திறனாய்வு நோக்கில் அன்னை எனும் பூங்காற்று (புதுக்கவிதை -திறனாய்வு நூல்)
முனைவர் ஜ.பிரேமலதா
2.தாயின்கண்டிப்பு
3.தாயேகடவுள்
4.சொர்க்கத்தை அடையும் வழி
5.ஆனந்தம் விளையாடும் வீடு
6.தாயின் மனம்
7.தாயன்பின் மேன்மை
8.தாயின் சேவை
9.தாயின் பண்பு
10.உறவுகள்...
7.தாயன்பின் மேன்மை
8.தாயின் சேவை
9.தாயின் பண்பு
10.உறவுகள்...
11.அம்மா ஒரு பாடகி....
12.பெண்ணின் பல
நிலைகள்
13.அந்நியக் கலாச்சார மோகம்
14.‘அன்னை எனும் பூங்காற்று’ சொல்லும் வேதம்
14.‘அன்னை எனும் பூங்காற்று’ சொல்லும் வேதம்
அணிந்துரை
வையவன்
கவி பாட அறியாதவர்களை கவிஞர்கள் ஆக்கும் ஆற்றல் காதலுக்குத் தான்
உண்டு என்று நாம்
கேள்விப்பட்டிருக்கிறோம்.அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை. இது
எடுத்துக்காட்டு.
அன்னையும் ஒருவரைக் கவிஞர் ஆக்குவாள்.
அதுவும் பெயர் சொல்லி தொழில் கூறினால் அஞ்சும் ஒரு பல் மருத்துவரை.
இது தான் திறனாய்வு நோக்கில் அன்னை எனும் பூங்காற்று
(புதுக்கவிதை)நூலுக்கு முனைவர்
ஜவஹர்பிரேமலதா எழுதிய முன்னுரையைப் படித்தவுடன் எனக்குத்
தோன்றியது.
ஒரு பல்
மருத்துவரின் கவிதைக்குப் பல்கலைக் கழகங்களுக்கு மாணவச் செல்வங்களை
பட்டை தீட்டி வழங்கும் பணியில் இருப்பவர்
முன்னுரை தந்திருக்கிறார்
கவிஞர் டாக்டர்.டிகே.ராம்கமால்
ஒரு பல் மருத்துவர். சேலம் அரசு மருத்துவமனையில்
பணியாற்றி வருகிறார். அரசு மோகன்
குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி பல் மருத்துவத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.அவருடைய
தந்தையார் கிள்ளிவளவன். தாய் பிரேமாவதி
கிள்ளிவளவன். கிள்ளிவளவன் சேலம் மகுடஞ்சாவடி முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்தவர்.
மகுடஞ்சாவடி மக்கள்
‘ஆ. கிள்ளிவளவன் இந்த நூற்றாண்டின் கௌரவம்’
என்று ஊராட்சி ஒன்றிய
கட்டிடத்தில் கல்வெட்டில் பதிக்குமளவிற்கு
அம்மக்களின் நல்வாழ்விற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். இவருடைய தாத்தா தலைவர்
மற்றும் நிர்வாக
இயக்குநர் கங்கா தலைவர் மருத்துவமனை கோவை டாக்டர். ஜே.ஜி.
சண்முகநாதன், MBBS. DA (LOND) இயக்குநர் கங்கா மருத்துவமனை கோவை,கவிஞர் டாக்டர்.டிகே.ராம்கமால்
தன் மருத்துவப் பணிகளுக்கிடையில், ‘அன்னை எனும் பூங்காற்று‘ என்று தன்னை அன்னையைப் பற்றி வடித்துள்ள நெடுங்கவிதைக்கு சேலம் அரசினர் கல்லூரி இணைப்பேராசிரியரும் எழுத்தாளரும்
திறனாய்வாளருமான முனைவர்.ஜவஹர் பிரேமலதா அவர்கள் ஓர் அருமையான முன்னுரையை
வழங்கியிருக்கிறார்.
அதுவும் பிரேமலதா
அவர்கள் எடுத்துக்காட்டும் பல நிகழ்ச்சிகளில் எங்கெல்லாம்
அன்னையில் ஈர நெஞ்சமும் அன்பு மழையும் சென்று
பாய்ந்திருக்கிறது என்ற விவரம்
நம் நெஞ்சைக்கவர்கிறது
கோடிக் கணக்கில்
மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில் கூட இறுதிவரை
தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது. இரண்டாம்
உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர்,
தன் மார்பில் தாயின் படத்தைத் தழுவியபடி நாற்காலியில் சரிந்து
கிடந்தார் கோடிக் கணக்கில்
மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில் கூட இறுதிவரை
தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது. இரண்டாம்
உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர்,
தன் மார்பில் தாயின் படத்தைத் தழுவியபடி நாற்காலியில் சரிந்து
கிடந்தார்
மற்றொரு அறிஞரின்
கதை. அவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது ஒரு நாள்
குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பால் இருந்த
ஒரு கண்ணாடிப்புட்டியை எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்போது புட்டி கீழே நழுவி பால் முழுவதும்
கொட்டி யிருக்கிறது.
அவருடைய தாயார் வந்து அதைப் பார்த்தவுடன் சிறுவனாக இருந்த
அவர் பயத்துடன்,''அம்மா,பால்
கொட்டி வீணாகி விட்டது''.என்று நடுங்கியபடி கூறியிருக்கிறார். அதற்கு அவருடைய அன்னை சொன்னாராம். ,''நான் பாலை விட உன்னை நேசிக்கிறேன்.எனக்கு நீதான் முக்கியம்.''என்று கூறிவிட்டுப் பின்னர்,,''மிக அழகாகக் கொட்டியிருக்கிறாயே!பரவாயில்லை கீழே கொட்டிவிட்டது
இனி ஒன்றும் அதைச் செய்ய முடியாது.நீ கொஞ்ச
நேரம் அதிலே விளையாடு.''என்றிருக்கிறார். குழந்தையாக இருந்த அவரும் பயம் நீங்கி அதன்
மேல் விழுந்து புரண்டு குதூகலத்துடன்
விளையாடியிருக்கிறார். .திரும்ப வந்த தாய்,''விளையாடி விட்டாயா?இந்த இடம் இப்போது அசிங்கமாக உள்ளது.இப்போது இந்த
இடத்தைச் சரி செய்ய வேண்டும்.நீ எது
கொண்டு இதைத் துடைக்கப் போகிறாய் ?துணி தரட்டுமா, என்று கேட்டிருக்கிறார்.துணி கேட்டு வாங்கித் துடைக்க
ஆரம்பித்தாராம்..தாயும் அவனுக்குக் கூட
உதவி செய்திருக்கிறார்.
பின் சிறுவனான
அவரிடம் சொன்னாராம்,''இப்போது பாட்டில் ஏன் கீழே விழுந்தது என்று
பார்க்கலாமா? நீ எப்படிபாட்டிலைத் தூக்கினாய்?''என்று கேட்க அவன் செய்து காண்பித்தான்.உடனே அத்தாய் அதே போல ஒரு காலி புட்டியை எடுத்துக்
கொண்டு அவனுடன்
வீட்டின் பின்புறம் சென்று அந்தப் புட்டியில் தண்ணீர் ஊற்றி அதை
எப்படித்தூக்கினால் கீழே விழாமல் செய்ய
முடியும் என்பதை விளக்கிக் காட்டினாராம். சிறுவனான அவரும் ஒரு பாடத்தை அழகாகக் கற்றுக்
கொண்டாராம்.
இப்படிப் பொறுமையுடன்
குழந்தைகளை வளர்த்தால் நிச்சயம் சமுதாயத்தில் அவர்கள்
உயர்ந்தவர்களாக வருவார்கள்என்பதற்குத் தன்
வாழ்க்கையே சான்று என்று கூறியிருக்கிறார்..
பிரேமலதா அவர்கள் முன்னுரையில் பளிச்சென்று ஒளி வீசிய ஒரு கருத்து
'ஒரு நல்ல
கவிதை என்பது தத்துவத்தையோ அறிவுரையையோ கூறுவதற்காக எழுதப்பட்டதல்ல.
அனுபவத்தைப் பிறரிடம் பகிர்ந்து
கொள்வதற்காக எழுதப்படுவதாகும்.
அவ்விதம் மருத்துவர் அவர்கள் தம் பணிக்குப் போகமுற்படும் முன்பு
"உனக்குத் தெரியாமலே
உன் பாதங்களை
பார்வையால் தொட்டு
பக்தியோடு வணங்கி
பணியிடம் நோக்கி
பயணிப்பேன்"" (ப.88)என்கிறார்
நெஞ்சைத் தொடும் இவ்வரிகளை குறிப்பிட்டுக் காட்டும்போது ஜ.பிரேமலதா
அவர்கள் கவிஞரின் குறிப்பை மெளனமாக
நம் நெஞ்சில் ஏற்றுகிறார். வேலை என்றதுமே சலிப்பும் வெறுப்பும் ஏற்படுவது சகஜம்.
ஆனால் கவிஞர் கண்ட அன்னை,
""வேலை செய்யும்போது அலட்டிக் கொள்ள மாட்டாய். வேலைகள்
இருக்கும்போது கழட்டிக் கொள்ள மாட்டாய்"" (ப-45)
அன்னை என்பவள் பசியாற்றுபவள் என்பது உலகறிந்த செய்தி. இங்கே
கவிஞர் மேலும் ஒருபடி போனதை ஜ.பிரேமலதா எடுத்துக்காட்டுகிறார்
என் பசியை மட்டுமல்ல . . .
யார் பசியையும்
பார்த்திடுக
முடியாதவள் நீ
சில நேரமோ. . . . .
தன் பசியை
தாழிட்டுக்
கொண்டவள் நீ
பிள்ளைகளின் இதயம்தான் பெற்றோர் இருக்க வேண்டிய இடம் என்பதுதான் மருத்துவக்
கவிஞரின்
“அன்னை எனும் பூங்காற்று“
கவிதை வலியுறுத்தும் செய்தியாகும்.
இரவுக்கு ஓய்வு பகலில்
பகலுக்கு ஓய்வு இரவில்
உறவுக்காக வாழும் உன்
சிறகுகளுக்கு ஓய்வெங்கே
சொல் தாயே சிந்திக்கவே
நெஞ்சு சிலிர்க்கிறதேஎன்றும்
தாயார் என்பது உன் இயற்கை நிலை.
""தயார்"" என்பதே உன் உயர் நிலை என்றும் கவிஞர் காட்டிய
கருத்துக்களில் நம் உள்ளம் கவரச்செய்கிறது பிரேமலதாவின் முன்னுரை.
அவரது முன்னுரையே
கவிதையை எப்படி ரசிக்கவேண்டும் என்று டிராபிக் போலீஸ் போல்
நெறிப்படுத்தி திசை காட்டி நம்மை
மகிழ்விக்கும் இந்த உத்தி இன்னும் எத்தனையோ நூல்களை ஒருவர் படைக்க ஊக்கம் தரும். வாழ்த்துக்கள்.
கவிஞருக்கும் பிரேமலதா
அவர்களுக்கும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?