சேலம் எழுத்தாளர்கள் -2
சேலம் இராமசாமி
இருபதாம் நூற்றாண்டில் பதிப்புத் துறையில் மிக முக்கிய இடம் வகிப்பவர் உ.வே.சாமிநாதயைர். தமிழ்த் தாத்தா என்று போற்றப் பெறுபவர். சேலம் இராமசாமி முதலியார் என்பவரே இவரைப் பதிப்புப் பணியில் ஊக்குவித்தவர்.
தேவநேயப் பாவாணர்
பாவணரின் கொள்கை:திராவிடத்தின் தாய், ஆரியத்தின் (வடமொழி) அடிப்படை தமிழ் என சான்றுகளைல் நிறுவியவர் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சொற்கள் சிலவற்றை எடுத்துக்கைட்டி விளக்கியவர்.
- உலக முதன் மொழி தமிழ்
- உலக முதல் மாந்தன் தமிழன்
- அவன் பிறந்தகம் குமரிக்கண்டம்
தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் வடமொழிக்கு மூலம் என்பது அவர்தம் உண்மையான அடிப்படைக் கொள்கைகளில் சிலவாகும்.
விருதுகளும் சிறப்பு பெயர்களும்:
மதுரை தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங்காவல் விருது வழங்கியது.
குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்கினார்.
தமிழக அரசு - செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கியது.
எழுதிய நூல்கள்:
01. இசைக் கலம்பகம்
02. இயற்றமிழ் இலக்கணம்
03. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்
04. ஒப்பியன் மொழி நூல்
05. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
06. தமிழர் திருமணம்
07. திராவிடத் தாய்
08. பழந்தமிழாராய்ச்சி
09. இசைத்தமிம் சரித்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
இறுதி நாட்கள்:
தன்னலம் சிறிதுமின்றி, குலமத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த ‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படும் ஞா. தேவநேயப் பாவாணர்.
முருகுசுந்தரம்
கவிஞர் முருகு பேச்சாற்றல் மிக்க நல்லாசிரியர்..
1962ம் ஆண்டு மு.க.வின் தலைமையில் திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்ற
கவியரங்கில் பங்கேற்றவர், தொடர்ந்து நூற்றுக் கணக்கான கவியரங்கங்களில்
பங்கேற்றுக் கவி பாடியுள்ளார். இவரது சமகாலக் கவிஞர்கள் – அப்துல் ரகுமான்,
சுரதா, வாணிதாசன், முடியரசன், தமிழன்பன், சிற்பி, புவியரசு, சேலம் தமிழ்
நாடன் ஆகியோர்.
இருபது உரை நடை நூல்களையும், ஒன்பது மிகச் சிறந்த கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறுகதைகள் எழுதுவதில் நாட்டமில்லாதவர், சில நாடகங்களையும், புதினங்களையும் படைத்துள்ளார்.
பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் – முக்கியமாக 1976ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது. 1994 – ஈரோடு ஜேசிஸ் மன்றத்தால் OUTSTANDING CITIZEN விருது. 1990ல் தமிழக அரசின் பாரதிதாசன் விருது.
ஓய்வுக்குப் பின்னர் சேலம் தமிழ்ச் சங்கப் பொறுப்பில் இருந்தார். சொற்பொழிவு,கவியரங்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றதுடன்,கவிதை கட்டுரை, மானிடவியல் பற்றிய ஆய்வுகள் செய்து வந்தார். 2007ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, தம் பூத உடல் நீக்கிப் புகழுடம்பெய்தினார்
இருபது உரை நடை நூல்களையும், ஒன்பது மிகச் சிறந்த கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறுகதைகள் எழுதுவதில் நாட்டமில்லாதவர், சில நாடகங்களையும், புதினங்களையும் படைத்துள்ளார்.
கவிஞரின் படைப்புகள் வருமாறு:
கவிதை நூல்கள் :
கடை திறப்பு (1969 – உலகின் தலை சிறந்த பேச்சு – கடிதங்களின் கவிதை வடிவம்) – பனித்துளிகள் (1974) – 1982ல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது) – சந்தனப் பேழை (1975 – கழக இதழ்களில் அணி செய்த மணிகளின் தொகுப்பு) – தீர்த்தக் கரையினிலே (1983) – எரி நட்சத்திரம் (1993) – வெள்ளையானை (1998) இளைஞர் இலக்கியம் – பாட்டும் கதையும் (1965) – அண்ணல் இயேசு (1985) – பாரதி பிறந்தார் (1993)உரைநடை நூல்கள் –
மறத்தகை மகளிர் (1956) – பாரும் போரும் (1958) – வள்ளுவர் வழியில் காந்தியம் (1960) - மானமாட்சி (1962) – காந்தியின் வாழ்க்கையிலே (1963) – கென்னடி வீர வரலாறு (1965) - தமிழகத்தில் குறிஞ்சி வளம் (1964) – நாட்டுக்கொரு நல்லவர் (1966) - பாவேந்தர் நினைவுகள் (1979) – அரும்புகள், மொட்டுகள், மலர்கள் (1981) - குயில் கூவிக் கொண்டிருக்கும் ( (1985) – புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் (1985) - மலரும் மஞ்சமும் (1985) – பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம் (1990) - புகழ் பெற்ற புதுக் கவிஞர்கள் (1993) – சுரதா ஒரு ஒப்பாய்வு ( 1999) - பாவேந்தர் படைப்பில் அங்கதம் (2001) – முருகுசுந்தரம் கவிதைகள் (2003) - பாவேந்தர் ( 2007 – monographs)பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் – முக்கியமாக 1976ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது. 1994 – ஈரோடு ஜேசிஸ் மன்றத்தால் OUTSTANDING CITIZEN விருது. 1990ல் தமிழக அரசின் பாரதிதாசன் விருது.
ஓய்வுக்குப் பின்னர் சேலம் தமிழ்ச் சங்கப் பொறுப்பில் இருந்தார். சொற்பொழிவு,கவியரங்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றதுடன்,கவிதை கட்டுரை, மானிடவியல் பற்றிய ஆய்வுகள் செய்து வந்தார். 2007ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, தம் பூத உடல் நீக்கிப் புகழுடம்பெய்தினார்
க. வை. பழனிசாமி
கவி ஒரு கதைக்கவிதை. 1987 ஜூலை
காதல்வெளி 1988 அக்டோபர்
பிஞ்சுவிழிகளில் அக்டோபர் 1988
வெண்மை ஒரு நிறமல்ல ஜூலை 1990
கவிதைகளிலிருந்து கவிதை முந்தைய கவிதைகளின் தொகுப்பு
வேறு வேதம் அக்டோபர் 1997
உடலோடும் உயிர்
சிறுகதை
இடமாற்றம் - டிசம்பர் 1993
குழந்தைகளுக்கான கதை
கண்மணிக்கு அப்பாவின் கதைகள் - ஆகஸ்ட் 1991
நாவல்
மீண்டும் ஆதியாகி - பிப்ரவரி 2000
ஆதிரை - ஆகஸ்ட் 2010
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை நூல்கள்
The New Wrecking Ball - July 1990
The Fifth Way - April 2000
( Both Translated by Vijay Elangova )
இவருடைய வலைப்பூ:
http://kavaipalanisamy.blogspot.in/
சேலத்துச் செம்மல் தமிழ்நாடன்
ஆசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர்..
-சேலத்தில் அருங்காட்சியகம் அமைத்திட அடிப்படைப் பணிகள் நடத்திய சேலம் ஓவியர்-எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் (1975)
-தமிழ்நாட்டு அரசின் வரலாற்று ஆவண ஆய்வுக் குழு மண்டல உறுப்பினர். அதன் சேலம் கிளை மாவட்ட ஆட்சியரைப் பதிப்பாளராகக் கொண்டு நடத்தும் வரலாற்று ஆவண செய்தி மடல் ஆசிரியர் (1985 - ).
-சேலம் ஆவணக் காப்பகம் அலுவலகம் வரக் காரணர்களில் ஒருவர்
-கொல்லிமலை ஓரிவிழா காலங்களில் நாமக்கல் மகளிர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு வரலாற்று ஆய்வரங்குகள் நடத்தியவர் (1985, 1986)
-தமிழ்நாடு அரசு நடத்திய கண்காட்சியில் (சென்னை தீவுத்திடல்) சேலம் மாவட்டம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் (1985 - 90) முதற்பரிசு பெற உழைத்த வல்லுநர் குழுவினர்.
-வரலாற்று மூலங்கள் பாதுகாத்தல், அதைக் கற்பித்தல் என சிறப்புப் பயிற்சி பெற்றவர் (மைய அரசுப் பண்பாட்டுத் துறை). சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்க்கு இத்தகு முகாம்கள் பல நடத்தியவர்.
-தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்
-கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.
-பாவேந்தரின் படைப்பான குமரகுருபரன் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000).
-சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர்.
-தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995)
-கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980 - ).
-கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுனர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர்.
-தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்
-கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர்.
அத்துடன்
-பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்
-புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர்
கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர்.ராசுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
-சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
-தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்
-கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்
-தனது மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.
தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:
-தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)
-வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் *பரமத்தி வேலூர்) (1995)
-பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)

-சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
-சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
-கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
-2000 yeas of Salem (1976)
-The Story of India Indra 1975
-அன்புள்ளம் அருணாசலம் 2005
-சேலம் மையப்புள்ளி 2010
தொகுத்த நூல்கள்
-South Indian Studies (1981)
-சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)
-தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
-தமிழ்னாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
-தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
-கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)
மேலும் பல இலக்கிய, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார்.
சி. மணி
தொடக்க காலப் புதுக்கவிதைப் படைப்பாளர்களுள் ஒருவர் சி. மணி. இவரது இயற்பெயர் s. பழனிசாமி. சி. மணி என்பதுடன் வே. மாலி, செல்வம், ஓலூலூ, ப.சாமி எனும் புனை பெயர்களிலும் எழுதியவர். பெரும்பாலும் சி. மணி எனும் பெயரே நிலைத்து விட்டது. 1936இல் பிறந்தவர் இவர். முதுகலை ஆங்கில இலக்கியம் படித்த இவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சேலத்தில் வாழ்கிறார்.
‘வரும்போகும்’ (1974), ‘ஒளிச்சேர்க்கை’ (1976), 'இதுவரை' (2000) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். ‘யாப்பும் கவிதையும்’ எனும் இலக்கணக் கட்டுரை நூலும், ‘அலசல்’ எனும் நாடகமும், ‘தாண்டவ நாயகம்’ எனும் நெடுங்கதையும் இவரது பிற படைப்புகள். சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அமெரிக்கத் தமிழறிஞர் பேரா. ஹெரால்டு ஷிஃப்மனுடன் இணைந்து அகராதியியல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். ‘கிரியா’ வெளியிட்ட ‘தற்காலத் தமிழ் அகராதி’ உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். குமரன் ஆசான் பரிசு, தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசு மற்றும் சில விருதுகளையும் பெற்றுள்ளார்.
சில கவிதைகள்
கிளை தள்ளும் ஆலம்
வளைந்தள்ளும் வானவில்
அலைந்தள்ளும் கார்குழல்
இறக்க வேற்றம் துள்ளும்
கயல் புரளும் கண்ணி
குரலென்னும் பனி வெளியில்
சல்லென்று சறுக்கியேறி
இறங்கியாட வரும் பாடல்;
சீர் விரல் சதிராடத்
தோல் அதிர்ந்தெழும் தாளம்.
விழியசைவில் காதல்
இடையசைவில் கூடல்
மூச்சசைவில் வாழ்வு
வெறுமையும் உருவமும்
வேறுபட வில்லை:
வெறுமைதான் உருவம்.
உருவந்தான் வெறுமை
என்று புத்தர் சொல்லிப்
புண்ணியம் கட்டிக் கொண்டார்.
நல்ல வேளை,
இல்லை யென்றால்
இன்றைய இலக்கி யத்தில் உருவம்
இருக்கிற தென்பதை நிறுவும் வழியேது?
தமிழறிஞர் சேலம் கோ.வேள்நம்பி ...
தமிழ்ப்பணிகள்:
நாடகம்:
நெருஞ்சிப்பூ
முத்தமிழ்
விடியலைக் காணாத விழிகள்
கவிதை:
தனக்குவமை இல்லாதான்
வண்ணண நிலவின்
வளர்கலை
வெள்ளி உருகி விழுதுகள் ஆகி
உரைநடை:
புரட்சிக்கவிஞரின் தாலாட்டு
செய்யுள் நயம்
தமிழ் தந்த பேறு(அமெரிக்கப் பயண இலக்கியம்)
சிறகுமுளைத்த நாள்முதல்
தொகுப்பு:
தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்(அறிஞர் அண்ணா உரைகள்)-
2009
சேலம் புலவர் அண்ணாமலை
பிரபலமான குயில் பண்ணை பதிப்பகமும் அச்சகமும் நடத்தி வந்தவர் புலவர் அண்ணாமலை
புலவர் கா.கோவிந்தன்
சேலம். புலவர் ச. சீனிவாசன்
புலவர். மு. வைத்திலிங்கம் .
தேன்மொழி பதிப்பகம், சேலம் .
கவிஞர் வாழை வளவன்
-இவரது நூல்
மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை
சேலம் பா. அன்பரசு
ஈடுபட்டுப் பல நூல்களை எழுதியுள்ளார். தகடூர் (தருமபுரி) அதியமான்
பெருவழி நாவல்தாவளத்துக்குக் காதம் 27 என்பதைக் காட்டும்
மைல்கல்லைப் புலவர் மா.கணேசன் உதவியுடன் 1978ஆம் ஆண்டு
கண்டுபிடித்தார்.
சேலம் பாவலர் எழுஞாயிறு
'சேலம் பெரியார்’ என்று
உவமைக் கவிஞர் சுரதாவால் சிறப்புச் செய்யப்பட்டவர் சேலத்தைச்
சேர்ந்த பாவலர் எழுஞாயிறு!
கு.கணேசன்
சேலம் கவிஞர் ச .கோபிநாத்
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர்
ச .கோபிநாத் அவர்கள் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி
வரும் படைப்பாளி .பல்வேறு பரிசுகளும் ,விருதுகளும் பெற்றவர் .ஆங்கில இலக்கியத்தில்
பட்டம் பெற்று ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துக் கொண்டே தமிழ்ப்பணியும்
செய்து வருவதற்கிறார்.
இவரதுகவிதை நூல் -பூச்சிகளின் கனவுகள்
சில கவிதைகள்.
கோவில் வாசல்
இரத்த சுவடுகள்
அன்பே கடவுள் ?.
முந்தி செல்லும் வாகனங்கள்
முதலில் செல்கிறது
ஓட்டுநர்கள் உயிர் !
வைகை ஆற்றில் அழகர்
காவிரி ஆற்றில் ரங்கன்
நட்டாற்றில் மனிதன் !. .
கனத்த ஓசையுடன்
வெடித்துச் சிதறும் பட்டாசுகள்
படபடப்பாய் வண்ணத்துப் பூச்சி !
குழைந்தைகள் மறந்தனர்
யானைச்சவாரி
முதியோர் இல்லத்தில் தாத்தாக்கள் !
பிழையாய் பிறப்பு
வளர்பிறையாய் வாழ்வு
சாதிக்கும் திருநங்கைகள் !
இரு விரல்களுக்குக்கிடையே
ஒற்றைக் கால் எமன்
வெண் சுருட்டு !.
நொந்து போனது
நொய்யல் ஆறு
மணல் சுரண்டல் !
பெருங்கடலாய் கருத்துக்கள்
சிறுதுளியாய் வரிகள்
ஹைக்கூ !
வழிகாட்டும் குழந்தை
சாலை கடக்கும் பார்வையற்றவர்கள்
மலர்கிறது மனிதநேயம் !
வாழ்க்கை பட்டறையில்
புடம் போடும் கொல்லராய்
குறள் கொடுத்த வள்ளுவர் !
.
.மதி மயக்கும்
மது மயக்கம்
வீணாகும் மனிதர்கள் !.
காட்டுப் பாதையில்
மனிதர்கள் நடமாட்டம்
மரங்கள் ஜாக்கிரதை !
இரத்த சுவடுகள்
அன்பே கடவுள் ?.
முந்தி செல்லும் வாகனங்கள்
முதலில் செல்கிறது
ஓட்டுநர்கள் உயிர் !
வைகை ஆற்றில் அழகர்
காவிரி ஆற்றில் ரங்கன்
நட்டாற்றில் மனிதன் !. .
கனத்த ஓசையுடன்
வெடித்துச் சிதறும் பட்டாசுகள்
படபடப்பாய் வண்ணத்துப் பூச்சி !
குழைந்தைகள் மறந்தனர்
யானைச்சவாரி
முதியோர் இல்லத்தில் தாத்தாக்கள் !
பிழையாய் பிறப்பு
வளர்பிறையாய் வாழ்வு
சாதிக்கும் திருநங்கைகள் !
இரு விரல்களுக்குக்கிடையே
ஒற்றைக் கால் எமன்
வெண் சுருட்டு !.
நொந்து போனது
நொய்யல் ஆறு
மணல் சுரண்டல் !
பெருங்கடலாய் கருத்துக்கள்
சிறுதுளியாய் வரிகள்
ஹைக்கூ !
வழிகாட்டும் குழந்தை
சாலை கடக்கும் பார்வையற்றவர்கள்
மலர்கிறது மனிதநேயம் !
வாழ்க்கை பட்டறையில்
புடம் போடும் கொல்லராய்
குறள் கொடுத்த வள்ளுவர் !
.
.மதி மயக்கும்
மது மயக்கம்
வீணாகும் மனிதர்கள் !.
காட்டுப் பாதையில்
மனிதர்கள் நடமாட்டம்
மரங்கள் ஜாக்கிரதை !
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?