புத்தரும் பெரியாரும்
முன்னுரை
இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற
கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த
ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன.
புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு. சுய சிந்தனை, நேர்மை, பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்;கருத்து போன்ற பல
கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக்
கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள்.
போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள். சுய சிந்தனையாளர்கள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள
ஒற்றுமைகளை ஆராய்கிறது.