நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்நிலை


ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்நிலை



பெண்பிறப்பு


ஆண் குழந்தைகளைப் போலப் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை. “சாண் பிள்ளை ஆணாலும் ஆண் பிள்ளை என்றும் “ஆம்புளப்புள்ள பிறந்ததுக்கு ஒன்பது குலவைப் போடு என்றும் கொண்டாடும் சமூகத்தினர் பெண் குழந்தைகளை இழிபிறப்பாகவே கருதுகின்றனர். பெண் குழந்தைப் பிறப்பை, நாலாம் பேற்றுப் பெண் நாதங்கியை விற்று உண்ணும், அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான். ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீராய்விடும், எட்டாம்பேறு பெண் பிறந்தால் எட்டிப்பார்த்த வீடும் குட்டிச்சுவர் என்றும் தங்களின் துயரத்திற்குப் பெண்ணை மாற்றாக காட்டுப்பழக்கம் நாட்டுப்புறத்தில் நிலவி வருகிறது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு, திருமணத்தில் கொடுக்க வேண்டிய வரதட்சணை, சீர் போன்றவற்றிற்குப் பயந்து பெண் பிறப்பையே வெறுக்கின்றனர்.

ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களில் சமுதாய மாற்றம்


   

ஆர்.சண்முகசுந்தரம் நாவல்களில் சமுதாய மாற்றம்


   இலக்கியத்துறையில் முதல் வட்டாரப் புதினம் என்ற துறையைத் தோற்றுவித்துள்ள ஆா். . வின் பங்களிப்பை இலக்கிய வரலாற்று உலகம் பறக்கணித்து வருகிறதுஎனினும் இலக்கியவானில் விடிவெள்ளியாக வட்டார எழுத்தாளா்களுக்கு இன்று வரை இருந்து வருகிறார்இவா் பன்முக ஆளுமை உடையவா்பல துறைகளில் முத்திரை பதித்தவா்சிறுகதை, புதினம், நாடகம், மொழிபெயா்ப்பு, திறனாய்வு என்று இவரது படைப்புகள் பல இருந்தாலும் புதினங்களே ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனஅவையும் குறிப்பித்தக்க அளவில்தான் உள்ளன.நாவல்களில் மட்டுமல்ல இந்திய நாவல்களில் சண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டுகிராமியச் சூழ்நிலைகளை முழுதும் உபயோகித்துப் பிராந்திய நாவல் என்கிற துறையை முதன் முதலாக இந்தியாவில் உருவாக்கியவா் அவா்தான் என்று சொல்லலாம்” (இராமசாமி.டி.சி., 1994:47) என்று குறிப்பிடுகிறார்.

பெண்ணியத் திறனாய்வு

 பெண்ணியத் திறனாய்வு                          penniyam images க்கான பட முடிவு


மானுட வரலாற்றில் பெண்கள் தங்கள்அடையாளங்களை மெல்ல இழந்து சுயமற்ற நிலையில் காணப்படுகின்றனர். வரலாற்றில் பெண்களின் முக்கியமான, ஆற்றல் மிக்க பங்களிப்புகளின் சில குறிப்புகள் இருந்தாலும், அவர்கள் அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு, உதைக்கப்பட்ட குறிப்புகள்தாம் பரவலாக உள்ளன. பல நூற்றாண்டுகளாகப்  பெண்கள் அவ்வாறு துன்புறுத்தப்பட்டதுமில்லாமல் பிறப்பு, முன்னோர் கருத்து, கடவுள் கொள்கை என்று அவை நியாயப்படுத்தப்பட்டு பண்பாடு என்ற பெயரால் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.

பெண், ஆண் இடையே இன்று நாம் காணும் வேறுபாடுகள் இயல்பானவையல்ல. அவை ஒரு காலத்தில் ஒருவராலோ, அல்லது சிலராலோ, வர்க்க, இன, சமய, பால், மத அடிப்படையில் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஆண் உயர்ந்தவன் என்பதும் பெண் தாழ்ந்தவள் என்பதும் இயற்கையும், கடவுளும் உருவாக்கியவை அல்ல.

Thursday, 9 April 2020

திருவாசகத்தில் தொடர்கள்



திருவாசகத்தில் தொடர்கள்

                சொற்கள் தனியாக இருக்கும்பொழுது அவற்றிற்கு முழுப்பொருளையும் உணர்த்தும் ஆற்றல் முழுவதும் இல்லை. அவற்றைத் தக்கவகையில் பயன்படுத்தும் நிலையிலேயே அவை பொருளைச் சரியாக உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியாகப் பொருளை உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியான பொருளை உணர்த்தும். சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுப்பதே ஒருவகை ஆற்றலாகும். அவற்றை இடம் நோக்கிச் சிறந்த முறையில் அடுக்கிக் கவிதையில் இடம்பெறச் செய்வதென்பது தேர்ந்தெடுத்தலை விடப் பெரிய ஆற்றலாகும்.
                கவிஞன் சொற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்குவதன்மூலம் அச்சொற்கட்குத் தனிப்பட்ட முறையில் பெருஞ்சிறப்பை வழங்கி விடுகிறான். ஒரு சொல்லின் சிறப்பானது, அது பிற றசாற்களுடன் தொடுக்கும்பொழுதே வெளிப்படுகிறது. எனவே, சொற்தொடர் அமைப்புப் பற்றி அறியவேண்டியது அவசியமாகிறது. சொற்றொடர் பல இணைந்து வாக்கியம் உருவாகிறது.

மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை



மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை


மாணிக்கவாசகர் புதுச்சொற்களை உருவாக்கும்பொழுது எளிமையாக்கம், புதுமையாக்கம் நிலைபேறாக்கம் என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது தெரிகிறது.

 

எளிமையாக்கம்

                மொழிவளர்ச்சிக் கொள்கைகளில் எளிமையாக்கமும் ஒன்றாகும். சொற்களுக்குப் புதுப்புதுப் பொருள்கள் காலந்தோறும் அதனைக் கையாளும் கலைஞர்களுக்கு ஏற்ப உருவாகிறது. இதனால், ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமையாகி விடுகிறது. பொதுவாக, நுட்பமான கருத்துக்களை விளக்கப் புதுச்சொற்கள் உருவாகின்றன. நுட்பமும், ஆழமும் பொருந்திய நுண்ணியச் சொற்களை உருவாக்குவதில் மணிவாசககர் பெருவிருப்பு உள்ளவர் என்பதை அவர் உருவாக்கியுள்ள சொற்களிலிருந்து உணர்ந்த கொள்ளலாம்.
எ.கா
உள்ளக்கரு          -      உளக்கரு
ஒப்பற்றவன்         -      ஒப்பன்
நுகர்பொருளானவன்  -      துப்பன்
கூறுடையவன்       -      கூறன்
தேசுடையவன்       -      தேசன்
                                                                                                                                                                                உய்யக்கருவானவன் இறைவன்என்பதை விளக்கும் உள்ள.க்ருஎன்னும் சொல்லை மேலும் எளிமைப்படுத்தி உளக்கருஎன்கிறார். இதைப்போலவே, சிவபெருமாள் உமையைத் தன் உடலில் பாதியாக்கியுள்ளதால், பாதியானவன் என்பதை உணர்த்த கூறன், பாகன், பாதியன் போன்ற சொற்களை உருவாக்கியுள்ளார். சொற்கள் எளிமையாக்கம் செய்யப்பட்டாலும், முழுப்பொருளை இழக்காமல், முந்தைய பொருளைவிட மிக ஆழமான பொருளைப் பெற்றுப் புதுப்பொலிவோடு திகழ்வது தெரிகிறது.

புதுமையாக்கம்

                ‘‘மொழி வளர்ச்சிக் கொள்கைகளில் முதன்மையானது புதுமையாக்கம் ஆகும். இப்புதுமையாக்கம் கலைச்சொற்களையும், புதுத்தொடர்களையும் உருவாக்கவும், பெருக்கவும் உதவுகிறது. புதுமையாக்கத்தின் அடிப்படையில் கலைச்சொற்கள் உருவாக்கப்படும்போது மொழியில் புதுச்சொற்கள் காணப்படுதல் இயற்கையே’’ என்பார் தங்கமணியன். இவ்வகையில் திருவாசகத்தில் ஏரானமான புதுச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
எ.கா
கருத்திருத்தி  உள்ளான்
உள்ளொலி    புவன்
உலவா          உடையவன்
                                                                                               
                கருத்திருத்திஎன்னும் சொல்லானது இருவேறு பொருளைத் தரும் வகையில் அமைந்த புதுமைச் சொல்லாகும். கருவிலேயே திருந்தச் செய்துஎன்னும் பொருளிலும், ‘இறை எண்ணத்தைத் தன்னிடத்திலே பதியச் செய்துஎன்னும் பொருளிலும் இச்சொல் பயின்றுவருகிறது. புவன் என்னும் சொல் புவனம் ஆள்பவன்என்னும் பொருளிலும், ஒலி வடிவானவன்8 என்னும் பொருளிலும் பயின்று வருகிறது.
                உலவாஎன்னும் சொல் அழிவில்லாத என்னும் பொருள் தரும் புதுமையாக்கச் சொல்லாகும். இடம்நோக்கி இப்பொருளைப் பெற்ற புதுச் சொல்லாகும். உலவா இன்பச்சுடர் என்னும் சொல்லானது உலர்ந்துபோனேன் என்னும் சொல்லுக்கு எதிரானப் பொருளைத் தரும்வகையில் பயின்று வருகிறது. உலர்ந்துஎன்னும் சொல்லுக்கு எதிரான சொல்லாக உலவாஎன்னும் புதுச் சொல்லைக் கையாண்டுள்ளார்.