கொடை என்றால் என்ன?
சீறூர் மன்னர்கள் தமக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல், உறவினர்களுக்கும், பாணர்களுக்கும் வாரி வழங்கியுள்ளனர்.
பிறருக்காக வழங்குவதற்கானப்
பொருள் தேடவே போரிலும் ஈடுபட்டுள்ளனர்.
தன்னுயிரையும் பொருட்படுத்தாது
பெற்ற பெருஞ் செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.
விதைக்காக வைத்திருந்த தானியங்களையும் உணவாக்கி விருந்தோம்பியுள்ளனர்
ஆனால் வேந்தர்கள் பெருஞ்செல்வம் சேர்ந்த நிலையில், பிறருக்குக் கொடுப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர். காலம் தாழ்த்தியுள்ளனர். சீறூர் தலைவர்களிலிருந்து வேந்தர்கள் மாறுபட்டு மக்களிடமிருந்து
விலகிச் சென்றுள்ளனர். தம் வாரிசுகளுக்காகப்
பொருள் சேர்க்கும் ஆசையில் பாணர்களை விலக்கி
வைத்துள்ளனர். இதை ஒரு பாடலில் வடம வண்ணக்கண் பேரிச்சாத்தனார் கூறுகிறார்.