புத்தக வாசிப்பு
நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு குறைந்த
வண்ணம் உள்ளது. டீவீ வந்துவிட்டது மொபைலில் வாட்ஸப் வந்துவிட்டது. கிண்டில் வந்து
விட்டது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.அதற்குக் காரணங்கள் காண்பதோ, இப்படி
ஆகிவிட்டதே என்று குறைகள் கூறி ஆதங்கப் படுவதோ நல்ல விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை.
சிறுவயதிலிருந்தே
இருந்தே அந்த வழக்கத்தைத தொடங்க வேண்டும். என்ன செய்து எப்படி புத்தக வாசிப்பை வளர்க்கலாம்
என்று தாங்கள் மிக சுருக்கமாக ஒரு சில விடைகளில் வழிகாட்டல் தாருங்கள். தாங்கள்
வாராவாரமோ அன்றாடமோ வாசிக்கும் நேரமும் குறித்து அனுப்பினால் பிறரை ஊக்கப்படுத்த
உதவும்.தங்கள் அரிய நேரத்தில் தரும் இத்தொல்லைக்கு வருந்துகிறேன். ஏதாவது யாராவது
செய்யா விட்டால் புத்தகப்படிப்பே அனாவசியம் என்ற போக்கு வளரும். அந்த போக்கு
புத்தகம் வாசிக்கிற நேரத்தை தீய மற்றும் உதவாத வீண் காரியங்களில் விரயம் செய்யும்
வழக்கத்தை தடுக்கும்.
இந்தப்பின்னணியில்
சிந்திக்கவும். வாசிப்பது
என்றாலே பாடம் தொடர்புடையதுதான் என்பது போன்ற எண்ணமே இன்றைய இளம் சமூகத்திடம்
பரவலாக இருக்கிறது. அதை உடைத்தெறிவது எப்படி? ஒருவரை மலையேற
வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது பொதுவான புத்தகம் படிக்க
வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே
முடியவில்லை. எதற்குப் படிக்கவேண்டும்?
புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த
தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!
புத்தகம்
வாசிப்பது இன்றைய கால கட்டத்தில் ...ஒரு போக்கத்தவன் செய்யும் செயலாக சமுகத்தில்
மதிக்கப்படுகிறது. தொலைக்காட்சி, இணையதளம்
போன்றவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் வாசிக்கும் பழக்கத்தை
குழந்தை பருவத்தில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள்
வலியுறுத்துகின்றனர். அம்புலிமாமா, கோகுலம், கடந்து
விகடன், குமுதம்
வாசித்து சுஜாதா, ராஜேந்திரகுமார்
படித்து பின் கல்கி, சாண்டில்யன்
கடந்து அகிலன், ஜெயகாந்தன்
முடித்து இன்றைய கற்றாழை, காவல்கோட்டம்
உட்பட படிக்கும் தலைமுறை இனியும இதைப்போன்ற வரிசையில் தொடர்கிறதா? குழந்தைப்
பத்திரிகைகள் ஏதாவது வருகிறதா என்பதே தெரியவில்லை.
இதை
எப்படி மாற்றுவது? தாங்கள்
ஏதாவது இது குறித்து சிந்தித்ததுண்டா? இன்றைய மாணவர்களை, இளைஞர்களை
எப்படி படிக்க வைப்பது?
தங்களுக்கு ஏதாவது யோசனை உண்டா? தாங்கள் தற்போது படித்து வரும் இதழ்,
நூல் குறித்து தெரிவிக்க முடியுமா? துறை சார்ந்த்தாக இருப்பினும் பதியலாமே? புத்தக
வாசிப்பு குறித்த தங்களின் கருத்து என்ன? சுருக்கமாக பதில்
தரமுடியுமா?
சென்னையில்
வெளிவரும் அடையாறு இதழுக்காக புத்தக வாசிப்பு தொடர்பான பேட்டியை வாரந்தோறும்
ஒருவருடைய கருத்தாக பதிவு செய்ய உள்ளேன். தாங்கள் தகவல்
அனுப்பி உதவவும். என்று நண்பர்களிடம் கேட்டதில் உடனடியாக சிலர்
விரைந்து பதிலளித்துள்ளார்கள்..... அவை....இங்கேயும்..........
வினாக்கள்...
1.
நூல்கள் படிக்கும் பழக்கம் பெருக்க தங்களின்
வழிகாட்டுதல் என்ன?
2.
மாணவர்கள் கல்லூரி வந்தவுடன் திசைமாறிப் போய்விடுகின்றனர். அவர்களை
எவ்வாறு வாசிக்க வைப்பது?
3.
துறை சார்ந்த நூலகள் மாணவர்களுக்கு அந்நியமாகிப் போவதன் காரணம்
பரந்த புத்தக வாசிப்பின்மையே எனக் கூறலாமா?
4.
துறை சார்ந்த நூலகள் தவிர பிற இதழ்களை தாங்கள் வாசிப்பதுண்டா? எனில் அவை குறித்த தங்களின் கருத்து
என்ன?
5.
இணைய வழி படிப்பென்பது தகவல் திரட்ட உதவும். வாழ்க்கையில்
மனிதமனங்கள் பண்பட உதவுமா?
6.நூல் படிப்பதற்கும்
இணைய வாசிப்பிற்கும் உள்ள வித்தியாசம்?
7.பல நூல்களைப்
படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பி க்கை
ஏற்படு ம். ஆக்கஅறிவு (Creativity) மிகும். இணையத் தரவுகள் இதைச் செய்யுமா?
8.
நூல் படிப்பு. கண்களுக்கு பயிற்சி. இணைய வாசிப்பு
கண்களுக்கு கேடு.இணையத்தை நீண்ட நேரம் படிக்க பயன்படுத்தமுடியுமா?
9. பல விஷயங்களை இணையத்தில்படித்தாலும் புத்தக வாசிப்பு போல் சிந்தனையைத் தூண்டுமா ?
10.மக்கள்
படிப்பதற்கேற்ற தரமான நூல்கள்
அதிக அளவில் வெளிவர என்ன செய்யவேண்டும்?
11.நல்ல
விமரிசகர்கள் உருவாகவேண்டுமானால்
நல்ல பல படைப்புகள் வேண்டும். அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு
அவசியம். வட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும்.தங்களின் கருத்து என்ன?
12.நீங்கள்
காணும் தற்கால நூல்கள், இதழ்களில்
உள்ள குறைகள், குற்றங்கள்
என்ன? அவற்றை
எப்படிக் களையலாம்?
13.நீங்கள் படித்த
புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த நூல்கள் என்ன?
உங்களுக்குப் பிடித்த படைப்பாளர் யார்?
14. தற்போது
வரும் இதழ்கள் தரமுடையனவாக உள்ளனவா?
15.புரட்சிப்பாதையில் கைத்
துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் லெனின்.தற்போது இணையம் தகவல்களை
விரைவாகத் தரலாம். ஆனால் உள்ஆற்றலை
வளர்க்குமா?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?