நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 21 August 2020

எது கவிதை?


 BIRDS SHADOW: மரங்களின் நிழல் 

எது கவிதை?

கண்ணுக்குள் அடங்கா இயற்கைக் காட்சியா?

சொல்லுக்குள் அடங்கா கவிதைப்  பொருண்மையா?

பல பரிமாணமுடைய மின்னும் வைரமா?

பார்க்கும்போதே வடிவம் மாற்றும் மேகமா? 

படிக்குந்தோறும் பொருள் மாறும் புதுமையா?

படிப்பவருக்கேற்ப பொருள் மாறும் பிரதியா?

நுணுக்கரிய நுண்ணுணர்வைத் தரும் பார்வையா?

நோக்கரிய நோக்குடையாரின் உணர்வு நுட்பமா?

சிறு மழையும், ஒரு மழலையும், ஒரு பார்வையும், 

ஒற்றைச் சிறகும், சிறு தென்றலும், மர நிழலும்,

சில சமயம் “ம்” என்ற ஒற்றை சொல்லும் கவிதைதான்.


-----------------------------------------------------------------------

நீ யார்?

மழை வருவதை முன்பே அறிய வேண்டுமா? இதோ ... 

சாரல் தூறல் ஆலி திவலை

 எத்தனை பெயர்கள் உனக்கு?

பருவம் தவறி வந்தாலும்....

மழை மழைதானே?

மனதையும் மண்ணையும் குளிர்விக்கும் கனமழையா?

உயிரோடு உறைய வைக்கும் பனி மழையா ?

நனையக் காத்திருக்கிறேன் வா.


-------------------------------------------------------------------------

 கொரானா......


நலம், நலமறிய ஆவல் 07: ஏன் வருகிறது ... 

காய்ச்சல்

பிளேக்

கான்சர்

எயிட்ஸ்

பெருநோய்களைப் பின்னுக்குத் தள்ளி

முன்னணியில் உள்ளது தும்மல்.

நன்றாகத்தான் சொன்னார்

பழந்தமிழர்.....

பெரியோரை வியத்தலும் இலமே...

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே......


----------------------------------------------------




 



கவிதை

Image result for மலர் 

           வரம்

உதிர்ந்ததை உரமாக்கி மீண்டும்

 மலரும் பூமனது வரம்.

 புதிதாய்ப் பிறந்த நினைவோடு

வாழும் வாழ்வு பெருவரம்.

கனவுத் தாகங்கள் அற்ற 

இரவுகள் அற்புத வரம்.

 

------------------------------------------------------------------

 

 Self Made Man, Bobbie Carlyle - Bobbie's Official Website ...

தன்மாற்றம்

 

தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளுங்கள் அவமானஉளிகளால்.

அதைவிட சிறந்த மாற்றம்  உலகில் எங்கும் இல்லை.

வெறுப்பின் காரணம்  தேடி  அலைவதை விடுத்து

அவமானத்திற்கு மாற்றாக அன்பைக் கொடுங்கள்.

உடையும் நீர்க்குமிழி வர்ணசாலம் காட்டி  

இந்த நொடி வாழ்வதைப் போல  வாழ்ந்து விடுங்கள்.

எதுவும் கடக்கவில்லையென்றாலும் அன்பை

நிரப்பிக் கொண்டால் மனதையாவது கடக்கலாம்.

மழலைபோல வாழ முடியாவிட்டாலும் 

மரமாகவாவது மாற முயற்சிக்கலாம்.

---------------------------------------------------------------------------


கடல் அலைகளின் சீற்றம் காரணமாக தமிழக ... 

 

அலையாகிவிடு....

 

அலைகள் இருந்தது. இருக்கிறது. இருக்கும்.

கரையில் இருப்பதா? கால் நனைப்பதா?

சில அலைகள் காலை வாரி விடும்.

சில அலைகள் காலை முத்தமிடும்.

சில பாடம் நடத்தும். சில மிரள வைக்கும்.

பார்வையாளனாக இருந்துவிட்டால்?

தரையை அடையவிடாத ஆர்ப்பாட்டம்.

நுரைக் கரங்களோடு அதன் போராட்டம்.

திரும்ப திரும்ப மேலெழும் நீரோட்டம். 

பார்வையாளனாய் இருந்துவிட்டால்

பரவசமில்லை. பார்த்துவிடுவோம்

அலைகளோடு இணைந்திடுவோம்.

 -----------------------------------------------------------------

Friday, 10 July 2020

தமிழ் ஆய்வுக் களங்கள்




GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 INTERNATIONAL WEBINAR MARATHAN - 2020
DEPARTMENT OF TAMIL & IQAC
MULTI DISCIPILINARY ASPECTS IN TAMIL
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் ஆய்வுக் களங்கள்

நாள்: 30.06.2020

FACULTY DEVELOPMENT PROGRAM



அறிக்கை  - 2

GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 DEPARTMENT OF TAMIL & IQAC
FACULTY DEVELOPMENT PROGRAM
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய ஆசிரியர் திறன் மேம்பாட்டுப்பயிற்சி

நாள்: 29.06.2020

காலை 11 - 12.00

TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHAN -2020




GOVERNMENT ARTS COLLEGE(A) SALEM -7

அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) சேலம் -7

 DEPARTMENT OF TAMIL & IQAC
TEN DAYS INTERNATINAL WEBINAR MARATHAN -2020
தமிழ்த்துறை மற்றும் உள்தர உறுதியீட்டு மையம்
இணைந்து நடத்திய பத்துநாள் பன்னாட்டு உரையரங்கத் தொடர்


(19.06.2020 -30.06.2020)

Wednesday, 8 July 2020

நாளும் நாளும்.....



                               
நாளும் நாளும் ...
                டீரிங் டிரிங் ..... தெலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருந்தது. இந்த அர்த்த ராத்திரியில் தொலைபேசி சத்தம் கேட்டவுடன் பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. யாருக்காவது ஏதாவது ஆகியிருக்குமா? பக்கத்திலிருந்த கணவருக்குக காது கேட்கவில்லையா? வெளியே ஹாலில் மாமியார் எழுந்து ‘ஹலோ யாரு’ என்று கேட்பது கேட்டது. குழந்தை இடையில் கவிழ்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அதன் வலது கை அவளுடைய நைட்டியினை இறுக்கிப் பிடித்திருக்கிறதா எனக் கையைத் தொட்டுப் பார்த்தாள். தூக்கத்தில் துணியை விட்டு விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.

Monday, 6 July 2020