Monday, 10 August 2015
சிற்றிலக்கிய ஆய்வுகள் -1
சிற்றிலக்கிய
ஆய்வுகள்
முன்னுரை
96
வகை சிற்றிலக்கியங்கள் உள்ளதாகப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த
எண்ணிக்கைக்கு மேலும் சிற்றிலக்கிய நூல்கள் உள்ளன. அப்பட்டியலையும் அவை தொடர்பாக
வந்துள்ள ஆய்வுகளையும் இனி வர வேண்டிய ஆய்வுகளையும் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
1.சாதகம்
2. பிள்ளைக்கவி 3. பரணி 4. கலம்பகம் 5. அகப்பொருட்கோவை6. ஐந்திணைச்செய்யுள் 7. வருக்கக் கோவை 8. மும்மணிக்கோவை9. அங்கமாலை 10. அட்டமங்கலம் 11. அனுராகமாலை 12. இரட்டைமணிமாலை13. இணைமணி மாலை 14. நவமணிமாலை15. நான்மணிமாலை 16. நாமமாலை 17. பல்சந்தமாலை18. பன்மணிமாலை19. மணிமாலை20. புகழ்ச்சி மாலை21. பெரு மகிழ்ச்சிமாலை 22. வருக்கமாலை23. மெய்க்கீர்த்திமாலை24. காப்புமாலை25. வேனின்மாலை26. வசந்தமாலை 27. தாரகைமாலை28. உற்பவமாலை29. தானைமாலை 30. மும்மணிமாலை 31. தண்டகமாலை 32. வீரவெட்சிமாலை33.வெற்றிக்கரந்தை மஞ்சரி34. போர்க்கெழுவஞ்சி35. வரலாற்று வஞ்சி 36. செருக்களவஞ்சி37. காஞ்சிமாலை38. நொச்சிமாலை39. உழிஞைமாலை40. தும்பைமாலை41. வாகைமாலை 42. ஆதோரணமஞ்சரி 43. எண்செய்யுள் 44. தொகைநிலைச் செய்யுள்
45. இயலியலந்தாதி 46. பதிற்றந்தாதி 47. நூற்றந்தாதி48. உலா 49. உலாமடல்50. வளமடல் 51. ஒருபாவொருபஃது 52. இருபாவிருபஃது 53. ஆற்றுப்படை54. கண்படைநிலை 55. துயிலெடை நிலை56. பெயரின்னிசை 57. ஊரின்னிசை58. பெயர்நேரிசை 59. ஊர்நேரிசை 60. ஊர்வெண்பா 61. விளக்குநிலை 62. புறநிலை 63. கடைநிலை
64. கையறுநிலை 65. தசாங்கப்பத்து 66. தசாங்கத்தியல் 67. அரசன்விருத்தம் 68. நயனப்பத்து 69. பயோதரப் பத்து70. பாதாதிகேசம் 71. கேசாதிபாதம் 72. அலங்காரபஞ்சகம் 73. கைக்கிளை 74. மங்கலவெள்ளை75. தூது76. நாற்பது 77. குழமகன். 78. தாண்டகம் 79. பதிகம் 80. சதகம் 81. செவியறிவுறூஉ82. வாயுறைவாழ்த்து 83. புறநிலைவாழ்த்து84. பவனிக்காதல் 85. குறத்திப்பாட்டு 86. உழத்திப்பாட்டு87. ஊசல் 88. எழுகூற்றிருக்கை 89. கடிகைவெண்பா 90. சின்னப்பூ91. விருத்தவிலக்கணம் 92. முதுகாஞ்சி 93. இயன்மொழி வாழ்த்து 94.
பெருமங்கலம் 95. பெருங்காப்பியம் 96. சிறுகாப்பியம்
சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தைப்
பன்னிருபாட்டியல், வெண்பாப்
பாட்டியல், நவநீதப்பாட்டியல், பிரபந்தமரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம், சதுரகராதி, அபிதான சிந்தாமணி முதலியன
இயம்புகின்றன
என்று தமிழில் சிற்றிலக்கிய வரலாறு எனும் நூலை எழுதிய முனைவர் தா.ஈசுவரபிள்ளை
குறிப்பிடுகிறார். சிற்றிலக்கியங்களின்
எண்ணிக்கை 160 என்று `இலக்கிய வகையும் வடிவம்’ என்கிற நூலில்
ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
Tuesday, 21 July 2015
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.
தமிழ்க்குடில் அறக்கட்டளை-Thamizhkkudil Trust நடத்திய கட்டுரைப்போட்டி
2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி - முதல் பரிசு
கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1.
உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக
விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்
பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல்
துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ்
கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய
மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில்
பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர்.
தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன்
பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச்
செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள்
பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2.
எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா,
சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல்,
அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து
இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர்
இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12
வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும்
தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு,
விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார்.
எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது
சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு
பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
நடுவர் குறிப்பு: இக்கட்டுரை அன்னை தொடர்பான அனைத்துக்கூறுகளையும் உள்ளடக்கி முழுமையும், தெளிவும் எளிமையும் உடையதாக அமைந்துள்ளது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.
தலைப்பு : அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.
ஒவ்வொரு மதத்திலும் எத்தனை கடவுளர்கள். சில மதங்கள் பெண்களை மிகுதியாகக் கடவுளாக வழிபடுகின்றன. சில மதங்களில் பெண்கள் வழிபடப்படுவதுமில்லை. இஃது அவரவர் சமய, மத உரிமை. ஆனால் எந்தச் சமயமாக, மதமாக இருப்பினும் தாயை ஒரு தெய்வமாகப் போற்றாத மதமோ சமயமோ இல்லை. உலகின் அனைத்து மதங்களும் சமயங்களும் தாயைத்தான் முதலில் போற்றுகின்றன. இவ்வாறு அனைத்து மக்களும் ஒன்றுபடும் இந்தக் கருத்தினை அனைவரும் உணர்ந்தால் உலகில் எதற்கித்தனை கடவுளர்கள்?
Monday, 15 June 2015
தமிழ் இனி மெல்ல ........நாவல்
தமிழ் இனி மெல்ல......
அரிசோனா மகாதேவன் சார் புலம் பெயர்ந்த ஒரு தமிழர். தமிழின்
அருமையை பெருமையை அந்நிய சூழலில் உணர்ந்து தனக்கான அடையாளம் மொழியே என்பதை உணர்ந்து தான் உணர்ந்ததை
தாய்நாட்டுத் தமிழருக்கும் எடுத்துரைக்க இந்நாவல் புனைந்துள்ளார்.
உணர்வதை உணர்த்த நினைப்பதே ...அதுவும் சுவையாக ... ஒரு கதையாக ....உணர்த்த முயல்வதே .....ஒரு படைப்பின் முதல் வெற்றியாகிறது. வெற்றுரைகளாக இல்லாமல் மாபெரும்
வரலாற்றை ஆழ்ந்து அறிந்து வலுவான
ஆதாரங்களினடிப்படையில் தமிழ் இனி மெல்ல...... என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது
‘பாடிப் பறந்த குயில்’ நாவல்
உயிரோட்டம் நாவல்
FIRM NAME: DHARINI PATHIPPAGAM
FIRM ADDRESS:4A,RAMEA FLATS,32/79 GANDHI NAGAR 4TH MAIN ROAD, ADYAR, CHENNAI-600020
MOBILE NO: 9940120341
VAIYAVAN - UYIROTTAM 300 RS=350
உயிரோட்டம்
எழுத்தாளரின் வையவன் அவர்களின் நாவல். சென்னை தாரிணி பதிப்பக
வெளியீடு.
ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஒரு ஜீவ ஊற்று புதைந்து உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது.
அந்த ஜீவ ஊற்றைக் கண்டறிந்து அதை வெளிக் கொணர்ந்தால் மண்ணில் சொர்க்கத்தை உருவாக்கி விட முடியும் என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது உயிரோட்டம் நாவல்.
Friday, 12 June 2015
அண்ணாமலைப்பல்கலைக்கழக நூல் வெளியீடு
![]() |
| அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைப் பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி அவர்கள் |
![]() |
| மலாயாப்பல்கலை இந்தியவியல் துறைப் பேராசிரியர் முனைவர் குமரன் அவர்கள் |
Subscribe to:
Posts (Atom)









