நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 27 September 2014

சேலம் தான்தோன்றி ஈசுவரர் கோயில் சிற்பங்கள்

கோயிலின் முன் பக்க
யானை வீரர்களும் 




.குதிரை வீரனும்
குதிரையின் பிடரிப் பின்னைலைப் பாருங்கள் எவ்வளவு அழகாகப் பின்னப்பட்டுள்ளன.


குதிிரையின் அணிகலன்களைப் பாருங்கள்...சல்..சல்..சல்....எனும் சலங்கைஒலி.....





மகிசாசுரமா்த்தினி  போரிடும் காட்சி...கோயில் சிலைகள்,  கையில் வைத்துள்ள ஆயுதங்களைக் கொண்டு ஒரு ஆய்வே நிகழ்த்தலாம்.
ஒரே சிற்பத்தில் ஒரு நடன நங்கையின் மூன்று வித அசைவுகள்.
இது ஒரு 3D சிற்பம்.   உற்றுப் பார்த்தால் இடது, வலது பக்க முகங்கள் நன்றாகத் தெரியும். காலை உயர்த்தி இடதுபுறம் திருப்பிய நிலையில் முகம் இடப்பக்கமாக இருக்கிறது.  அது போல் வலது பக்கமும் என்பதை குறிப்பாக உணர்த்த, முகம் வலது புறமும் செதுக்கப்பட்டுள்ளது. நேராக நின்று அபிநயிக்கும் பொழுது, முகம் நேராக உள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளது.


தாயும் குழந்தையும்....குழந்தையின் பாறு மயிர்க் குடுமி.... கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்ற புறநானூற்றுப் பாடலை நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது...இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையினால் தாய் ஒரு புறம் கொஞ்சமாகக் காலைச் சாய்த்து....நிற்கிற காட்சி..

2 comments:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  2. நன்றி. தங்கள் மின்னூல் பார்வையிட்டேன்.வளர்க தமிழ்த்தொண்டு.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?