நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களின் பிற சிக்கல்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களின் பிற சிக்கல்
சமூகம் பெண்களைப் பார்க்கும் விதம் பாலியல் ரீதியாகவே உள்ளது. வீதியிலும், வேலை செய்யும் இடங்களிலும்  ஆண்கள் பெண்களைக் கண்டும் காணாமலும் பார்ப்பது குறித்து வெட்கப் படுவதில்லை. பெண்களின் செல்பாடுகளில் உடுபாடு கொண்டு அதை கண்களால் பருகுவதில் இனந்தமடைபவர்கள் அழகை ரசிக்கும் கலா ரசிகர்கள் என்று தங்களைப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், பெண்களை முறைத்துப் பார்க்கிறவர்கள், கீழான இச்சைகளிலே இன்பம் துய்ப்பவர்கள், வெளிவேடதாரிகள், பகட்டிலே மனத்தைப் பறி கொடுப்பவர்கள், அந்தரங்கத்தில் கோழைகள்” (1999:49) என்று வெ. சாமிநாத சர்மா சாடுகிறார். கிராம சமூகத்தில் வயலில் வேலை செய்யும் பெண்களை அங்கு வேலை செய்யும் ஆண்கள், பார்த்தும் பார்க்காமல் நோக்குவதைக் காட்டுவார் (க.சு.:58) பெண்களின் ஆடைகள் போகிற பாக்கைப் பார்க்க எங்குமே ஒரு கும்பல் இருக்குமே (உதயதாரகை31) பத்து வயதுப் பெண்ணிடமும் இவர்களின் பார்வை பதிந்து கிண்டல்கள் பிறக்கும். உனக்கு குடிசை கட்ட ஊங்க மாமன் வாராங்கண்ணு சொன்னாங்களே நீ என்னடாண்ணு, சமிஞ்ச புள்ளை இப்படி மாராப்புச் சீலை கூடப் போடாமெ போறாயே” (உதயதாரகை31) இப்படிச் சிறுவயதிலிருந்தே அவள் மீது பதியும். பாலியல் பார்வை அவளைப் போகப் பொருளாகவே கருதுவதைக் காட்டுகிறது..

5.10.0. பெண் சிரிப்பு
Re: முத்துச்சரம் பதிவுகள் - Google Groups 
காளியண்ணன் சக்தி கெட்டவனா? இல்லாதவனா? என்று பாட்டி ஒருத்தி கேட்டாள். வயதான பெண்கள் கூடச் சிரித்துவிட்டார்கள்..... அந்தச் சிரிப்பு என்ன வெல்லாமோ பிரளயத்தையே கொண்டு வந்து விட வில்லையா? (அ.கோ.:165) புராண காலத்திலிருந்து இன்றைய நிலை வரை பெண்களின் சிரிப்பிற்கும் ஆண்களின் மானத்திற்கும் வெகு நெருக்கம் இருப்பதாகக் கற்பிக்கப்பட்டு பெண்களின் சிரிப்பிற்கும் தடை விதித்து உள்ளனர். பெண்களைப் பொருத்த அளவில் அவர்கள் வாய்விட்டுச் சிரிக்கவும் அனுமதியில்லை. பேசவும், படிக்கவும், குடும்பத்தை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்ட பெண்ணினம் சிரிக்கவும் பயந்து போகும் படியான சூழலை ஆண் சமூகம் ஏற்படுத்தி விட்டது.
5.11.0. பெண்ணும் யோகமும்
பெண் பிறப்பை வெறுக்கும் இச்சமூகம் தன் யோகத்தை அவள் வரவிலே பிறப்பிலே வைத்து மேலும் அவளைத் துன்புறுத்தியது. சீதா பிறந்த வேளையில்தான் யோகம் வந்ததாகப் பார்வதி கூறுகிறாள் (உதயதாரகை9) மூத்த மருமகள் வரவிலும் இந்நம்பிக்கை உள்ளது. (கா.சு.:20) மருமகள் வரவு மட்டுமின்றி மற்ற பெண்கள் தங்கள் வீடுகளில் வந்து தங்கும் பொழுதும் யோகத்தை நினைத்துப் பார்க்கிறார்கள். (த.வ.:49 : ??:30) மில்களின் பெயர்களும் பெண் பெயராகவே உள்ளன. இலைகளுக்குப் பெண்கள் நாயகங்களின் நாமதேயத்தைச் சூட்டியதின் அடிப்படை மிக்க துலாம்பரமானது! பெண் லட்சுமி! சரஸ்வதி! லட்சுமி கடாட்சம் இருந்தால் தானே தொழில் வளம் பெருகும்” (எ.போ.வா.:44) என்பார். இப்படி ஊயர்த்தப்படும் பெண் ஏதாவது நட்டம் ஏற்பட்டால் ஒரேயடியாகத் தாழ்த்தப்படுகிறாள்.
முத்தாயாள் பிறந்த பின்பு பெருகிய அதிர்ஷ்டம், அவள் பூப்பெய்திய போது போய்விட்டதாக அவள் தந்தை கருதுகிறார். நம்ம தலையே போயிடும் உன்மக வீட்டிலே இருந்தா! பொம்பிளைக் கெரகத்தைக் கட்டிக் குடுத்திட்டு பேசாமெ இருக்கலாம்.” (அ.போ.:224) என்று அவள் முன்பே கூறுகிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?