நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday, 30 September 2014

தகடூரான் சிறுகதைகள்



நவீன இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் உலகின் பல்வேறு மொழிகளிலும் தனிப்பெறும் வெற்றியை அடைந்திருப்பது சிறுகதை வடிவமாகும். அவ்வடிவம் தமிழில் மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. தாம் வாழுங்காலத்தே போற்றப்பட்ட கலைஞர்களைவிட வாழ்ந்து முடிந்த பின் போற்றப்பட்ட கலைஞர்களே அதிகம். அவ்வகையில் தகடூரான் அவர்களின் படைப்புகளைக் குறிப்பிடலாம்.

Sunday, 28 September 2014

கல்யாண மாலை கொண்டாடும் வேளை...


குறிஞ்சிக்கலி  பாடல்  2

கல்யாண மாலை கொண்டாடும் வேளை......குறிஞ்சி நிலப் பெண்கள்,  அருவிகளில் நீராடவும்

, மலர்களைக் கொய்யவும், தோழியரோடு வெளியில் சென்று விளையாடவும், தினைப்புனக் காவலுக்குச் செல்லவும் உரிமை பெற்றவர்கள்.  குடும்பச் சூழலை உணர்ந்து நடப்பவர்கள். தங்கள் கற்பொழுக்கத்தைக் காத்துக் கொள்ளும் மாண்புடையவர்கள். தினைப்புனக் காவலின் போது பெண்கள், பறவைகளைப் பரண் மீதிருந்து கவ்ண்கல் வீசி விரட்டுவர். இளைஞர்கள் தினையை உண்ண வருகிற மான்களையும், யானைகளையும் அம்பினை எய்து விரட்டுவர். திணையைக் காவல் காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடும்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

ஆகாசப் பந்தலிலே பொன்னூசல் ஆடுதம்மா........


கலித்தொகை குறிஞ்சிக்கலி பாடல்-1

ஆகாசப் பந்தலிலே பொன்னூசல் ஆடுதம்மா........


தலைவியும் தோழியும் இணைபிரியாதவர்கள். ஒன்றாக உண்டு, உறங்கி விளையாடி மகிழ்பவர்கள். எங்கு சென்றாலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போலப் பிரியாமல் செல்வார்கள். ஆனால், உள்ளம் ஒன்றாக இருக்குமா? என்னதான் ஒன்றாகப் பிறந்து ஒரே சூழலில் ஒரே மாதிரியாக வளர்ந்தாலும் எண்ணங்கள் வேறு வேறாகத் தானே இருக்கும்? இதோ இந்த தலைவிக்கும் தோழிக்கும் அதுதான் நிகழ்ந்தது. இது பருவம் செய்கிற வேலை. எப்போதும் கலகலப்பாக ஓடி விளையாடும் தலைவி, சில நாட்களாகத் தனிமையை நாடிச் செல்கிறாள். சரியாக உறங்குவதில்லை. உண்பதில்லை. எதையோ பறிகொடுத்தவர் போல் மோட்டு வளையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். தினைப் புனக் காவலுக்குச் சென்றாலும் முன்புபோல் சுறுசுறுப்பாக கவண்கல் வீசி பறவைகளை விரட்டுவதில்லை. எதிலும் பற்றற்று இருக்கிறாள். இணையாக இருக்கும் விலங்குகளையும், பறவைகளையும் பார்த்து பெருமூச்சு விடுகிறாள்.

தான் தோன்றி ஈசுவரா் கோயில் சிற்பங்கள்

வளர்க்கப்படும் குரங்கோ? இடையில் கயிறு கட்டப்பட்டுள்ளதே.வாலில் கூட ஏதோ கட்டப்பட்டிருப்பது போல்.... மணியாகவோ நூலால் செய்யப்பட்ட குஞ்சலமாகவோ இருக்கலாம்...

சேலம் தான்தோன்றி ஈசுவரர் கோயில் சிற்பங்கள்

நடன மாது
வாயில் வைத்து ஊதும் இசைக்கருவியால் இசையெழுப்புகிறாள் ஒரு மாது.கூந்தல் அலங்காரம் பாருங்கள்

சேலம் தான் தோன்றி ஈசுவரர் சிற்பங்கள்

தூது செல்வதாரடி...    .....               கிளி விடு தூது

Saturday, 27 September 2014

Wednesday, 24 September 2014

சங்க காலத்தில் போரும் அமைதியும்


சங்க காலத்தில் போரும் அமைதியும் பாகம் -1
போரை விரும்புபவர்களை ஆதரிப்பவர்களை இந்த உலகம் விரும்புமா? உண்மையில், மனிதர்களை கொன்று குவிக்கும் போரை நல்ல உள்ளம் படைத்தவர்கள்   யாரும் விரும்ப மாட்டார்கள். எனவேதான் பாரதிதாசன் ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்‘ என்றார். போரில் கெடுதலைத் தவிர விளைவது எதுவுமில்லை. மக்கள் நலன் புறக்கணிக்கப்படும். மாண்டவர் தொகையோ பெருகிப்போகும். உறுப்புகள் இழந்தவர்களை எண்ணமுடியாது. தந்தை இழந்த குழந்தைகள்,கணவன் இழந்த அபலைப் பெண்கள்,மகனை இழந்த வயது முதிர்ந்தோர், உறுப்பிழந்தவர்களின் எதிர்காலப் போராட்டம் எனப் போர் திசையெங்கும் துக்கம் ஒன்றையே தந்து நிற்கும். இப்போரினால் விளைவது மனசாட்சி அழிவும், மக்கள் அழிவும் தான் வேறொன்றுமில்லை.  தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகின்ற புறநானூறு போர் குறித்த ஒரு நூல்தான் என்றாலும், சிறந்த அறநூலாகவும் திகழ்ந்து வருகிறது. பழந்தமிழர்களின் போர்களையும், வீரத்தையும், கொடையையும், விருந்தோம்பல் பண்பையும் கூறுகின்ற நூலாக இருந்தாலும்,  சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற, மக்கள் நலனைப் பாதிக்கின்ற போரே வேண்டாம் என்று பல அறவுரைகளையும் கூறுகிறது.