நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 20 April 2015

போரில் தோற்றாலும் பகை வென்றாலும் பகை


 Image result for சங்ககால ஆயுதங்கள்





போரில் தோற்றாலும் பகை  வென்றாலும்  பகை


Image result for அமைதியான உலகம் 
பக்குவப்பட்ட மனதிலிருந்து நல்ல எண்ணங்களே வெளிப்படும்; இது நலம் தரக்கூடிய செயல்களாக மாற்றமடையும். மனதைப் பக்குவப்படுத்தலே புலவர்கள் இவ்வுலகிற்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும். அரசுகளுக்கிடையே யார் பெரியவர், யார் வல்லவர் என்ற போட்டி மனப்பான்மையே போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. இதனால்தான், உள்நாட்டுப் பிணக்குகளாலும், வெளிநாட்டு நெருக்கடிகளாலும் அரசர்களுக்கிடையே போர் தோன்றிக்கொண்டே இருக்கிறது. போர் சிறியதோ, பெரியதோ, போரில் தோற்றாலும், வென்றாலும், பகை மட்டும் என்றும் மறைவதில்லை. இதனால் நாடுகளிடையே அமைதி என்பதும் என்றும் இருப்பதே இல்லை. நாடுகளிடையே அமைதி என்பது மிக அரிதாகவே உள்ளது. மிகமிக அரிதாக எப்போதாவது அமைதி தோன்றுமானால், பின்னர் ஏதாவாதொரு பூசல் தோன்றி அமைதியைக் கெடுத்து மீண்டும் போரை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு அரசும் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ளவே விரும்புகிறது. தன் நாடு பெருநாடாக வேண்டும், பேரரசாக வேண்டும் என்பது ஒவ்வொரு அரசின் குறிக்கோளாகவும் இருக்கிறது.ஏகச் சக்கரவர்த்தியாகவாழவே ஒவ்வொரு அரசனும் விரும்புகிறான். இந்தப் பேராசையாலேதான் அரசுகளிடையே அமைதி கெடுகிறது. இதனால்தான் போட்டி, பூசல்,பகை,போர் என்றும் முடிவது இல்லை.


போரிடும் அரசுகள் தம் வலிமைக்கு ஏற்பப் போரிடுகின்ன. நாட்டின் செல்வ வலிமை, படை வலிமை, பண்டகங்களின் வலிமை போன்றவற்றைப் பொறுத்தே போராடும் வலிமை அமைகிறது. ஒரு வகையில் இவற்றைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் போர் நிகழ்த்தப்படுகிறது. எனினும் போர் நிகழ்த்தும்போது தன் வலிமை, மாற்றான் வலிமை, வினை என்னும் போர்வலிமை, பொருள் வலிமை, அளவு வலிமை முதலான வலிமைகளை அறிந்தே போர் தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதற்காகவலியறிதல்என்னும் அதிகாரத்தையே அமைத்துள்ளார்.

""""அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றக் கெடும்"" ( 479)

என்ற குறள் தன் அளவினை அறியாது ஒரு மன்னன், மற்ற நாடுகளோடு தொடர்ந்து போரிட்டு வருவதால் சில காலத்தில் அந்த அரசே இல்லாமல் போய்விடும் என்கிறார். வலிமையற்ற நாடுகள் பிற நாடுகளிடமிருந்து ஒதுங்கித்தான் வாழ வேண்டும். அப்படியில்லாமல் ஒரு சில போர்களில் கிடைத்த வெற்றியைக் கொண்டு, தன் வலிமையை மிகுதியாக எண்ணிப் பெரிய அரசுகளோடு போரிட நினைத்தால், உள்ளதும் கெடும் என எச்சரிக்கிறார் வள்ளுவர்.

""""அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்"" (474)

Image result for தொண்டைமான்.Image result for தொண்டைமான் ஔவைஆனால் போரிட நினைக்கும் அரசுகள் தன் நிலையறியாமல் போரிட முனையும் பொழுது, இதைப் புறத்தே நின்று பார்க்கும் புலவர்கள் நிலைமையுணர்ந்து (ஒரு குறிப்பிட்ட அரசனின் வலிமையை நன்கு உணர்ந்தவர்களாதலால்), போரைக் கைவிடக் கோரி எச்சரிக்கை விடுக்கின்றனர்

தொண்டைமானிடம் பின் வருமாறு எடுத்துரைத்து அறிவு புகட்டினார் ஔவையார். “அரசே, நீ உன்னுடைய படைக்கலங்கள் அனைத்தையும் நன்றாகப் பராமரித்து வருகிறாய். உன் படைக்கலங்கள் நெய் பூசப்பட்டு. மயிற்பீலியும் மாலையும் சூடப்பட்டு காம்பு திருத்தப்பட்டு,  அழகாக வைக்கப்பட்டுள்ளன.    ஆனால், அதியனின் படைக்கலங்கள் இப்படி இல்லை.     அவை இரத்தவாடை வீசியபடி உள்ளன. பகைவர்களைக் குத்தியதாலும்,கேடயங்களோடு மோதியதாலும் நுனி சிதைந்து, பக்கவாட்டில் வளைந்துள்ளன.     கொலைக்களத்தில் செப்பனிடக் காத்துக்கிடக்கின்றன என்று தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல இகழ்ந்தும், அதியனின் படைக்கலங்களை இகழ்வது போல புகழ்ந்தும் கூறினார்.
ஔவையாரின் சொல்லைக் கேட்டு, தொண்டைமான் தன் செருக்கொழிந்தான். பகை விடுத்தான்.
ஒருநாட்டின் மீது படையெடுக்க விரும்பும் மன்னன் அந்நாட்டின் அனைத்து உயிர்களையும் அழிப்பதில்லை; துன்பறுத்துவதில்லை. போர் காலத்தே சில வரன்முறைகளை அற வழிகளைக் கையாண்டுள்ளனர். அவற்றை எத்தருணத்திலும் மீறுவதில்லை. அதை மன்னர்கள் மீற முனையும் போது புலவர்கள் தலையிட்டு அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அறநெறிப்படுத்தியுள்ளளனர். புலவர்கள் மீது வைத்திருக்கும் பெரு மதிப்பினால் அரசர்களும் அதை ஏற்றுக்கொண்டு அறவழிப்பட்டுள்ளனர்.
மன்னர்கள் பசு, படித்தவர்கள், பெண்கள், புதல்வர்களைப் பெறாத ஆடவர்கள் போன்றோரை போர்க்காலத்தில், நாட்டிலிருந்து விலகியிருக்க அறிவிப்பு கொடுப்பார்கள்.

ஆவும் ஆனியல் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடையாரும் பேணித்
. . . . .
அறத்தாரு நவலும் புட்கை (புறம் - 9 : 1 - 6)
என்ற வரிகள் இதற்குச் சான்றாகும். போர்க்காலத்தில் தன் நாட்டு மக்களை மட்டுமல்லாது, பகை நாட்டின் குடிகளையும் காக்கும் மன்னனே பெரிதும் உலகத்தாரால் விரும்பப்பட்டிருக்கிறான்.
“போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகையினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். போர்விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வெல்லாம் இறுதியில் போரற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே பயன்படவேண்டும் என்கிறார் பேராசிரியர் க. பூரணசந்திரன்.
Image result for மூவேந்தர் 
அமைதியை நிலை நாட்ட
பாரெங்கும் போராட்டம் - இன்னும்
நூறாண்டு தள்ளிப் பார்த்தால்
நிச்சயமாய் அமைதி வரும் ஆனால்
அது மயான அமைதியாய் இருக்கும்...!!என்கிறது ஒரு புதுக்கவிதை.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?