நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 13 December 2019

பாராட்டு



 Image result for பாராட்டு
பாராட்டு

Image result for பாராட்டு 
பணமிருந்தும் பாராட்டும் குணமிலையேல் உயர்விலை.
பண்பிருந்தும் பாராட்டும் மனமிலையேல் பயனில்லை.
பணம் செய்யாததை செய்துகாட்டும் மாயவித்தை
பார் போற்றும் மானிடராகிட பாராட்டுங்கள்   
பாராட்டிட வழிகளா இல்லை இப்பூவுலகில்
பாராட்டே குணங்களில் மிக உன்னதமானது
முகத்துக்கு நேராகப்  புகழுவதும் பாராட்டே.
இகமறிய  சொல்லால் மெச்சுவதும் பாராட்டே.

ஓசையெழ இருகை கைதட்டுவதும் பாராட்டே.
கைகளைப் பிடித்துக் குலுக்குவதும் பாராட்டே.
பின்முதுகில் தட்டிக் கொடுப்பதும் பாராட்டே.
சின்னஞ் சிறிய புன்னகைகூட பாராட்டே.
Image result for பாராட்டு

வெற்றியாளர்களை உயர்த்தி இருப்பதும் பாராட்டே.
சாதனையாளர்களின் சாதனைக்குப் பின்னிருப்பது பாராட்டே.
சாதனைகள் செய்வதற்கு தூண்டுகோல் இப்பாராட்டே.
தாய்தந்தையர் தந்திடவேண்டிய சொத்து பாராட்டே.

மண்ணை பொன்னாக்கிடும், பாதுகாப்பு உணர்வுதரும்
எண்ணத்தை மனதில் பதியமிடும், மனிதநேயமூட்டும்
நம்பிக்கையை வளர்க்கும்; மனப்பாங்கை மேம்படுத்தும்
நம்பிய நல்லுறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்!

மனிதஉறவு வளர்க்கும், மானுடம் தழைத்தோங்கும்
கனிவுஅக்கறை பாராட்டும், உறவுகளில் உறவாடும்
நண்பர்களைச் சேர்க்கும், மாறாத நேசம்தரும்
பண்பானவர் என்றொரு அழகானபேர் கொடுக்கும்

சின்னசின்ன பாராட்டுக்கள் பெரிய சாதனைகளாகும்
பின்னிப் பிணைந்த உறவுகளில் பாராட்டே வேராகும்
சங்கப் புலவர் பாராட்டில் சேரன் வில்பொறித்தான்
மங்கையின் பாராட்டில் மாமலையும் சிறுகடுகானதே
Image result for பாராட்டு

பற்றற்ற மனிதரும் மயங்கிடுவர் பாராட்டில்
சுற்றத்தையும் வீட்டையும் பாராட்டிப் போற்றிடு
அன்புணர்ந்த நெஞ்சுக்கு பாராட்டு கரும்பல்லவா
அன்பான பாராட்டில் அகிலமே கைகளுக்குள்


உன்னை நீ உண்மையாய் காண
உலகில் உனக்கொரு இடம் தேட
பாராட்டு பாராட்டு, பாராட்டு எதிரொலிக்கும்
பார் புகழ உன்னைப் பார்புகழ பாராட்டு.








Monday, 23 September 2019

தமிழிலக்கிய ஆய்விற்கு உட்படுத்தப்படும் பிற துறைகள்




தமிழிலக்கிய ஆய்விற்கு உட்படுத்தப்படும் பிற துறைகள்

தமிழில் இலக்கிய ஆய்வுகள் இலக்கிய நயங்கள், சமுதாயச் சிக்கல்கள், வட்டார வழக்குச் சொற்கள், மனிதநேயச் சிந்தனைகள், வர்க்கச் சிந்தனை, வாழ்வியல் அறங்கள், அகப்புறச் செய்திகள், பண்பாட்டுக் கூறுகள், நிலையாமை சிந்தனைகள், இலக்கிய நயம், பிறமொழிச்சொற்கள், மெய்ப்பாடுகள், அணி நலன், உத்திகள், உவமைகள், மொழிநடை, நகைச்சுவை, நிலமும் உணவும், பாடுபொருள் மாற்றம் படைப்பாக்கத் திறன் உள்ளிட்ட பல பொருண்மைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தமிழிலக்கியம் பிற துறை கூறுகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல்,போன்ற பல துறைகளில் ஆழ்ந்த அறிவு இருந்துள்ளது என்று இலக்கியங்கள் வழி ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. இவை போல பிற துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Thursday, 16 August 2018

தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்



தமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்
வாழ்க்கையில் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம் முதலான  உறுதிப்பொருள் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் நீதி நூல்கள் (அ)அற நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், பன்னிரு பாட்டியல் போன்றன அற நூல்களுக்கான இலக்கணத்தைத் தருகின்றன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், அற நூல் என்று இவற்றை கூறிவிட முடியாது. எனினும். பிற்கால அறநூல்களில், சங்ககால இலக்கியங்களிலுள்ள அறநெறிக் கருத்துக்கள் பெரிதும்  எடுத்தாளப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான  உள்ள 18 நூல்களுள் 11 நூல்களும் அற நூல்களாகக் காணப்படுகின்றன. ஒருவகையில், தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். ஜி. யூ. போப் பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும்விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன என்கிறார். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள்,சதகங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை அனைத்தின் அடிச்சரடு அறமே.

Monday, 31 July 2017

மணிமேகலை 19



19
கடற்கரையில் ஆர்ப்பரித்த கடல், இப்போது இந்த ஆழத்தில் தான் எவ்வளவு அமைதியாக இருக்கிறது. எப்படிக் கப்பலைத் தாலாட்டுகிறது. மனித மனமும் கரைகளை மோதி மோதி இறுதியில் பக்குவப்பட்டு நடுக்கடலைப் போல அமைதியாகி விடுகிறது.
குறைந்த கடலலை பேரிரைச்சலை ஏற்படுத்துவது போல, அனுபவமற்ற மனமும் தான் எத்தனை கேள்விகளை எழுப்புகிறது. அனுபவம் நிறைந்த நடுக்கடலோ, கேள்வியற்று அமைதியாக இருக்கிறது. தான் இந்நிலையை எவ்வாறு எப்போது பெறுவது?
கடலலைகளைப் பார்த்தபடியே மணிமேகலை சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் பட்டாடையும், அடர்ந்த கூந்தலும் அவள் மனதைப் போலவே அலைபாய்ந்தன.
சிறுவயதில் பாட்டி சித்திராபதியுடன் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறாள். மாதவி கோவலனுடன் மகிழ்ந்திருக்கும் நாள்களிளெல்லாம் சித்ராபதி அவளைக் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்கிறாள். தன்னொத்த தோழியருடன் விளையாடும் மணிமேகலை கடலில் தூரத்தில் தெரியும் படகுகளையும், நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கும் கப்பல்களையும் பார்த்திருக்கிறாள். அதில் பயணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டதை,காதில் வாங்காமல் பாட்டி மறுத்துவிட்டாள்.

மணிமேகலை 18



18 
ஆபுத்திரனின் தாய் சாலி என்ன ஆனாள்? வயதான கிழவருக்கு வாழ்க்கைப்பட்டுக் குழந்தையில்லாத அவர்களுக்கு ஒரு குழந்தை கருவாகி உருவாகிய சமயத்தில் அவள்  களங்கப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டது மணிமேகலையின் மனதில் பெரும் பாரத்தை ஏற்படுத்தியது.
வயதான கிழவருக்கு ஏழ்மையின் காரணமாக மணமுடிக்கப்பட்டதே பெருங் கொடுமை. இதில் ஒழுக்கங் கெட்டவள் என்ற அவப்பெயர் வேறு. செய்யாத தவறுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை !அவளுக்கு மட்டுமல்ல. அவள் பெற்ற குழந்தைக்கும் இது தீராத் துயரத்தைத் தந்திருக்கிறது. இறுதிவரையில் சாலி மகனைப் பார்க்கவில்லை. மகனும் தாயைப் பார்க்கவில்லை.