநிலையைப் பெற்றுவிட்டால், அதற்குப் பின் நடப்பவையெல்லாம் இனிமையாகவே இருக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
இரவில் பாய்விரிப்பதற்குப் பதிலியாக
ஊக்கத்தை விரித்து உறங்க வேண்டும்!
முளைவிட்ட உழைப்பை அரைத்து
அதிகாலையில் குவளை நிரப்பிக் குடி!
பத்துவிரல் ரேகைகளில் மின்சாரம் பாயும்!
விழுந்தபோது குற்றவாளி என்று நீ
விசாரிக்கப்பட மாட்டாய்!
எழுந்து நிற்கவில்லை என்றால் நீ
இருளின் சிறையில் தண்டிக்கப்படுவாய்!
முயற்சிப் பெட்டியின் உள்ளிருந்து
ஒரு தீக்குச்சி எடுத்துப் பற்றவை!
எரிந்துபோகும் சோம்பல் சருகுகள்!
துருப்பிடித்தும் பிசிர் ஏறியும்
பரண்மேல் கிடக்கின்றன உனது இலக்குகள்!
தரிசாய்க் காய்கிறது உனது நிலம்!
உழுவதால் விளையும்! விதி என்று
அழுவதால் என்ன ஆகப் போகிறது?
நெஞ்சில் எரியும் நெருப்புக் குண்டத்தில்
புடமிட்டு உன்னைப் புதிதுசெய்!
கூன்விழுந்துள்ளது முதுகெலும்பு!
குகையிலிருந்து விலங்கு கழற்றி வெளியில் வா!
தட்டுகிற சிரமம்கூட உனக்குத் தராமல்
திறந்து கிடக்கின்றன திசைக் கதவுகள்!
ஒற்றைச் சாலைகளும் நெடுஞ்சாலைகளும்
உனது வரவு நோக்கி நீள்கின்றன!
பதிவாகட்டும்! உனது பாதச் சுவடுகள்! என்ற பூ.அ. இரவீந்திரன் கவிதை ஒரு நம்பிக்கை விதை.
ஊக்கத்தை விரித்து உறங்க வேண்டும்!
முளைவிட்ட உழைப்பை அரைத்து
அதிகாலையில் குவளை நிரப்பிக் குடி!
பத்துவிரல் ரேகைகளில் மின்சாரம் பாயும்!
விசாரிக்கப்பட மாட்டாய்!
எழுந்து நிற்கவில்லை என்றால் நீ
இருளின் சிறையில் தண்டிக்கப்படுவாய்!
முயற்சிப் பெட்டியின் உள்ளிருந்து
ஒரு தீக்குச்சி எடுத்துப் பற்றவை!
எரிந்துபோகும் சோம்பல் சருகுகள்!
துருப்பிடித்தும் பிசிர் ஏறியும்
பரண்மேல் கிடக்கின்றன உனது இலக்குகள்!
தரிசாய்க் காய்கிறது உனது நிலம்!
உழுவதால் விளையும்! விதி என்று
அழுவதால் என்ன ஆகப் போகிறது?
நெஞ்சில் எரியும் நெருப்புக் குண்டத்தில்
புடமிட்டு உன்னைப் புதிதுசெய்!
கூன்விழுந்துள்ளது முதுகெலும்பு!
குகையிலிருந்து விலங்கு கழற்றி வெளியில் வா!
தட்டுகிற சிரமம்கூட உனக்குத் தராமல்
திறந்து கிடக்கின்றன திசைக் கதவுகள்!
ஒற்றைச் சாலைகளும் நெடுஞ்சாலைகளும்
உனது வரவு நோக்கி நீள்கின்றன!
பதிவாகட்டும்! உனது பாதச் சுவடுகள்! என்ற பூ.அ. இரவீந்திரன் கவிதை ஒரு நம்பிக்கை விதை.
""""தைரியமே பிறவிக் குணமாய் அமைந்துள்ள ஒருவன் எவ்வளவு கேவலமான நிலைமையை அடைந்தாலும், அந்தத் தைரிய குணத்தை மட்டும் இழக்க மாட்டான். நெருப்பைத் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் ஜூவாலை ஒரு காலும் கீழ் நோக்கி எரிவதில்லை"" என்கிறார் பர்த்ருஹரி. வீரம் என்பது உடல் வலிமையைப் பொறுத்ததன்று. உள்ளத்தின் உறுதியையே பொறுத்ததாகும்.
இயற்கை மனிதனுக்கு இரண்டு கைகளை படைத்த நோக்கம் அவற்றை நம்பி உழைக்க வேண்டும் என்றநம்பி'கை அடிப்படையில் தாம்.நம்பிக்கை என்றதோர் உந்து சக்தி உள்ளவரை நாம் வெல்வதற்கோர் உலகமுண்டு
ReplyDelete