நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday, 1 October 2016

அரசியல் நோக்கில் வள்ளுவரும் சாணக்கியரும்


Image result for sanakyaஅரசியல் நோக்கில் வள்ளுவரும் சாணக்கியரும்Image result for valluvar
பொருட்சுருக்கம் வள்ளுவர்-சாணக்கியர்-அரசியல்-அரசன்-கல்வி-அமைச்சர்-ஒற்றன்-வார்த்தை-கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்தல்.
முன்னுரை
மக்கள் ஒத்து வாழ அரசமைப்பு, அதன் செயல்பாடுகள், கடமைகள், சட்டங்கள், தண்டனைகள் போன்றவை இன்றியமையாதன. முடியாட்சி, குடியாட்சி எவ்வகை ஆட்சியாயினும் அதை நடத்தக்கூடிய மன்னனை அல்ல தலைவனைப் பொருத்தே அரசு அமைகின்றது. வள்ளுவரும் சாணக்கியரும் முடியாட்சி காலத்து அரச நிலவரங்களை, நீதிகளைச் சொல்லிச் சென்றாலும், தற்காலத்திற்கும் அவை பொருந்துகின்றன. வள்ளுவர் வகுத்த வள்ளுவமும், சாணக்கியர் வகுத்த அர்த்த சாத்திரமும் பல கருத்துக்களில் ஒத்துப்போகின்றன. வள்ளுவர் காலத்தை விட பிற்காலத்தவரான சாணக்கியர் (கி.பி.நான்காம் நூற்றாண்டு) வள்ளுவத்தையே முதனூலாகக் கொண்டு பல கருத்துகளைக் கூறிச் சென்றுள்ளார் என்று கூறக்கூடிய அளவிற்கு ஒற்றுமைகள் உள்ளன.

Friday, 30 September 2016

சுயபுராணம்



என்னுடைய மாணவி வெ.வெண்ணிலாவின் முன் பொதுவாய்மொழித்தேர்வு

  உடன் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர்

Tuesday, 27 September 2016

திறனாய்வு நோக்கில் அன்னை எனும் பூங்காற்று (புதுக்கவிதை)




திறனாய்வு நோக்கில் அன்னை எனும் பூங்காற்று (புதுக்கவிதை -திறனாய்வு நூல்)


முனைவர் ஜ.பிரேமலதா



1.அச்சாணி
2.தாயின்கண்டிப்பு
3.தாயேகடவுள்
4.சொர்க்கத்தை அடையும் வழி
5.ஆனந்தம் விளையாடும் வீடு
6.தாயின் மனம்
7.
தாயன்பின் மேன்மை
8.
தாயின் சேவை
9.
தாயின் பண்பு
10.
உறவுகள்...
11.அம்மா ஒரு பாடகி....
12.பெண்ணின் பல நிலைகள்
13.அந்நியக் கலாச்சார மோகம்
14.‘
அன்னை எனும் பூங்காற்றுசொல்லும் வேதம்

கண்ணகி - ஒரு பெண்நிலை வாதம்





Image result for கண்ணகி  

கண்ணகி-ஒரு பெண்நிலை வாதம்

 

கோவலன் பாண்டியனால் கொல்லப்பட்ட பின்னர் கண்ணகி இடது முலையை திருகி மதுரை மீது விட்டெறிந்து மதுரையை எரித்தாள் என்று சிலம்பு கூறுகிறது.
 ‘‘சிலப்பதிகாரம் கூறுவது போல் கண்ணகி தானே தனது இடது முலையைத் திருகி எறிந்தாளா, அல்லது அவளது முலை அறுக்கப்பட்டதா என்பதே அது. சிலம்பு பற்றி சிலப்பதிகாரம் என்ற பெயர் பெற்ற நூல் இறுதியில் முலைப்பூசல் பற்றி அடிக்கடி கூறுகிறது. ஒருவேளை முறைகேட்க மன்னனிடம் கண்ணகி சென்ற போது அவன் ஆட்களால் கண்ணகியின் முலை அறுக்கப்பட்டு அதனால் தான் மக்கள் அரசனையும் அரசியையும் கொன்று நகரத்தையும் அழிக்கு மளவுக்குக் கடுஞ்சினங் கொள்ள உடனடிக்காரண மானதோ என்று கருதத் தோன்றுகிறதுஎன்ற குமரிமைந்தன் கருத்தும் கவனிக்கத்தக்கது.

Sunday, 11 September 2016

தமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான தமிழ்இணையச்சேவை



தமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான
தமிழ் இணையச்சேவை




முன்னுரை

இணைத்தின் மற்றொரு பயன் வலைப்பூக்கள் ஆகும். மின்னஞ்சல்., மின்குழு, இணையதரவு தளங்கள், இணைய இதழ்கள் வரிசையில் மற்றுமொரு மைல்கல் இணைய வலைப்பூக்கள் ஆகும். இது சில இணைய நிறுவனங்கள் இலவசமாக தம்மிடம் கணக்கு துவங்கியுள்ள பயனர்களுக்கு வழங்கும் இலவச சேவையாகும். இச்சேவையை முதன்முதலில் துவங்கிய நிறுவனம்எக்ஸான்யா’  .    ஆகும். 1996ம் ஆண்டில் இச்சேவையை இது தொடங்கியது. இது இணைய பயனர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டதால் கூகுள், வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்களும் இச்சேவையைத் தொடங்கின. தனிநபர் தன் கருத்தை இணையம் வழி பதிவிட இது சிறந்த தளமாகும். கட்டற்ற கருட்துச்சுதந்திரம், நேரம் கிடைக்கும்பொழுது பதிவிடும் வசதி, தம் கருத்துக்களை, படைப்புகளை, வாழ்க்கை அனுபவங்களை, பயண அனுபவங்களை, கலைகளை, புகைப்படங்களை வெளியிட வலைப்பூ மிகச் சிறந்த இடமாகும். இதைப்படிக்கும் பலரும் தம் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்புள்ள பகுதியாகும். இணையத்தில் காலத்தேவைக்கேற்ப பல இணையச் சேவைகள் பெருகி வந்தாலும், பெருகிவரும் பயனீட்டாளர்களுக்கேற்ப மேலும் பல சேவைகள் தேவைப்படுகின்றன. வலைப்பூக்களின் பெருக்கம் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும்பங்காற்றி வருகிறது. பல செறிவுள்ள கருத்துக்களைக் கொண்ட ஆய்வுகள் தமிழ் இலக்கியம் சார்ந்து வெளிவருகின்றன. ஆனால் இவற்றிற்கான ஒருங்கிணைப்பு இல்லை. தரவு பெயர்வுத் திறன் என்னும் இணைய சேவையை வலைப்பூக்களில் பயன்படுத்தினால் இக்குறையை நீக்கி பல கருத்துச் செறிவுடைய கட்டுரைகளை  ஒருங்கிணைக்கமுடியும். இணையச்சேவைகளில் ஒன்றான தரவுபெயர்வுத் திறன் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தரவு கண்டறிதல் , தரவு பெயர்வு தரவு சேர்க்கை, தரவு முழுமை மற்றும் தரவு காப்பு ஆகிய நிலைகளில் தமிழ் வலைப் பூக்களைச்  சரியாக கோர்த்து தமிழ் மாலையாக மாற்ற இந்த ஆய்வுக்கட்டுரை ஒரு முன்னோடியாக இருக்கும்  

15th international internet conference in gandhigramam university, dindigul

15th international internet conference in 
gandhigramam university, dindugul
பேராசிரியர் முனைவர் பத்மநாபபிள்ளை (காந்தி கிராமகிராமிய பல்கலைகழகத் தலைவர்)மற்றும் முனைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் தி. நெடுஞ்செழியன் சான்றிதழ் வழங்கிய போது......


முனைவர் ஜ. பிரேமலதா - வலைப்பூக்களில் தரவுப் பெயர்வுத் திறன் தேவை பற்றி......


மலேசியா சாந்தினி இராமலிங்கத்துடன்....

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களது தலைமையில் நடைபெற்ற ‘தமிழ் வலைப்பூக்கள்” எனும் முதன்மைத் தலைப்பிலான அமர்வில்,

முனைவர் வ.இராஜரத்தினம் - மின் அகராதிகளில் பாட்டும் தொகையும்.

முனைவர் க. துரையரசன் - திரட்டிகள் இதற்கு மேலும்...

6. திரு வீ.கே. கார்த்திகேயன் - இணையத் தமிழும் தகுதிப்பாடுகளும்
முனைவர் இரா. குணசீலன் - வலைப்பதிவு நுட்பங்கள்.
முனைவர் தி.நெடுஞ்செழியன் - சதுரகராதி இலக்கமயமாக்கல்.


Saturday, 4 June 2016

புத்தரும் பெரியாரும்



Image result for buddha Image result for e v ramaswamy naicker          

 புத்தரும் பெரியாரும்


முன்னுரை

இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன. புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு. சுய சிந்தனை, நேர்மை, பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்;கருத்து போன்ற பல கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக் கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள். போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவரகள். சுய சிந்தனையாளரகள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள ஒற்றுமைகளை ஆராய்கிறது.