ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களும் நம்பிக்கைகளும்
பெண்கள் மூட நம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்கித் தாமும் கெடுவதுடன்
நமது குழந்தைகளையும் கெடுக்கின்றனர். எனவே, கல்வியறிவால்
பெண்கள் அறியாமை இருளிலிருந்தும், மூட பக்தி, மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலையடைய வேண்டும். அதன் எதிரொளியாக
மனித சமூகமே ஒளி பெறும்” (சி.என்.குமாரசாமி, 2001:344) பெண்களின் அடிமைத்தனத்திற்கான கூறுகளுள் மூட நம்பிக்கைகள்
முதலிடத்தை வகிக்கின்றன.
பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் பெரும்பாலும் நாகரிகம் தோன்றாத காலப்
பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தோன்றி நிலை பெற்றவை. இம்மரபு கருதி பழக்க
வழக்கங்களையும்,
நம்பிக்கைகளையும் சமூக மரபுச் சின்னங்கள் எனக்
கூறலாம்.” (பாலமுருகன். எம்.ஐ., 2000:113) நம்பிக்கை ஒரு செயலின் காரணமாகவும், மரபு வழியாகச் சந்ததி, பின்
சந்ததி இகியோரால் பின்பற்றப்படும் வழக்காகவும் உள்ளது என்று வாழ்வியற் களஞ்சியம்
(தொகுதி 11:220-221)
கூறுகிறது. இந்நம்பிக்கைகளைப் பெரிதும் பின்பற்றுபவர்கள் பெண்களே. இந்நம்பிக்கைகளில்
மூழ்கித் திளைப்பதாலேயே பெண்கள் வாழ்வு இருளடைந்துள்ளது. எந்தச் சமூகமும் தான் ஒருக்கால்
பற்றிப் பின் தன்னுள் ஒன்றாக இக்கிக் கொண்டுவிட்ட மரபுகள், வழக்கங்கள், சடங்குகள், கொள்கைகள் இவற்றின் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கும்
மடிமையைத் தன் இயல்பாகக் கொண்டுள்ளது. அவை மனிதர்க்கிழைக்கும் நன்மை தீமை பற்றிய அக்கறை
அதற்கில்லை.”
(சேது மணி மணியன், 1994:114) பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பல
நம்பிக்கைகள் ஆணைந்துள்ளன. படித்தவரிலிருந்து பாமரர் வரை பல வகையான
நம்பிக்கைகளுக்கு அனைவரும் ஆளாகியுள்ளனர்.
சமயம் சார்ந்த நம்பிக்கைகள் பண்பாட்டிற்குப்
பண்பாடு வேறுபடுகின்றன, காலத்திற்குக் காலம்
மாற்றம் பெற்று வந்துள்ளன. இம்மாற்றம் முன் வரலாற்றுக்கால மனிதனின் சமய
நம்பிக்கையிலிருந்து தொன்மை மக்களிடையே ஆவி நம்பிக்கையாக மாறி பின்னர்ப் பேய், பிசாசு, தேவதை நம்பிக்கைகள் என
வளர்ந்து, இறுதியில் கடவுள் நம்பிக்கையாகப் படிமமலர்ச்சியடைந்துள்ளது.
ஆவிகளுடன் தொடர்புடைய ஆற்றல்களாயினும் சரி, பேய், பிசாசு, தேவதை முதலானவற்றின் ஆற்றல்களாயினும்
சரி, கடவுளர்களின் ஆற்றல்களாயினும் சரி அனைத்து வகைகளும் மனித
மனத்தின் படி மலர்ச்சி நிலைகளே” (பக்வத்சலபாரதி, 1990:491) ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களில் ஜாதக நம்பிக்கை, பேய் நம்பிக்கை, தெய்வ
நம்பிக்கை, பூ நம்பிக்கை, தீட்டு
நம்பிக்கை, கிழமை நம்பிக்கை போன்ற பல நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
5.14.1. ஜாதக நம்பிக்கை
ஜாதகம் பார்த்தல் என்பது ஆர்.சண்முகசுந்தரம்வைப்
பொருத்த அளவில் மூடநம்பிக்கை. எனவே, ஜாதகம்
பார்க்கும்பழக்கத்தைப் பல இடங்களில் சாடுகிறார். கிராமத்தில் கோவில் ஒயரிடம்
பலரும் சென்று ஒôதகம் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு
ஜோசியம் பார்க்கத் தெரியுமா என்பது பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை.
பஞ்சாங்கத்திற்கும் அவருக்கும் வெகு தூரம் தானுண்டு கோயில் பூசையுண்டு, பொடி மட்டையுண்டு என்று அக்கடா என இருப்பவர் தனக்கு ஜோசியம்
தெரியாது என்று பலமுறை கூறியும் மக்கள் கேட்பதில்லை. அவரும் அவர்களுக்கு ஐற்றபடி
பஞ்சாங்கத்தைப் புரட்டிய படியே, சனி தெசை தீருதுங்க.
மேற்கொண்டு நல்ல யோகம் கொஞ்ச நாளைக்கு எதிலும் ஒதுங்கியே இருக்க வேண்டும். வக்கிர
புத்தி” (ப-58) என்கிறார்.