நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 20 April 2015

வீரா்களின் நிலை

 வீரா்களின் நிலை

 

இனக்குழு சமுதாயம்,குறுநில அரசாகவும்,பேரரசாகவும் மாறுவதற்காகப் பல போர்கள் நடத்தப்பட்டன. நில எல்லையை மையமிட்டே இவர்களுடைய போர்கள் நிகழ்த்தப்பட்டன. தமக்கு இணங்காத அடிபணியாத குறுநில மன்னர்களையும், அவர்களை ஆதரிக்கும் மக்கள் வாழும் நாட்டையும் அழித்து இல்லாமல் ஆக்குவதற்காக அவர்கள் ஊர்களை எரியூட்டுதல்,வளங்களைச் சூறையாடுதல்,மகளிரை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்துள்ளனர். தம்மை எதிர்ப்போரின் கதி இதுவே என்பதை மற்ற மன்னர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர் என்பது வெளிப்படை.

இவ்வாறு ஊர்களை அழித்தொழிப்பதற்காகவம்,போரிடுவதற்காகவும் படைகளை வைத்திருந்ததோடு,துணைப்படைகளையும் கூலிப்படைகளையும் வைத்திருந்துள்ளனர். சீறூர் தலைவர்கள் கூலிப்படைகளாக இயங்கியுள்ளனர். இவர்களில் கூலிப்படையினர் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் போர் முடிந்து கூலி பெற்று திரும்பி விடுவர். யாருக்காக, யாரை எதிர்த்துப் போரிடுகிறோம் என்பதெல்லாம் இவர்களுக்குத் தேவையற்றது. இப்படிப்பட்ட கூலிப்படை வீரனின் நிலை குறித்து ஒரு பாடல் கூறுகிறது. (317)
வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. ..
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே. (வேம்ப்ற்றூர்க் குமரனார்)

போரில் வெற்றி பெற்றுத் திரும்பிய இவ்வீரன் பெற்ற வெற்றிக்காக கூலியைப் பெற்றுத் திரும்பியுள்ளான். ( கொள்ளையடித்த பொருட்களைப் பங்கிட்டுக் கிடைத்த பொருட்கள்).கொழுத்த உணவினை உண்டு கள்ளுண்டு வந்திருக்கும் இவன் பெற்ற பொருட்களைச் சுற்றத்தாருக்கு வழங்கிவிடுகிறான்.  கள்ளுண்டதினால் மயங்கிய நிலையில் இருக்கும் இவனுக்கு படுத்துறங்க தோலோ,பாயோ கொடுங்கள் எனச் சுற்றத்தில் ஒருவன் கூறுகிறான். போரற்றகாலங்களில் இவன் நிலை என்ன என்பதை அடுத்து வரும் பாடல்கள் (316) சுட்டுகின்றன. 

போரற்ற காலங்களில் வறுமையில் வாடிக் காண்டிருக்கும் இவனுடைய வீட்ட்டிற்கு விருந்தினன் ஒருவன் வருகிறான். அவனுக்கு விருந்திடுவதற்காக இவ்வீரன் தன் வாளை அடகு வைத்து அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டு உணவிடுகிறான். பின் போருக்குச் சென்று பெற்று வந்த பொருட்களைக் கொண்டு அவ் வாளை மீட்டுக் கொள்கிறான். மற்றொரு முறை வாள் அடகில் இருந்த பொழுது, வந்த விருந்தினர்களை உபசரிப்பதற்காக தன் சீறியாழை பிணயமாக வைத்துப் பொருள் பெற்று விருந்தினரை உபசரிக்கிறான்.  மீண்டும் ஒரு போர் நடக்குமாயின் அதையும் மீட்டு வருவான் என்கிறது இப்பாடல். போரற்ற காலங்களில் சீறியாழைக் கொண்டு பிழைப்பு நடத்தியுள்ளனர். வறுமையுற்ற காலங்களில் இரண்டையும் அடகு வைத்து பிழைப்பு நடத்தியுள்ளனர்.. விளிம்பு சிலையில் வாழ்ந்த கூலிப்படையினர் நிலை இதுதான் என்பதை இப்பாடல் சுட்டுகிறது.
இழிசினன் (புறநானூறு, 82,287,289), இழிபிறப்பாளன், புலையன் (புறம்,360), புலைத்தி (புறம், 259,311)     முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. துடியெனும் இசைக்கருவியை இசைக்கிறவனைப் புறநானூறு (170) சித்திரிக்கின்றது.

துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளு மிழிசின(புறநானூறு 287.1-2)
துடிப்பறை கொட்டுபவனையும்   பறையை   முழக்கும்  குறுந்தடியைக் கைக்கொள்பவனையும்  இசைக் கலைஞர்கள் என்பதே பொருந்தும். துடியர் போல் பறையர், பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர் - புலையன் என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் கீழ்மகன்” (கீழ்ச்சாதியான்) என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதே சொல்லுக்குப் புரோகிதன்” என்று வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது..

உலகில் முதலில் இறப்புச் சடங்கு தான் தோன்றியிருக்கும். இறப்புச் சடங்கை நடத்திவைக்கும் மரியாதைக்குரிய மதகுருவாகப் புலையர்” இருந்தனர். குடிமக்களுக்கு மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.
Image result for பதுக்கைImage result for பதுக்கைImage result for நடுகல்
சுடுகாட்டில், இறந்தமன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு, புலையன் சோறும்,கள்ளும் படைக்க, இறந்தவன் அதை வாங்கி உண்பான் என்று நம்பப் பட்டது. அதன்பின் உடலுக்கு எரியூட்டப்படும். போர்கள் நிரம்பிய சங்க காலத்தில் வீரசொர்க்கம்,விழுப்புண் போன்ற கருத்தாக்கங்கள் நிலவிய கால கட்டத்தில் இறந்த வீரர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கும் இறப்புச் சடங்கை செய்துள்ள இவர்கள் உயர்வான நிலையில் இருந்திருக்க வேண்டும். கண்ணகிக்கு (ஒரு பெண்ணுக்கு) நடுகல் நடப்பட்டபோது, மிக உயர்வாக மேற்கொள்ளப்பட்ட சடங்குகளைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. 
இறுதிச் சடங்கு பற்றிக்  குறிப்பிடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி
புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய்ப் புக்க
இப்பாடலை (எண்: 360) 

ஆனால் மற்றொரு பாடல். இதில் இறுதிக்கடன் தீர்க்கும் தகுதி புதல்வனுக்கு மட்டுமே உண்டு என்று கூறுகிறது.இப்பாடலில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வாறு கூறுகிறான்:இதோ அம்பு செலுத்த ஆயத்தமாகிவிட்டேன். அதற்குமுன் பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும், இறந்தோர் கடன்முடிக்கப் பிள்ளை பெறாதவர்களும் விலகியோடிப் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்!” (புறம்: 9).

ஆவும், ஆனியல் பார்ப்பன மாக்களும்.
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வரைப் பெறாதீரும்
 நும் அரண் சேர்மின்”.

பல யாகசாலைகள் நிறுவி வேள்விகள் நடத்த உதவிய மன்னன் ஆரிய மயமாகி இவ்வாறு கூறுகிறான். இங்கு இறுதிச் சடங்கில் புலையனின் முக்கிய இடம் மறுக்கப்படுகிறது. புலையனின் இடத்தில் புதல்வனை வைக்கிறது. மையத்திலிருந்த வீரா்களும்,புலையனும் விளிம்பிற்குத் தள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?