தமிழிலக்கிய
ஆய்விற்கு உட்படுத்தப்படும் பிற துறைகள்
தமிழில்
இலக்கிய ஆய்வுகள் இலக்கிய நயங்கள், சமுதாயச்
சிக்கல்கள், வட்டார வழக்குச்
சொற்கள், மனிதநேயச்
சிந்தனைகள், வர்க்கச் சிந்தனை, வாழ்வியல் அறங்கள், அகப்புறச் செய்திகள், பண்பாட்டுக் கூறுகள், நிலையாமை சிந்தனைகள், இலக்கிய நயம், பிறமொழிச்சொற்கள், மெய்ப்பாடுகள், அணி நலன், உத்திகள், உவமைகள், மொழிநடை, நகைச்சுவை, நிலமும்
உணவும், பாடுபொருள்
மாற்றம் படைப்பாக்கத் திறன் உள்ளிட்ட பல பொருண்மைகளில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. எனினும் தமிழிலக்கியம் பிற துறை கூறுகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது.
தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல்,போன்ற பல
துறைகளில் ஆழ்ந்த அறிவு இருந்துள்ளது என்று இலக்கியங்கள் வழி ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன.
இவை போல பிற துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.