நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday, 11 September 2016

தமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான தமிழ்இணையச்சேவை



தமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான
தமிழ் இணையச்சேவை




முன்னுரை

இணைத்தின் மற்றொரு பயன் வலைப்பூக்கள் ஆகும். மின்னஞ்சல்., மின்குழு, இணையதரவு தளங்கள், இணைய இதழ்கள் வரிசையில் மற்றுமொரு மைல்கல் இணைய வலைப்பூக்கள் ஆகும். இது சில இணைய நிறுவனங்கள் இலவசமாக தம்மிடம் கணக்கு துவங்கியுள்ள பயனர்களுக்கு வழங்கும் இலவச சேவையாகும். இச்சேவையை முதன்முதலில் துவங்கிய நிறுவனம்எக்ஸான்யா’  .    ஆகும். 1996ம் ஆண்டில் இச்சேவையை இது தொடங்கியது. இது இணைய பயனர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டதால் கூகுள், வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்களும் இச்சேவையைத் தொடங்கின. தனிநபர் தன் கருத்தை இணையம் வழி பதிவிட இது சிறந்த தளமாகும். கட்டற்ற கருட்துச்சுதந்திரம், நேரம் கிடைக்கும்பொழுது பதிவிடும் வசதி, தம் கருத்துக்களை, படைப்புகளை, வாழ்க்கை அனுபவங்களை, பயண அனுபவங்களை, கலைகளை, புகைப்படங்களை வெளியிட வலைப்பூ மிகச் சிறந்த இடமாகும். இதைப்படிக்கும் பலரும் தம் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்புள்ள பகுதியாகும். இணையத்தில் காலத்தேவைக்கேற்ப பல இணையச் சேவைகள் பெருகி வந்தாலும், பெருகிவரும் பயனீட்டாளர்களுக்கேற்ப மேலும் பல சேவைகள் தேவைப்படுகின்றன. வலைப்பூக்களின் பெருக்கம் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும்பங்காற்றி வருகிறது. பல செறிவுள்ள கருத்துக்களைக் கொண்ட ஆய்வுகள் தமிழ் இலக்கியம் சார்ந்து வெளிவருகின்றன. ஆனால் இவற்றிற்கான ஒருங்கிணைப்பு இல்லை. தரவு பெயர்வுத் திறன் என்னும் இணைய சேவையை வலைப்பூக்களில் பயன்படுத்தினால் இக்குறையை நீக்கி பல கருத்துச் செறிவுடைய கட்டுரைகளை  ஒருங்கிணைக்கமுடியும். இணையச்சேவைகளில் ஒன்றான தரவுபெயர்வுத் திறன் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தரவு கண்டறிதல் , தரவு பெயர்வு தரவு சேர்க்கை, தரவு முழுமை மற்றும் தரவு காப்பு ஆகிய நிலைகளில் தமிழ் வலைப் பூக்களைச்  சரியாக கோர்த்து தமிழ் மாலையாக மாற்ற இந்த ஆய்வுக்கட்டுரை ஒரு முன்னோடியாக இருக்கும்  


வலைப்பூக்களின் பணியும் சிறப்பும்

வலைப்பூ என்பது தனித்துவம் வாய்ந்ததாகவும்  தனி நபருக்கென 
அல்லது தனி கோட்பாடுகளுக்கென  உருவாக்கப்பட்ட  ஒரு  இணையம் 
சார்ந்த வலைப் பக்கமெனக் கொள்ளலாம் . மேலும் வலைப்பூக்கள் என்பது நிர்வாகியின்  மைய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஓர் பன்முகத்  தரவுப் பேழையாகவும் எடுத்துக் கொள்ளமுடியும். அத்துடன் கால வரிசையில் பரிமாறப்பட்ட  தகவல் பதிவுகள் உள்ளடக்கப் பெற்றும்  அவற்றின்  காப்புரிமை  வரம்புக்குட்பட்டு அமைக்கப்பட்ட  ஓர் கணினித் தொடர்புசார்  கருத்துத் தளமாகவும்  கருதலாம். பரந்து விரிந்த  கணினித் தகவல் வலையில் மலர்ந்த தனித்த பூவாய் வனப்புடனும்  வண்ணத்துடனும்  கருத்துக் கொள்கை மணம் பரப்புவதே  தமிழ் வலைப்பூக்களின் தலையாய பணியாகும் . தனி நபர் தன் விருப்பத்திற்கேற்பத் தானறிந்த செய்திகளை வெளியிடும் தனிநபர் இதழ் போன்றவை வலைப்பூக்கள். கவிதை, கட்டுரை, திறனாய்வு, பக்தி, இலக்கியம், சமையல், கோலம், சொந்த அனுபவங்கள், நகைச்சுவை, நையாண்டிகள், பயண புகைப்படங்கள், திருவிழாக்கள், மழலைக் குறும்புகள் முதலான பல தகவல்கள் வலைப்பூக்களில் இடம் பிடித்துள்ளனஇவ்வலைப்பதிவை நடத்துபவரே இதற்கு முழு பொறுப்பு.. நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடும் வசதி, தம் படைப்புகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு, கட்டற்ற கருத்துச் சுதந்திரம் போன்றவை வலைப்பூக்களின் சிறப்பு எனலாம்


இன்றைய தேவை

சங்கம் வைத்து வளர்த்த தமிழ்,  இன்று வலைப்பூக்கள் சேர்த்து இணையம் மூலம்  வளர்க்கப்படுகின்றது. இந்த சீரிய முயற்சியில் பல்லாயிரக்கணக்கான வலைப்பூக்கள் செறிந்த பூந்தோட்டங்கள் நடப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
அனைத்து வலைப்பூக்களின் வண்ணம் , நறுமணம், வடிவம் இவைகள் வேறுபட்டு 
வெவ்வேறாக  இருப்பினும் தமிழ்மொழி சார்ந்த கருத்து செறிவுள்ள படைப்புகள் 
ஒன்று திரட்டப்படுதல் வேண்டும்.அவ்வாறு தமிழ்வலைப்பூக்களின் பொதிந்துள்ள செம்மைக் கருத்துகள் அல்லது தகவலகள் மற்றும் மேற்கோள்கள் ஒன்றுதிரட்ட தரவு பெயர்வுதிறன் மேம்படுத்தப்பட வேண்டும். பாடல்களோ, வசனங்களோ படங்களோ ஒரு வலைப்பக்கத்திலிருந்து வேறு ஒரு வலைப்பக்கத்திற்கு பெயர்த்து கொள்ள வைப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும் . வலைப்பூக்கள் நிறைந்த இதுபோன்ற பூந்தோட்டக்  காவலை நிரல்படுத்துவதன் மூலம்  அனுமதிக்கப்பட்ட தரவு அளவினையும், தரவு பெயர்வு எண்ணிக்கையையும் ஒரு மூடிய வலைத்தொடர்பில் மேற்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக  வலைப்பூவின்  தகவலான பல செய்யுள் வரிகளை  சந்திப்பிழை இல்லாமல் இன்னொரு தளத்தின் வளர்க்கப்பட்ட வலைப்பக்கத்தில் பெயர்வு செய்யும்போது ஏற்படும் சிக்கல்களும்  முக்கிய அமைவு ஏற்பாடுகளின் மாற்றங்களையும் கருத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது. குறிப்பாக சிலப்பதிகாரத்தில் வரும்  கானல் வரி பாடல் வரிகளை வெவ்வேறு வலைப்பூக்களில் பதிவாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து இருக்கலாம். அதுபோன்ற மிகச் சிறந்த கருத்துகளை பெயர்க்க ஓர் சிறப்பு  இணைய சேவை மூலம் இன்னுமொரு வலைப்பக்கத்தில் சேர்க்க முடியும்.

(தமிழ்த் துறை சாராத பார்வையாளர்கள் ஆர்வத்தின் காரணமாக தமிழிலக்கிய பதிவுகளை பார்வையிட நேரும்பொழுது, உதாரணமாக சிலப்பதிகார கானல் வரி தொடர்பான பதிவுகளை வலைப்பூக்களில் தேடுவதென்பது மிகவும் சிக்கலுக்குரியதாகும். ஆனால் தமிழிலக்கியம் சார்ந்த ஓர் ஆய்வாளர் இது போன்ற பதிவுகளை இடும்பொடுது அது தொடர்பான முந்தைய பதிவினைப் பார்வையிட்டு அதற்கு மேலதிகத் தகவல்களையோ, மாறுபட்ட கருத்தினையோ, அல்லது ஒத்த மற்றொரு சான்றையோ தன் வலைப்பூவில் பதிவிட்டிருக்கலாம். ஒரு துறை சார்ந்த பதிவர்கள் ஒத்த பொருண்மையிலான பதிவினை தரவுபெயர்வு செய்வது எளிது. எனினும் தரவு பெயர்வு செய்வதற்கு உரிய முறையில் அனுமதி பெறவேண்டும் எனும் பொழுது சிக்கல் ஏற்படுகிறது. தரவு பெயர்விற்கு வலைப்பூ நடத்துநர் அனுமதி தர வேண்டும். எத்தனை வரிகளை  அல்லது எந்தத்தகவலை தரவு பெயர்வு செய்யலாம் அல்லது  எந்த கருத்தைச் சுருக்கலாம் என்பது போன்ற பல உரிமை தொடர்பான புரிதல்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்டு ஒத்துப் போக வேண்டும்.  இதன் நன்மைகளை இரு தரப்பாரும் புரிந்து கொண்டு தரவு பெயர்வு செய்யும் பொழுது, யாருடைய பதிவு முந்தையது என்பதில் குழப்பம் ஏற்படும். வயது, அனுபவம் போன்றவற்றை விடுத்து யாருடைய பதிவு முந்தையதோ அவருடைய பதிவே முதன்மையானது என்ற  விதியினை தொடர்புடைய பதிவர்கள் ஒத்துக் கொண்டு தரவு பெயர்வு செய்ய அனுமதியளிக்க வேண்டும்.  எவ்வாறாயினும் தமிழிலக்கியத்தின் வளமான எதிர்காலத்தை முன்னிறுத்தி இது போன்ற தரவு பெயர்வு திறனின் நன்மைகளை கருத்திற்கொண்டு பிற மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இது போன்ற சேவைகளைப் பயன்படுத்த தமிழ் வலைப்பூ நடத்துநர்கள் முன்வரவேண்டும். )

( எதை மேற்கோள் காட்டுவதென்பது  தெரியவில்லை)

<<வலைபூக்களின்தரவுகண்டறிதலிலும்தரவுசேர்க்கையிலும்உள்ளசிக்கல்கள்பட்டியல்இட்டுஇதுவரைசொல்லப்பட்டயுக்திகளைமேற்கோள்காட்டிஇந்தஆய்வின்கருப்பொருளைமுன்னிறுத்தல்நலம்>>எதை


தரவு கண்டறிதல்

வலைப்பூக்களில் ஒத்த பொருண்மையிலான பதிவுகளை முதலில்  கண்டறிதல் வேண்டும். உதாரணமாக மாணிக்கவாசகரைப் பற்றிய சரித்திரச் சான்றுகள் கிடையாது என்பதால் இலக்கியச் சான்றுகள் பலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணிக்கவாசகரின் காலம் குறித்த பல சர்ச்சைகள் இணையத்தில் பதிவாகியுள்ளன. மாணிக்கவாசகரின் வாழ்க்கைக் குறித்தோ அல்லது காலம் குறித்தோ சர்ச்சைகளோ விவாதங்களோ பல வலைப்பக்கங்களில் பதிவிடப்பட்டிருக்கலாம். ஒவ்வொருவரும் வேறொரு தளத்தில் அது குறித்த ஏதேனும் ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். அதில் வரும் கருத்துக்கள் பலரால் ஏற்கப்பட்டிருக்கலாம். மறுக்கப்பட்டிருக்கலாம் அல்லது கல்வெட்டு முதலான ஆதாரம் தரப்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் கண்டறிய வேண்டும். இது போன்ற ஆய்வுகளில் ஒருங்கிணைப்பு இருந்தால் தீர்வுகளை எளிதாகக் கண்டறிய முடியும்.
(மாணிக்கவாசகர் தொடர்பான காலம் என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. அகச் சான்றுகள் வழியும் புறச் சான்றுகள் வழியும் பல ஆய்வாளர்கள், கல்வெட்டாளர்கள். தொல்லியலாளர்கள் இன்னும் ஆராய்ந்த வண்ணமே உள்ளனர். அவரவர் கருத்தே முடிந்த முடிவாகக் கூறிக் கொண்டுள்ளனர். ஒருவர் குறிக்கும் முடிவை மற்றொருவர் தன் வலைப்பூவில் மறுக்கிறார். மற்றெருவர் இதையறியாமல் புதிய பதிவொன்றை இது குறித்து பதிவு செய்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் பலவித சான்றுகளைக் காட்டி பலவிதமாக நிறுவுகின்றனர். இது நீடித்துக்கொண்டே செல்கின்றதேயன்றி தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழிலக்கியம் சார்ந்த அறிஞர்கள் குறித்தும் நூல்கள் குறித்தும் முழுமையான நம்பகமான தீர்வுகள் எட்டப்படாமலிருக்கின்றன. ஆய்வுகள் பெருகிப் போகின்றவேயன்றி முடிவுகள் எட்டப்படவில்லை. இது போன்ற நீட்சிமை என்பது தமிழிலக்கிய ஆய்வுகள் மீது ஒரு நம்பகமற்ற தன்மையை ஏற்படுத்தி அதன் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது. ஆழமான ஆய்வுகள் தமிழில் முறையாக மேற்கொள்ளப்படவில்லயோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது கட்டாயம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். இதற்கு தரவு பெயர்வு திறன் கை கொடுக்கும். இது போன்ற சேவைகளைப் பயன்படுத்தினால்  தமிழ் ஆய்வுகளின் நீர்த்துப் போன தன்மையை நீக்க முடியும். )
<<இதுவரைதீர்வுகள்எட்டப்படவில்லையா? தீர்வுகளின்எல்லைவரம்புஅல்லதுநீட்சிமைகுறைஇருப்பின்குறிப்பிடல்நலம்>>


தரவு பெயர்வு


தரவு பெயர்வு என்பது இப்போது பதிவிலுள்ள குறிப்பிட்ட சில ஆதாரத்திற்குட்பட்ட வரிகளை மட்டும் பெயர்த்து மற்றொரு வலைப்பூவிற்குக் கொண்டு செல்வது அல்ல. வரிகளைப் பெயர்ப்பது தானாக நடைபெறும் வகையிலான இணையச் சேவையே தரவு பெயர்வு  ஆகும்.  உரிய அனுமதி பெற்று தரவு பெயர்வு செய்யலாம்.  இதனால் விவாதத்தை ஒரு நேர்மையான தீர்விற்குக் கொண்டு வர வாய்ப்பு ஏற்படும். அல்லது ஒரு சர்ச்சை தொடர்பான பல கருத்துப் பொருண்மைகள் ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மாணிக்கவாசகர் காலம் 3-ஆம் நூற்றாண்டு என்ற கருத்தை முதன்முதலில் எழுதியவர் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள். அவர் காலத்துக்குப் பிறகு தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை நிர்ணயிக்கக் கல்வெட்டுகளும், கலைவரலாறும், ஆராய்ச்சிமுறைகளும் பெருகிவிட்டன. அண்ணாமலைப் பல்கலைத் தமிழ்த்துறைக்கு மாணிக்கவாசகர் காலம் 9-ஆம் என நிர்ணயித்ததில் பெரும்பங்குண்டு. என்றாலும் சர்ச்சைகள் நின்றபாடில்லை.

http://valavu.blogspot.in/2011/09/1.html  தளத்தில் கி.இராம என்பவர் தன் ஆராய்ச்சியின் முடிவான மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் முற்பட்டவர் 3ம் நூ என நிறுவுகிறார். இதற்காக பல ஆதாரங்களையும் சான்று காட்டி நிறுவுகிறார். இவர் காட்டும் சான்றுகளையும் முடிவையும்  மட்டும் மற்றொரு தளத்தில் உரிய இடத்தில் காட்சிப்படுத்தும்படி செய்தால் இது போன்ற கட்டுரைகளைப் படிப்பவர்கள் ஒரு முழு கட்டுரையையும் படிக்காமல் உரிய சான்றுகளை மட்டும் படிக்கலாம்.
https://tamilandvedas.com/ தளத்தில் லண்டன் சுவாமிநாதன் என்பவர் கி.இராம குறிப்பிடாத சான்றொன்றைக் காட்டுகிறார். சுந்தரர் பாடிய திருத் தொண்டர் தொகையில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று வருகிற வரி மாணிக்கவாசகரையே குறிப்பதாகக் குறிப்பிட்டு நிறுவுகிறார். இவர் கி.பி.  மூன்றாம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்தாரென்பதை வற்புறுத்துகிறார். மற்றொரு வலைப்பூ நடத்தும் திவாகர் இதை தன் கட்டுரையில் மறுக்கிறார்.

http://muttaram.blogspot.in/2015/11/blog-post.html நா. கணேசன் மிண்டிய மாயா  வாதமென்னும் சண்டமாருதம் சுழித்தடித்து ஆர்த்துஎன்றும் சிவன் "பள்ளிக் குப்பாயம்" அணிவதாகப் பாடுகின்ற மாணிக்கவாசகரின் பாடல்களின் அகச்சான்றைக்கொண்டும் இவர் கி.பி.  ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தாரென்பதை வற்புறுத்துகிறார்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி உள்ள கோயிலைக் கட்டியவர் மாணிக்கவாசகர் என்பது புராணம். தற்போது அக்கோயிலின் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கோயிலின் கருவறையையும் கனகசபை மண்டபத்தையும் எழுப்பியவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதி செய்திருக்கிறது. ‘வழி வழியாக நாம் கேட்டு வந்த வரலாற்றுக்கான ஆவணமாக இக்கல்வெட்டு கிடைத்துள்ளது. மாணிக்கவாசகர்தான் இக்கோயிலை9 ம் நூற்றாண்டில் கட்டினார் என்பதை அதில் ஒரு செய்யுள் குறிப்பிடுகிறது’’ என்கிறார் தமிழக அரசின் தொல்லியல் துறை திருச்சி மண்டலப் பதிவு அதிகாரி கோ. முத்துசாமி.


இது போன்ற சர்ச்சைக்குரிய வாதங்களைப் பலரும் பல சான்றுகளைக் காட்டி நிறுவுகின்றனர். இந்த சான்றுகளை மட்டும் ஒருங்கிணைக்கும்படி தரவு பெயர்வு செய்வது பல தீர்வுகளுக்கு வழி வகுக்கும்.

  
தரவு சேர்க்கை

தமிழிலக்கியத்தில் பழந்தமிழ் சொற்கள் குறித்த பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. உரையாசிரியர்கள் கூறிச் சென்ற சொற்களுக்களுக்கெல்லாம் தற்போதைய ஆய்வாளர்கள் புதுப் பொருளைக் கண்டறிந்து ஆய்ந்து சொல்கிறார்கள். கண்ணகி மதுரையினை எவ்வாறு எரித்தாள் என்று கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் 
                                       - பா.எண்: 5

ஆனால் திருத்தம் பொன் சரவணன் (http://thiruththam.blogspot.in/)
என்பவர் முலை என்பதைற்கு மார்பகம் என்று பொருள் கொள்ளாமல் கண் என்று தக்க ஆதாரத்துடன் நிறுவுகிறார். முலை என்னும் சொல் உணர்த்தும் வேறு பொருட்கள்
'கண் புருவம்' மற்றும் 'கண்' ஆகும். இதற்கு இவர் சிலப்பதிகாரத்திலிருந்தே பல இடங்களைச் சான்று காட்டுகிறார்.

...முழுமதி புரைமுகமே! இளையவள் இணைமுலையே எனை இடர் செய்தவையே!' - பா.எண்: 7 முகம் பற்றிக் குறிப்பிடும் வரிகளில் அடுத்ததாக வரும் இணை முலை என்பது முகத்தில் உள்ள கண் என்பதையே தொடர்ந்து குறிப்பிடுவதாக்க் கூறுகிறார். பெருங்குளம் ஆயிற்று எம் இடைமுலை நிறைந்தே - குறு.-325
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே - அக.-69 என சங்கப் பாடல்களையும் சான்றுகாட்டுகிறார். சிறுபான்மையிடங்களில் முலை என்ற பொருளில் வருவதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால் உரையாசிரியர்கள் ஒரு சொல்லின் ஒரு பொருளை மட்டுமே கருத்தில் கொண்டு உரை எழுதியதால் கண்ணகி மார்பகத்தை எறிந்தாள் என்று கூறிவிட்டார்கள் என்கிறார். இது விவாத்திற்குரிய  பொருண்மையாகும். சங்கத் தமிழிலக்கியத்தில் எங்கெல்லாம் இச்சொல் வருகிறதோ அங்கே  இவருடைய கருத்தைப் பொருத்திப் பாக்கலாம். அதற்கு தரவு சேர்க்கை துணைபுரியும்.

(இது போல், சிறுபுறம் என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றன. பிடரி, முதுகு, கொடை. பெரும்பாலான சங்க இலக்கிய உரையாசிரியர்கள் முதுகு என்றே கருத்தில் கொண்டு பொருள் கூறுகிறார்கள். ஆனால் இவர் சிறுபுறம்என்பது மேற்கூறிய பொருள்களில் பொருந்தாது என்று கூறி கன்னம் என்பதே பொருத்தமாக இருக்கும் என தக்க சான்றுகளோடு நிறுவுகிறார். பாடல்களில் வரும் சொற்றொடர்களின் பொருளானது இடம், காலம், பொருள், உணர்ச்சி சார்ந்து எந்தப் பொருளில் வருகிறது என்று ஆராயாமல் ஒருவர் கூறிய பொருளிலேயே பலரும் உரை கூறுகின்ற மரபு தொடர்கிறது. இந்நிலை மாற வேண்டும் உரையாசிரியர்கள் மேலோட்டமாக பொருளைக் கூறிச் செல்வதால்தான் தவறான புரிதல் ஏற்படுகிறது. ஒரு சொல்லின் பொருளை நுணுகி செய்யுள்களில் பல இடங்களில் உள்ள அதன் பயன்பாட்டுத்தன்மையை அறிந்து சரிவர உணர்ந்து பயன்படுத்த வேண்டும். ஒருவர் மாறான கருத்தைக் கூறும் பொழுது அதை புறக்கணிக்காமல் அவரது ஆய்வின் உண்மைத்தன்மையை சரியான மேற்கோள்களுடன் பொருத்திப்பார்த்து நுணுகி ஆராய வேண்டும். இது போன்ற ஆய்விற்கு தரவு பெயர்திறன் மற்றும் சேர்க்கை சேவைகள் பயன்படுத்தப்படும்பொழுது ஆய்வின் பன்முகத் தன்மை வெளிப்படும். இதனால் நுட்பங்கள் புரிபடும். )


<<பாடல்களின்சொற்றொடரகளின்பொருளானது, இடம்காலம்உணர்ச்சி, நடைஇவற்றைப்பொருத்திப்பார்ப்பதேஅணியிலக்கணமாகும். அந்தஅணியினைஉரையாசிரிகள்மேற்கோள்காட்டினால்இன்னும்சிறப்பு>>



தரவு முழுமை

மேற்குறிப்பிட்ட மாணிக்கவாசகர் மற்றும் கண்ணகி தொடர்பான பல விவாதத்திற்குரிய பொருண்மைகள் போன்ற பல இலக்கிய சர்ச்சைகள் பல வலைப்பூக்களில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை வலைப்பூவை நடத்துபவர் தெரிந்து கொண்டிருந்தால் அதற்குரிய மாற்றுப் பதிலையோ அல்லது மாற்றுச் சான்றையோ மற்றொருவரின் பதிவில் பதிவிடலாம். ஆனால் தன் பதிவிலேயே அதற்குரிய மாற்றுக்கருத்தினை கூறிச் செல்லும்பாது, இவை முதல் பதிவினை இட்டவருக்குத் தெரியாமல் போக நேரிடலாம். இவை தொடர்ந்து நீடித்துக்கொண்ட போகுமேயன்றி நிலைத்த தீர்விற்கு வழி வகுக்காது. எனவே தரவுகளை, சான்றுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு தகவல் குறித்த முழுமையை எய்திடலாம்.


தரவு காப்பு

தரவுகளை, சான்றுகளை ஒருங்கிணைப்பதோடு நின்று விடாமல் அவற்றை அவரவர்க்குரிய சான்றாகக் காட்டுகின்ற பதிவினையையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு வலைப்பூக்களை நடத்துபர்களுக்குள் ஒரு புரிதலும் ஒருங்கிணைப்பும் தேவை. தரவு பெயர்வு மேற்கொள்ளும் பொழுது உரியவரின் அனுமதியும் எத்தனை வரிகள் அல்லது எத்தனைச் சான்றுகளைப் பெயர்வு செய்யலாம் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட தரவு அளவினையும், தரவு பெயர்வு எண்ணிக்கையையும் ஒரு மூடிய வலைத்தொடர்பில் மேற்கொள்ளலாம்.
http://karanthaijayakumar.blogspot.com/ இந்த வலைப்பூவை நடத்துபவர் கரந்தை ஜெயக்குமார். இவர் தான் சந்தித்த தமிழறிஞர்களைப் பற்றிய அரிய தகவல்களை வெளியிடுகின்றார். அதைப்போல muelangovan.blogspot.com மற்றும் muelangovan.wordpress.com வலைப்பூக்களை நடத்தும் மு. இளங்கோவன் என்பவரும் தமிழிறிஞர்களின் அரிய வாழ்க்கை வரலாறு, நூல்கள்போன்றவற்றை வெளியிடுகின்றார். ஒரே அறிஞரைப்பற்றிய இவர்களின் பதிவில் ஒருவர் குறிப்பிடாத தகவலை மட்டும் மற்றொருவர் தரவு பெயர்வு மூலம் ஒருங்கிணைத்தால் ஒரு தமிழறிஞரைப்பற்றிய தகவல் முழுமையானதாகக் கிடைக்கும். இருவரும் தரவு காப்பு முறையில் ஒத்து முனைந்தால் இம்முயற்சி வெற்றியடையும்.
muelangovan.
blogspot.com
muelangovan.wordpress.com



blogspot.com/
முனைவர் மு.இளங்கோவன் புதுச்சேரி
ஜெயக்குமார் கரந்தை
தமிழறிஞர்களை அறிமுகப்படுத்தல் மற்றும் தன் நூல்களை அறிமுகப்படுத்தல்
வாழ்க்கை
வரலாறு- தமிழறிஞர்களின் நூல்கள், வாழ்க்கை படங்கள்
தமிழக, அயலக தமிழறிஞர்களை வெளிக்கொணர்தல், தமிழ் கருத்தரங்கு தொடர்பான தகவல்களைத் திரட்டித்தருதல்

பல தமிழறிஞர்களின் அரிய புகைப்படங்களோ, வரலாறோ கிடைக்காமல் உள்ளன. இந்த நூற்றாண்டிலேயே வாழ்ந்த பல அறிஞர்களைப் பற்றிய முழு தகவல்களோ, அவர்கள் எழுதிய நூல்கள் குறித்த  தகவல்களோ  கிடைப்பதில்லை. உதாரணமாக கொங்கு மாவட்டத்தைச் சார்ந்த  தமிழின் முதல் வட்டார நாவலான நாகம்மாளை எழுதிய ஆர். சண்முக சுந்தரம் அவர்களின் புகைப்படம் கிடைக்காமல் உள்ளது.  ஒரு வலைப்பதிவர் இதை பதிவிட்டிருப்பின் ஆர்.சண்முக சுந்தரம் குறித்த பதிவு உள்ள மற்ற வலைப்பூக்களில் இவருடைய படத்தை பெயர்வு செய்து கொள்ளலாம். தமிழர்கள் வரலாற்றுணர்வில் சிறந்தவர்களல்ல  என்ற நிலை மாற்றமடையும். பொதுவாக வலைப்பூக்கள் தனிப்பட்ட நபரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிற வாசலாக இருந்தாலும் தமிழிலக்கியத்தைப் பொருத்தவரையில் அது ஒரு ஆவணக் காப்பகமாகவும் விளங்குகிறது. http://profjohnpeter.blogspot.in வலைப்பூ நடத்தும்  முனைவர் அ.ஜான்பீட்டர் திருவாரூர் என்பவர் சோழநாட்டுஇடப்பெயர்வுகள் குறித்த  வரலாற்று நோக்கு முறையிலான கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். ஒரிசா பாலு என்பவர் கடலியல் ஆய்வுகளின் வழி தமிழர் தம் கடல் வணிக வெற்றிக்கான காரணம் கடல் நீரோட்ட அறிவே என்பதை கடல் ஆமைகளின் வழி நிறுவியுள்ளார். தமிழர் வரலாற்றைப் பொருத்தளவில் பெரிய இடைவெளிகள் உள்ளன. காலம் குறித்த தெளிவின்மை உள்ளது. தற்காலத்திய கடலியல் , தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆய்வுகள் இவ்விடைவெளிகளை நீக்கி வருகின்றன. இலக்கியம் சார்ந்த அகச் சான்றுகளின் வழி நிறுவமுடியாத பல வரலாற்று இடைவெளிகளை இது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த புறச் சான்றுகள் நிறுவ உதவுகின்றன. இணைய வலைப்பூக்களின் தரவுபெயர்வுச் சேவை இது போன்ற தகவல்களை ஒருங்கிணைக்க உதவினால் வரலாற்று ஆய்வுகளின் நீர்த்துப் போன தன்மையை நீக்க முடியும். தமிழலக்கிய ஆய்வுகள் இதனால் ஆழமும் செறிவும் பெற்று தெளிவான உறுதியான முடிவுகளை வெளியிட முடியும். இதுவரை நடந்துள்ள ஆய்வுகளைப் பற்றிய ஆய்வுகள் இம்முறையில் கிடைப்பதால் திரும்பத் திரும்ப ஒரே பாதையிலேயே  பலரும் போவது தவிர்க்கப்படும்
வலைப்பூக்களில் தரவு பெயர்வு திறனின் தேவை
தமிழ் இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள் பல வகைப் பெயர்களில் நடத்தப்படுகின்றன. சில வலைப்பூக்களின் பெயர்கள் நடத்துபவரின் பெயரால் அமைந்துள்ளன. சில பொருண்மைகளின் பெயரில் அமைந்துள்ளன. நடத்துபவரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில்  பல பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இணைய வலைப்பூக்களின் வழி தங்களின் ஆராய்ச்சிகளை, கருத்துக்களை வலைப்பூ நடத்துநர்கள் வெளியிடுகின்றார்கள்.. பல கட்டுரைகள் சிறந்த ஆராய்ச்சிப் பார்வையோடு தகுந்த ஆதாரங்களைத் திரட்டி தீர்வைக் கூறிச் சென்றுள்ளன. ஆனால் மற்றொரு வலைப்பூ நடத்துநர் அதை மாற்றுப் பார்வையோடு அணுகியிருக்கிறார். முனைவர் கி.பார்த்திபராஜா மற்றும்  மணவை ஜேம்ஸ் நாடகம் குறித்த பதிவுகளை வெளியிடுகிறார்கள். இருவருடைய தளங்களிலும் மாற்றுப்பார்வையுடைய பதிவுகளை தரவு பெயர்வு செய்தால் நாடகம் சார்ந்த வாசகர்கள் எளிதில் தகவல்களை அறிவர்.
வலைப்பூ
நடத்துபவர்
பொருண்மை
கொள்கை
நோக்கம்
http://maatrunatakam.blogspot.in
திருப்பத்தூர்
நாடகம்
நாடகப்பகுதி மட்டும்
சுய
நாடகங்கள்
தமிழ் நாடகத்துறையை மேம்படுத்தல்
http://manavaijamestamilpandit.blogspot.com/
மணவை ஜேம்ஸ்
நாடகம் கவிதை திறனாய்வு
படைப்பிலக்கியம்- திறனாய்வு
நாடகத்துறையை மேம்படுத்தல்
முனைவர் ருக்மணி இராமச்சந்திரன் என்பவர் கலித்தொகை பாடல்களை அவற்றின் பழைய உரையாசிரியர்களின் சொற்குறிப்புகளோடு, உரையையும் வெளியிட்டு வருகிறார். முனைவர் ஜ.பிரேமலதா என்பவர் தன் வலைப்பூவில் கலித்தொகைப் பாடல்களுக்கு தற்கால உரைநடை வகையில் சிறுகதை வடிவில் வெளிப்படுத்தி வருகிறார். இவற்றை உரிய பாடல்களுக்கு மட்டும் தரவு பெயர்வு திறன் முறையில் பெயர்வு செய்தால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். 
இதைப்போல முனைவர் சிவாஜி கபிலன் என்பவர் தமிழ் இலக்கிய வினாவிடைகளை தன் வலைப்பூவில் வெளிப்படுத்தி வருகிறார். இது போன்ற வலைப்பூக்கள் நிறைய உள்ளன. இலக்கிய வினாவிடைகள் மற்றும் இலக்கண வினாவிடைகள் என இவை சிதறிக்கிடக்கின்றன. குறிப்பிட்ட பொருண்மையிலான இது போன்ற பதிவுகளைத் தரவு பெயர்வு செய்வதன் மூலம் பன்முக ஆளுமைத்திறனை வாசகர்கள் பெற்றுப் பயனடைவர்.
thoorigaikabilan.blogspot.in




முனைவர் நா. சிவாஜிகபிலன்,தஞ்சாவூர்,
முனைவர் ஜ.பிரேமலதா,
கவிதைகள் கட்டுரைகள் வினாவிடைகள்
உளவியல் படைப்பிலக்கியம் மற்றும் திறனாய்வு
தன்னம்பிக்கையூட்டும் படைப்புகள்
உலகம் முழுவதுமுள்ள தமிழிலக்கிய மாணவர்களுக்கு இது போன்ற தரவு பெயர்வு திறன் முறையிலான பதிவுகள் பெரிதும் உதவும். தமிழிலக்கியத்தை பிற துறைகளோடு ஒப்பிடக்கூடிய வகையிலான பதிவுகளில் இதுபோன்ற தரவுபெயர்வுத் திறன் முறை கையாளப்பட்டால் தமிழ் இலக்கியத்திலுள்ள அறிவு சார்ந்த பழந்தமிரின் நுட்பங்கள் வெளிப்படும்.
 சங்க கால இலக்கியங்கள் குறிப்பிடும் மலர்களைக் குறித்த பதிவுகள் மற்றும் படங்கள் பல வலைப்பூக்களிலிலும் வெளியாகியுள்ளன. திரும்பத் திரும்ப அதை பதிவு செய்யாமல்  ஒருவர் பதிவிட்டதையே மற்றொருவர் தரவு பெயர்வு திறன் மூலம் மற்றொரு வலைப்பூவில் பயன்படுத்தலாம். வலைப்பூ என்பது குறிப்பிட்ட அளவு உடையது என்பதால் இடச் சிக்கனத்திற்கு இம்முறை வழிவகுக்கும். இது போன்று தேவைப்படும் படங்களையும் உரிய அனுமதியோடு தரவு பெயர்வு செய்து கொள்ளலாம்.
www.mahaezhuthu.blogspot.com
www.mahabarathi.blogspot.com
www.mahanoolagam.blogspot.com
wwwnellainanban.blogspot.com
முனைவர். . மகாதேவன்
திருநெல்வேலி
 சங்க மற்றும் நவீனம் சார்ந்த  கட்டுரைகள்
ஆய்வு நோக்கிலானவை திறனாய்வு
மானுடமும் மனித உறவும் தழைக்கச் செய்தல்

http://profjohnpeter.blogspot.in வலைப்பூநடத்தும் முனைவர் அ.ஜான்பீட்டர்   திருவாரூர்  என்பவரும் http://tamilmozhiinfo-athiyamaan.blogspot.in/  வலைப்பூ நடத்தும் அதியமான் சீர்காழி என்பவரும் http://munaivaramani.blogspot.in வலைப்பூநடத்தும் முனைவர் ஆ. மணி என்பவரும் செவ்வியல்இலக்கியக் கட்டுரைகளை, புதிய ஆய்வுப் பொருண்மையில்  வரலாற்று நோக்கு கால ஆய்வு நோக்கிலான கட்டுரைகளை பதிப்பு நோக்கில் வெளியிட்டு வருகின்றனர்.
http://inithuinithu.blogspot.in வலைப்பூநடத்தும் முனைவர் பா.மதிவாணன் ,திருச்சி இன்றைய ஆய்வுத்திறத்தைச் சாடல்- இலக்கணப்பிழை, கருத்துப்பிழை எடுத்துக்காட்டல் சீரழிவினை வெளிப்படுத்தல் முதவான பொருண்மைகளைக் கொண்டு பதிவுகளை வெளியட்டு வருகிறார். முனைவர் ஜ.பிரேமலதா நடத்தும் வலைப்பூவில் ஆய்வு செய்வது எப்படி என்பது போன்ற பகுதிகளை இத்துடன் தரவுப் பெயர்வு செய்வதன் மூலம் ஆய்வில் மேற்கொள்ள வேண்டியன மற்றும் மேற்கொள்ளக்கூடாதன என்பது தகவல்களை இளம் ஆய்வாளர்கள் அறிந்து பயன்பெறுவர்.
https://ponnuchamy.wordpress.com வலைப்பூ நடத்துநர் துரை.பொன்னுசாமி திண்டுக்கல் சிற்றிலக்கியப் படைப்புகள், நீதி நூல்கள், பக்திப் பாமாலைகள் முதலான சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறார். 20ம் நூ பிள்ளைத்தமிழ் காவியம் ஆற்றுப்படை இலக்கியங்களுக்கு வளம் சேர்க்கும் வகையிலான இவரது படைப்புகள் புதிதாக ஆய்வு மேற்கொள்வோருக்கு பெரிதும் பயன்படும். http://thanjavur-harani.blogspot.in/ வலைப்பூ நடத்துநர் ஹரணி தஞ்சாவூர் பகுதிணைச் சார்ந்தவர்.  மரபு போற்றும் நல்ல  படைப்பாளி. கவிதை,கதைகளை வெளியிட்டு வருகிறார். படைபிலப்பியம் சார்ந்த வலைப்பூக்களை தரவு பெயர்வு செய்வதென்பது சிறப்பாக இருக்கும். சமூகம் சார்ந்த புதிவுகள், சாடல்கள், புதிய நோக்குகள், தீர்வுகள், சீர்த்திருத்த புதுமைகள், உளவியல் பார்வைகள், சீர்திருத்த வேண்டியவை, வழிகாட்டுதல்கள்,மீட்டுருவாக்கங்கள் போன்றவை தற்கால படைப்பிலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. தக்க பொருண்மையடிப்படையில் அவற்றை தரவு பெயர்வுத் திறன் அடிப்படையில் பெயர்வு செய்வது ஒத்த கருத்துடையவர்களை ஒன்றிணைக்கும். ஆக்க பூர்வமாக செயல்பட உதவும். 
http://thamizhaaivu.blogspot.in/ நடத்தும் செந்தமிழ்ப்பாவை என்பவர் தன் வலைப்பூவில் அழகப்பா பல்கலைக்கழகம் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளை வெளியிட்டு வருகிறார். முனைவர் ஜ.பிரேமலதா http://vjpremalatha.blogspot.in/ சிற்றிலக்கியம் சார்ந்த இதுவரை வெளிவந்துள்ள ஆய்வுத் தலைப்புகளைத் திரட்டியுள்ளார். தமிழிலக்கியம் சார்ந்த வந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் குறித்த தெளிவினைப்பெற இது போன்ற வலைப்பூக்களின் தரவு பெயர்வு மிக அவசியமாகும். இது போன்ற வலைப்பூக்களின்  ஒருங்கிணைப்பு ஆய்வு மாணவர்களுக்கு எளிதில் தலைப்புத் தேர்விற்கு உதவும்.

(தேடவேண்டிய அவசியமின்மை, முழுமையான தகவல்கள் தேவையான அளவில் உடனடியாக முழுமையாகக் கிடைத்தல், எளிய முறை, ஒத்த பொருண்மையிலான வலைப்பூக்களின் பரப்பினை அறிதல், வலைப்பூக்களின் பிற ஆளுமைகள் மற்றும் பிற ஆய்வு குறித்த பதிவுகள் அளிதல் போன்ற பல நன்மைகள் தரவு பெயர்வுத் திறனைப் பயன்படுத்துவதால் பெறப்படும். )

முடிவுரை
ஒரு மொழியானது அதைப் பயன்படுத்தப்படுபவரின் எண்ணிக்கையைப் பொறுத்தே வாழ்கிறது. இதற்கு ஊடகங்கள் உதவி புரிகின்றன. அந்தந்த மொழிக்குரியவர்கள் தங்களுக்கென பாதையை ஊடகங்களில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழ்மொழிக்கான பாதை பல்வேறு கணிப்பொறியாளர்களாலும், தமிழறிஞர்களாலும் வலுவாக போடப்பட்டு விட்டது. இந்தப் பாதையில் தமிழ் மிகச் சிறப்பாகவே தன் பயணத்தை தொடங்கி வருகிறது. எனினும் தரவு பெயர்வு திறன் போன்ற சேவைகள் தமிழில் பயன்படுத்தப்படவேண்டிய தேவைகளும் உள்ளன. சில வலைப் பூக்களின் கட்டுரைகளில் தலையாயப் பொருண்மைகளாகக் குறிப்பிடப்பட்ட பதிவுகள் மற்றொரு வலைப்பூவில் இரண்டாம் நிலையிலுள்ள பொருண்மைகளாகக் கையாளப்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் தொடர்புடைய இது போன்ற பதிவுகளைப் பெயர்வு செய்வதன் மூலம் புதிய கோணங்கள் வெளிப்பட்டு வேறொரு புதியஆய்விற்கு இவை வழி வகுக்கும். இம்முறையில் இணைப்பை விட மிக எளிதாக தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். இணைப்பு முறையில் தொடர்புடைய வலைப்பக்கத்தையோ அல்லது முழுமையாகவோ பார்க்க நேரிடுகிறது.
வலைப்பூவில் குறிப்பிட்ட பொருண்மையிலான கட்டுரையைத் தேட வேண்டியுள்ளது அல்லது கட்டுரைக்குள் தேவைப்பட்ட தரவுகளைத் தேட வேண்டியுள்ளது. ஆனால் தரவுப் பெயர் திறனில் மிக எளிதாகத் தொடர்புடைய சான்றுகளை அல்லது தகவல்களை பார்த்துக்கொண்டிருக்கும் வலைப்பூவிலேயே பெற முடியும். இதனால் நேரச் சிக்கனம், தேடல் குறைவு, சரியான தகவல்களை உரிய முறையில் பெறுதல், ஒரே பொருண்மையிலான பல தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வசதி, திரும்பத்  திரும்ப பதிவிடவேண்டிய அவசியமின்மை, படங்கள் ஒருங்கிணைப்பு போன்றவை சாத்தியமாகும். 

பார்வை

http://sangamtamizh.blogspot.in/
http://muvalar.blogspot.in
thoorigaikabilan.blogspot.in


http://searchcloudapplications.techtarget.com/definition/data-portability
Data portability is the ability to move data among different application programs, computing environments or cloud services. In a cloud computing context, this ability is the data portion of cloud portability, which makes it possible for customers to migrate data and applications between or among cloud service providers (CSPs). Data portability is growing more important as an increasing number of organizations store greater and greater quantities of data in the cloud.

https://www.techopedia.com/definition/6752/data-portability
Definition - What does Data Portability mean?
Data portability refers to the ability to move, copy or transfer data easily from one database, storage or IT environment to another. Portability describes the extent to which the data can easily be ported between different computers and operational environments.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?