நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 30 January 2014

சேலம் எழுத்தாளர்கள் -1



சேலம் பகடலு நரசிம்ஹலு( தமிழின் முதல் பயண இலக்கியம்)


1888 ஆம் ஆண்டு சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம் என்ற நூலே புதிய தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. 1886 ஆம் ஆண்டில் கல்கட்டா நகரில் சர்வ ஜன மாநாடு நடைபெற்றது. அதில் அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பாக சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு கலந்து கொண்டார். அப்பயண அனுபவத்தை ஆரிய திவ்ய தேச யாத்திரையின் சரிதம் என்னும் பெயரில் 528 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1913ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் தக்சின இந்திய சரித்திரம் என்னும் தலைப்பில் இன்னுமொரு பயண இலக்கிய நூலையும் வெளியிட்டார்.

ஜலகண்டபுரம் ப.கண்ணன்  


    காதல் மனம்
    குறள்நெறி இசையமுது (முதல் பகுதி)
    குறள்நெறி இசையமுது (இரண்டாம் பகுதி)
    குன்றுடையான் (கதையும்பாடலும்)
    கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்
    சிந்தனைச் சித்திரம்

    நந்திவர்மன்
    பகுத்தறிவு (ஆசிரியரின் புத்தக வெளியீடு1951)
    பகுத்தறிவு (ஆசிரியரின் புத்தக வெளியீடு1956)
    பட்டவராயன்
    பதினாறும் பெறுக
    மின்னொளி

வில்லியப்பப் பிள்ளை


 தாது வருடப் பஞ்சம் என்று தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்பட்ட இப்பஞ்சத்தைப் பற்றி பல பாடல்கள் இயற்றப்பட்டன. வில்லியப்பப் பிள்ளை பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் என்ற நூலை இயற்றினார்.

வெண்ணந்தூர் குருசாமி


தாது வருடப் பஞ்சம் என்று தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்பட்ட இப்பஞ்சத்தைப் பற்றிகும்மிப் பாடல்களை எழுதியுள்ளனர்.

வெண்ணந்தூர்  பரமானந்த நாவலர்


செங்குந்தர் துகில்விடு தூது

இத்தமிழகம் நிலப் பிரிவுக்குரிய மக்கட் பகுதியே யன்றிக் குலப்பிரிவான மக்கட் பகுதியை நெடுங்காலத்திற்கு முன் எய்தி யிருந்ததில்லை என்பதை அறிஞர் அறிவர். ஆயினும் பலவற்றாற் பரந்துள்ள சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடிவைத்தனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் காணப்படினும், சில சாதியாருடைய பண்டைக்கால வழக்க வொழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைப்பதனால், சாதி நூல்கள் அறவே கடியப்படத் தக்கன அல்ல. இத்தகைய பயன் கருதியும் சாதியைப் பற்றிக் கூறும் நூல்களை வெளியிடலாம். ஆதலின், இந்நூல் செங்குந்தர் என்னும் ஒரு மரபினரைப் பற்றிக் கூறுகின்றது.

இந்நூல், முதலில் காப்புச் செய்யுள் ஒன்றும், இடையில் 271 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளோடு நேரிசை வெண்பா வொன்றினையும் பெற்றுத் திகழ்கிறது. இஃது, ஆண்பால் பெண்பால்மீது விடுத்த தூதின்பாற் படும்.

ஆசிரியர் வரலாறு.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சேலம்-வெண்ணந்தூர் என்னும் ஊரில் வீரசைவாசாரம் பொருந்திய செங்குந்தர் குலத்தில் உதித்த பரமானந்த நாவலர் என்பார் இதன் ஆசிரியர் ஆவர். இவர் இளமைப் பருவ முதற்கொண்டே முருகக் கடவுளின் கருணை நோக்கம் பெற்று, இலக்கண இலக்கியங்களை நன்கு தெளிவுபடக் கற்றுணர்ந்து, விருதுகவி பாடும் திறமை எய்தி, எண் திக்கிலும் விருதுகவி பாடி வெற்றி முழக்கம் செய்தவர் ஆவர். இச் செய்திகள், இந் நூலின் இடையே காணப்படும் பின்வரும் அடிகளால் அறியக் கிடக்கின்றன.


    '- சேர்கொங்கில்
    சேலம் வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்
    வேலரரு ளாலே விருதுகவி-நாலுதிக்கும்
    நாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்
    பூட்டுமன்பா லிட்டலிங்கப் பூசைசெய்து-கூட்டருள்சேர்
    வீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல
    தீரனென்று சேதியெல்லாஞ் செப்பினேன்”


பேரரசர்களாலும், சிற்றரசர்களாலும், கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல் பெருமக்களாலும் தமது செங்குந்த குலவதிபர்களாலும் நன்கு ஆதரிக்கப்பெற்றுப் புகழ் பெற்றவர். முருகன் எழுந்தருளாநின்ற சைவத் தலங்களில் எல்லாம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி தரிசித்தவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கின்றது. இவர் கவி பாடுந் திறமையே யன்றி,


    “செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்குங்கால்
    நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை-வையகத்தில்”


என்று அவ்வையாரால் சிறப்பித்துப் பாடப்பெற்றதும் பாவம் அல்லாததும் என்று கருதப்படும் தறிநெய்தற்றொழிலை குலத் தொழிலாகக் கொண்டவர். இவர்

    "முன்னோர் மொழிபொருளேயன்றி,

    யவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்"

என்பதற்குச் சான்றாக, இந்நூலில் பலவிடங்களில் முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். மற்றும், செங்குந்தரின் அருமை பெருமை உயர்வுகளையும், கடவுள் பற்று, குணந்தொழில் முதலிய இயல்புகளையும் விளக்கியுள்ளார். செங்குந்தர் வீரவாகு தேவரின் வழிவந்தோர் எனவும், ஈகை, வாய்மை, ஒப்புரவு, கொல்லாமை முதலிய அருங்குணங்களையும் உடையவர் எனவும் கூறியுள்ளமை காணத்தக்கது.

பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயர் 

சோழீசுரர் மல்லைக் கோவை.இம்மல்லைக் கோவை பாடிய ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயரென்பவர். பாகை என்னும் ஊரினர். இற்றைக்கு 334 ஆண்டுகளின் முன்பு (கி.பி.1634) வாழ்ந்தவர். இவரியற்றிய வேறு நூல்கள் 
அர்த்தநாரீசுவரர் சந்திரசேகரமால,
கபிலமலைக் குழந்தைக் குமாரர் வருக்கக் கோவை முதலியன. இவர் மல்லசமுத்திரக் காணியாளர்களாகிய விளிய குல வேளாள குலச் செல்வர்களின் * வேண்டுகோளின்படி இந்நூல் இயற்றினார் எனத் தெரிகிறது. இந்நூலாசிரியரின் பெயர்போன்ற பெயர் சோழர்காலக் கல்வெட்டொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
கபிலைமலைக் கோவை: பிள்ளை பெருமான் சிறை மீட்டான் கபிராயர் என்பவர் கபிலைமலைக் கோவை என்ற அகப்பெருமாள் இலக்கிய நூலை சுவைமிகப் பாடியுள்ளார். அவரது காலம் கலியுக சகாப்தம் 4740. தற்போது கலியுக சகாப்தம் 5095 ஆகும். ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்தவர். பாகை எனும் நகரத்தில் அவர் பிறந்தார். அவர் கபிலைமலை குழந்தை குமாரரைக் குலதெய்வமாக கொண்டவர். கபிலைமலைக் கோவை இந்நூல் காப்பு செய்யும் முதலாக 105 செய்யுளை கொண்டது. இந்நூலின் பாட்டுடை தலைவனாகிய முருகக் கடவுளை ஞானக் குழந்தை குமாரர் என்றும் இவர் பூமியின் மேல் முற்றும் துறந்த முனிவர்களாலும், தேவர்களாலும் அரசர்களாலம் துதிக்கப்படுவராவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் 

குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்,

மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும்

 மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.பன்முக

 ஆளுமையைக் கொண்டவர்.
மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 
 1. தமிழ்,
2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும்,
3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு,
5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை,
9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

பெருஞ்சித்திரனாரின் நூல்கள்
எண்சுவை எண்பது
பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
ஐயை
கொய்யாக் கனி
கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
பள்ளிப் பறவைகள்
மகபுகுவஞ்சி
கனிச்சாறு (மூன்று தொகுதிகள்)
நூறாசிரியம்
தன்னுணர்வு
இளமை உணர்வுகள்
பாவேந்தர் பாரதிதாசன்
இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
வாழ்வியல் முப்பது
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
உலகியல் நூறு
அறுபருவத் திருக்கூத்து
சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
செயலும் செயல்திறனும்
தமிழீழம்
ஓ! ஓ! தமிழர்களே
தனித் தமிழ் வளர்ச்சி வரலாறு
நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
இளமை விடியல்
இட்ட சாவம் முட்டியது
நமக்குள் நாம்.




புலவர் இறைக்குருவனார்  

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அன்பு மருமகனும், தனித்தமிழ் ஆர்வலருமான இறைக்குருவனார் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் உயர்வுக்காகவும், தமிழ் இனத்தின் உரிமை வாழ்விற்காகவும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றியவர் ஆவார்.   


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?